விருட்சம் பெருமையுடன் வழங்கும் 55வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி.

 
அழகியசிங்கர்

12.06.2021 அன்று சனிக்கிழமை 6.30 மணிக்கு. சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 55வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வருகிற நாளை மாலை 6.30மணிக்கு 12.06.2021 அன்று நடைபெற உள்ளது.

இந்தக் கவி அரங்கத்தில் மற்றவர்கள் கவிதைகளை வாசிக்க வேண்டும். உங்கள் கவிதைகளை வாசிக்கக் கூடாது.

நீங்கள் நேசிக்கும் கவிஞர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். அவர்களை ஞாபகப்படுத்துகிற கவிதைகளை வாசிக்க வேண்டும்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்து சிறப்பிக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.

Topic: சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 55வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி Time: Jun 12, 2021 18:30 India Join Zoom Meeting https://us02web.zoom.us/j/86150691629?pwd=L09TNWFKcXlLQll3aXdyQ0tqRkdrQT09

Meeting ID: 861 5069 1629

Passcode: 079693

ஞானக்கூத்தன் கவிதையை வாசித்தேன்..

 துளி – 201

அழகியசிங்கர்


ஒவ்வொரு முறையும் கவிதை வாசிக்கும் கூட்டம் நடத்தும்போது ஒரு கவிதைப் புத்தகம் அறிமுகப் படுத்துவேன். எத்தனைப் பேர்கள் கேட்டு ரசிக்கிறார்கள் என்பது தெரியாது. கவிதைப் புத்தகம் வாங்குவதற்கு ஒரு தூண்டுதலாக இருக்க வேண்டுமென்பதற்காகத்தான் அப்படிக் கூறுவேன்.


54வது முறையாகக் கவிதை வாசிக்கும் கூட்டம் 05.06.2021 அன்று நடந்தது. அக் கூட்டத்தில் ஞானக்கூத்தன் கவிதைகள் என்ற புத்தகத்தை அறிமுகப்படுத்தினேன். காலச்சுவடு பதிப்பகம் கொண்டு வந்த புத்தகம். ரூ895. 823 பக்கங்கள் கொண்ட 682 கவிதைகள். ஆரம்பத்திலிருந்து அவர் மரணம் அடையும் வரை எழுதிய எல்லாக் கவிதைகளையும் தொகுக்கப்பட்டிருக்கிறது.


நான் படித்த கவிதை ‘பக்திக்கு மெச்சினாள்’ என்ற கவிதை. அது சற்று நீளம். ஆனால் அக் கவிதை அச்சாகியிருந்த எதிர் பக்கத்தில் ஒரு நான்கு வரிக் கவிதை இருக்கிறது. அதையும் படிக்க வேண்டுமென்று நினைத்தேன். படிக்கவில்லை. அக் கவிதையின் தலைப்பு ‘சிரிப்பு’. அதை இங்கு தருகிறேன்.


சிரிப்பு

எத்தனை நேரம்தான்

நீடிக்கும் சொல்லுங்கள் ஒரு

விற்பனைப் பெண்ணின்

சிரிப்பு

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 13வது கதை வாசிப்புக் கூட்டம் 11.06.2021 அன்று வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது

 அழகியசிங்கர்

ஆர். ராஜகோபாலன், ஜெ.பாஸ்கரன் என்ற இரு கதைஞர்களின் கதைகள் குறித்துக் கூட்டம். 8 இலக்கிய நண்பர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள். எல்லோரும் கலந்து கொள்ளும்படி சிறப்புச் செய்யும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.

கூட்டத்தைச் சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்த முத்து சந்திரசேகருக்கு நன்றி.

Topic: சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 13வது கதை வாசிப்புக் கூட்டம் Time: Jun 11, 2021 18:30

India Join Zoom Meeting https://us02web.zoom.us/j/88184924376?

pwd=RUFFbnF2cVRLZjBsa0xzMUNrdUF0Zz09 Meeting ID: 881 8492 4376 Passcode: 634615

ஒரு கதை ஒரு கருத்து


அழகியசிங்கர்


ஜெயகாந்தன்


ஒரு பகல் நேரப் பாசஞ்சர் வண்டியில்


‘ஜெயகாந்தனின் கதை. இரண்டாம் உலக மகா யுத்த காலம். அப்போது யுத்தம் நடந்து கொண்டிருந்தது. முடியவில்லை. ஆனால் பட்டாளத்துக்குப் போயிருந்த அம்மாசி ஊர் திரும்பிவிட்டான். உண்மையில் அவன் ஊருக்குப் போக விரும்பவில்லை. அவன் விருப்பத்துக்கு மாறாக அவன் வீட்டுக்கு அனுப்பப் பட்டான். ராணுவத்திற்கு இனிமேல் அவன் உபயோகப்பட மாட்டான்.’


இப்படி ஆரமபிக்கிறது இந்தக் கதை


இதில் வேடிக்கை என்னவென்றால் அவன் வருகையை எதிர்பார்த்து வரவேற்கவோ, கொண்டாடவோ அவனுக்கு யாருமில்லை.


இங்கு ஜெயகாந்தன் இப்படி எழுதுகிறார்.


‘தான் வெறுத்து உதறிவிட்டப் போன அந்தத் தாழ்ந்த சேரிக்கே அவன் திரும்ப வேண்டி நேர்ந்தது.’


தாழ்ந்து கிடந்த தன் சமூக வாழ்க்கையை நினைத்து வெறுத்துப் போய் முதல் மகா யுத்த காலத்தில் பட்டாளத்தில் சேர்ந்து பதினெட்டு வயதிலேயே கடல் கடந்து செல்லும் பேற்றினை அடைந்தவன் அம்மாசி.


அப்போது அம்மாசி ஒரு முறை சில காலம் கழித்து அவன் சேரிக்கு வந்தான். அவன் அவர்களுடன் ஒட்டவில்லை.


இரண்டாவது உலக மகாயுத்தத்தின் போது அவன் திருப்பி அழைக்கப்பட்டான். திரும்பவும் அவன் சேரிக்கு சாலமடித்துவிட்டுப் போய் விட்டான்.


எதிரிகளுடன் போராடும்போது எதிரிகளின் குண்டு வீச்சுக்கு ஆளாகி சில மாதங்கள் ராணுவ ஆஸ்பத்திரியில் கிடந்தான்.


ராணுவத்துக்கு உபயோகமற்றவனாக மாறிவிட்டான். அவன் ஊருக்குக் கிளம்பிவிட்டான். அவனுக்கு யாருமில்லை. அவனை வரவேற்க ஊரிலும் யாருமில்லை. அவன் ராணுவத்தில் இருக்கும்போதுதான் அவன் அம்மா இறந்து விட்டாள். அவனால் அப்போது வரக்கூட முடியவில்லை.

தன் கான்வாஸ் பைச்சுமையுடன், தான் பிறந்த ஊருக்குள்ளே போய் நான்கைந்து தெருக்களை அர்த்தமற்றுச் சுற்றிப் பார்த்தான். பின்
ஊருக்கு வெளியே வந்து தனது சேரியை தூரத்திலிருந்து பார்த்தான்.


மதகில் அமர்ந்திருந்தபோது தன் தாயைப் பற்றி நினைத்துக்கொண்டான்.
சேரியைச் சார்ந்த முண்டாசு கட்டிய ஒருவன், அங்கு வந்து அவனை விசாரிக்கிறான்.

அம்மாசிக்கு தன் ஒன்றுவிட்ட தங்கச்சி காசாம்பூவின் நினைவு வந்தது. உடனே அவள் கணவன் சடையாண்டியின் பேரைச் சொல்ஙூ அவர்களைத் தேடி வந்ததா கூறுகிறான். அவன் பட்டணத்துக்குப் பூட்டானே என்கிறான் அவன். அம்மாசிக்குப் பெருத்த ஏமாற்றமாக இருந்தது.


திரும்பவும் ரயில்வேஸ்டேஷனுக்குப் போகிறான். அவன் அந்தக் கிராமத்தை விட்டு பட்டணம் போகிறான். அதே பாசஞ்சர் வண்டியில்.


வண்டியில் கூட்டமில்லை. அவன் உட்காரப்போகும் எதிரில் ஒரு தாய் தூங்குகின்ற பெண் குழந்தையை மடியில் கிடத்தித் தானும் சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருந்தாள்.
அந்தப் பெண்ணைப்பற்றி ஜெயகாந்தன் இப்படி வர்ணிக்கிறார்.
‘அம்மாசி அவளை வெறித்துப் பார்த்தான்.


அவளது தோற்றத்திலிருந்து அவள் ஓர் இளம் பிராமண விதவை என்று தெரிந்தது. நாட்பட்ட க்ஷயரோகத்தால் அரிக்கப்பட்டு வெறும் ஆஸ்திக் கூடே உயிர் தரித்து அயர்ந்தது போல் தோற்றம்.’


டிக்கட் பரிசோதகர் அந்தப் பெண்ணைப் பார்த்து டிக்கட் கேட்கிறார். அவள் டிக்கட் வாங்கவில்லை என்று தெரிகிறது. அம்மாசி அவளுக்காக டிக்கட் வாங்கினான்.
அந்த விதவைப் பெண் அம்மாசியை வாழ்த்துகிறாள். இந்தக் கதை பாசஞ்சர் வண்டியிலேயே நடக்கிறது. அவளிடம் இருக்கும் குழந்தைக்கு எதாவது வாங்கலாமென்று நினைக்கிறான்.


‘குழந்தைக்கு எதாவது வாங்கித் தரட்டுமா?’ என்று கேட்கிறான். அவள் சம்மதிக்கிறாள்.
அம்மாசி வண்டியிலிருந்து இறங்கி பிளாட்பாரத்திலிருந்து ஸ்டாலுக்குச் சென்றான். ஒரு பன்னும் ஒரு கப் பாலும் வாங்கினான்.கொஞ்சம் யோசித்து இன்னொரு கப் பாலும் பன்னும் வாங்கினான்.


அவன் பன்னை அவளிடம் நீட்டினான். அவள் வேண்டாம் என்றாள். பாலாவது குடிக்கச் சொல்கிறான். அவள் முழுவதும் குடித்து விட்டாள். பசி. குழந்தையை தன் மடியில் வைத்துக்கொண்டு ஒரு பன்னும், பாலும் கொடுத்தான்.
திரும்பவும் குழந்தைக்கு ஒரு பொம்மை வாங்கிக்கொடுத்தான் அம்மாசி. ஒரு வாத்து பொம்மை. குழந்தை அவனோடு வெகு நாள் பழகியிருந்தவள் போல் சிரித்து விளையாடினாள். . .


வெகுநேரமாய் நின்றிருந்த பாசஞ்சர் வண்டி அந்த ஸ்டேஷனிலிருந்து கிளம்பியது.
அவளுடைய கதையை மூக்கைச் சிந்திக்கொண்டு அம்மாசியிடம் பேசினாள். இந்தக் குழந்தையின் அப்பாவுக்கு ஓட்டிலிலே வேலை. அவருக்கு க்ஷயரோகம். அவரை வேலையை விட்டுத் துரத்தி விட்டார்கள். அவளுக்கு நாலு குழந்தைகள். ஒவ்வொன்றாகப் பிறந்து வாரிக் கொடுத்து விட்டாள். கடையிலே இந்தக் குழந்தை மட்டும் மிஞ்சியது.
சற்று நேரத்துக்கு முன் அருந்திய பாலி னால் விளைந்த தெம்பும் மாலை நேரக் குளிர்ந்த காற்றும் தொடர்ந்து சில நிமிஷங்கள் அவளுக்குப் பேசச் சக்தி அளித்தன. ஆனால் பேசிய பிறகு அவளுக்கு மூச்சுத் திணறியது.


அவள் சிறிது நேரத்தில் இறந்து விடுகிறாள். சாவதற்கு முன், “உங்க குழந்தைகள்லே ஒருத்தியா….வளர்ப்பீங்களா ஐயா” என்று அவள் குழந்தையை அவனிடம் ஒப்படைக்கிறாள்.
அந்த ரயில் வண்டி நின்ற இடத்தில் அவள் பிணத்துடன் இறங்குகிறான் அம்மாசி. அந்த வண்டியில் டிக்கட் எடுக்காமல் வந்திருந்த பிச்சைக்காரர்கள் அவனுக்கு உதவி செய்தார்கள். 3 நாட்கள் அந்த ஊரில் தங்குகிறான். அவளுடைய இறுதிச் சடங்கை முடிக்கிறான். இந்த இடத்தில் ஜெயகாந்தன் அவன் எங்கே தங்கினான். அவளுடைய குழந்தையை வைத்துக்கொண்டு எப்படித் தடுமாறினான் என்பதையெல்லாம் கதையில் சொல்லவில்லை. கதையில் இது சௌகரியம் வேண்டியதை மட்டும் சொல்லிவிட்டு வேண்டாததை விட்டுவிடலாம்.


இந்த நிகழ்ச்சி நடந்து மூன்றாம் நாள் மத்தியானம் அந்தச் சின்னஞ் சிறு ரயில்வே ஸ்டேஷனில் தெற்கே இருந்து வரும் பகல் நேரப் பாசஞ்சர் வண்டிக்காகக் கையில் குழந்தையுடன் காத்திருந்தான் அம்மாசி.
இந்த இடத்தில் ஜெயகாந்தன் இப்படிக் கூறுகிறார்.


தன் தாய்க்குச் செய்யத் தவறிய ஈமக்கடன்களையெல்லாம் ஒரு தாய்க்குச் செய்துவிட்டு, வாழ்க்கையில் தனக்குக் கிடைத்திருக்கும் பொக்கிஷம் போல் அந்தக் குழந்தையை இரவெல்லாம் மார்போடு அணைத்துக் கொண்டான்.


வண்டியிலிருந்தவர்கள் எல்லோரும் குழந்தையும் அம்மாசிக் கிழவனையும் மாறி மாறிப் பார்த்தார்கள். இந்தக் கிழவனுக்கு இவ்வளவு அழகான குழந்தை என்ன உறவு.
பொன்னா, பேத்தியா என்று கேட்கிறார்கள்.
பேத்தி என்கிறான்.


‘குழந்தைக்கு என்ன பெயர்?’ என்று கேட்கிறார்கள். ஒரு நிமிடம் யோசிக்கிறான். அந்தப் பெண்ணின் தாயிடம் இந்தக் குழந்தையின் பெயர் கேட்கவில்லை. பின் சுதாரித்துக் கொண்டு, ‘பாப்பாத்தி’ என்கிறான். இனிமேல் அது ஒரு பெயர்தான் என்று முடிக்கிறார் ஜெயகாந்தன்.


இந்தக் கதையில் என்ன சொல்ல வருகிறார் ஜெயகாந்தன்.


தாழ்ந்த ஜாதியில் பிறந்த ஒருவனுக்கு எந்த மதிப்பும் அவன் ஊரில் இல்லை. அவன் மதிப்பைப் பெறுவதற்கு ராணுவத்தில் சேர்கிறான். திரும்பவும் அவன் ஊருக்கு வரும்போது யாரும் அவனை வரவேற்கவும் இல்லை, என்ன என்று கேட்கவுமில்லை. அதற்குக் காரணம் அவன் ஊரை விட்டு சிறுவயதிலேயே போய் விட்டான். தாழ்ந்த ஜாதி என்ற குழப்பம் அவனிடம் இருக்கிறது. ஆனால் இந்தக் கதையில் திருப்பு முனையாக க்ஷயரோகம் பாதித்த ஒரு பிராமணப் பெண்ணின் குழந்தையை வாங்கிக் கொண்டு வளர்க்கிறான். அவனுக்கு வாழ்க்கையில் ஒரு அர்த்தம் கிடைக்கிறது. அந்தப் பெண்ணிற்குக் கொல்லிப் போடும்போது தன் அம்மாவிற்கு அது மாதிரி செய்ததாக நினைத்துக் கொள்கிறான். அவனுக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பு ஏற்பட்டதாக நினைக்கிறான்.


ஜெயகாந்தன் அந்தக் காலத்தில் இப்படி புரட்சிகரமான கதையை எழுதியிருக்கிறார்.
(திண்ணை முதல் இணைய மின் இதழில் ஜூன் 8ல் பிரசுரமான கட்டுரை )

பத்திரிகைகள் பலவிதம்…3

 07.06.2021

ஜூன் 1981ல் வெளிவந்த ‘ழ’ என்ற சிற்றேடு


அழகியசிங்கர்


ழ என்ற பத்திரிகை 1978ஆம் ஆண்டிலிருந்து விட்டு விட்டு 1988 வரை வந்து நின்றுவிட்ட பத்திரிகை. ஆரம்பத்தில் ஆத்மாநாம் ஆசிரியர் பொறுப்பிலிருந்த பத்திரிகை. பின் ஆத்மாநாமிற்குப் பிறகு ஞானக்கூத்தன் பொறுப்பாசிரியராக இருந்து பத்திரிகையை நடத்தியிருக்கிறார்.


நான் இப்போது பேசப்போவது ஆத்மாநாம் கொண்டு வந்த ழவின் 17வது இதழ். தற்செயலாக நான் புத்தகக் குவிலைத் துழாவிக்கொண்டிருந்தபோது இந்த இதழ் தற்செயலாகக் கிடைத்தது.


ழ என்றால் மிக எளிமையான தோற்றம்தான் என்னைக் கவரும்.


மொத்தமே 16 பக்கங்கள்தான் இதழ் இருக்கும். அட்டைப் படம் என்று தனியாக இருக்காது. பல நண்பர்களின் கூட்டு முயற்சியால் நடந்த இதழ் இது.


அரசாங்கத்தில் பணிபுரிபவர்கள், கல்லூரியில் பேராசிரியராக இருப்பவர்கள் என்று பலர் முயற்சியில் ழ பத்திரிகை நடந்து கொண்டிருந்தது.


16பக்க இதழாக இருந்தாலும் ஒவ்வொரு இதழும் மணிமணி யாக இருக்கும்.


இதழ் மீது நமக்கு அலாதியான பக்தியும் மரியாதையும் ஏற்படாமலிருக்க முடியாது. ஒரு புரட்டு புரட்டினால் ழ இதழைப் படித்து முடித்து விடலாம்.


ஆனால் நிதானமாக ஒவ்வொரு பக்கமாகப் பார்க்கலாம்.


ழ இதழில் முக்போவியமாக எஸ்.முரளிதரனின் ஓவியம் வெளிவந்திருக்கிறது. தனியாக இந்த ஓவியத்தை அச்சடிக்கவில்லை. பத்திரிகையின் ஒரு பகுதியாகவே அச்சடிக்கப்பட்டிருக்கிறது.


இதழ் ஜ÷ன் 1981ல் வந்திருக்கிறது. 40 ஆண்டுகளுக்கு முன்னால் வந்திருந்த இதழ் இது. அப்போது இதன் விலை ரூ.0.75 பைசா. ஓராண்டுச் சந்தா ரூ.9.


ழ ஏட்டில் எப்போதாவது தான் தலையங்கம் வரும். இந்த இதழில் வெளிவந்திருக்கிறது.


இதோ தருகிறேன் :

‘அனுபவத்தில் பார்க்கும்போது இன்றைய கவிதைகளுக்கு இளைஞர்களிடையே நல்லவிதமான வரவேற்பும் எதிர் விளைவுகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஒரு நல்ல கவிதையை இனங்கண்டு கொள்ளும் கூர்மைப்படுத்தப்பட்ட உணர்வை இளைஞர்களிடத்தில் எளிதாகவே பார்க்க முடிகிறது. இருந்தும் துரதிர்ஷ்டவசமாக எல்லாத் தயாரான இளைஞர்களுக்கும் கவிதைகள் போய்ச் சேருவதில்லை. அப்படியே போய்ச் சேர்ந்தாலும் தொடர்ந்து கவிதைகளுடன் பரிச்சயத்திற்கான வாய்ப்பு கைவரப் பெறாமல் போகிறது. இரண்டு வழிகளின் மூலமாக இதைச் செய்ய முடியும் என்று எண்ணத் தோன்றுகிறது. ஒன்று கவிதைகளை வெளியிடும் பத்திரிகைகள் கவிதை ஒரு உன்னதமான கலை வெளிப்பாடு என்பதை உணர்ந்துகொண்டு அதற்கான சரியான அந்தஸ்தைத் தரவேண்டும். இரண்டு கவியரங்கங்களில் கவிஞர்களை அவர்களின் கவிதைகளை வாசிக்கச் சொல்லவேண்டுமே தவிர தலைப்புகள் கொடுத்து வாசிக்கச் சொல்லக் கூடாது. இவற்றையே உண்மையான கவிதைகளை இளைஞர்களுக்குக் கொடுக்கக் கூடும்.
அவ்வளவுதான் தலையங்கம். அதன் பின் 16 பக்கங்களிலும் கவிதைகள். கவிதைகள். கவிதைகள்.


கவிதையில் ‘புதிய பார்வைகள்’ என்ற தலைப்பில் ஆனந்த் கட்டுரை. இது முக்கியமான கட்டுரை.
ஒரு இடத்தில் இப்படி எழுதுகிறார் :
‘அன்றாட வாழ்வின் பிரக்ஞை வட்டத்தினுள் கவிதை நிகழ்வதில்லை. கவிஞனின் மனத்தில் கவிதை நிகழும் கணத்தில் அவன் அன்றாட வாழ்வின் கதி முற்றிலுமாக நின்று போகிறது. அக் கணத்தில் கவிஞனின் மனவெளி புதியதொரு பரிமாணத்தில் இயங்குகிறது. கவிதை நிகழ்ந்த பின்னர் கவிஞன் மொழியின் சாத்தியக் கூற்றில் ஒரு ஒழுங்கில் தன் அனுபவத்தை அமைக்கிறான்.’. இந்த இதழில் ஒரு காதல் கவிதை என்ற பெயரில் க.நா.சுப்ரமண்யம் எழுதி உள்ளார். 2 பக்ககங்களுக்கு.


வானம் என்ற தலைப்பில் ஆர்.ராஜகோபாலன் கவிதை வந்திருக்கிறது.


வானம்


ரொம்ப நாளைக்காகப்புறம்

கடற்கரை மணலில்

தனியாக உட்கார்ந்திருந்தேன்

சரியாக இருள் கூடாததால்

வானம் வெறுமையாய்க் கிடந்தது.

என்னைச் சுற்றிலும் மணலில்

கும்பல் கும்பலாய் மக்கள்

வழக்கம்போல்

உல்லாசமாய் ஓடியாடி

கொண்டே குழந்தைகள்.

மற்றபேர் மகிழ்ச்சியாகவும்

சோகமாகவும் தங்களை

உயர்த்திக்கொள்ள உரத்த

குரலெடுத்துப் பேசிக் கொண்டும்.

இப்போதைக்கு எந்தவித

உணர்வும் எனக்கில்லை

ஆனால் மறுபடியும் இங்கு

வரும்போது இவர்களில்

ஒருவராக மாறக்கூடும்

மல்லாந்து படுத்தேன்

எண்ணற்ற நட்சத்திரங்கள்

வானம் முழுவதிலும்


இது ஒரு உள்முகத் தேடல் கவிதை. கடற்கரையில் கூட்டத்தைப் பார்க்கிறார். ஆனால் கூட்டத்துடன் ஒன்ற முடியவில்லை. மல்லாந்து படுத்தேன் எண்ணற்ற நட்சத்திரங்கள் வானம் முழுவதும்.


காளி-தாஸ் அது வேறு உலகம் என்ற தலைப்பில் கவிதை எழுதி உள்ளார். 15 வரிகள்தான் இந்தக் கவிதை. ஒரு பக்கம் முழுவதும் கவிதைக்கான இடம் தந்துள்ளது ழ என்ற சிற்றேடு.
தேவதச்சனின் இரண்டு கவிதைகள். ஒரு கவிதை ‘என்றோ விட்ட அம்பு’, இரண்டாவது கவிதை ஒரு ‘கூழாங்கல்.’


ஐந்து வரிகள்தான் கவிதை.

மனம்

நீராய் ஓட

கீழே,

சூரியனைப் பார்த்துக்கொண்டு

ஒரு கூழாங்கல்


அவ்வளவுதான் கவிதை. சிலை ஒன்றின் சமீப வெற்றிடம் என்ற பிரம்மராஜன் கவிதை. வழக்கம்போல் பிரம்மராஜன் கவிதை ஒரு முறைக்கு இரு முறையாகப் படித்தாலும் புரியாது.
பிரதீபனின் ஒரு கவிதை ஆரம்பிக்கும்போதே கபந்தத்தின் ஓலம் ஒன்று என்று ஆரம்பிக்கிறது.

சுயம் என்கிற தமிழன்பன் கவிதையைப் பார்க்கலாம்.


என்

கூடை நிரம்ப

சொற்கள். .

இறைத்துக் கொண்டே

நடந்தேன்…

ஒவ்வொன்றும்

ஒவ்வொரு ரோஜா …ஆனது

கூடையை

தூக்கி எறிந்தேன்

குப்பென்று இலைகள்..

பின்

என்னை

தூக்கி எறிந்தேன்

முள் முள்ளாய்

முளைத்தது.


இது இன்னொரு உள்முகத் தேடல் கவிதை வகையைச் சேர்ந்தது. படித்தவுடன் இக் கவிதை புரிந்தவிடும். ஆனால் கவிஞன் எங்கோ பயணம் செல்கிறான். கவிதை மூலம் அழைக்கிறான்.


‘உள்ளும் புறமும்’ என்ற ஞானக்கூத்தன் கவிதை. கவிதையின் புதிய பார்வைகள் என்ற தலைப்பின் கீழ் ஆனந்த் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இரண்டு மூன்று பக்கங்கள் வரை.
கார்ல் சாண்ட்பர்க்கின் வேலி என்கிற பெயரில் ஒரு கவிதை. தமிழில் பரவாசி.


அதேபோல் கேத்லின் ரெய்ன் தன்மை என்ற கவிதை. தமிழில் கன்னி என்பவர் மொழிபெயர்த்துள்ளார்.


இந்த இதழின் 16வது பக்கம் ழ வெளியீடுகளின் விளம்பரங்கள். அவ்வளவுதான் ஒரு இதழ் ஒன்றைப் படித்தாகிவிட்டது.

விருட்சம் நிகழ்ந்தும் 54வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி.

05.06.2021 அன்று நடந்தது.  காணொளி காட்சி.  


அழகியசிங்கர்


சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கிய 54வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி.  காணொளியில் கண்டு களியுங்கள். பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களைக் கூறவும்.

கவிதையை வாசிக்கிறார்கள்

 துளி – 200
..

அழகியசிங்கர்

ஒவ்வொரு வாரம் சனிக்கிழமை கவிதை வாசிக்கும் நிகழ்ச்சி நடத்துகிறேன்.  அந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கும்முன் விருட்சம் இதழிலிருந்து ஒரு கவிதை வாசிக்கிறேன்.  பின் ஒரு கவிதைப் புத்தகத்தை அறிமுகப்படுத்துகிறேன்.


29.05.2021 அன்று நடந்த 53வது கவிதை நேசிக்கும் கூட்டத்தில் நான் நாரணோ ஜெயராமன் கவிதைகளை அறிமுகப்படுத்தினேன்.


 டிஸ்கவரி புக் பேலஸ் இக் கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறது.  200 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தின் விலை ரூ.150.

ஜெயராமன் வெகு காலம் கவிதைகள் எழுதாமலிருந்தார்.எல்லாவற்றிலும் அவர் ஒரு பற்றற்ற நிலையிலிருந்தார். ஆனால் 2011 லிருந்து 2018 வரை கவிதைகள் எழுதி உள்ளார்.  பின் காலகட்டத்தில் அவர் எழுதிய கவிதைகள் எல்லாம் மரணத்தைச் சுற்றிச் சுற்றி வருவதாக நினைக்கிறேன்.  எல்லாக் கவிதைகளையும் சேர்த்துப் புத்தகமாக வந்திருக்கின்றன.


அதில் நான் ரசித்த கவிதையை உங்களுடன் பகிர்கிறேன்.

வெட்டவெளி வேட்கை 

நினைக்கக் கூடாதென்றிருக்கிறேன்

முன்னும் பின்னும்

புரள்வது ஒழிய


பேசக்கூடாதென்றிருக்கிறேன்

புண்படாமல் இருக்க

மற்றும்

புண்படுத்தாமல் இருக்க


இதெல்லாம் நின்றால்

சித்திப்பது எது,

நம்மால் பெயரிடப்படாத

நமக்கு யாரும் கற்பிக்காத

ஒன்று?

( பிப்ரவரி 02, 2015)

சைக்கிள் தினமாம் இன்று..

 03.06.2021
துளி 199


அழகியசிங்கர்

சைக்கிள் தினம் என்பதால் என் அப்பாதான் ஞாபகத்திற்கு வருவார்.
86 வயதுவரை அவர் சைக்கிளில் போய்க்கொண்டிருந்தார். அப்பா சைக்கிள் ஓட்டும்போது கொஞ்சம் பயமாக இருக்கும்.


சைக்கிள் அவரை ஓட்டுகிறதா அல்லது அவர்தான் ஓட்டுகிறாரா?
நான் அவர் சைக்கிளை பெடல் பண்ணி ஆரம்பிக்கும்போது பார்க்கவே பயப்படுவேன்.
காலைத் தூக்கிப் போடும்போது எங்காவது தவறி விழுந்து விடுவாரா என்ற பயம் எனக்கு இருக்கும்.


கண்ணை மூடிக்கொண்டு விடுவேன்.


அவர் மேட் இன் இங்கிலாந்து சைக்கிள் வைத்திருந்தார்.  அந்த சைக்கிளுக்கும் எனக்கும் ஒரே வயது. 


அப்பாவைப் பற்றி ஞாபகப்படுத்தும்போது எனக்கும் அந்த சைக்கிளும் ஞாபகத்திற்கு வருகிறது.


அதில் ஏறி ஒருவர் சைக்கிள் ஓட்ட வேண்டுமென்றால் குதிரை மீது ஏறி ஓட்டுவதற்குச் சமம்.
அப்பா அவருடைய சைக்கிளில் மாம்பலம் முழுவதும் வலம் வருவார்.  காய்கறி கடைகளுக்குப் போய் காய்கறி வாங்குவார்.  ஓட்டலுக்குப் போய் வீட்டுக்குத் தெரியாமல் டிபன் சாப்பிடுவார்.  கோயில்களுக்குப் போவார்.


சின்ன வயதில் என் கனவு கூட சைக்கிள்தான்.  ஆரம்பத்தில் நான் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்ளும்போது சைக்கிளிலேயே எல்லா இடங்களுக்கும் செல்வதாகக் கற்பனை செய்வேன்.  ஒருமுறை நான், மனைவி இருவரும் சைக்கிளில் சென்று கொண்டிருந்தோம்.  என்னால் அழுத்தி வேகமாக ஓட்ட முடியவில்லை.


ஒரு தருணத்தில் பேலன்ஸ் இல்லாமல் சைக்கிள் விழுந்து விட்டது.  நான் ரொம்பவும் துடித்து விட்டேன்.  என் மனைவி அப்போது குழந்தை பெறும் நிலையிலிருந்தார்.  எதாவது ஆகியிருக்குமோ என்ற பயம்.  நல்ல காலம் ஒன்றுமாகவில்லை. 


டூ வீலர் வாங்கிய பிறகு எனக்குச் சைக்கிள் ஓட்டும் வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. என்னிடமிருந்த சைக்கிளை என் பெண் ஓட்டினாள்.  என் பையன் ஓட்டினான். 
என்னைவிட்டு சைக்கிளும் ஓடி விட்டது.  இப்போது நினைத்துப் பார்த்தால் என்னால் சைக்கிளே ஓட்ட முடியாது என்று தோன்றுகிறது.

அப்பாவிடம் வருகிறேன்.


  ஒரு திருமண நிகழ்ச்சிக்கு அப்பா சைக்கிளில் கிளம்பினார். சைதாப்பேட்டை.  நெரிசல் மிகுந்த சாலையில் அப்பா போகும்போது தொப்பென்று விழுந்து விட்டார்.  
இடுப்புகிட்டே எலும்பு முறிவு.  அது தெரியாமல் வேதனையும் நாற்காலியில் தெருவில் வலியுடன் உட்கார்ந்திருந்தார்.  அப்போது எலும்பு முறிவு என்று தெரியவில்லை. 


உடனே மருத்துவ மனைக்கு அழைத்துக்கொண்டு போனோம்.  மருத்துவ மனையில் எக்ஸ்ரே பார்த்தபோது எலும்பு முறிவு என்று தெரிந்தது.
மருத்துவமனையில் சேர்த்து அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.  அப்பப்பா.  கொடுமை.
இந்த இடத்தில் ஒன்று சொல்ல வேண்டும்.  அப்பாவுக்கு சுகர், பிபி எதுவும் கிடையாது.  எளிமையான மனிதர்.  எந்தக் கெட்டப் பழக்கமும் கிடையாது.  வெற்றிலை பாக்குக் கூட போட மாட்டார்.


அதிலிருந்து மீண்டு வந்து விட்டார்.  அது ஒரு அதிசயம்.  அசாத்தியமான முயற்சியில் கூடிய சீக்கிரம் நடக்க ஆரம்பித்தார். ஆனால் அன்று முதல் அவர் சைக்கிளைத் தொடவில்லை. சைக்கிளை நன்கொடையாகக் கொடுத்துவிட்டார். 


என் திருப்திக்காகச் சைக்கிளைப் பற்றி இரண்டு கவிதைகள் எழுதினேன்.  ஒரு கதை எழுதினேன்.  என் கதையில் மேட் இன் இங்கிலாந்து என்று அப்பாவின் சைக்கிள் பெயர் அடிக்கடி வரும்.


இதோ அப்பா இறந்துபோய் 4 ஆண்டுகள் ஓடிவிட்டன.


என் சைக்கிள் கவிதையை இங்குத் தருகிறேன்.      

சைக்கிள்கள்


தெருவில்  சில சைக்கிள்கள்

ஞாபகக் குதிரையேறி

பால்ய வீதிக்குச் சென்றேன்

ஏறவும் இறங்கவும் தெரியாமல்

திசைத் தெரியாத திசைக்கு ஓடியது

குட்டிச் சைக்கிள்

பார்த்தவர்களை 

உற்சாகக்  குரல் கொடுத்துக் கத்தியது

பள்ளத்தில் வீழ்ந்தது

வளைந்தது முன் சக்கரம்

கசிந்தது ரத்தம் முட்டிக்காலில்

வல்லமை காட்ட

பின்னால் இழுத்துச் சென்றவளுடன்

மோதியது சுவரில்

பயத்தின் அலறல் ஒலித்தது எங்கும்…


கனவில் உலவிய இன்னொரு சைக்கிள்

எங்கும் நிற்காத இடங்களுக்கு பறந்தது

பெடலை அழுத்தாமல்

தாண்டிய குளத்தைத் தாமரை கண்டது

மலைமுகடுகளில் ஏறிக்குதித்தது

பனிச்சறுக்கில்

வழுக்கி வழுக்கிப் போயிற்று….

விருட்சம் நிகழ்த்தும் 54வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி. 05.06.2021 அன்று சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு.

அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 54வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி. 05.06.2021ல் சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு நடைபெற உள்ளது.

நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்

பத்துக் கவிஞர்கள் கலந்து கொண்டு கவிதை வாசிப்பதோடு அல்லாமல் கவிதை எழுத வேண்டிய சூழல் எப்படி நிகழ்ந்தது என்பதைக் குறித்தும் பேசுகிறார்கள்.

வாருங்கள் உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள்.

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும்54வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி.

கூட்டத்தைச் சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்த முத்து சந்திரசேகருக்கு நன்றி.

Time: Jun 5, 2021 18:30 IndiaJoin Zoom Meetinghttps://us02web.zoom.us/j/87840723335…Meeting ID: 878 4072 3335Passcode: 858460US02WEB.ZOOM.USJoin our Cloud HD Video MeetingLikeCommentShare

0 Comments

ActiveWrite a comment…

கவிதையும் ரசனையும் – 17 – 2

அழகியசிங்கர்

(தொடர்ச்சி)

நான் இந்த வகைமையில் கவிதையைப் பிரிப்பது கூட சரியா என்பது தெரியவில்லை. ஒரு கவிஞனின் ஆழ்ந்த அடிமனதில் அவனை அறியாமலேயே தென்படும் நிகழ்ச்சிகளைக் கவிதை விவரிக்கிறதா என்று சொல்லத் தெரியவில்லை.

பெரும்பாலான கவிதைகள் ஆர்ப்பாட்டமாகவும், கருத்துக் குவியலாகவும், ஆபாசமாகவும் இருக்கின்றன. ஆனால் உள்முகத் தேடல் கவிதை வித்தியாசமாக இருக்கிறது. இது குறித்து யாராவது யோசித்தார்களா என்பதும் தெரியாது. நான்தான் யோசனை செய்து சொண்டிருக்கிறேன். மற்றவர்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா?

நான் அதைப் பற்றி கவலைப் படப்போவதில்லை. பலவிதமாகக் கவிதைகள் எழுதப்படுகின்றன. இந்த முறை நடந்த புத்தகக் கண்காட்சியில் நூற்றுக் கணக்கான கவிதைப் புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. வழக்கம்போல் கவிதைப் புத்தகத்தை ஒரு விஸிட்டிங் கார்டு மாதிரி பயன்படுத்திக்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கியமான நிலையில்தான் நாம் இருக்கிறோம்.

யாரும் எந்தக் கவிதைப் புத்தகத்தையும் வாங்கத் தயாராக இல்லை. அதற்குக் காரணம் கவிதை எழுதுபவர்கள் அதிகரித்து விட்டார்கள். வாசகர்கள் இல்லை. .

தேவதச்சன் என்ற கவிஞரின் கவிதைப் புத்தகம் கூட தெரியாமல் போய்விட வாய்ப்புள்ளது. பெரும்பாலான கவிதைகள் உள்முகத் தேடல் கவிதைகளாக இருந்தாலும், தேவதச்சனின் குறும்பான கவிதைகளும் பல இந்தப் புத்தகத்தில் உண்டு.


நகத்தை


நகத்தை கடிக்கும்

பெண்ணே

என்

அகத்தையும் சேர்த்து

கடிக்கிறாயே””


பழத்தைச் சாப்பிட்டுவிடு

பழத்தைச் சாப்பிட்டுவிடு

நாளைக்கென்றால் அழுகிவிடும்

என்றாள் அம்மா

வாங்கி விண்டு உண்டேன்

இன்றை

இக் கவிதையில் இன்றை என்று முடிக்கும்போது கவிதையின் அர்த்தம் மாறிப்போய் விடுகிறது. யோசிக்க வைக்கிறது.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தேவதச்சன் கவிதைகள் குறித்து எழுதியதையும் இங்கே கவனிக்கப்படும்.

‘தேவதச்சனின் கவிதைகள் தமிழ் வாழ்வியலின் நுட்பமான பதிவுகளைக் கொண்டிருக்கின்றன. மிக அபூர்வமான கவித்துவப் படிமங்களையும் பார்வைகளையும் வெளிப்படுத்துகின்றன. தத்துவச் சார்பு கொண்டது போன்ற தோற்றம் கொண்டிருந்தபோதும் இக்கவிதைகள் வாழ்வைக் கொண்டாடுகின்றன. தினசரி வாழ்வின் மீது இத்தனை ருசிகொண்ட கவிஞன் வேறு எவருமிருக்கிறார்களா என்று தெரியவில்லை. தேவதச்சனின் கவிதைகள் தினசரி வாழ்வின் விசித்திரங்களையும் அற்புதங்களையும் மிக அண்மையில் சென்று ரசிக்கின்றன. ‘

எழுத்தாளர் ராமகிருஷ்ணனின் கூற்று முற்றிலும் உண்மை.

கவிதை எழுதுவதைப் பற்றியே தேவதச்சன் இரண்டு மூன்று கவிதைகள் எழுதி உள்ளார்.


முகம்


கவிதையே

உனக்குத் தெரியுமா

நான் உன்னை

வாசித்துக்கொண்டிருக்கிறேன் என்று

உன்னை வாசிக்காமல், மேஜையில் நீ

மூடிக் கிடக்கும்போது

நீ தொணதொண வென்று“

ஏதும் சொல்கிறாயா,

என் அம்மாவைப் போல

கவிதையே! நீ யார்

சென்னையைப் போல

இறக்கை முளைத்த நகரமா நீ

அல்லது

ஆள் நடமாட்டம் அற்ற

எங்கள் சிற்றூரின்

மதியவேளையா

அல்லது

அதிகாலைப் பறவையின்

உற்சாகப் பேச்சரவமா

அங்கங்கே சிதறிக் கிடக்கும்

கவிதைப் புத்தகங்களே!

என் குடும்ப அட்டையில்

உன் பெயர் இல்லைதான்

எனினும்

என் வீட்டை எப்போது

புகைப்படம் எடுத்தாலும்

சிரித்தபடி தெரிகிறது

உன் முகம்.

இது ஒரு உள்முகத் தேடல் கவிதை. இதைப் படிக்கும்போது நமக்குக் காரணமில்லாத வியப்பு ஏற்படுகிறது. இந்தக் கவிதையை எழுதிக்கொண்டிருக்கும்போது தேவதச்சனுக்கும் காரணம் புரியாத வியப்பு ஏற்பட்டிருக்கும். அல்லது இந்தக் கவிதையை எப்படி எழுதி எப்படி முடிக்கப் போகிறோம் என்று தெரியாமலிருக்க வேண்டும். இக் கவிதையுடன் தொடர்புடைய பல உள்முகத் தேடல் கவிதைகளைக் கூறிக்கொண்டே போகலாம்.

‘பூவுடன் உரையாடல்’ என்ற பெருந்தேவி கவிதையைப் பார்க்கலாம்.


உன்னிலிருந்து நீ எப்போது வெளியேறப்போகிறாய்
நடைபாதையில் ஓர் அங்குல நீளச் செடியின்
வயலட் பூ என்னைக் கேட்டது
ஒவ்வொரு வசந்தத்திலும் இப்படி
எடக்குமடக்காகக் கேட்பது அதன் வழக்கம்தான்
எப்படி வெளியேறுவது என்றேன் சின்னப் பூவிடம்
எங்களைப் பார் என்றது தலையை ஆட்டி ஆட்டி
பக்கத்திலிருந்த இன்னும் குட்டிப் பூக்களெல்லாம்
என்னைப் பார்த்துச் சிரித்தன
ஒரே அவமானமாகிவிட்டது
இனிமேல்
தடுக்கிவிழுந்தாலும் சரி
அண்ணாந்து பார்த்து
நடக்கவேண்டியதுதான்
(அழுக்கு சாக்ஸ்)


அடுத்து அழகியசிங்கரின் ‘ஸ்ரீவித்யா பாட்டு பாடுகிறாள்’ என்ற கவிதையை எடுத்துக்கொள்ளலாம்.


எல்லோரும் சமையல் செய்கிறார்கள்
இந்த வீட்டில் ஸ்ரீவித்யா
பாட்டுப்பாடிச் சமையல் செய்கிறாள்
சாம்பாருக்கும் ரசத்திற்கும் தெரியுமா?
அவள் பாட்டுப் பாடுகிறாளென்று
பேத்தி வீரிட்டுக் கத்துகிறாள்
அவள் ஓடிப்போய் சமாதானம் செய்கிறாள்
அடுத்த அறையில்
கணவன் போனில் பேசிக்கொண்டிருக்கிறான்
அவளுக்குப் புரியவில்லை
அவன் என்ன பேசுகிறானென்று
ஸ்ரீவித்யா பாட்டுப்பாடியபடி
சமையல் செய்து கொண்டிருக்கிறாள்
தட்டில் சாதத்தை வைக்கும்போதுதான்
சாம்பாரில் ரசத்தில் உப்பு இருக்கிறதா என்று
தெரியும்
ஏனென்றால் அவை அவளுடைய பாட்டைக்
கேட்பதில்லை.


இப்படியெல்லாம் விவரித்துக்கொண்டே போகலாம். உள்முகத் தேடல் கவிதைகளை.