விருட்சம் நடத்தும் 57வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி 26.06.2021 அன்று சனிக்கிழமை 6.30 மணிக்கு.

அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 57வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வருகிற சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு (26.06.2021) அன்று நடைபெற உள்ளது. 
கவிதை குறித்து உரையாடல் நிகழ்ச்சியை நடத்துவதாக உள்ளோம்.


எல்லோரும் கலந்துகொண்டு சிறப்புச் செய்யும் படி கேட்டுக்கொள்கிறேன்.

Topic: சொல் புதிது- கவிதை நேசிப்போம் நிகழ்வுTime: Jun 26, 2021 18:30 Mumbai, Kolkata, New DelhiJoin Zoom Meetinghttps://us02web.zoom.us/j/81070838079…

Meeting ID: 810 7083 8079

Passcode: Singer123

சிட்டியின் நினைவுநாள் கொண்டாட்டம்

அழகியசிங்கர் 


 23.06.2021 – புதன் கிழமை அன்று மணிக்கொடி எழுத்தாளர் சிட்டியின் நினைவுநாள்.  இது குறித்து சிட்டியும் ஜானகிராமனும் எழுதிய ‘நடந்தாய் வாழி,  காவேரி’ என்ற  புத்தகத்தைக் குறித்துப் பேசினோம். 

இக் கூட்டம் விருட்சம் – குவிகம் என்ற இலக்கிய அமைப்பு நடத்தியது

கதைஞர்களைக் கொண்டாடுவோம்.


அழகியசிங்கர் 

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 14வது  கதை வாசிப்புக்  கூட்டத்தில், வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைஞர்கள் ஐராவதம், ஸிந்துஜா.


வழக்கம்போல் 8 இலக்கிய நண்பர்கள் கதைகளைக் கூறி கதையைப் பற்றிப் பேசுகிறார்கள். இக் கூட்டம் 25.06.2021 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது.  அனைவரும் கலந்துகொண்டு கூட்டத்தைச் சிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

விருட்சம் நடத்தும் 56வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி

19.06.2021 அன்று நடந்தது. அதன் காணொளியை இங்கு அளிக்கிறேன்.

அழகியசிங்கர்

கலந்துகொண்டவர்கள் எல்லாம் மொழிபெயர்ப்பு கவிதைகளைப் படித்தார்கள். சிறப்பாக நடந்தது கூட்டம்.

விருட்சம் – குவிகம் இணைந்து நடத்தும் இலக்கியக் கூட்டம்

மணிக்கொடி எழுத்தாளர் சிட்டியை ஞாபகப்படுத்துகிறோம்..

23.6.2021 அன்று மணிக்கொடி எழுத்தாளர் சிட்டியின் நினைவு தினம்.

அந்த நாளை முன்னிட்டு ‘நடந்தாய் வாழி காவேரி’ என்ற நூலைப் பாராட்டுகிறோம்.

சிட்டியும் – தி.ஜானகிராமனும் சேர்ந்து எழுதிய நூல் அது.

அது குறித்து சிறப்புரை வழங்க உள்ளவர் தங்க. ஜெயராமன்.

தலைப்பு : தன் படைப்பாளர்களையும் பாத்திரங்களாக்கிய நடந்தாய், வாழி, காவேரி”

தலைமை : மூத்த எழுத்தாளர் நரசய்யா கலந்து கொள்பவர்கள் :

1. சிட்டி வேணுகோபாலன். 2. உமா சங்கரி 3. அழகியசிங்கர் 4. பானுமதி தேதி :

23.06.2021 நேரம் : மாலை 4 மணிக்கு Topic: ‘நடந்தாய் வாழி காவேரி’ என்ற நூலைப் பாராட்டுகிறோம். Time: Jun 23, 2021 16:00 India Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/89185254214?pwd=QjFkcVAwcWVYSnVUMmp6a09zM2svUT09 Meeting ID: 891 8525 4214 Passcode: 300548

அப்பாவின் அறை

 துளி – 204

அழகியசிங்கர்

இன்று தந்தையர் தினம். 


அப்பாவின் அறை என்ற தலைப்பின் கீழ் நான் ஒரு கதை எழுதி ஒரு போட்டிக்கு அனுப்பி இருந்தேன்.  அக் கதைக்கு ஆறுதல் பரிசு கூட கிடைக்கவில்லை.


இது நான் எதிர்பார்த்ததுதான்.  ஆனால் அந்தக் கதை ஒரு உண்மையான சம்பவத்தை வைத்துக்கொண்டு எழுதியது. அப்பாவைப் பற்றி எழுதியது.
95 வயதுவரை என் அப்பா நடமாடிக்கொண்டிருந்தார்.  96வது வயதில் தகராறு ஆரம்பித்துவிட்டது.  பின் ஒரு ஆண்டு படுக்கையில் படுத்தபடி இருந்தார்.
அப்பா படுத்திருக்கும் அறையை ஒட்டினாற்போல் உள்ள ஹாலில் ஒரு திவானில் நான் படுத்துக்கொண்டிருப்பேன்.  இரவில் அப்பா சத்தம் போடுவார்.  எழுந்து உட்கார்ந்து அப்பாவைக் கவனிப்பேன்.


எனக்குத் தூக்கம் கலைந்து விட்டதென்று கோபம் வரும்.  ஆனால் அப்பாவிடம் காட்ட முடியாது.  இரவு நேரத்தில் டைபரை கழட்டிவிட்டு அப்பாவிற்கு சிஷ்ருசை செய்வேன். 
அது மாதிரி இரவு நேரத்தில்  எழுந்து எழுந்து இப்போதும் அது மாதிரி எழுந்து கொள்கிறேன்.
அப்பா இறந்த பிறகும் நான் ஓராண்டாக அப்பா இருந்த அறையைப் பார்க்கவே பயந்தேன்.  அந்த அறையைக் கடந்து போகும்போது எனக்கு அப்பா ஞாபகம் வரும்.


அப்பா கூப்பிடுகிற மாதிரி தோன்றும்.   அப்பா அறை திறந்திருந்தால் உடனே போய் மூடி விடுவேன்.  இந்தப் பிரமை என்னைவிட்டுப் போக ஒரு வருடம் மேல் ஆனது.
அப்பாவின் தினத்தன்று தோன்றிய சின்ன குறிப்பு இது.

விருட்சம் நடத்தும் 56வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி

19.06.2021 அன்று சனிக்கிழமை 6.30 மணிக்கு.

அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 56வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வருகிற சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு (19.06.2021) அன்று நடைபெற உள்ளது. நிகழ்ச்சியைச் சிறப்பிக்கக் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த முறை மொழிபெயர்ப்புக் கவிதைகளை வாசிக்க அழைக்கிறேன். தமிழில் ஏகப்பட்ட மொழிபெயர்ப்புக் கவிதைகள் வந்த வண்ணம் உள்ளன. இந்திய மொழிகளிலிருந்தும் மற்ற நாடுகளிருந்தும் வந்துள்ள மொழிபெயர்ப்புக் கவிதைகளை வாசிக்க அழைக்கிறேன்.

புதிதாக இந்தக் குழுவில் வாசிக்க வருபவர்கள் தங்கள் கவிதைகளை மட்டும் வாசிக்கலாம். அவர்களை அறிமுகப்படுத்திக் கொண்டு.Topic: விருட்சம் நடத்தும் 56வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சிTime: Jun 19, 2021 20:30 IndiaJoin Zoom

Meetinghttps://us02web.zoom.us/j/88355962622…

Meeting ID: 883 5596 2622Passcode: 177199

1Sivakumar GanesanLikeCommentShare

0 Comments

ActiveWrite a comment…

Topic: விருட்சம் நடத்தும் 56வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சிTime: Jun 19, 2021 20:30 IndiaJoin Zoom Meetinghttps://us02web.zoom.us/j/88355962622…Meeting ID: 883 5596 2622Passcode: 177199

ஹைகூ 100…

14.06.2021
துளி – 203

அழகியசிங்கர்

55வது கவிதை நேசிக்கும் கூட்டம் 12.06.2021 அன்று நடைபெற்றது.   வழக்கம்போல் கவிதைப் புத்தகம் ஒன்றை அறிமுகப்படுத்தும் வழக்கம். 


பலருடைய கவிதைப் புத்தகங்களை நான் அறிமுகப்படுத்தி இருக்கிறேன். 
இப்படி அறிமுகப்படுத்துவதால் கவிதைப் புத்தகம் கடகடவென்று விற்குமென்றோ விற்காது என்றோ நான் நினைப்பதில்லை.

ஒரு முறை நான் வெளியிட்ட காசியபனின், ‘முடியாத யாத்திரை’ என்ற கவிதை நூலை இலவசமாகக் கொடுக்கிறேன்’  என்றேன்.  இலவசமாகக் கொடுக்கிறேன் என்று சொல்லிய பிறகு கூட ஒரே ஒருவரைத் தவிர யாரும் அதைக் கண்டுகொள்ளவில்லை

.
        இதை எப்படி எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை.


55வது கவிதை நேசிக்கும் நிகழ்வில் நான் அறிமுகப்படுத்திய கவிதை நூல். ஹைகூ 100 என்ற புத்தகம். எழுதியது தங்கம் மூர்த்தி.  
102 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தின் விலை ரூ.80.  மேன்மை வெளியீடாக வந்துள்ளது.


அப் புத்தகத்தில் உள்ள சில கவிதைகளைக் கவி அரங்கத்தில் வாசித்தேன்.
எனக்கு ஹைகூ பற்றி ஒன்றும் தெரியாது.  ஆனால் 3 வரிகளில் ஒரு கவிதை எழுதுவது பெரிய சவால் என்று தோன்றியது.”


ஹைகூ கவிதைகளில் கவிதைக்கு எந்தத் தலைப்பும் இல்லை. 3 வரிகளில் கடைசி வரியை மாற்றி எழுத வேண்டும்.
தங்கம் மூர்த்தி புத்தகத்தில் உள்ள சில கவிதைகளை இங்குத் தருகிறேன்.


கண்ணில்லாதவர்

கையேந்துகிறபோது

நாமெல்லாம் குருடர்கள்                                                               

*****


முதலில் பூத்த ரோஜா

கோவிலுக்கா கூந்தலுக்கா

பூமியின் மடியில் பூ                                                               

*****             

விழிகளில் ஊதி 

தூசி எடுத்தாய்

தூசி வெளியேற

உள்ளே நீ.                                                             

 *******
ஹைகூ கவிதைகளை எளிதாக வாசித்துக்கொண்டே போகலாம்.  ஆனால் எதையும் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாது போல் தோன்றுகிறது.  

இதைப் படித்து விட்டு நான் ஒரு ஹைகூ முயற்சி செய்யட்டுமா?


கற்பனையில்

வாழ்ந்து வருகின்றேன்

நிஜம் கண்ணெதிரில்

விருட்சம் வழங்கிய 55வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி 12.06.2021

  அழகியசிங்கர்

விருட்சம் வழங்கிய 55வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி 12.06.2021 அன்று சனிக்கிழமை 6.30 மணிக்குச் சிறப்பாக நடந்து முடிந்தது. 

அந்நிகழ்ச்சியின் காணொளியை இங்கு அளிக்கிறேன்.  

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 13வது கதை வாசிப்பு கூட்டத்தின் காணொளிப் பதிவு.

 கூட்டம் 11.06.2021 அன்று வெள்ளிக்கிழமை நடைப்பெற்றது
அழகியசிங்கர்


ஆர். ராஜகோபாலன், ஜெ.பாஸ்கரன் என்ற இரு கதைஞர்களைக் குறித்து கூட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது.


8 இலக்கிய நண்பர்கள் உரை நிகழ்த்தினார்கள.