புத்தக விமர்சனம்

                                                      அழகியசிங்கர்



சமீபத்தில் நான் படித்த ஒரு நாவல் எஸ் ராமகிருஷ்ணனின் சஞ்சாரம் என்ற நாவல்.  375 பக்கங்கள் கொண்ட இந் நாவலைப் படிக்க சில நாட்கள் ஆயிற்று.  ஒரே சமயத்தில் இப்போதெல்லாம் என்னால் ஒரு புத்தகத்தைப் படிக்க முடியவில்லை.  
இந் நாவல் குறித்து இரண்டு கருத்துகளை அறிய முடிந்தது.  இப்புத்தக வெளியீட்டுக் கூட்டத்திற்கு நான் சென்றேன்.  இந் நாவலைப் பற்றி ராமகிருஷ்ணன் ஒன்று சொன்னார்.  அவருக்கு இசையைப் பற்றி  ஒன்றும் தெரியாதாம்.  இசையை ரசிப்பது வேறு; இசையைப் பற்றி நுணுக்கம் தெரிந்து கொள்வது வேறு.  இந்த நாவலுக்காக இசையைப் பற்றி தெரிந்த நண்பர்கள் பலரைத் தொடர்பு கொண்டு பல விஷயங்களûத் தெரிந்து கொண்டாராம்.  எனக்கு அவர் சொன்னது ஆச்சரியமாக இருந்தது.  இந்தப் புத்தகததை வாங்கி வைத்துக்கொண்டிருந்த நான், எப்படி இப் புத்தகத்தில் இசையைப்ப் பற்றி அதுவும் நாதஸ்வரம் வாசிப்பைப் பற்றி எழுதியிருக்கிறார் என்பதை அறிய ஆவலாக இருந்தது.
இன்னொரு விஷயம்.  இப் புத்தகத்தை அந்த அரங்கில் விமர்சனம் செய்த ஒருவர் இப் புத்தகத்தின் எந்தப் பகுதியும எடுத்து வாசிக்கலாம் என்றார்.  அதாவது முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை தொடர்ச்சியாக வாசிக்க வேண்டும் என்பது இல்லை என்று.  மொத்தம் 33 அத்தியாயங்களாக மொத்தம் 375 பக்கங்கள் வரை எழுதியிருக்கிறார்.  அந்த விமர்சகர் கருத்தை நானும் ஏற்றுக் கொள்கிறேன்.  ஆனால் நாவல் ஆரம்பமும், முடிவும் முக்கியம்.  நடுவில் பல அத்தியாயங்களில் பல விஷயங்களை சொல்லிக் கொண்டே போனாலும், இந்த இரண்டு முனைகளும் சேராமல் நாவலை படித்தத் திருப்தி வராது.  
இந் நாவலைப் படிக்கும் போது, நாவல் கரிசல் கிராமத்தைச் சேர்ந்த நாதஸ்வரக்காரர்களைப் பற்றி சொல்கிறதா என்ற சந்தேகம் வருகிறது.  உண்மையில நாவல் ஜாதி கலவரத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டதாகப் படுகிறது.  
நாவலை அதன் மூலமாகச் சொல்லாமல், நாதஸ்வரம் வாசிக்கிற கலைஞர்களைப் பற்றி சொல்லிக் கொண்டு போகிறார்.  கதையை விறுவிறுப்பாக எழுதிக்கொண்டே போகிறார்.  ஒவ்வொரு அத்தியாயம் மூலமாக ஒவ்வொரு கதை மாதிரி பல கதைகளை நாதஸ்வரம் இசைக் கருவியை மையமாக வைத்து அடுக்கிக் கொண்டு போகிறார்.  இவர் எழுத்தைப் படிக்குமபோது,  இசையைப் பற்றி நன்றாகத் தெரிந்த ஒரு மேதாவி எழுதுவதுபோல் எழுதிக் கொண்டு போகிறார்.  
நாவலின் 100வது பக்கத்தில் சாமிநாதப் பிள்ளையைப் பற்றி சொல்கிறார்:  …….மனுசன் நிக்குற வெறிய பார்த்தா நரசிம்மம் மாதிரி நம்ம வயிற்றைக் கிழித்துப் போட்டுறப் போறானோனு.  ஆனா அவர் ஒண்ணுமே செய்யலை.  சீவாளியை எடுத்து வாயிலே வச்சார்.  தோடி வாசிக்கத் துவங்கியதம் மேகத்துல சஞ்சரிக்கிறது மாதிரி எல்லோரும் மிதக்க ஆரû;பிஞ்சாங்க.  அப்படியொரு பிரவாகத்தை அவர்கள் கேட்டதேயில்லை.  பனங்கள்ளுல விழுந்த ஈ மாதிரி கிறங்கிப் போயிருந்தார்கள்.  வாசிதர்து முடியும்போது இரவு மணி இரண்டரை, பலலக்கிலிருந்து சிவனும் அத்தனை நேரம் வீதியிலே நின்று கொண்டிருந்தார்.  ஆனால் அவர் வாசித்து முடித்தவுடன் ராமஸ்வாமி போய் அவரது காலில் விழுந்து இத்தனை நேரம் தான் இசைத்த அத்தனையும் அழித்து மெழுகிவிட்டீர்கள்.  இதுக்கு மேல் சொல்ல எதுவுமில்லை எனக் கண்ணீர் மல்கினார்.
சாமிநாதபிள்ளை எதுவும் பேசவில்லை.  விடுவிடுவென தனது நாதஸ்வரத்தை அதே இடத்தில் வைத்துவிட்டு நடந்து போய்விட்டார். üüநமக்கு அதிர்ஷ்டமிருந்தாதான் அவர் இசையைக் கேட்க முடியும். பொன்னும்மணியும் கொட்டி குடுத்தாலும் அந்த வாசிப்பு கிடைக்காதுஞிýý….ஒவ்வொரு அத்தியாயத்திலும் ராமகிருஷ்ணனின் கதைகள் தொடர்ந்து வாசிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை உண்டாக்கிறது.  
இது நாதஸ்வரன் என்ற இசைக்கருவியுடன், பலவித இன்னல்களைச் சுமந்து வாழும் மனிதர்களைப் பற்றிய கதை.  இக்  கதையைப் படிக்கும்போது, சோகத்துடன் சுவையும் மிளிர்கிறது.  இசையைப் பற்றி தெரியாதவர் மாதிரி ராமகிருஷ்ணன் தெரியவில்லை.  அதிலேயே அவர் ஊறியவர் மாதிரி அவர் எழுத்து மூலம் தெரியவருகிறார்.
ஞ்சாரம் – நாவல் – எஸ் ராமகிருஷ்ணன் – 375 பக்கங்கள் – விலை ரூ.370 – உயிர்மை பதிப்பகம், 11,29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 18  



சந்திரா மனோகரன் .

               
               
                     1.  என்னைக்  காண வில்லையென்று 

                    அவள்  அவளுக்குள்  தேடிக் கொண்டிருந்தாள் 

                     உறுமும்  புலிபோல்  நான் 

                    தப்பித்துவிட்டேன் 

                    எனக்குக்  கூண்டுவாழ்க்கை  பிடிக்காது 

                     அவள்  என்னைமட்டும்  தேடியிருந்தால் 

                    விலகிவந்திருக்கமாட்டென் , ஒருவேளை 

                     என்னைக்  கொல்வதற்குப்  பயன்படும் 

                    ஒரு  கூராயுதம்  அத்தருணத்தில் 

                     அவள்  கைக்கு  சிக்காமலிருந்தது .

                2.  மான்கள்  துள்ளும்  புல்வெளியில் 

                     என் தேடல்  விரிந்துகொண்டே  போயிற்று 

                     பெருகும்  ஈரப்  பனிபோல .

                      வேட்டைக்காரனின்  மிதியடிகளில் 

                     என் ரத்த  நாளங்கள்  நசுங்கின .

                     அவன்  காலடியோசையின்  மிரட்சியில் 

                     எங்கோ  தொலைவில்  ஓர்  அலறல் 

                     எனக்கு  ஒன்று  புரியவில்லை 

                     அழகு  புள்ளிமானின்  தோலை  மட்டும் 

                     யாருக்காகவோ  விட்டுச்  சென்றிருக்கிறான் .

                 

                 3.   சாமங்கியும்  சம்பந்தியும்  அவரைப்பூ  நிறமும் 

                        வருகிறாள்  அவள்  தீயின்  நாக்குபோல !

                        வளைக்கரங்களில்  ததும்பும் 

                        தேநீர்க் கோப்பைகளும் , திகட்டாத  பார்வையில் 

                        குழைந்து  குழைந்து  வரும்  வாசமும் 

                        நீருக்காக  ஏங்கும்  வேர்களைப்  போன்றவனுக்கு 

                        வெற்றுத்  தாளில்  வடிந்த 

                         வெறும்  கவிதைகளாகத்தான் ….

                         குப்பைக்கூடை  நிரம்பி  வழிகிறது 

                        அவன்  மனதைப்போலவே .

விருட்சம் தேர்ந்தெடுத்த மனதுக்குப் பிடித்த கதைகள்

   அழகியசிங்கர்

அக்டோபர் மாதத்தில் ஏகப்பட்ட கதைகள்.  ஐந்தாறு கதைகளில் பாவண்ணனின் அப்பாவின் சைக்கிள் என்ற கதையைத் தேர்ந்தெடுத்துள்ளோம்.
ஆனால் நவம்பர் மாதத்தில்அக்டோபர் மாதம் மாதிரி கதைகள் கிடைக்கவில்லை.  இரண்டே இரண்டு கதைகள் மட்டும் கிடைத்தன.  அதாவது இலக்கியத் தரமான கதைகளை மற்ற கதைகளுடன் பிரித்து கண்டுபிடிப்பதுதான் முக்கிய பணியாக இருந்தது.  
பெரும்பாலான பத்திரிகைகள் கதைகள் என்று பலவற்றைப் பிரசுரம் செய்கிறார்கள்.  அக் கதைகளைப் படித்தாலும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  
நான் கண்டு பிடித்த இரண்டு கதைகளில் ஒன்று தீராநதியில் இரா முருகன் எழுதிய கல்லத்தி என்ற கதை.  இரண்டாவது கதை சுகா எழுதிய ராயல் டாக்கீஸ் என்ற கதை.
ஒவ்வொரு முறையும் ஒரு சிறந்த கதையைத் தேர்ந்தெடுக்கும்போது இன்னொரு கதையும் நிழல் போல் தொடரும்.  போனமுறை ஒரு சிறந்த கதையுடன் நாலைந்து கதைகள் தொடர்ந்து கிடைத்தன.  
இந்த முறை ஒரே ஒரு கதைதான் தொடர்ந்து வந்தது.  இறுதியில் சுகா எழுதிய ராயல் டாக்கீஸ் என்ற கதையைத்தான் தேர்ந்தெடுக்க முடிந்தது.  அந்தக் கதையின் ஆரம்பமே தமபி என்ற ஒரு கதாபாத்திரத்தை அதிகம் பேசாத மற்றவர்கள் அந்தக் கதாபாத்திரத்தைப் பற்றி அதிகம் பேசுகிற மாதிரி அறிமுகப் படுத்தப்படுகிறது.  தம்பி என்கிற பாத்திரம் தன்னுடைய மனக் குமறல்களை வெளிப்படையாக யாரிடமும் சொல்லாமல், இறுதியில் ஒரே ஒரு வாக்கியத்தால் தன் துயரத்தை வெளிப்படுத்துகிறது.  “ராயல் டாக்கீஸ் இல்லாத ஊர்ல என்னால இருக்க முடி0யுமால?”

என்று.

கதையை அதற்குமேல் இழுக்காமல் விட்டுவிடுகிறார் கதாசரியர்.  அவருக்குப் பாராட்டுகள்.  நவம்பர் மாதம் சிறந்த கதையாக இதைத் தேர்ந்தெடுத்துள்ளோம். 
இதுவும் ஆனந்தவிகடனில் வெளிவந்த கதை.

ஒரு பனித் துளி ஈரம்

எம்.ரிஷான் ஷெரீப்

இலைகளை உதிர்த்தழும் விருட்சங்களைத் தடவிக் கொடுத்து
தாண்டிச் சென்ற கோடையைக் கழுவி
ஞாபகக் கொடியில் காயப்போட்டாயிற்று உலர்த்தவென
வெண்சாயங்களில் தோய்த்தெடுத்த இழைகளைக் கொண்டு
குளிர்காலக் கம்பளிகளை
பின்னுகிறது காலம்
அதைப் பிடித்துக் கொண்டு படர்கிறது
நேற்றைக்கு முந்தைய தினங்களில் துளிர்விட்ட
சிறு ஒற்றைக் கொடி
வைசாக தினங்களில் வெண்ணிற ஆடையும் பூக்களுமென 
விகாரைக்கு அணிவகுத்துச் சென்ற பக்தர்கள்
எறிந்து போன சிறு விதையாக இருக்கலாம் தாவரத்தின் மூலம்
நிலம் பிளந்து வந்த கொழுந்துக்குப் புதிது
அலையெனச் சுழலும் காற்றும்
நிமிரும்போதெல்லாம்
உற்றுப் பார்த்தவாறிருக்கும் பரந்த ஆகாயமும்
விசாலமாய் நகரும் பூச்சிகளும் இன்னபிற ஜந்துக்களும்
இன்னும்
மிதிக்கக் காத்திருக்கும் மனிதர்களும்
வரும் காலங்களில்
அதன் கிளைகளில் வந்தமரும் அணில்கள்
இன்னும் பிறக்கவேயில்லை
இலைகளின் மறைவுகளுக்குள் தம்
கூடுகளைச் செதுக்கக் கூடிய பட்சிகள்
கண்டங்கள் தாண்டி இன்னும் புலம்பெயரவேயில்லை
வேர்களை வளப்படுத்தும் புழுக்களும்
இன்னும் நகரவேயில்லை எனினும்
எப்போதோ மனிதன் உறிஞ்சியகற்றி விட்டான்
தாவரங்களுக்கான ஈரத்தை
மண்ணிலிருந்தும் மனதிலிருந்தும்
பனிக் கூட்டம் விடியலை
பேரோசையுடன் பாடும் சொப்பனங்களெல்லாம்
காடுகளால் நிரம்பி வழிகின்றன
தீயிடம் யாசகனாக்கும்
குளிர் காலத்தின் நீள இரவுகளிலும்
வனங்களைத் தொழுத ஆதிவாசிகளை
கடவுளிடம் மீளக் கொடுத்துவிட்ட இக் காலத்தில்
துளிர்த்திடப் போதுமானதாக இருக்கலாம்
தளிரின் வேருக்கென
இப் பேரண்டம் தரும்
ஒரு பனித் துளி ஈரம்
– 

கமலாவும் நீலாவும்….

 

கந்தாச்ரமத்தில் கமலா என்ற பெண் நாய் இருந்தது.  அது குட்டியாக ஆச்ரமத்திற்கு வந்தபோது அங்கிருந்தவர்கள் அதை வெளியே துரத்தினார்கள்.  அது பெண்ணாக இருந்ததினால் ஒவ்வொரு வருடமும் குட்டிகள் போடும் என்று நிடனைத்து அவ்வாறு செய்தனர்  ஆனாலும் குட்டி கமலா அவர்கள்  திட்டியதையெல்லாம் பொறுத்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டுச் செல்லாமல் இருந்து விட்டது.  இறுதியில் ஆச்ரமவாசிகள் அவளுடைய உறுதிக்கு மதிப்புக் கொடுத்தனர்.  கமலா ஆச்ரமத்திலேயே வளர்ந்து ஒவ்வொரு வருடமும் குட்டிகளை ஈன்றது.  அவளுடைய குட்டடிகளே சந்தாச்ரமத்தில் ஒரு பெரிய குடும்பமாக விளங்கியது.
மனிதர்களுக்குக் குழந்தை பிறந்தால் எவ்வாறு பத்தாம்நாள்தொட்டிலிடும் சடங்கு நடக்குமோ, அதுபோல கமலா முதன்முறையாக குட்டிகள் ஈன்றபின் அக்குட்டிகளுக்கும் கமலாவுக்கும் பொட்டிட்டு, மாலை சூட்டி அங்கிருந்த அன்பர்கள் மகிழ்ந்தனர்  அன்று பாயசம் மற்றும் இனிப்புகளுடன் ஒரு பெரிய விருந்து நடந்தது.
புதிய அன்பர்கள் முதல் முறையாக கிரிபிரதடசிணம் செய்ய விரும்பினால் பகவான் கமலாவை அழைத்து “அவர்களுக்கு வழிகாட்டி அழைத்து வா” என்று ஆணையிட அதுவும் அவ்வாறே செய்யும்.
நீலா என்ற பெண் நாய் ஒன்று பகவானுக்கு அருகில் எப்போதும் இருந்து அவர் மடியில் அவ்வப்போது அமர்வது வழக்கம்.  வேறு எந்த நாயும் கந்தாச்ரமத்திற்குள் வர அவள் அனுமதிக்க மாட்டாள்.  ஏன், தன் தாயைக் கூட கந்தாச்ரமத்திற்குள் நுழைய விடாமல் விரட்டிவிடுவாள்.  அது நாயாக தப்பிப் பிறந்திருக்கிறது என்று நாயனா கூறுவது வழக்கம்.
நாய்கள் பகவானுடன் நீண்ட நாட்கள் தங்கியிருந்து உயிர்தரிக்காது.  மேலும் பகவானுக்கருகில் எந்தப் பிராணி வந்தாலும் அதற்கு மறு பிறப்பில்லை என்று நாயனா கூறுவதுண்டு  எனவே அவர்
அவைகளை விரட்டிவிடுவார்.
பகவான் அருணாசல மலையில் வசிக்கத் தொடங்கியதிலிருந்து தொடர்ந்து நாய்கள் அவர்களுடைய உற்ற தோழனாக இருந்து அவருடைய ஆச்ரம் வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகித்தன.  ஒவ்வொரு நாயின் வம்சாவளியைப் பற்றி அவர் நன்கு அறிவார்.  புதிதாக யாராவது வந்தால் அவரிடம், “இந்தக் கமலாதான் முதலில் வந்த பெண்மணி.  அந்த நீலாவும் ஜாக்கியும் அவளுடைய குழந்தைகள்.  ரோசும் மற்ற இந்தப் பயல்களும் அவளுடைய பேரப்பிள்ளைகள்,” என்பார்.  கந்தாச்ரமத்தில் கமலா இறக்கப் போகும் தறுவாயில்,  “ஏண்டா பசங்களா…உங்கள் பாட்டியைப் போய்ப் பாருங்கள்.  உங்களை விட்டு சீக்கிரம் அவள் போகப்போறிளர்” என்றார்.  பின்னர் கமலா இறந்தபிறகு எப்படி மனிதர்களைத் துக்கம் விசார்பாரோ அதுபோலவே குட்டிகளிடத்தில் சென்று, “ரோஸ், பாவம். நீ உன்னுடைய பாடடி கமலாவை இழந்து விட்டாயா” என்பார
 (சரிதமும் உபதேசமும் பாகம் 1ல் இருந்து எடுத்தது)

அக்டோபர் மாதக் கதை…….

அக்டோபர் மாதம் சிறந்த கதையாக பெருமாள் முருகனின் ஆசை முகம் என்ற சிறுகதையைத் தேர்ந்தெடுத்தோம். இப்படி ஒரு கதையைத் தேர்ந்தெடுக்கும் கூடவே சில சிறப்பான கதைகளை தள்ள வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாக நேரிடுகிறது. அக்டோபர் மாதம் பெருமாள் முருகனின் கதையைத் தேர்ந்தெடுக்கும் முன் சிறந்த கதைகளை இரண்டை பாவண்ணனும், அகஸ்தியம் என்ற ஒரு கதையை வண்ணதாசனும், அதேபோல் அபிமானியும் எழுதி இருந்தார்கள். ஆனால் எங்கள் முடிவு பெருமாள் முருகனின் ஆசை முகம் கதையுடன் நின்று விட்டது. 
மாதெரரு பாகன் என்ற நாவல் பிரச்சினையால் பெருமாள் முருகன் தன் எழுத்துக்களை விலக்கிக் கொள்வதாக சொல்லிவிட்டார். அதனால் மேலே குறிப்பிட்ட ஆசைமுகம் கதையை நாங்கள் தேர்ந்தெடுத்தாலும், பெருமாள் முருகன் முடிவால் நாங்களும் அந்தக் கதையை எடுத்துக்கொள்ள முடியாமல் உள்ள நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
அக் கதைக்குப் பதிலாக 15.10.2014 ஆனந்தவிகடன் இதழில் வெளியான பாவண்ணனின் அப்பாவின் சைக்கிள் என்ற கதையைத் தேர்ந்தெடுத்துள்ளோம். பாவண்ணனுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

கசடதபற ஜனவரி 1971 – 4வது இதழ்



ஒரு தாஒ கவிதை



சோளைக் கொல்லைப் பொம்மையிடம்
இரவல் பெற்ற தொப்பியின் மேல்
மழை வலுத்துப் பெய்கிறது.

தமிழில் : ஞானக்கூத்தன்

கசடதபற ஜனவரி 1971 – 4வது இதழ்

சிலை

வீனஸ்

முலையின் செழுமையை அர
சிலைக்குக் கொடுத்தால்
கலைப் பொருளாகாமல்,
குலைந்து  போய் விடும்டü
விலைமகள் போலென, து
கிலைச் சுற்றினானோ

சிலையை வடித்த சிற்பி?

காதல்

குமரித்துறைவன்

மந்தையில்
ஈரத்திட்டை முகர்ந்த இளங்காளை
சிலிர்த்து கனைத்து தலை உயர்த்தி
சிரித்தது.

எதையாவது சொல்லட்டுமா……98

   


அழகியசிங்கர்

    புத்தகக் காட்சி என்பது நண்பர்களை, உறவினர்களை, எழுத்தாளர்களை சந்திப்பதற்காக அமைந்த இடம்.  இந்த முறை கூட்டம் அதிகம்.  கடைசி நாள் கூட கூட்டம் வந்து கொண்டிருந்தது.  ஒவ்வொரு முறையும் புத்தகக் காட்சியின் போது, கால சுப்பிரமணியமை சந்திப்பது வழக்கம்.  என் கடையில் அவர் சிறிது நேரம் இல்லாமல் இருக்க மாட்டார்.  அவர் முகத்தைப் பார்க்கும்போது ஒரு நீண்ட மௌனம் தொங்கிக் கொண்டிருப்பதாக தோன்றும்.  சத்தமாகவே பேச மாட்டார்.  யாருடனும் அவர் சண்டைப் போட்டு நான் பார்த்ததில்லை.  ஆனால் தன்னுடைய அபிப்பிராயத்தில் அவர் உறுதியாக இருப்பார்.  பிரமிளைத் தவிர வேற யாரையாவது அவர் எழுத்தாளராகக் கருதுகிறாரா என்ற சந்தேகம் எனக்கு இருந்துகொண்டே இருக்கும்.  ஆனால் நானோ வேற மாதிரி.  அவரை மாதிரி எழுத்தாளர்களை உதற மாட்டேன். 


    ஒரு எழுத்து சரியில்லாத எழுத்து என்று சொல்வதை நான் கொஞ்சம் விட்டுவிட்டேன்.  அதனால் கையில் கிடைக்கும் புத்தகங்களைப் படித்துக்கொண்டிருப்பேன்.  கவிதைகள் எழுதும் கவிஞர்கள் மீது எனக்கு அலாதியான பிரியம் உண்டு.  ஏன் என்றால் கவிதைப் புத்தகத்தைதான் நான் விற்க முடியாமல் திணறிக் கொண்டிருப்பேன்.

    லயம் சுப்பிரமணியம் ஒன்று சொன்னார்.  அவர் ஒரு தமிழ் புத்தகத்தைப் படிப்பதற்கு எடுத்தால் ஒரு மணி நேரத்தில் 100 பக்கங்கள் படித்து முடித்து விடுவாராம்.  என்ன கதை விடுகிறாரா என்று தோன்றியது.  ஒரு புத்தகத்தை படித்து முடித்தவுடன், இன்னொரு புத்தகம் படிக்க ஆரம்பித்து விடுவாராம்.  புத்தகத்தைப் பற்றி எதுவும் எழுத மாட்டாராம்.  என் விஷயம் வேறு, நான் எதாவது எழுத வேண்டுமென்று நினைப்பவன்.  அப்படி எழுத மறந்து விட்டால், திரும்பவும் அந்தப் புத்தகத்தைப் பார்க்கும்போது, என்ன படித்தோம் என்று எனக்கு மறந்து விடும்.  அதனால் சரியோ தப்போ எதாவது ஒரு புத்தகத்தைப் பார்த்தாலோ, அல்லது ஒரு சினிமாவைப் பார்த்தாலோ எழுத வேண்டுமென்று தோன்றும். 

    எனக்கு அவர் சொன்னதை நம்ப முடியவில்லை.  தமிழ் புத்தகத்தை ஒரு மணி நேரத்தில் 100 பக்கங்கள் படிப்பதா?  நானும் எவ்வளவு பக்கங்கள் படிக்க முடியும் இன்று முயற்சி செய்து பார்த்தேன். 50 பக்கங்களுக்கு மேல் படிக்க முடியவில்லை. 

    ஆங்கிலப் புத்தகங்கள் 80 பக்கம் வரை படிக்க முடியுமாம்.  நான் 30 பக்கம் படிப்பேனா என்பது சந்தேகம்.  இதைப் பற்றி அவர் சொன்னதைக் கேட்டு, ஒவ்வொருவரிடமும் நான் இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொண்டு இருந்தேன் புத்தகக் கண்காட்சியின்போது.

    சுப்பிரமணியம் இன்னொன்றும் சொல்கிறார்.  படிக்க படிக்க பக்கங்கள் அதிகமாக படிக்க முடியும் என்று.  ஒரு தடியான நாவலைப் பார்த்தால் எனக்கு அயர்ச்சியாக இருக்கும்.  ஆனால் அவரோ எளிதாக ஒரு சில தினங்களில் முடித்து விடுவாராம். 

    என் புத்தக ஸ்டாலுக்கு வந்தவர்களைப் பார்த்து, ‘நீங்கள் வாங்கும் புத்தகங்களைப் படிப்பீர்காள?’

என்று கேட்க நினைத்தேன்.  அப்புறம் விட்டுவிட்டேன்.  ஏன் என்றால் புத்தகம் வாங்குபவர்களை அப்படி ஒரு கேள்வி கேட்டால், புத்தகம் வாங்காமரல் போய்விட்டால் என்ன செய்வது?’

தெரு

    

1978 ஆம் வாக்கில் எங்கள் தெருவிற்கு வந்துவிட்டோம.  தெருவின் இரு பக்கங்களிலும் சாக்கடைகள் இருக்கும்.  அவ்வப்போது சாக்கடை அடைத்துக் கொள்ளும்.  என் அப்பாதான் தெருவிற்கு தலைவர்.  அவர்தான் வேறு வழியின்றி அடைத்துக் கொண்டிருக்கும் சாக்கடை சகதியை அப்புறப்படுத்துவார். 

    அதிமுக சார்பில் நின்ற ஒரு எம்எல்ஏ தெருவிற்கு தேர்தலுக்கு முன் வந்திருந்து ஒவ்வொருவரிடமும் தெருவைப் பற்றிய குறைகளை கேட்டார்.  எல்லோரும் சாக்கடையைப் பற்றியும், முனையில் கட்டியிருக்கும் மாடுகளைப் பற்றியும் சொன்னோம். 

    ரொம்ப நாளைக்குப் பிறகு சாக்கடைப் பிரச்சினை தீர்ந்தது.  ஆனால் மாடுகள் பிரச்சினை தீரவில்லை.  தெருவின் இன்னொரு முனை வழியாக வேறு ஒரு பிரதான சாலைக்குச் சென்று விடலாம்.  ஒரு சந்து வழியாக போக வேண்டும்.  அந்தச் சந்தின் பெயர் மொட்டையம்மாள் சந்து என்று பெயர்.  அங்கு திருட்டுத்தனமாக சாராயம் விற்பார்கள்.  அங்கு சாராயம் விற்பவர் பெயர்தான் மொட்டையம்மாள்.  கெட்ட வார்த்தை சொல்லி திட்டுவார்.  என் அப்பாவிடம் மரியாதையாக நடந்து கொள்வார். 

    இந்தத் தெருவைப் பார்த்து, கேவலமாக என் நண்பர் ஒரு முறை சொன்னது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. 

    இந்தத் தெரு முழுவதும் மாறிவிட்டது.  சாராயம் விற்கும் இடம் இப்போது இல்லை.  சாக்கடைகள் இல்லை.  ஆனால் தெரு முழுவதும் வண்டிகள்.  டூ வீலர் பார்க்கிங் மாதிரி தெரு காட்சி அளிக்கிறது.

    எங்கள் தெருவில் மாட்டுப் பொங்கல் அன்று ஒவ்வொரு வீட்டிலும் கோலம் போட்டிருந்தார்கள்.  அப்போது எடுத்தப் புகைப்படங்களை இங்கே கொடுக்கிறேன்.