Category: கவிதை
ழ 5வது இதழ் – டிசம்பர் 1978 ஜனவரி 1979
ழ 5வது இதழ் – டிசம்பர் 1978 ஜனவரி 1979
வாழ்க்கையோடு தங்களை ஐக்கியப் படுத்திக் கொள்வதும் இதற்கு ஒரளவு காரணம் எனலாம். இக்பாலும், காலிப்பும் பிரிவடையா இந்தியா தந்த பொக்கிஷங்கள். காலிப் இறந்த பத்தாண்டுகளுக்குப் பிறகு பிறந்தவர் இக்பால். காலிப்பின் கவித்துவத்தினால் பெரிதும் கவரப் பட்டவர்.
”என்னுடைய இதயத்தின் துளைகளை
ஒன்று சேர்த்து வைக்கிறேன்-
அவளுடைய கண்கள் மறுபடியும்
அதைத் துளைக்கட்டும்”
இதயத்தில் ரத்தம் வரச் சக்தியில்லை”
”காதலின் வலிக்கோ மருந்தில்லை
அற்பமான இதயமே-மறுபடியும்
காதல்வலி கொள்கிறாயே”
அவ்வாறிருக்க-கடவுளே ஏனிந்த ஆரவாரம்”
”உலோபியான மண்ணைப் பார்த்து
கேட்கிறேன் நான்-அதனுள்
புதைத்த அழகுகளை அது
என்ன செய்தது?”
அவள் பார்க்கின்ற வரை நானும் உயிருடன் இருப்பேன்.”
என் மனதைக் கொள்ளை கொண்டு சென்று விட்டாளே,”
ஆனால் அவளோ நான் விரும்பினும் வாராள்”
புதைந்து கிடக்கின்றன. நான்
ஏழை யொருவனின் கல்லறையின்
எரிந்த விளக்கு.”
அந்த நிலத்தில் உனது அந்தரங்கத்தையும்
பாட்டினையும் பகிர்ந்து கொள்பவர் இருக்கக்கூடாது
அங்கொரு வீட்டினைக் கட்டு கதவுகளும்
சுவர்களும் இருக்கக் கூடாது.
அந்த வீட்டிற்குக் காப்பாளர், பக்கத்து
வீட்டுக்காரர் இருக்கக் கூடாது
நீ உடல் நலம் குன்றினால் உன்னைக் கவனிப்பார்
இருக்கக் கூடாது. நீ உயிரை விட்டால் துக்கம்
அனுஷ்டிப்பவர் இருக்கக் கூடாது.”
நீ வருந்தாமல் இரு-அது ஒரு உண்மை
உன்னுடைய ஆலயங்களின் சாமிகள்
எல்லாம் மிகவும் பழையன
அவை உனக்கு வெறுப்பைப் போதித்தன
உனக்குச் சொந்தமானவற்றை
சொந்தமில்லை என்றன
சண்டையிடு அல்லல்படு என்பவை
கடவுளின் விருப்பம்-அறிவுக்குத்
தெரிந்த உண்மை
உன் அறிவு வார்த்தைகளால் நான் களைத்து
வேதங்களையும் கோயில்களையும் விட்டு விடுகிறேன்
எனக்குக் கற்கள் மட்டுமல்ல
என்னுடைய நாட்டின் அற்பமான தூசியும் புனிதமானது”.
ஓயாதடிக்கின்ற அலைகளைக் கேட்டேன்
நீ எதற்கு அடிமை?
ஆயிரக்கணக்கான கீழ்த்திசை முத்துகளுடன்
உன்னுடைய ஓரங்கள் பளபளக்கின்றனவே!
என்னுடைய இதயத்தைப் போன்ற
மாணிக்கம் ஒன்று உன்னிடம் உள்ளதா?
கடல் கரையிலிருந்து வெட்கப்பட்டு ஓடியது
பேசவில்லை.”
எல்லோரும் கூறுவர்
அவனை அறிந்தேன்-அவனை அறிந்தேன்
எனினும் ஒருவரும் அறியவில்லை-
எப்போது நான் வந்தேன்?
என்ன நான் சொன்னேன்?
யாருக்கு நான் சொன்னேன்?”
திவ்யா.
ழ 5வது இதழ் – டிசம்பர் 1978 ஜனவரி 1979
இறப்புக்குமுன் சில படிமங்கள்
பிரம்மராஜன்
ஜன்னலில் அடைத்த வானம்
குறுக்கிடும்
பூச்செடிகளுடன்
சுப்ரபாதம் இல்லை என்றாலும்
மங்களமான பனிப்புகையில்
விடியல்.
நரைத்த உடைந்த இரவின் சிதறல்கள்
நேரமாய் வந்துவிட்ட
தோட்டியின் கால்களின் முன்.
மண் தின்று எஞ்சிய
எலும்பின் கரைகளில் சிற்பத்தின் வாசனை
காற்றைத் தவிர
அவனுக்கு மட்டும்
பியானோவென இசைத்து ஒலித்தது
உறங்காமல் திரிந்த
மணிகூண்டு உணர்விழந்துவிட்டது
உறையும் குளிரில்.
பறந்த பறவைகள் வானில் கீறியஓவியம்
பார்த்ததில்
பந்தயம் இழந்தது
நேற்று
விரலிடுக்கில் வழிந்த காலத்தின்
துளிகளை
மற்றொரு கையேந்த
கணங்களை முழுவதும் எரித்தாகிவிட்டது
அவன் இறந்து விட்டான்
இன்றெதற்கு இரண்டாவது மாடியில்
அழகான அறை?
பூக்கள் நிஜமாய்
மலராது அங்கு
ழ 5வது இதழ் – டிசம்பர் 1978 ஜனவரி 1979
காலம்
காளி – தாஸ்
யாரோ காலமானார் என்ற செய்தி
என் எதிரில்
நட்சத்திரமாகத் தொங்குகிறது
காலமென முதலில் உணர்ந்தவன்
கபாலச் சூடு பொரியும்
ஆன்மை நிறைந்தவனாக இருந்திருப்பான்
சில சமயத்தில் தோன்றுகிறது
காலம் நிர்ணயிக்கப் பட்டிருப்பது போல
ஆனால் பற்ற முடியாமல்
நழுவிப் போகிறது.
எங்கேயோ காத்திருக்கிறது?
காதலுடன் மெளனம் சாதிக்கிறது
காலம் காலமாகக்
கடல் ஒலிக்கிறது வெற்று
வெளியில் மேகம் சஞ்சரிக்கிறது கனத்த
காலப் பிரக்ஞையை எனக்குள் விதைத்து
விட்டார்கள். எவ்வளவோ காலம்
கடந்தும் அறிந்து கொள்ள என்னவென்று
அது-முளைக்கவே இல்லை. ஆனால்
விலகாத கிரஹணமாக என்
எதிரில்
தொங்கிக் கொண்டேதானிருக்கிறது
யாரோ காலமான செய்தி.
நானும் ஒரு காலத்தில்
காலமாகி விடுவேனோ என்பதில்
மட்டும் முளைத்து விடுகிற
பயம்
சொட்டுச் சொட்டாய் உதிரக்
காத்திருக்கிறது – காலம் வராமல்……..
ழ கவிதைகள் – 5வது இதழ்
நீலமணி
சேரிகள்
சிறியார்க் கில்லாப் பெரியார் உறுப்பு
பச்சைத் தோரணம். பொற்கொடி முட்கள்
உற்றுழி உதவாது ஓடிப்போகிற
பட்டைப் போலவும் பருத்திபோ லவுமின்றி
ஒட்டிஉற வுகொளும் வெட்டிவேர், வேடர்
ஒட்டமுடி யாத தேனீ மொய்ப்பு.
ஆண்டவன் தந்த அத்தி இலை. இது
இடையில் வந்நது. மூலைகளில் ஒளியும்
இருட்டு, காலம் போர்த்திய பொன்னாடை
அழைப்பு விடுக்கும் பச்சை விளக்கு
பாடல் பெறாத்திருப் பதிகள். விழல்கள்
பாம்பின் பச்சைப் படம். உயிர் வேலி
சந்தன மரத்துப் புல்லுரு விக்கொடி
வீட்டு வாசலில் போட்ட கோலம்
சல்லிவேர்ச் சல்லடை. மவுன சாட்சி
விளக்கடி நிழல்இது எப்பறவைக் கூடு?
தோள்மீ தமரும் வழக்கம் மாறி
தோளுள் அமர்ந்த பச்சைக் கிளிகள்
பிரியும் புத்தகப் பக்கங் களிடை
பையன் வைத்த நீலமயி லிறகு
பொன்னுலகத்து இருண்டகண் டங்கள்
மாம்ச ஒட்டடை. ராமன் கோடுகள்
காலம் ஒட்டிய பச்சை ஸ்டாம்புகள்
சிறையின் கம்பிகள். தேதிமுத் திரைகள்
புழுக்க நேரத்துத் தோகை விசிறிகள்
தாரால் எழுதிய புரட்சிகோ ஷங்கள்
புரியாத அயல்மொழிக் கவிதைகள். பாசி
சாயம். தீவுகள். பொன்வேய்ந்த கூரை
இக்கறை களுக்குக் கடவுள் பொறுப்பு
வெற்றித் தலைவன் தோளில் கூட்ட
நீ வளர்த்த கறுப்புப் பூக்கள்
குறில் நிழல்கள். உப்புப் பயிர்கள்
தேகச் சுவரில் தட்டிய வரட்டிகள்
அடங்கி நடக்கும் அந்தப்புரப் பிறவிகள்
தான்தோன்றி விளைச்சல். கடித்தநா கவிஷம்
நிலவுக் கறை, பாலில் மிதக்கும் நஞ்சு
அடக்குமுறை எதிர்த்த புரட்சிக் கருங்கொடி
கருப்புக்கண் ணாடிகள் கடைசிச் செய்திகள்
அம்புப் படுக்கை ஆருக் காகவோ?
பர்த்தாவும் அகற்றாப் பர்தா. சேரிகள்
ஆண்டவன் பரமண்டலத்துச் சாத்தான் காலனிகள்
பரபரப்பான செய்திப் பத்தி
இலையின் மூலையில் இருக்கிற ஊறுகாய்
நீலமணி.
ழ கவிதைகள் – 5வது இதழ்
1.
அவர்கள் சென்றபின்
இவர்கள் இடம் பெயராது
இருந்தனர்
2.
நாய் கொடுத்த
காசு குரைக்கும்;
பட்ட மரத்திலுண்டு
பல கெட்ட நாய்கள்;
நடுப்பகல்
இருட்டாகும்
3.
பிறந்த சூட்டில்
இரத்தச் சிவப்பில்
எலிக்குஞ்சு போல்
கிடக்கும்;
புழுப்போல் நெளியும்
நகுலன்
டிசம்பர் 1978 ஜனவரி 1979
அலைகள் காத்திருக்கும்…
பாக்கெட்டில் இருந்து பறந்து போன பட்டாம் பூச்சியை
காதல் கவிதைகள்
தூக்கம்
இரவு நேரங்களில்
தூக்கம் வருவதில்லை
எழுந்து உட்கார்ந்து விடுவேன்
பின்
திரும்பவும் படுத்துக்கொண்டுவிடுவேன்
லைட் எதுவும் போடுவதில்லை
மின்விசிறி மாத்திரம்
சுற்றிக்கொண்டிருக்கும்
சன்னமாய் விளக்கு வெளிச்சம்
ஹாலை நிரப்பிக்கொண்டிருக்கும்
எதையும் யோசனை செய்யாமல்
யோசனையைத் துரத்திக்கொண்டிருப்பேன்
பின்
தூங்கு என்று கண்ணை மூடிக்கொள்வேன்
தூக்கம் வருவதில்லை
கனவை வாவென்று கூப்பிட்டாலும்
கனவும் வருவதில்லை
உடம்பு எப்படி விரும்புகிறதோ
அப்படி இருந்துவிடலாமென்று
யோசிக்கும்போது
தூக்கம் மெல்ல கண்ணைச் சுழற்றும்.