கே.பாலமுருகன் கவிதைகள்

1
முன்பொரு சமயத்தில்
நான் பார்த்து வளர்ந்த
காமம் ஒன்று
சில குட்டி பூதங்களாகவும்
சில கடவுள்களாகவும்
வாழ்ந்து கொண்டிருந்தன

2
சுயம் என்றேன்
இல்லை ஆக்கம் என்றான்
சுயம் என்றேன்
மீண்டும் கண்களை உருட்டி
நாக்கை நீட்டி
‘ஆக்கம்’ என்று
அழுத்திச் சொன்னான்

3
கண்டடைந்த பிறகு
தேடலும்
சோர்வாகிவிடுகிறது.
கண்டடைவதில் ஏன்
இவ்வளவு தேக்கம்?

4
பிட்டத்தையெல்லாம்
அடுக்கி வைத்து

அழகு பார்த்தேன்.
வெறும் குசுவிட்டு
எல்லாவற்றையும்
கெடுத்துக் கொண்டன
பிட்டங்கள்.

5
நீர் கசியும்
பாகங்களையெல்லாம்
சரிப்பார்த்துக் கொண்டேன்.
வழுக்கி விழுந்த
அண்டத்தில் பிறப்பில்
நீரில்லாமல்
ஏது சாத்தியம்.

6
என்னுடன் பழகி
விளையாடி
வளர்ந்த குட்டி பேயொன்று
என்னையறியாமல் துடிக்க
வளர, விரைக்க, நீள,
கசிய, முட்ட
தொடங்கின.

7
நிற்க
சரி நடக்கலாம்
மீண்டும் நிற்க
சரியாமல் நடக்கலாம்.
எல்லாம் ஒழுங்கு.

8
பட்டாம்பூச்சியைப்
பறக்கவிட்டது போதும்
போர்க்களத்திற்கு வாரும்.

9
தற்செயலாக
வயிறு கிழிந்து தொங்கியபோது
தெரிந்துவிட்டது
வயிற்றெரிச்சல்.

கீறல் பெயர்கள்

கருவேலம் மரத்தில் காலம் தள்ளும் கீறப்பட்ட அந்தப் பெயர்களுக்குள்சமீபமாய் பல பிணக்குகள்
பிசினை வழித்து கீழே தள்ளுவது யார் வேலை? கட்டெறும்புகள் மேலேறி வர யார் காரணம்? கோடை தொடங்குவதற்குள்ளே இலையுதிர்க்க யார் காரணம்? காக்கா முட்டையை பச்சப் பாம்புக்கு காட்டிக் கொடுத்தது ஏன்? தேனடை கட்ட அனுமதிக்காதது ஏன்?உச்சிக் கிளை முள்ளைப் பிடித்து தொங்கியவாறே கீழே குதித்துவிடப் போவதாக நேற்று மதியம் ‘ள்’ பெயர் மிரட்ட குதிக்காதே…குதிக்காதே என’ன்’ பெயர் கெஞ்சிய பிணக்கு’உன் சொந்தக்காரப் பசுக்களுக்கு பழுத்த கருவேலங் காய்களை அதிகமாய் பறித்துப் போட்டாய் என் பசுக்களுக்குப் போடவே இல்லை.’

இடைவெளி

அப்பா….!இரவுதூக்கத்தில்என்இரண்டு கால்களையும்இடுப்பில்சுமந்திருக்கிறீர்கள்நீங்கள்கூர் செய்த பென்சில்கள்இன்னும் என்நினைவில்எழுதிக்கொண்டுஇருக்கின்றனஎன் பரீட்ஷைநேரங்களில்நீங்களல்லவாஎன் விடிகாலை அலாரம்உங்கள்உள்ளங்கை சூட்டிலும்கைவிரல் ஜவ்வுகளிலும்என் இளவயது அச்சங்கள் தொலைந்துபோயிருக்கின்றனநான் சைக்கிள்சவாரி பழக நீங்கள்வேலைக்குவிடுமுறை சாவாரிபிரதி மாதம் முதல் தேதிநீங்கள் வாங்கி வரும்ஜாங்கிரி நெஞ்சில்இன்னமும்ஜீராவாய்ஒழுகிக் கொண்டுஇருக்கிறதுஎங்கு பிசகினோம் ?யார் கண் திருஷ்டி ?இமைக்கும் கண்ணுக்கும்இடையில்கள்ளி வேலிஎப்படி ? என் இடுப்பில்வேட்டி ஏறியதும்உங்கள் பாசம்ஏன் அம்மணமாயிற்று ?நான் கட்டியகாதல் கோட்டைநம் உறவிற்குபிரமிடாய் போனதேன்?ஒரே வீட்டில்இரண்டுமுகாம்களிட்டுவாழ்கிறோம்நம் வீட்டில்வசதிகள்வளர்பிறையாய்சூரியனாய் ஒளிர்ந்தநம் உறவோ…கிரகணமாய் தேய்ந்துகொண்டு நீங்கள்பேசத் தயாராயில்லைஎனக்கோபேசத் திராணியில்லைவருந்த மட்டும்செய்வதால்விரிந்துபோனஉறவுஉதடுகளாய் ஒட்டுமா என்ன ?

அன்புள்ள நண்பர்களே,

வணக்கம்.

நவீன விருட்சம் blog ஆரம்பித்து ஓராண்டு முடிந்துவிட்டது. இன்று தற்செயலாகத்தான் இதை அறிந்தேன். இத்தனை பேர்கள் நவீன விருட்சத்திற்காக படைப்புகள் அனுப்புவார்கள் என்பதையும் எதிர் பார்க்கவில்லை. 160 பக்கங்கள் கொண்ட நவீன விருட்சம் 84வது இதழ் தயாரித்துக்கொண்டிருக்கிறேன். பெரும்பாலான படைப்புகள் இந்த blog மூலம் எனக்குக் கிடைத்த படைப்புகள்தான். எனக்கே ஆச்சரியம்..இத்தனை பேர்கள் கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கிறார்களா என்பது. எனக்கு தினமும் கவிதைகள் blogல் பிரசுரம் செய்ய அதிகம் பேர்கள் கிடைத்துக்கொண்டே இருக்கிறார்கள். கவிதைகள் பிரசுரம் ஆக ஆக கவிதைகள் உற்பத்தி ஆகிக்கொண்டே இருக்கின்றன. எழுதுபவர்கள் பெரும்பாலும் யார் என்று கூட எனக்குத் தெரியவில்லை. கவிதை எப்படி இருக்க வேண்டுமென்ற எளிமையான வழி மட்டும் எனக்குத் தெரியும். அந்த எளிமையான வழியை எழுதுபவர்கள் எல்லோரும் புரிந்து வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு விருட்சம் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

பொதுவாக கவிதை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து எனக்குத் தோன்றுவதை எழுதுகிறேன். நான் எழுதுவதுதான் சரி என்பதெல்லாம் இல்லை. மாறுபட்ட கருத்துகள் உள்ளவர்களும் இருக்கலாம்.

1) கவிதை எளிமையாக இருக்க வேண்டும்
2) எடுத்த உடன் வாசிக்க வைக்கும்படி இருக்க வேண்டும்
3) கருத்துகளில் குழப்பம் எதுவும் இருக்கக் கூடாது
4) கருத்து என்ற ஒன்று இல்லாமல் கூட இருக்கலாம்.
5) தோன்றுவதையெல்லாம் கவிதையாக எழுதலாம்.
6) மிகைப்படுத்தப்பட்ட உணர்வைத் தவிர்க்க வேண்டும்
7) கவிதை மூலம் யாரும் அழக் கூடாது
8) Self pity இருக்கவே கூடாது
9) கவிதை வாசிப்பவர்களையும் வசீகரித்து சிரிக்க வைக்க வேண்டும்.
10) ஜாலியான மன நிலையை கவிதை உருவாக்க வேண்டும். வாசிப்பவர்களும் அப்படியே வாசிக்க வேண்டும்

மேற் குறிப்பிட்டபடி எனக்குத் தோன்றுவதை எழுதியிருக்கிறேன். நீங்களும் நிறையா கருத்துக்களை அளிக்கலாம்.

அன்புடன்
அழகியசிங்கர்

நான்,பிரமிள்,விசிறி சாமியார்…….4

விசிறி சாமியாரை அந்த முறைதான் அவ்வளவு நெருக்கத்தில் பார்க்க முடிந்தது. பிறகு பார்ப்பதே அரிதாகி விட்டது. பாலகுமாரன் மூலம் என்று நினைக்கிறேன். அவர் மிக முக்கியமான சாமியாராகி விட்டார். அவரைச் சுற்றிலும் எப்போதும் கூட்டம். அவர் பெயரில் தனியாக ஆசிரமம் கட்டி விட்டார்கள். அவர் ஆசிரமத்திற்கு ஒருமுறை போனபோது தனியாக அவருடைய சிலையை வைத்திருந்தார்கள். எனக்கு இதெல்லாம் ஆச்சரியம். நான் பார்த்தபோது எளிதில் பழகக்கூடியவராகவும், சற்று வித்தியாசமானவராக இருந்த விசிறி சாமியார் நெருங்க முடியாதவராக மாறிவிட்டார்.

நான் இங்கு சொல்வது என் நினைவில் தோன்றுவதைத்தான் சொல்கிறேன். சிலசமயம் அது கோர்வையாக இல்லாமல்கூட போய்விடும். அல்லது எதாவது சொல்வது விடுப்பட்டுப் போய்விடும். விசிறி சாமியாரைப் பார்ப்பதற்கு எனக்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த பிரமிளுக்கு என் நன்றி எப்போதும் உண்டு.

சாமியார்கள் சாதாரண மனிதர்கள்போல் தோற்றத்தில் இருந்தாலும், அவர்கள் மகான்கள். யோகி ராம்சுரத் குமார் ஒரு மகான். அதனால்தான் பிரமிள் போன்ற எழுத்தாளர்கள் அவருக்கு அளவு கடந்த மரியாதையும், பக்தியும் வைத்திருக்கிறார்கள். விசிறி சாமியார் ஒரு சாதாரண அழுக்கு வேஷ்டியை அணிந்துகொண்டு இருந்தாலும் அவர் முகத்தில் தெரிந்த தேஜஸ் எனக்கு திகைப்பை ஏற்படுத்தியது. கொட்டங்குச்சி வைத்திருந்தார். கையில் ஜபமாலையை வைத்துக்கொண்டு உருட்டுவதுபோல் வெறும் விரல்களில் ஜபம் செய்துகொண்டிருந்தார். எங்களுடன் பேசிக்கொண்டும் இருந்தார். அவர் அடிக்கடி Passingshow சிகரெட்டைப் பிடித்துக்கொண்டிருந்தார். அந்த சிகரெட் இப்போது வருவதில்லை என்று நினைக்கிறேன். சாமியார் சிகரெட் பிடித்துக்கொண்டிருக்கிறாரே என்றெல்லாம் நான் யோசித்துக் கொண்டிருந்தேன். பிரமிள் இலங்கையில் அவர் பார்த்த சில சாமியார்கள் கெட்ட வார்த்தை சொல்லி திட்டுவார்கள் என்று குறிப்பிட்டார்.

பிரமிளுக்கு எண் கணிதம் மீது அபார நம்பிக்கை. ஒருவர் பெயரைக் கேட்டால்போதும் உடனே பெயரை எழுதி கூட்டி. கூட்டல் எண்ணை வைத்து பலன் சொல்ல ஆரம்பித்துவிடுவார். பெயரை வேறு எண் வரும்படி மாற்றிவிடுவார். அழகியசிங்கர் என்ற என் பெயரை அழகு சிங்கன் என்று வைத்துக்கொள்ள சொல்லியிருக்கிறார். என் இயற்பெயர் மெளலியில் ஓ வருவதால் எல்லோரும் என்னைக் கிண்டல் செய்வார்கள் என்றும் சொல்லியிருக்கிறார். விசிறி சாமியாரிடம் எண் கணிதம் பற்றி பிரமிள் பேச ஆரம்பித்தார். அது ஒரு விஞ்ஞானம் என்றும், பெயர் மாற்றுவதால் எண்கள் மாறுவதால் அதனால் ஏற்படும் பலாபலன்களைப் பற்றி சாமியாரிடம் பேசிக்கொண்டிருந்தார். ஒருமுறை அவர் பெயரை மாற்றி பரிசோதனை செய்திருப்பதாகவும் அதனால் பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

விசிறி சாமியார் ஒவ்வொரு முறை பேசும்போதும் தன்னை ஒரு begger என்று குறிப்பிட்டுத்தான் பேசுவார். எனக்கு அதைக் கேட்கும்போது ஆச்சரியமாக இருக்கும். ”இந்த beggerஐத் தேடி ஒரு பெண்மணி வந்தாள். அவளுக்கும், அவள் கணவருக்கும் ஏதோ பிரச்சினை. அழுதபடி பிரச்சினையைச் சரிசெய்ய வேண்டும் என்று கேட்டாள்…நான் பெயரை மாற்றி அவளை அனுப்பினேன்… இறுதியில் ஒரு வருடம் கழித்து அவள் திரும்பவும் வந்தாள்…அவளுக்கும் அவள் கணவருக்கும் இப்போது சுமுகமான உறவு இருப்பதாக கூறினாள்..” என்று சாமியார் பிரமிளிடம் குறிப்பிட்டார். (இன்னும் வரும்)

வெயிலை உலர்த்தும் இரவு

பகல் வெளியில் பயணிக்கையில்

கிரகிக்கும் வெயிலையெல்லாம் குவித்து

வைக்கோல்போராய் வைத்துக்கொள்வான்

இரவு படுக்கையில்

போரின் மையத்திலிருந்து

கொத்துக்கொத்தாகப் பிய்த்து

உதறி, பரப்பி

மேலே படுத்துருண்டவாறு

வேக வட்டமடிப்பான்

ஈரமுள்ள வெயில் பக்கம்

சொணை சுள்ளெனடிக்க

அதிகச் சுற்றடிப்பான்

நள்ளிரவு சோர்கையில்

உலர்த்திய வெயிலைக் குவித்துக் கட்டி

உறங்கப் போவான்.

சந்திப்பு

நிமிடங்கள் சந்திக்கையில்நாள் உருவானது
கிழமைகள் சந்திக்கையில்வாரம் உருவானது வாரங்கள் சந்திக்கையில்வருடம் உருவானது வருடங்கள் சந்திக்கையில்எனும்போதுஇறங்க வேண்டியதளம் நெருங்க நிலைக்கண்ணாடியில்தந்தையின் உருவம்எனை நோக்க திகைப்புடன் நகர்ந்தேன்

தேடல்

எத்தனை முறை உதிர்ந்தாலும்

அத்தனை முறையும்

பூத்துத்தொலைக்கும்

காதலை எழுதிய

இறகொன்றும்

எத்தனை முறை பெய்தாலும்

அத்தனை முறையும்

கொட்டித்தீர்க்கும்

மழையில் நனைந்த இறகொன்றும்

நூறாண்டுகளாய்

அலைந்துக்கொண்டிருக்கும்

சிறகிலிருந்து பிரிந்த

இறகொன்றும்

தேடிக்கொண்டிருக்கின்றன.

தீராத பக்கங்களில்

எந்த கூட்டில்

அமர்ந்துள்ளது அதுவென்று.

எங்கே அவன்?

நானே காலமுமாய் இருப்பதாய்

சொன்னவன்

கடந்து விட்டானா?

கரைந்து கொண்டிருக்கிறானா?

சொல் இருக்கிறது.

சொன்னவன் எங்கே?

கேட்டவன் எவன்?