Author: virutcham
தொடரும் பயணம்
ஒரு தேவதையைப் போலதான்
வாழ்ந்திருந்தாள்.
கிரீடத்தில் நட்சத்திரங்களாக
ஒளிர்ந்த வைரங்களுடன்
கூந்தலின் நிறம் போட்டி போடவும்
பறத்தலில் வேகம் குறைந்தது.
உதிரும் சிறகுகளால்
வீடெங்கும் குப்பையாவதாக
இறக்கைகள்
வலுக்கட்டாயமாகப் பிடுங்கப்பட்டன.
ஆயினும் கூட்டிலே ஓய்வெடுக்க
அனுமதியில்லை.
நடந்தேனும் ஊர்ந்தேனும்
தனக்கான தானியத்தை
ஈட்டிக் கொள்ள வேண்டிய கட்டாயம்.
பாய்ந்து வந்த
வார்த்தை அம்புகளைத் தடுக்க
எட்டுகிற தொலைவில் கிடந்தும்
கேடயத்தை எடுக்கின்ற தெம்பில்லை.
சுழற்றி வீச வாளொன்று
சுவரிலே தொங்கியும்
நிமிர்த்திப் பிடிக்க
விரல்களில் வலுவில்லை.
இவள் தொட்டு ஆசிர்வதித்த
செங்கற்களைக் கொண்டு
எழுந்த மனையென்பது
எவர் நினைவிலும் இல்லை.
மேகங்களுக்குள் புகுந்து
வெளிவந்த காலத்தில்
அதன் வெண்மையை வாங்கி
மிளிர்ந்த உடை
பழுப்பாகிப் போய்ப் பாதந்தடுக்க
இரை தேடக் கிளம்புகிறாள்.
வழக்கமாகச் செல்லும் பேருந்தைத்
தவற விட்டதாக எண்ணி
நடக்கத் தொடங்குகிறாள்.
ஓரிரு மணித்துளிகளில்
ஒட்டி வந்து நின்றது
அன்றைக்குத் தாமதமாகப்
புறப்பட்டிருந்த பேருந்து.
சாலைவிதிகளை மீறி
நிறுத்தக் கூடாத இடத்தில் நிறுத்தி
ஏறிக் கொள்ளுமாறு அழைத்த
ஓட்டுநரின் அன்பும் கனிவும்..
மயிற்பீலியின் நீவலென
ஆற்றுகிறது மனதின் காயங்களை.
கால் துவளும் வேளையில்
ஏதேனும் ஒரு பல்லக்கு
எங்கிருந்தோ வந்தடைகிறது
பயணத்தைத் தொடர.
***
–
வரும்போகும்
முற்றத்தில் அடிக்கும்
வெயிலும்
பெய்யும் மழையும்
இப்போது இல்லை
ஓட்டிலிருந்து
தேள் வந்து விழும் என்ற
பயமுமில்லை
குளியலறையை
வசிப்பிடமாக்கிக் கொண்ட
கரப்பான்பூச்சியைக்
காணவில்லை
வாங்கி வைத்த
மாம்பழங்களை
குதறிச் செல்லும்
பெருச்சாளிகளின்
தொல்லை இல்லை
மழை பெய்தால்
ஆங்காங்கே ஒழுகும் என்ற
சிரமமில்லை
வெளவாலுக்கு
அடைக்கலம் தரும்
இடமாக இல்லம்
இனி இருக்கப்போவதில்லை
இனி நெஞ்சை நிமிர்த்தி
நடக்கலாம்
எங்கள் வீடு
ஓட்டு வீடு இல்லை
மாடி வீடென்று.
வெயிலும்
பெய்யும் மழையும்
இப்போது இல்லை
ஓட்டிலிருந்து
தேள் வந்து விழும் என்ற
பயமுமில்லை
குளியலறையை
வசிப்பிடமாக்கிக் கொண்ட
கரப்பான்பூச்சியைக்
காணவில்லை
வாங்கி வைத்த
மாம்பழங்களை
குதறிச் செல்லும்
பெருச்சாளிகளின்
தொல்லை இல்லை
மழை பெய்தால்
ஆங்காங்கே ஒழுகும் என்ற
சிரமமில்லை
வெளவாலுக்கு
அடைக்கலம் தரும்
இடமாக இல்லம்
இனி இருக்கப்போவதில்லை
இனி நெஞ்சை நிமிர்த்தி
நடக்கலாம்
எங்கள் வீடு
ஓட்டு வீடு இல்லை
மாடி வீடென்று.
கதிரொளி
மழையில் நனைந்த பறவை
சிறகை உலர்த்தியது
மின்னல் நரம்புகள்
வானை வெளிச்சமிட்டுக்
காட்டியது
இடியோசை
ஆகாயம் இடிந்து
விழுவதைப் போல
பயங்காட்டியது
இயற்கை வரைந்த
ஏழு வண்ண ஓவியத்தை
ஜனக்கூட்டம் ரசித்தது
மரங்களின் பாஷை
பறவைக்கு புரிந்தது
வீதியில் நடப்பவர்கள்
மழைக்கெதிராய்
கறுப்புக் குடை பிடித்தார்கள்
மெல்ல பரிதி
எட்டிப் பார்த்ததும்
சகஜ நிலை திரும்பியது
அடுத்த மழைக்கு முன்னே
இரையைத் தேட எறும்பு
சாரை சாரையாய்
ஊர்ந்து சென்றது.
சிறகை உலர்த்தியது
மின்னல் நரம்புகள்
வானை வெளிச்சமிட்டுக்
காட்டியது
இடியோசை
ஆகாயம் இடிந்து
விழுவதைப் போல
பயங்காட்டியது
இயற்கை வரைந்த
ஏழு வண்ண ஓவியத்தை
ஜனக்கூட்டம் ரசித்தது
மரங்களின் பாஷை
பறவைக்கு புரிந்தது
வீதியில் நடப்பவர்கள்
மழைக்கெதிராய்
கறுப்புக் குடை பிடித்தார்கள்
மெல்ல பரிதி
எட்டிப் பார்த்ததும்
சகஜ நிலை திரும்பியது
அடுத்த மழைக்கு முன்னே
இரையைத் தேட எறும்பு
சாரை சாரையாய்
ஊர்ந்து சென்றது.
குட்டி குட்டி அழகு
குட்டி குட்டி பற்களை
பிரசில் தேய்த்துவிட்டு
சாக்கடையில் வந்து
நுரை ததும்ப எச்சிலைத் துப்பும்பொழுது
சாக்கடையில் வழிந்தோடுகிறது
அழகு…
குட்டித் தலையை
அப்பாவின் கைக்குள்
நுழைத்து தூங்கும்பொழுது
காற்றில் பரவுகிறது
அழகின் மணம்…
குறு குறு பார்வையில்
கொஞ்ச நேரத்திற்கெல்லாம்
குட்டிச் சிரிப்பொன்று வந்து
வெட்கம் கொள்கிறது…
குட்டிக் கண்களில்
மாட்டிய கறுப்புக் கண்ணாடி
எதிர்வரும் வாகனங்களை
மமதைக் கொள்ளச் செய்கிறது…
பாசை புரியா பாடலில்
செல்பேசிக்கு ரெக்கை முளைத்து விடுகிறது…
அளப்பரிய அர்த்தத்தை
குட்டிக் கணத்தில்
கொட்டிச் செல்வது
அழகு… ம்ம் அழகு…
அன்புடையீர்,
வணக்கம்.
Navinavirutcham blogspot.com படைப்புகள் சில வேறு வலைத்தளங்களிலும் பிரசுரமாகின்றன. தயவுசெய்து, ஒரே படைப்பை எல்லா வலைத்தளங்களிலும் அனுப்ப வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன். உங்கள் படைப்பு நவீன விருட்சம் இதழிலிலும் வெளி வர வாய்ப்பு உள்ளது.
கவிதை அனுப்புவோர், ஒரு கவிதை மட்டும் ஒரே சமயத்தில் அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அழகியசிங்கர்
எதையாவது சொல்லட்டுமா……….52
வாஷிங்டனில் நாங்கள் ரயில் பிடித்தபோது மணி இரவு 8.30. ரயில் பார்ப்பதற்கு பிரமாதமாக இருந்தது. முதலில் ரயில்வே ஸ்டேஷனில் நுழைவதற்கு வரிசையில் நிற்க வேண்டியிருந்தது. அதன்பின்தான் உள்ளே விட்டார்கள். எந்த இடத்தில் வேண்டுமானாலும் எல்லோரும் உட்காரலாம் என்பதால், அவசரம் அவசரமாக இடம் பிடித்துக்கொண்டோ ம். வாஷிங்டனிலிருந்து நியுயார்க் செல்ல 2 மணி நேரம்தான். அன்று இயந்திரக் கோளாறால் ரயில் 1 மணி நேரம் தாமதமாகக் கிளம்பியது. 1 மணி நேரம் தாமதம் ஏன் என்பதை அவர்கள் ஒலிபெருக்கியின் மூலம் தெரியப் படுத்தினார்கள். ரயிலில் நாங்கள் உட்காரும் இடத்திலேயே அந்த ஒலிபெருக்கியைப் பொருத்தி இருந்தார்கள். ரயில் உள்ளே ஒரு கம்பார்ட்மெண்டிலிருந்து இன்னொரு கம்பார்ட்மெண்டிற்கு எளிதாக செல்லலாம். அப்படி போகும்போது கதவு தானகவே திறந்து கொண்டு வழிவிடும். இதைச் சொல்ல கொஞ்சம் கூச்சமாக இருந்தாலும், இதையும் சொல்லாமல் இருக்க முடியவில்லை. ரயிலில் ஒவ்வொரு பெட்டியிலும் இரண்டு பக்கங்களிலும் இரண்டு இரண்டு கழிவறைகள் பொருத்தப்பட்டிருந்தன. அவைப் பார்ப்பதற்கு அவ்வளவு சுத்தமாக இருந்தன. நம் ஊரில் உள்ள ரயிலில் பயணம் செல்லும்போது, ரிசர்வ் செய்தாலும், என் ராசி கழிவறைக்குப் பக்கத்தில்தான் இடம் கிடைக்கும். இரவு முழுவதும் நாற்றத்துடன்தான் பயணம் செய்ய வேண்டி வரும். அங்கு ஒவ்வொரு பெட்டியிலும் 200க்கும் மேற்பட்டவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். உட்காரும் இடம் மெத்தையில் உட்காரும்படி பிரமாதமாக இருந்தது.
பொதுவாக இங்கே பெண்கள் சுதந்திரமாக இருப்பதாகப் படுகிறது. சிலர் புகை பிடித்துக்கொண்டும், சிலர் மது அருந்திகொண்டும் ரயிலில் வந்து கொண்டிருந்தார்கள். உடை அணிவதிலும் அவர்கள் அலட்சியமாகவே இருந்தார்கள். அல்லது அதுதான் அவர்கள் இயல்பாக இருக்கிறது. அரை டிராயரும், மேலே அணியும் உடையும் அணிந்திருந்தார்கள். எல்லோர் முன்னிலும் வெட்கப்படாமல் அவர்களுக்குப் பிடித்த ஆண்களுடன் உதட்டில் முத்தமளித்துக்கொண்டிருந்தார்கள். எனக்கு அவர்களைப் பார்க்கும்போது திகைப்பாகவே இருந்தது. முன்பின் தெரியாத ஒரு ஆணுடன் எப்படி அவர்கள் நாசூக்காகப் பேசுகிறார்கள் என்பதையும் அறிந்து கொண்டிருந்தேன்.
நாங்கள் இறங்கும்போது இரவு 11.30க்கு மேல் ஆகி விட்டது. ஒரு டாக்ஸியைப் பிடித்து நியு ஜெர்சிக்கு அரவிந்த் அழைத்துப்போனான். டாக்ஸிக்கே 40 டாலர் மேல் ஆகிவிட்டது. நியுயார்க்கில் ஹோட்டலில் அறை எடுத்துத் தங்குவது என்பது அதிக விலை கொடுக்கும்படி இருக்கும். மேலும் 3 பேர்கள் தங்க அறை அவ்வளவு வசதிப்படாது என்று அவன் நினைத்திருந்தான். Comfort Inn என்ற இடத்திற்குச் சென்றோம். இரவு 1 மணி மேல் ஆகிவிட்டது நாங்கள் தூங்கும்போது. எல்லாவற்றையும் ப்ளோரிடாவில் இருந்தபடி நெட் மூலம் பதிவு செய்திருந்தான்.
காலையில் அவசரம் அவசரமாக எழுந்து கொண்டோ ம். நியு ஜெர்சியிலிருந்து நியுயார்க் செல்ல ஒரு shuttle ஐ விடுதிக்காரர்கள் ஏற்பாடு செய்தார்கள். அதில் அந்த விடுதியில் தங்கியிருந்த எங்களைப் போன்ற பல நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏறிக்கொண்டார்கள். நியுயார்கில் இறங்கியவுடன், NFTA-METRO Trolley Day Pass வாங்கிக்கொண்டு நியுயார்க்கைச் சுற்றிக் கொண்டிருந்தோம். Empire State Building என்ற இடத்திற்குப் போனோம். மொத்தம் 102 மாடி கொண்ட கட்டிடம். அதில் 86வது மாடியிலிருந்து நியுயார்க்கையும் அதனைச் சுற்றி உள்ள இடத்தையும் பார்த்தோம். நியுயார்க்கை ஒட்டி உள்ள மற்ற மாவட்டங்களையும் பார்த்தோம். அப்படிப் பார்க்கும்போது பெரிய பெரிய கட்டிடங்களைக் கொண்ட நியுயார்க் சின்ன நகரமாகத் தோன்றியது.
அதன்பின் நாங்கள் Liberty Islandம் Ellis Islandம் சென்றோம். Liberty Island ஐப் பார்க்க வரிசையில் பல மணி நேரம் நிற்க வேண்டியிருந்தது. பல நாட்டவர்கள் எங்களுடன் வரிசையில் இருந்தார்கள். பெரும்பாலும் சீனர்கள் அதிக அளவில் இருந்தார்கள். இந்தியாவிலிருந்து தெலுங்கு பேசுபவர்கள் அதிகமாக வந்திருந்தார்கள். லிபர்ட்டி சிலையைப் பார்த்து ஆச்சரியமாக இருந்தது. செப்பால் புனையப்பட்ட சிலை கம்பீரமாக வீற்றிருந்தது. என்னால் வரலாறை எழுத முடியவில்லை. வெளிநாட்டவர்களால் உருவாகப்பட்ட சிலை அது. அங்கங்கே வரலாறை எழுதி வைத்திருந்தார்கள். நான் சாதாரண பார்வையாளன். ஒரு பார்வையாளன் கோணத்தில் என்ன சொல்ல முடியுமோ அதைச் சொல்ல முயற்சி செய்கிறேன். அங்கிருந்து Ellis Island சென்றோம். அமெரிக்க நாட்டிற்கு வருபவர்கள் Ellis Island வழியாகத்தான் உள்ளே வரமுடியும். அங்கு அதற்காகவே ஒரு அலுவலகம் செயல்பட்டு வந்தது. அங்குள்ள அதிகாரிகள் சிலரை உள்ளே வரவிடாமல் தடுத்து விடுவார்கள். அன்றைய பொழுது போய்விட்டது. திரும்பவும் நாங்கள் விடுதிக்கு வந்தோம்.
தேடிப்பற
தேடித்தேடி
அலைந்த என்னை
குமபல்சேர்ந்து
கேள்விகேட்டது.
தேடும்பொருளின்
பெயர்தான் என்ன
என்றே என்னிடம்
கேட்பவர்களிடத்தில்
நானும்,
தேடும்பொருளின்
பெயரை அறியேன்
என்றதும்
பார்வையாலே
என்னை பரிகசித்துப்
பைத்தியம் என்று
பட்டமும் சூட்டி
பரபரவென்று
கலைந்ததுகும்பல்!
பெயருள்ளபொருளையே
தேடும் உலகில்
பெயரற்ற பொருளைத்
தேடுபவர்களுக்கு
கிடைக்கும் பெயர்தான்
பைத்தியம்போலும்!
மாற்றம்
நிலைக்கண்ணாடி முன்பு
தான் தொலைத்த
இளமையைத் தேடுகிறார்கள்
தன் பிம்பம் தான் இது
என்று ஏற்றுக் கொள்ள
மறுக்கிறார்கள்
கடவுளால் பரிசளிக்கப்பட்ட
பேரழகை
சாத்தான் களவாடிவிட்டதாக
எண்ணுகிறார்கள்
வயதைக் காட்டிக் கொடுக்கும்
நரைத்த முடியை
டை அடித்து மறைக்கிறார்கள்
பருவத்தில் மினுமினுத்த மேனியில்
சுருக்கம் விழுவதை பார்த்து
பதறுகிறார்கள்
இன்று எந்தக் கண்களுமே
ஆச்சர்யத்துடன் தன் எழிலை
ஏறிட்டுப் பார்ப்பதில்லை
என்பதை எண்ணும் போது
நிலைக்கண்ணாடி முன்பு நின்று
கேவி அழுகிறார்கள்.
தான் தொலைத்த
இளமையைத் தேடுகிறார்கள்
தன் பிம்பம் தான் இது
என்று ஏற்றுக் கொள்ள
மறுக்கிறார்கள்
கடவுளால் பரிசளிக்கப்பட்ட
பேரழகை
சாத்தான் களவாடிவிட்டதாக
எண்ணுகிறார்கள்
வயதைக் காட்டிக் கொடுக்கும்
நரைத்த முடியை
டை அடித்து மறைக்கிறார்கள்
பருவத்தில் மினுமினுத்த மேனியில்
சுருக்கம் விழுவதை பார்த்து
பதறுகிறார்கள்
இன்று எந்தக் கண்களுமே
ஆச்சர்யத்துடன் தன் எழிலை
ஏறிட்டுப் பார்ப்பதில்லை
என்பதை எண்ணும் போது
நிலைக்கண்ணாடி முன்பு நின்று
கேவி அழுகிறார்கள்.
நீரும் நிலாவும்
பித்தளை குட்டுவத்தின்
நீரில் நிலா மிதக்க
ஐந்து வயது சிறுவன்
ஒரு தட்டால் நிலாவை
சிறை வைத்தான்.
அடுத்த நாள்
மூடியை பத்திரமாக
திறந்து பார்த்தான்.
நிலா இருந்தது.
கொஞ்சம்
கரைந்துமிருந்தது.
மீண்டும் மூடி
வைத்து விட்டு
அடுத்த நாள் பார்த்தான்.
இன்னும் கரைந்திருந்தது.
நாட்கள் செல்லச்
செல்ல முழுவதும்
கரைந்திருந்தது.
நிலா முழுவதும்
நீரில் கரைந்து
விட்டதாக எண்ணி
மூடியைத் திறந்தே
வைத்திருந்தான்.
நீர் ஆவியாகி
வானத்தில் நிலாவாகப்
படியத் தொடங்கியது.
நீர் ஆவியாக
ஆவியாக
நாட்கள் செல்லச்
செல்ல வானத்தில்
நிலாப் படிமம்
வளரத் தொடங்கியது
முழு நிலாவாக.








