விருட்சம் தேர்ந்தெடுத்த மனதுக்குப் பிடித்த கதைகள்

   அழகியசிங்கர்

அக்டோபர் மாதத்தில் ஏகப்பட்ட கதைகள்.  ஐந்தாறு கதைகளில் பாவண்ணனின் அப்பாவின் சைக்கிள் என்ற கதையைத் தேர்ந்தெடுத்துள்ளோம்.
ஆனால் நவம்பர் மாதத்தில்அக்டோபர் மாதம் மாதிரி கதைகள் கிடைக்கவில்லை.  இரண்டே இரண்டு கதைகள் மட்டும் கிடைத்தன.  அதாவது இலக்கியத் தரமான கதைகளை மற்ற கதைகளுடன் பிரித்து கண்டுபிடிப்பதுதான் முக்கிய பணியாக இருந்தது.  
பெரும்பாலான பத்திரிகைகள் கதைகள் என்று பலவற்றைப் பிரசுரம் செய்கிறார்கள்.  அக் கதைகளைப் படித்தாலும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  
நான் கண்டு பிடித்த இரண்டு கதைகளில் ஒன்று தீராநதியில் இரா முருகன் எழுதிய கல்லத்தி என்ற கதை.  இரண்டாவது கதை சுகா எழுதிய ராயல் டாக்கீஸ் என்ற கதை.
ஒவ்வொரு முறையும் ஒரு சிறந்த கதையைத் தேர்ந்தெடுக்கும்போது இன்னொரு கதையும் நிழல் போல் தொடரும்.  போனமுறை ஒரு சிறந்த கதையுடன் நாலைந்து கதைகள் தொடர்ந்து கிடைத்தன.  
இந்த முறை ஒரே ஒரு கதைதான் தொடர்ந்து வந்தது.  இறுதியில் சுகா எழுதிய ராயல் டாக்கீஸ் என்ற கதையைத்தான் தேர்ந்தெடுக்க முடிந்தது.  அந்தக் கதையின் ஆரம்பமே தமபி என்ற ஒரு கதாபாத்திரத்தை அதிகம் பேசாத மற்றவர்கள் அந்தக் கதாபாத்திரத்தைப் பற்றி அதிகம் பேசுகிற மாதிரி அறிமுகப் படுத்தப்படுகிறது.  தம்பி என்கிற பாத்திரம் தன்னுடைய மனக் குமறல்களை வெளிப்படையாக யாரிடமும் சொல்லாமல், இறுதியில் ஒரே ஒரு வாக்கியத்தால் தன் துயரத்தை வெளிப்படுத்துகிறது.  “ராயல் டாக்கீஸ் இல்லாத ஊர்ல என்னால இருக்க முடி0யுமால?”

என்று.

கதையை அதற்குமேல் இழுக்காமல் விட்டுவிடுகிறார் கதாசரியர்.  அவருக்குப் பாராட்டுகள்.  நவம்பர் மாதம் சிறந்த கதையாக இதைத் தேர்ந்தெடுத்துள்ளோம். 
இதுவும் ஆனந்தவிகடனில் வெளிவந்த கதை.

2 Replies to “விருட்சம் தேர்ந்தெடுத்த மனதுக்குப் பிடித்த கதைகள்

  1. சுகா அவர்களின் கதை இதயத்தைத் தொட்ட அற்புதமான அன்பைப்
    பிரதிபலிக்கும் அருமையான படைப் பு.

  2. சுகா அவர்களின் கதை அற்புதமான அன்பைப் பிரதிபலிக்கும் அருமையான ப டை ப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *