Author: virutcham
கடந்த 7 ஆண்டுகளாக நான் சென்னையிலிருந்து மயிலாடுதுறைக்குப் போயும் வந்தும் கொண்டிருக்கிறேன். பெரும்பாலும் பஸ் பயணத்தைத் தவிர்க்க முடியவில்லை. இங்கே உள்ள Semi Deluxe பஸ் மூலம் சென்னையிலிருந்து இரவு 11 மணிக்குக் கிளம்பினால், காலையில் போய்ச் சேர்ந்துவிடலாம். ஆனால் பஸ் பயணம் இரவு முழுவதும் அளவுகடந்த வேதனையாக இருக்கும். பெரும்பாலும், யூரின் போகிற பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்பது தெரியாது. ஆண்களுக்கே இப்படி என்றால், பெண்கள் நிலையை நினைத்துப் பாருங்கள்.
அரவிந்த் நியுயார்க்கிலிருந்து நயக்கரா நீர்வீழ்ச்சிக்கு இப்படித்தான் ஒரு பஸ் ஏற்பாடு செய்திருந்தான். எனக்கு சென்னை ஞாபகம் வந்தது. என்னுடைய அதிருப்தியை அவனிடம் தெரிவித்துக்கொண்டேன். இரவு 10.30 மணிக்குப் பயணம். முன்னதாகவே வந்திருந்து பஸ் செல்லும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம். ஒரே கூட்டம். எல்லோரும் வரிசையில் நின்றிருந்தார்கள். கனடா நாட்டிற்குச் செல்பவர்கள் எல்லோரும் நின்றிருந்தார்கள். வரிசை வரிசையாக பஸ்கள் கிளம்பிக்கொண்டிருந்தன.
நாங்கள் ஏற வேண்டிய பஸ்ஸில் ஏறிக்கொண்டேன். பொதுவாக எல்லாப் பஸ்களும் குளிர்சாதனப் பெட்டி பொருத்தப்பட்டிருக்கும். பஸ் மூலையில் ஒரு ஓய்வு அறை இருந்தது. ஓய்வு அறை என்பது பாத்ரூமைத்தான் குறிக்கப்படுகிறது. யூரின் பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு, பஸ் உள்ளேயே இருந்த ஓய்வு அறை இருந்தது ஆச்சரியமாக இருந்தது. பஸ்ஸைவிட்டு இறங்க வேண்டாமென்று நிம்மதியாக இருந்தது. ஒரு கருப்பு இன பெண்மணி 2 வயதுப் பையனை மட்டும் அழைத்து வராமல், ஒரு குட்டி நாயையும் ஒரு பையில் போட்டு அழைத்து வந்திருந்தாள். வண்டி புறப்பட்டு கொஞ்ச நேரம் கழித்துதான் அவள் எதையோ தேடிக்கொண்டிருக்கும் போதுதான் அவள் நாய் கொண்டு வந்திருக்கிறாள் என்பது தெரிந்தது. வண்டி படு வேகமாக ஓடிக்கொண்டிருந்தது.
அரவிந்த் மூலம் எனக்கு பஸ், ரயில், விமானம் என்று எல்லாவிதங்களிலும் பயணம் மேற்கொள்ள முடிந்தது. நயக்கரா நீர்வீழ்ச்சியை நாங்கள் காலையில்தான் போய் அடைந்தோம். அங்கிருந்து தங்கும் இடத்திற்குச் சென்றோம். எல்லாவற்றையும் அரவிந்த் நெட் மூலம் ஏற்பாடு செய்திருந்தான்.
பின் ஒரு பயண வண்டியை ஏற்பாடு செய்து, நயக்கரா நீர் வீழ்ச்சியைச் சுற்றிப் பார்த்தோம். கனடா நாட்டையும், அமெரிக்கா நாட்டையும் இணைக்கிற பாலம் ஒன்று இருக்கிறது. நடந்தே பலர், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் சென்று விடுகின்றனர். கனடா நாட்டிலிருந்து நீர் வீழ்ச்சியை ரோப் கார் மூலம் கடந்து சென்று பார்க்கிறார்கள். நீர் வீழ்ச்சியில் குளித்ததோடு மட்டுமல்லாமல், போட் மூலம் ராட்சச அருவியைக் கண்டு களித்தோம். நான் குற்றால அருவி போயிருக்கிறேன். அதைவிட பல மடங்கு பரவலான நீர் வீழ்ச்சி இது. நயக்கரா நீர் வீழ்ச்சியைத் தவிர அங்கு வேறு எதுவும் இல்லை. ரொம்பவும் அமைதியான இடம் நயக்கரா என்ற அந்த இடம். திரும்பவும் நாங்கள் விமானம் மூலம் அங்கிருந்து ப்ளோரிடா வந்து சேர்ந்தோம்.
மாலை மயக்கம்
மூன்றாவது மாடி. படிக்கட்டுகளில் ஏறி வரும் நடை சப்தம். தட தட என அவனைத்தவிர வேறு யார் அப்படி வருவார்கள்? அவனாகத்தான் இருக்கவேண்டும். நிச்சயம்.
இன்றாவது கறாராகச் சொல்லிவிட வேண்டியது தான். இது சரிப்படாது இனிமேலும். எவ்வளவு கஷ்டம் இந்த வெய்டிங் என்பதை நீ எப்போதுதான் புரிந்து கொள்வாயோ, இப்படி வருவதாக இருந்தால் ஆபீசிலேயே இருந்துவிடு.. உனக்கு எதுக்கு வீடு மத்த கண்றாவியெல்லாம் –
ஒரு க்விக் குளியல், ஒரே கப்பிலிருந்து இருவரும் அவனுக்குப் பிடித்த டிகிரி டிகாக்ஷன் காபி, சில சமயம் அவன் வாங்கி வரும் அவளது பேவரிட் ராமச்றாய் மிக்ஸ் பஜ்ஜியும் உடன் சேரும். இன்டெலில் இருக்கும் இந்தியா வர மறுக்கும் ஒரேமகன் பற்றி தினம் தொடரும் ஒரே புராணம்.. அவனுக்கு சீக்கிரம் செய்துவைக்க வேண்டிய கல்யாணம் பற்றியும் சில நாட்களில் பேச்சு உண்டு. சாப்பாடு, டிவி, அவனது கால்கள் தன் கால்கள் மீது இதமாக தூக்கம்… சிலநாட்களில் சடக்-என்று அவன் இழுத்து அணைக்கும் வேகம் தூக்கத்தைக்கலைப்பதாக க்ரிப் செய்தாலும் உள்ளுக்குள் வேண்டியிருப்பதை…
இன்னும் ஒரு நாள் – படிக்கட்டு ஏறிவரும் சப்தம் மேல் அபார்ட்மென்ட் குழந்தைகளின் விளையாட்டு.
பிரயோகம்
பாதி தூரம்
வந்த பிறகு தான்
தெரிந்தது
அதல பாதாளம்
அதற்கு மேல்
ஒன்றுமில்லை
தலை நோவ
மண்டையிடி
எதற்குத் தண்டனையோ
உடல்
நீலம் பாரித்தது
ஈசன் கழுத்திலுள்ள
பாம்பு தீண்டிற்றோ
பேச்சு சாதுர்யத்துடன் தான்
ஆரம்பிக்கிறது
பெரும் சண்டையில் போய்
முடிகிறது
வந்த வழியை
திரும்பிப் பார்த்தால்
இவ்வழியா வந்தோம்
மூக்கைப் பிடித்துக் கொண்டு
எனத் தோன்றும்
புலால் உண்ணத் தகுந்ததல்ல
என்று புரிகிறது
என்ன செய்வது
ஆதியில் பச்சை மாமிசத்தை
புசித்தவனுக்கு
துறவி சொல்வது
எங்கு புரிகிறது
மயன் காலண்டர்
முடியப் போகிறதாம்
இதோ தோன்றப்
போகிறாராம்
வாழும் போது
தண்டணை தருகிறோம்
சென்ற பிறகு
தேடி அழுகிறோம்
மானுடமே மரித்த பிறகு
தனித்து அலைவாரா
கடவுள்.
பறவை நண்பன்
நிறம்
இரவை எழுதும் பொழுது
அறையில் வந்து அமர்ந்த
பறவை ஒன்று
என்னோடு கதைக்கத் துவங்கியிருந்தது…
அது பேசும் பேச்சிற்கு
என்னால் தலையாட்ட முடிந்ததே தவிர
பதில் பேச முடியவில்லை
கொஞ்ச நேரத்தில்
அதனோடு சேர்ந்து
இரையைக் கொத்த தொடங்கினேன்
நீண்ட நேரத்திற்குப் பிறகு
என் படுக்கையையும் அது ஆக்கிரமைத்துக்கொண்டது
மென்மையான முனகலில்
தூக்கம் சுவர்க்கம் நுழைய
நிறம் எழுதி முடித்திருந்தது
ஒரு பகலாக மாறிப்போயிருந்தது
பறவை வந்து தங்கிவிட்டுச்
சென்றதற்குச் சாட்சி
படுக்கையில் கிறுக்கப்பட்ட
வெள்ளைக் கோடுகள் மட்டுமே…
யாருக்கும் தெரியாமல்
அதை மறைத்தாக வேண்டும்…
நிலவும் காகமும்
மழை இரவு
அடித்துப் பெய்கிற மழையில்
வளைகின்றது தாவரம்
குனிகின்றன பெருமரக் கிளைகள்
ஒண்டிக் கொள்கின்றன பறவைகள்
ஒண்டிக் கொள்கின்றன பறவைகள்
அணைந்து போகின்றன விளக்குகள்
கம்பிகளுக்குப் பின் ஒளிகிறது நிலா
மேல்நோக்கித் திரும்புகிறது குடை
நடுக்கமுறுகிறது உடல்
பயத்தில் குளிர்ந்து விடுகிறது காற்றும்
ஒரு மின்னலில் ஒளிர்கின்றது
ஜொலிக்கும் புன்னகையோடு
இக்கரிய இரவு மட்டும்.
–
–
சூடாப் பூ …
பள்ளி விட்டு வந்ததும்
தன் ஆஸ்தான இடத்தில்
அமர்ந்திருப்பாள் அம்மு.
எல்லோரும் வீட்டிற்குப் போக
தான் மட்டும்
அனுதினமும் அங்கு
வருவது பற்றிய
ஆரம்ப காலக் கேள்விகள்
அவளை விட்டுப் போய்விட்டன.
ஓலைக் குடிலின்
ஓர் மூலையில் அமர்ந்து
எல்.கே.ஜி பாடங்களை
படித்துக் கொண்டிருப்பதும்
அம்மாவிடமிருந்து
பூ வாங்கிப்போவோருக்கு
புன்னகை ஒன்றை
இனாமாய்க் கொடுப்பதும்
அவளின்
அன்றாடக் கடமைகள்.
மீதமிருக்கும் பூக்களுடன்
வீடு திரும்பிக் கொண்டிருக்கும்
அம்முவிற்கு
என்றைக்குமே புரிந்ததில்லை
அம்மா ஏன் சூடிக் கொள்வதில்லை
அவைகளில் ஏதொன்றையும் என்பது.
எதையாவது சொல்லட்டுமா……….53
அடுத்த நாளும் நாங்கள் விடுதியிலிருந்து கிளம்பி நியுயார்க் சென்றோம். அதே, NFTA-METRO Trolley-ல் கிளம்பினோம். இந்த வண்டியின் கூரையில்தான் அனைவரும் உட்கார வேண்டும். அப்படியே வண்டி நகர்ந்து நகர்ந்து செல்லும். பின் ஒவ்வொரு இடமாக நின்று நின்று செல்லும். அந்த வண்டியில் வரும் கெய்ட் அந்த இடத்தின் பெருமையைச் சொல்வார். யாராவது விரும்பினால் அந்த இடத்தில் இறங்கலாம். பின் இன்னொரு NFTA-METRO Trolley வரும் அதில் ஏறி இன்னும் பல இடங்களுக்குச் செல்லலாம். பெரும்பாலும் நாங்கள் வண்டியிலிருந்தபடியே எல்லா இடங்களுக்கும் சுற்றிக்கொண்டிருந்தோம்.
அன்று இரவு பஸ்ஸில் நியுயார்க்கிலிருந்து நயக்கரா அருவி இருக்குமிடத்திற்குச் செல்ல திட்டமிட்டிருந்தோம். பஸ் கிளம்பும் இடத்தில் நாங்கள் சுமந்து வந்த பைகளை பத்திரப்படுத்திவிட்டுத்தான் நியுயார்க்கில் சுற்றிக் கொண்டிருந்தோம். உயரமான கட்டிடங்களையும், கூட்டமான ஜனத்திரள்களையும் பார்த்தபடி சென்று கொண்டிருந்தோம்.
American Museum of Natural History என்ற இடத்தில் இறங்கினோம். 10 மணிக்குத்தான் திறப்பார்கள் என்றதால், எதிரில் உள்ள பூங்காவில் சுற்றிக்கொண்டிருந்தோம். பூங்காவா அது. நடக்க நடக்க அது பூங்கா நினைத்துப் பார்க்காத தூரத்திற்கு நகர்ந்து நகர்ந்து சென்று கொண்டிருந்தது.அதிலிருந்து மீண்டு நாங்கள் திரும்பவும் Museum த்திற்குள் நுழைந்தோம். வெளியிலிருந்து பார்க்கும்போது சாதாரண கட்டிடமாக இருப்பது விஸ்தாரமாகப் போய்க் கொண்டிருக்கும். பாதி நேரம் அங்கயே போய்விட்டது. அப்படியும் முழுமையாகப் பார்த்த திருப்தி இல்லை. ஒவ்வொரு இடத்திலும் ஒரு மினி தியேட்டர் இருக்கும். அதில் வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் பற்றி ஒரு படம் காட்டிக்கொண்டிருந்தார்கள். எப்படி நில நடுக்கம் ஏற்படுகிறது என்பதை சின்ன சின்ன டிவிக்கள் சொல்லிக்கொண்டே இருக்கின்றன.
எங்களுக்குப் பசி எடுக்க ஆரம்பித்தது. சைவ உணவைத் தேடி ஓடினோம். நியுயார்க்கில் சரவணபவன் ஓட்டல் திறந்திருப்பதால், அது எங்கே என்று தேடி ஓடினோம். நான் ஒரு இடம் சென்றால், அந்த இடத்தின் புள்ளிவிபரங்களைச் சொல்லும் நிபுணன் இல்லை. முன்பெல்லாம் உலகச் சினிமாக்களைப் பார்த்திருக்கிறேன். அதை விபரமாகச் சொல்லும் சாமர்த்தியம் எனக்கில்லை. ஆனால் என் எழுத்தாள நண்பர்கள் பலர் பலவிதமாக அவற்றைப் பற்றியெல்லாம் எழுதியிருக்கிறார்கள்.
இதோ அமெரிக்காவைச் சுற்றிப் பார்க்கும் நான், அதை எப்படி விபரிப்பது. புள்ளி விபரங்களை அள்ளி வீசும் நிபுணன் இல்லை. ஆனால் இப்போதுள்ள Internet உலகத்தில் எல்லாதைப் பற்றியும் தெரிந்துகொள்ள முடியும். உலகம் அப்படி மாறிவிட்டது. அமெரிக்கா போவது என்பது நம் வீட்டு கொல்லைப் பக்கம் போவது போல் அவ்வளவு சுலபமாகப் போய்விட முடியும். நியுயார்க்கில் Time Square என்ற இடத்தில் மாலை வேளையில் சுற்றிக் கொண்டிருந்தோம். பிரம்மாண்டமான விளம்பரங்கள் பெரிய டிவி ஸ்கிரினில் ஓடிக்கொண்டிருந்தது. மக்கள் சுறுசுறுப்பாக அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டிருந்தார்கள். ஒரு பெரிய Toy கடைக்குச் சென்றோம். உள்ளேயே சிறுவர்களுக்கான உலகம் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் எல்லாம் விலை அதிகம். கூட்டமான கூட்டம். கடைக்குள்ளேயே குடைராட்டினம் ஓடிக்கொண்டிருந்தது.
இன்னும் பல இடங்களை வண்டியின் மேற்பரப்பில் இருந்துகொண்டு பார்த்துக்கொண்டிருந்தோம். நயக்கரா நீர்வீழ்ச்சியைப் பார்க்க பஸ்ஸில் பயணம் செய்ய உத்தேசத்துடன் இருந்தோம்.
நிலா
வருகை
பழுத்த இலைகள்
மண்ணில் உதிர்கின்றன
இன்று காலையிலேயே
வெயில் கொளுத்தத் துவங்கிவிட்டது
ரிடையர்டு ஆன பின்பு
சூரல் நாற்காலி தானே கதி
ஆளரவமற்ற வீதியில்
காற்று அலைகிறது
நேற்று நடமாடியவர்கள்
இன்று காணாமல் போகும்போது
மரணம் என்னைப் பார்த்து
பல் இளிக்கிறது
அந்தி வேளையில்
கண்களை மூடி
பறவைகளின் சப்தத்தை
கேட்கும் போது
மனம் இலேசாகிறது
தூரத்தில் யார் வருவது
இந்தக் கண்ணாடியை
எங்கே வைத்தேன்
ஓ பரந்தாமனா –
எங்கிருந்து என்று கேட்டேன்
காதோரம் வந்து சொன்னான்
கைலாயம் என்று.
மண்ணில் உதிர்கின்றன
இன்று காலையிலேயே
வெயில் கொளுத்தத் துவங்கிவிட்டது
ரிடையர்டு ஆன பின்பு
சூரல் நாற்காலி தானே கதி
ஆளரவமற்ற வீதியில்
காற்று அலைகிறது
நேற்று நடமாடியவர்கள்
இன்று காணாமல் போகும்போது
மரணம் என்னைப் பார்த்து
பல் இளிக்கிறது
அந்தி வேளையில்
கண்களை மூடி
பறவைகளின் சப்தத்தை
கேட்கும் போது
மனம் இலேசாகிறது
தூரத்தில் யார் வருவது
இந்தக் கண்ணாடியை
எங்கே வைத்தேன்
ஓ பரந்தாமனா –
எங்கிருந்து என்று கேட்டேன்
காதோரம் வந்து சொன்னான்
கைலாயம் என்று.






