இந்தச் சாலையும்

இன்று
கொலையேதும் நடக்கவில்லை. ரத்த வாடை வீசாதசாலைகளில் வழிந்தோடுகிறதுஅமானுஷ்யம். குழுக்களாய் கிசுகிசுக்காதசாலைகளில் வீசுகிறதுநிசப்தம் போடும் சப்தம். அம்புக்குறி சுட்டாத சாலைகளில்பொழிகிறதுஅமைதி தரும் அதிர்வு. கொலை நடந்தஎல்லா சாலைகளையும் போலஇந்தச் சாலையும் நீள்கிறதுபயங்கரமாய்…

Cheer leaders

லிப்டிலோ
டிரெயினிலோ
சினிமா தியேட்டரிலோ
பாப்கார்ன் வாங்கும்போதோ
கோவில் கூட்டத்திலோ
ஷேர் ஆட்டோவிலோ
பெற்றோர் ஆசிரியர் மீட்டிங்போதோ
கல்யாண ஊர்வலத்திலோ
வீட்டிலோ தூக்கத்திலோ
முன் பக்கமோ
பின் பக்கமோ
உரசித்தான் போகிறது
திரும்பிப் பார்க்கவும்
செய்கிறார்கள்
வெட்கத்துடன்

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்……16


பூனை மழலைகல்யாண்ஜிசமீப வார நாட்களில்அலுவலகத்தில் பூனைச் சத்தம்அதிகமாகக் கேட்கிறது.உணவு இடைவேளையில் முன்புஒரே ஒரு பூனைதான்மீன் முள்ளுக்கும்மிச்ச மாமிசத்துக்கும்சாப்பாட்டு மேஜையைச்சுற்றிவரும்.சேவை / வாடிக்கைக்கு மத்தியில்இருபுறமும் இருந்துசிந்துகிற வணிகமொழிக்கிடையில்பூனைக்குட்டிகளின் குரல் இப்படிக்கேட்பது புத்துணர்வு தருவதுதான்என்னைப் போன்ற ஒருவனுக்கு.எனினும் -அந்த ஒற்றைப் பூனையைப்போலஇந்த மூன்றோ நான்கோசாப்பாட்டு மேஜையடியில்பசித்துக் கெஞ்சுகிற காட்சியின் கற்பனைபதற்றம் கொள்ள வைக்கிறதுஒவ்வொரு பூனை மழலைஒலிக்கும் போதும்.

இரண்டு கவிதைகள்

1. முகம்

விபத்தில் அடிபட்டவனைத் தூக்கிச் செல்லும்அவசர ஊர்தி கடந்துபோனதுவெட்டப்பட்ட வாழைமரமெனத் தொங்கியஉடல்முழுதும் ரத்தக்கோலம்அவன் உயிர்பிழைத்துவிட வேண்டுமெனமனமுருக வேண்டிக்கொண்டேன்என் பயணம் முழுதும்நிழலென மிதந்துகொண்டிருந்ததுஅவன் சிதைந்த முகம்அவன் காதலி அவன் அலுவலகம்அவனை நம்பியிருக்கும் தம்பிதங்கைகள்எல்லாரைப் பற்றியும் நினைவு வந்ததுஅவன் உயிர்மிகமுக்கியமானது என்று சொல்லிக்கொண்டேன்ஆறுதலாக ஒரு சொல் மிதக்கஅஞ்சவைத்து மிதந்தது மற்றொரு சொல்பத்தாண்டுகளுக்கு முன்பாகவிபத்தில் அடிபட்டு இறந்துபோனநண்பனின் முகம் நினைவில் படர்ந்ததுஅரள விதையை அரைத்துக் குடித்துதற்கொலை செய்துகொண்ட பள்ளித் தோழியின் முகமும் அசைந்தெழந்ததுஅகால மரணமடைந்தவர்கள் ஒவ்வொருவராக ஆழ்மனத்திலிருந்து எழுந்து வந்தார்கள்துயரம் படர்ந்த முகங்களுடன்என்னைச் சுற்றி சூழ்ந்து கொண்டார்கள்எல்லாரும் ஒரே நேரத்தில் பேசினார்கள்எல்லாரும் ஒரே நேரத்தில் கேள்வி கேட்டார்கள்எல்லாரும் ஒரே நேரத்தில் கண்ணீர்விட்டு அழுதார்கள்ஐயோ போதுமே என்று காதுகளை மூடி நிமிர்ந்தபோதுஉதடுகள் அசையாமல் உற்றுப் பார்த்தவிபத்தில் சிதைந்த முகம்கண்டு உறைந்தேன்

2. வாசலில் விழுந்த பறவை

தற்செயலாகவாசலில் விழுந்த ஒரு பறவைகாலூன்றி நிற்க முற்சித்ததுதடுமாறித் தடுமாறி விழுகிறதுஇடைவிடாமல் சிறகுகளை அடித்துக்கொள்கிறதுஐயோ எனத் தாவிஅள்ளியெடுத்து நீவித்தந்த விரல்உதறிநழுவி நழுவி விழுகிறது
அதன் வேதனையோ காணப் பொறுக்கவில்லைநொண்டி நொண்டிநடந்து செல்வதிலும்பறப்பதிலும்தான் அதன் கவனம் குவிந்திருக்கிறதுஎப்படிப் பெறுவதோ அதன் நம்பிக்கையைவிடையறியா வலியில் துவள்கிறது மனம்
சில கணங்களுக்கு முன் பார்த்தேன்பாடி முடித்த ஆனந்தத்தில்தாழ்வான மரக்கிளையில்துள்ளித்துள்ளி நடந்துகொண்டிருந்ததுஅதன் சிறகின் மஞ்சள் அழகால்மாலைப்பொழுதே வசீகரமானதுஅதன் சின்னச்சின்ன நடைஅழகான ஒரு சித்திரம்

எங்கிருந்தோ பறந்துவந்த கூழாங்கல்எதிர்பாராமல் அதை வீழ்த்திவிட்டதுஎவ்வளவோ தடுமாற்றம்எவ்வளவோ வேதனைஎப்படியோ எழுந்து பறந்தோடிவிட்டது

புத்தக விமர்சனம் – 3

அழியா கைக்கிளை

ம.தவசி அவர்களின் கதைகளைப் படிக்கும்போது ஏற்கனவே கொண்டிருக்கிற தீர்மானங்கள் உறுதிப்படுகின்றன. ஒரு படைப்பைப் பொறுத்தவரை அது வெறும் அறிவுரையோ படைப்பாளியின் மேதமையை வெளிப்படுத்துகிற கருத்துக்களாகவோ இருக்காது என்பது அறிந்த விசயம். வியப்பு, ஏக்கம், நப்பாசை என்று இப்படியான விதங்களால் சாதாரண மனிதன் பெற்றதை போலவே படைப்பாளியிடமிருந்தும் அவை வெளிப்படும். சாதாரண மனிதனுக்கு பயம் என்பது எப்படி வெளிப்பட்டது? வெளிப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டு விட்ட பின்னர், அதை எவ்வாறு எழுத்தில் கொண்டு வர வேண்டும்? சரி, எழுத்தில் கொண்டு வருவது இருக்கட்டும் – முதலில் பேச்சில் எவ்வாறு வெளிப்படுகிறது? ஒரு புதிய முறையில் சொல்கிற விதம்….ஒரு படைப்பு இரண்டிற்கும் அதிக வேறுபாடு இல்லை.

கிட்டத்தட்ட எழுத்து வடிவில் நமக்குக் கிடைக்கப்பெற்றது இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததுதான். இது இலக்கியவாதிகள் சொல்வதல்ல – ஆய்வாளர்கள். காற்றிலிருந்து மூக்கால் இழுக்கப்பட்டு வெளியானது – ஆதியிலே இருந்தது வார்த்தை – இப்படிச் சொல்லப்பட்டது எல்லாமும் இந்தக் கணக்குத்தான். கல் தோன்றி மண் தோன்றா காலத்து மொழி இலக்கியமும் அப்படித்தான். விவசாய நாகரீகம் தோன்றி பல நூற்றாண்டுகள் கழித்து வெளிப்படுத்தப்பட்டவை வேற எப்படி இருக்க முடியும்? அவற்றில் பயம் எப்படி சொல்லப்பட்டுள்ளது? எவ்வாறு உருவப்படுத்தப்பட்டிருக்கும்?
மிகவும் அற்புதமானவை இந்த விசயங்கள். அன்று தோன்றிய எண்ணம் – அதாவது இந்த பயம் – அறிவீனம் என்று யாராலும் சொல்லப்படவில்லை. எல்லா நாட்டிலும் எல்லா மொழியிலும் அது ஏற்றுக்கொள்ளப்பட்ட விசயம். பயம் என்பதை பேய் என்ற முதலில் காட்டிவிட்டு அதற்கு அலங்காரம் செய்ய ஆரம்பித்த போது காட்டேரி, மோகினி என்பதெல்லாம் தோன்றிவிட்டது. அதை எப்படி தடுக்க முடியும்? இது தோன்றிய ஒன்று – சிந்தித்த விளைவால் கிடைத்தது அல்ல (பேய்களில் பிரம்மரராட்சஸ் என்பருது வேதம் படித்து காலமான வைதிகன் என்பது வேறு விசயம். பேய் உலகிலும் மனு தர்மம் உண்டு போலும்.)

தவசியின் கதைகளில் இது இயல்பாக செயல்பட்டிருக்கிறது. பழங்குடி மக்களிடையே இம்மாதிரி உணர்வை இயற்கையாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். வேறு எந்த வகையிலும் இம்மாதிரி படைப்புகள் வகைப்படுத்த முடியாதவை. சிவப்பிந்தியரிடையே இதற்கு சமமான கதை அம்சங்கள், ஆப்பிரிக்க நாட்டின் எழுத்தே இல்லாது பேச்சு மட்டும் உள்ள மொழிகளிலும் உண்டு.

‘மனித சரித்திரத்தில் மனிதன் தன்னை மிருகம், புயல், மழை, பூகம்பம், ஆழிப்பேரலை இவற்றிலிருந்து தன்னை காத்துக்கொள்ள போரிட்டதை விட, சகோதார மனிதரிடமிருந்து காத்துக்கொள்ள போரிட்டதுதான் அதிகம்,’ என்று ஒரு தடவை நண்பர் சா. கந்தசாமி எழுதியிருந்தார்.
மிருகம் – பல்வேறு இயற்கை எதிர்ப்புகள் ஆகியவற்றை விட சக மனிதனுக்குத்தான் அதிகம் பயப்பட்டு இருக்கிறான் என்பது உண்மை. இந்த சக மனிதன் சம்பந்தப்பட்டதுதான் பேயும். இது உலகம் முழுவதிலும் – சங்க காலம், மத்திய காலம், ஷேக்ஸ்பியர் என்றெல்லாம் பாகுபாடு இல்லாது விரவி நிற்கிறது. அம்மாதிரிப்பட்ட ஒரு நிலை, அவனை அறியாமல் உருவாகி இருக்கலாம். இங்கே இந்த மண்ணில் அத அளவிற்கு அதிகமாகவே இருக்கிறது என்று சொல்லவ வேண்டும். இதன் முக்கிய காரணம் வ0வசாய நாகரீகம் உலகில் முதலில் ஏற்பட்ட பரதேசங்கிளல் இ.ந்த இடம் முதன்மையானது. ஆய்வாளர்கள் தந்த விசயம் இதுவும்.

நாய், பூனை, புலி போன்றவை பேயை கண்டு பயப்பட்டு ஓடவது பற்றி சொல்ல முடியாது. ஒருவேளை மனிதனை பார்த்து பயப்பட்டிருக்க முடியும். குரங்குகள் விசயம் வேறு. அவை சிறிதளவில் மனிதகுணம் கொண்டருக்கலாம்.

நாகரீகம் என்றால் இருக்கிற ஒன்ற நாசமடைந்து விட கூடும். விவசாயம் தோன்றினால் பஞ்சமும் தோன்றும். அந்த நாகாக கால கட்டடத்திற்கு முன்புள்ள பஞ்சம் எல்லாராலும் அனுபவிக்கப்பட்ட ஒன்றாக இருந்திருக்கும். நிலவுடைமை சம்பந்தப்பட்ட விசயம்.
கிராமத்ரதில் பஞ்சம் என்றால் நல்லதாங்காள் கதை தோன்றும். மாராப்பு இல்லாத கிழவிக்கு அதைவிட சிறந்த குறியீட கிடையாது. கிணறு – அது இன்னொன்று. கிழவிக்கு குமரியின் கதைகள்தான் முக்கியம். சவ்வுமுட்டாய் கலரில் தாவணி உடுத்திய முத்துமா஡யை ‘என்னைப் பெத்தவளே’ என்று விளித்து கதை கேட்கிறாள். பச்சை குழந்தையை கூட ‘என்னப் பெத்த ராசா’ என்றழைத்து கொஞ்சுவது இந்த இடத்திற்கே உரிய அழகு. தான்பெற்ற குழந்தையை ‘என்னப் பொத்தாரே’ என்றழைப்பது ஒருவேளை தனக்கு தாய் என்ற பட்டத்தைப் பெற்று தந்தவளே என்பதாக இருக்கும். குழந்தையை இப்படி அழைப்பது வேறு எங்காவது – மேல் நாடுகளில் – ஐரோப்பிய இலக்கியங்களில் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆய்வாளர்கள் சொல்ல வேண்டும்.

குமரிகள் பட்ட அவலம் சொல்லத் தரமன்று. மானங்காக்க அவர்கள் உயிர் தர வேண்டும். கிணற்றில் விழுவதுபோல தஞ்சையில் குறிப்பிட்ட காலத்தில் பெற்றோரால் உயிருடன் புதைக்கப்பட்ட விசயம் நீல பத்மநாபனின் தலைமுறைகள் நாவலில் வருகிறது. எங்காவது நடந்து கொண்டு இருக்கிற விசயம்தான்.
இம்மாதிரி கொடுமைகளை சித்தரிப்பது – மிகவும் சாதாரணமாக சொல்வதுபோல் இந்த பெரிய விசயத்தை கையாண்டு இருப்பது முன்பு சோமசர்மா, கறைபட்ட இலை, பூரணி போன்ற லா.ச.ரா கதைகள், சமீபத்தில் கவிஞரி சமயவேல் எழுதிய கதைகள் ஆகியவை இங்கே ஏறிப்பிடலாம்.
மாவட்ட தமிழ்தான் தமிழை இன்னும் உயிரோடு இருக்க செய்து வருகிறது – மானங்காத்து வருகிறது. அதன் மூலம் அழகு, கொடுமை இரண்டுமே தரப்படுகிறது.

கொடுமைகளை கிராமத்து கிழவி மென்று விழுங்கிக் கொண்டிருக்கிறாள். அவை தோற்றம் பெறுவது அவள் மூலம்தான். இலக்கியவாதி அல்ல அந்த கிழவி. ஆனால் அவளிடமிருந்துதான் படைப்பாக – கவிதையாக அது கிளம்புகிறது.

ம.தவசியின் கவிதைகளைப் படித்தபோது இவர்அ கதைகள் எழுதினால் எப்படி இருக்கும் என்ற நினைத்தேன். இரண்டு கதை தொகுதிகளையும் படித்தபோது முதலில் வந்த கதை தொகுதியான ‘பனை விருட்சி’ மேலான கற்பனை வளம் கொண்டுள்ளது என்று சொல்ல வேண்டும். அதிலும் கதையின் ஊடே கவிதைகளையும் சேர்த்திருப்பது ஒரு புதிய முயற்சி. அந்த கவிதைகளையும் சேர்த்தால் அல்லாமல கதை முற்றுபெறாது என்று அவர் நினைத்திருந்தால் அது சரியான எண்ணம்தான். கதையில் கவிதை வரலாமா என்று யாராவது கேட்டால் கதை தோன்றியபோது – கவிதை தோன்றிய போது – கடவுள் தோன்றிய போது, அவையெல்லாம் எப்படி இருந்தன என்று பதிலுக்குக் கேட்கலாம்.

மேலே குறிப்பிட்ட கதை ‘அழியா கைக்கிளை’ என்ற தலைப்பில் ‘பனை விருட்சி’ கதை தொகுதியில் வந்துள்ளது. அழியா கைக்கிளை என்று பெயர் சூட்டிய காரணம் தெரியவில்லை. கைக்கிளைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? ஆனால் பெயரில் என்ன இருக்கிறது – கதையில் தானே எல்லாம். தவசி அவர்கள் இப்படிப்பட்ட நடையை கொண்டிருக்கும் கதைகளை தொடர்வது அவசியம்.
(பனை விருட்சி – ம தவசி – சிறுகதைகள் – வெளியீடு : அனன்யா, 8/37 பி ஏ ஒய் நகர், குழந்தை இயேசு கோவில் அருகில்,புதுக்கோட்டை சாலை, தஞ்சாவூர் 613 005)

புத்தக விமர்சனம் 2

ஆஸ்பத்திரி – நாவல் – ஆசிரியர் : சுதேசமித்திரன் – உயிர்மை பதிப்பகம் – சென்னை 18 – பக்கம் – 136 – விலை ரூ.௮0

சங்கர் என்ற இயற்பெயர் கொண்ட ஆசிரியர் சுதேசமித்திரன் என்ற புனைபெயரில் எழுதி வருகிறார். நாற்பது வயதிற்குள் கவிதை, சிறுகதை, நாவல் எழுதியுள்ளார். சுதேசமித்திரன் என்ற பெயர் பழைய செய்தித்தாளையும், எழுத்தாளர் அசோகமித்திரனையும் நினைவுப் படுத்தினால் ஆசிரியர் பொறுப்பல்ல.

பக்கம் 59 – இங்கே ஒரு இடைச்செருகல் அவசியமாகிறது. இந்த நாவல் ஏழைகளையோ, அரசாங்க ஆஸ்பத்திரிகளையோ அவலங்களையோ பற்றிப் பேசுவதில்லை என்று எப்போதாவது ஏதாவதொரு மூலையிலிரூந்து சர்ச்சை கிளம்பக்கூடும்.

இந்தக் காலத்தில் மட்டுமல்ல. எந்தக் காலத்திலும் ஏழைகள் எந்த நாவல்களையும் வாசிப்பதேயில்லை. ஏனென்றால் அவர்களிடம் அவற்றை வாங்குவதற்கு பணம் இல்லை. இந்தக் காலத்தில் மட்டுமல்ல எந்தக் காலத்திலும் பணக்காரர்களும் இந்த மாதிரி எந்தக் காலத்திலும் பணக்காரர்களும் இந்த மாதிரியான நாவல்களை வாசிப்பதே இல்லை. ஏனென்றால் அதற்கு அவர்களிடம் நேரமில்லை. இதே ரீதியில் இரண்டு பக்கங்கள் வாசகனை முன்னுறுத்தி பிரவசனம் செய்கிறார் ஆசிரியர். இந்த உத்தி மிகப் பிழைய உத்தி. TRISHTRAM SHANDY எழுதிய Lawrence Sterne, பிரெஞ்சு நாவலாசிரியர் Demise Dierot இவர்கள் எல்லாம் இருநூறு ஆண்டுகள் முன்னமே கடைப்பிடித்த உத்தி.

பக்கம் 126. அன்றைக்கு ஐசியூவுக்கு முன்னால் பெரிய வாத்திமக்கூட்டமாக இருந்தது. இருபதாம் நூற்றாண்டு துவக்கத்தில் ஸீ வை குருஸ்வாமி சர்மா எழுதிய பிரேம கலாவதீயம் என்ற நாவலில்தான் ஸ்மார்த்தர்களின் உட்பிரிவுகள் கேலி செய்யப்பட்டிருக்கும். பிறகு வந்த லா.ச.ரா, தி.ஜா போன்ற பிராமண எழுத்தாளர்களின் பாஷை மட்டும் பிராமண மொழியாக இருக்குமே தவிர வாத்திம வடம் பிரிவுகள் பேசப்படவில்லை.

கதையில் வருகிற சிவன் விஷ்ணு போன்ற பெயர்கள் நகுலனின் கேசவ மாதவனை நினைவூட்டுகின்றன. ஆஸ்பத்திரி பிணி, மூப்பு, சாவு உள்ளடக்கியது என்ற போதும் அங்கும் காமக்கிளர்ச்சி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்கிறார் ஆசிரியர் (பக்கம் 57).

சுந்தர ராமசாமியைப் போல மொழியை செதுக்கி, திருகி, சாதூர்யமாக சமத்காரமாக கதையை நடத்திச் செய்கிறார் ஆசிரியர்.

அத்தியாயம் 16-ல் இடம் பெறும் கண்ணபிரான் ஒரு விசித்திரமான குணாதிசயம். பெரிய தொழிலதிபர். சபரிமலை போகிறார். மலையிலிருந்து கீழிறங்கியதும் ஆடு மாடு கோழி மீன் மதுவகைகளும் சாப்பிடுகிறார். இந்த அத்தியாயத்தின் தலைப்பு பணக்காரர்கள் சபரிமலைக்குப் போகும் பாங்கினை விளக்குக.

நாஞ்சில் நாடனால் பரிந்துரைக்கப்பட்ட இந்த நாவல் தமிழ் வாசகர்கள் படிக்க வேண்டியது.

புத்தக விமர்சனம் -1

அந்தரங்கம் – ஆசிரியர் செல்வராஜ் ஜெகதீசன் – பக்கம் 112 – விலை ரூ.60 – வெளியீடு – அகரம், தஞ்சாவூர்
கவிஞர்கள் கல்யாண்ஜிக்கும், விக்ரமாதித்தியனுக்கும் இந்த நூலை சமர்ப்பித்துள்ளார் ஆசிரியர். கவிஞர் விக்கிரமாதித்யனின் முப்பது பக்க முன்னுரை தமிழ் புதுகவிதை வரலாற்றை கரைத்துப் புகட்டுகிறது நமக்கு.
பாரதிதாசனின் கவிதை கூறல் முழுக்க முழுக்க மரபின்பாற்பட்டதே தவிர, புதிதானதுமில்லை. மிகுந்த பெயரும் புகழும் பெற்ற அவருடைய கொடை என்ற ஒன்று யோசித்தால் வெறுமேதான் இருக்க வேண்டி வரும். புதுக்கவிதை என்பதே பார்ப்பனர்களின் கொடைதான்.
கவிதை சோறு போடாது. கவிஞர்கள் கண்டு கொள்ளப்பட மாட்டார்கள். முப்பதாண்டுக் காலமாவது ஒருவன் கவிதை எழுதிக்கொண்டே இருக்க வேண்டும். பிறகு கவிதை ஊற்றுக்கண். அவ்வளவு காலம் தூர்ந்து போகாதிருக்க வேண்டும். இப்படியெல்லாம் இருந்தாலும் தமிழ்ச் சமூகம் அங்கீகரித்துவிடும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
விக்கிரமாதித்தனின் வரிகள் ஒவ்வொன்றும் அட்சர லட்சம் பெறும். நவீன தமிழ்கவிதையின் EZRAPOUND ஆன விக்கிரமாதித்யன் என்ற நம்பிராஜனால்தான் இந்த வரிகளை 2009-ல் எழுத முடியும். இந்த முன்னுரைக்காகவே இந்தப் புத்தகத்தை ஒவ்வொரு கவிஞனும் வாங்கிப் படிக்க வேண்டும்.
கவிதை என்பது என்ன? என்ற கேள்விக்கு வார்த்தை விளையாட்டு என்று கவிஞர் பிரமிள் பதில் அளித்ததாக விக்ரமாதித்யன் கூறுகிறார். அப்படிப்பட்ட வார்த்தை விளையாட்டுகளை செல்வராஜ் ஜெகதீசன் நிறையாவே நிகழ்த்திக் காட்டியுள்ளார்.
ஒன்றன்றி…. என்ற கவிதை
ஒன்றில்லை
ஒன்றுமில்லை
ஒன்றன்றி
ஒன்றுமே இல்லை

மற்றொரு கவிதை

இன்றென்ன
கிழித்துவிட்டோம்.
நாளை மீது
நம்பிக்கை வைக்க.

இவையெல்லாம் சொற்சிலம்பம்தான். ஜெர்மனியில் Concrete Poetry என்ற ஒரு இயக்கம் 1960 களில் செயல்பட்டது. அது வார்த்தை விளையாட்டை இயக்கமாகவே நடத்திக் காட்டியது. Concrete கட்டிடங்கள் போல வார்த்தைகள் அடுக்கப்படும்.

நல்ல கருத்துக்களை முன்வைக்கும் கவிதைகளை விக்கிரமாதித்யன் பாராட்டுகிறார். ஆனால் எழுத்தில் நல்ல எழுத்து மோசமான எழுத்துகள் உண்டு. நல்ல எழுத்தை கெட்ட எழுத்து கிடையாது என்பார் ஆஸ்கர் வைல்ட்.
எத்தனை நாட்கள் என்ற கவிதை

சோற்றுக்கலையும் வாழ்க்கையில்
சொல்லிக்கொள்ளத்தான்
எத்தனை நாட்கள் என்று முடிகிறது.

சலிப்பு அனுபவத்தின் பாற்பட்டது என்பதால் நம்மிடம் தாக்கத்தை உண்டாக்குகிறது. பிரியமான என் வேட்டைக்காரன் என்ற தலைப்பிட்ட கவிதையில் பன்னிரண்டு வரிகளில் பன்னிரண்டு பெண்கள் வருகிறார்கள். அவர்கள் அனைவரும் கல்யாணம் பண்ணிக்கொண்டு ஒன்றிரண்டு பிள்ளைகளுடன் ஒளிமயமாய் குடும்பம் நடத்துகிறார்கள். நமது நாயகியோ நாற்பதைக் கடந்து பெண்மானாக வலம் வருகிறாள். பிரியமான வேட்டைக்காரன் தன்னைக் கொண்டு செல்வான் என்ற நம்பிக்கையுடன்.
விக்கிரமாதித்யன் தன் முன்னுரையில் குறிப்பிடும் பெருந்தேவி, குட்டி ரேவதி, மாலதி மைத்ரி, சுகிர்தராணி முதலிய பெண்ணிய கவிஞர்கள் இந்த வரிகளை எப்படி எதிர்கொள்வார்கள்?
சாஸ்வதம் என்ற கவிதையில் கலைகள் கால விரயம் என்று கூறும் ஆசிரியர், அடுத்த கவிதையான ‘கவன ஈர்ப்பு’ என்ற கவிதையில்,
மற்றவர் கவனத்தை ஈர்ப்பதுதான் முக்கியம்
என்வரைக்கும் எழுதிக் கொண்டிருக்கிறேன் கவிதைகளை என்கிறார்.
சுயம் என்ற கவிதையில்,
உண்மையில் எனக்கு நான் யார்?
என்ற கேள்வியுடன் கவிதையை முடிக்கிறார். அஹம் பிரம்மாஸ்மி என்கிறது ஆதி சங்கரரின் அத்வைதம். நான் கடவுள் என்கிறார் திரைப்பட இயக்குநர் பாலா.
பக்கம் 91-ல் கவியெழுதி பிழைத்தல் கடினம் என்கிறார். இந்த கவிதைகள் படிக்க சுலபமாகத்தானிருக்கின்றன. ஆனால் வார்த்தைகளின் ஊடான மெளனம்தான் கவிதை என்ற பிரெஞ்சு கவிஞர் Paul Valery ஐ செல்வராஜ் ஜெகதீசன் அவசியம் படிக்க வேண்டும்.

சந்தி

க்கள் சக்திக்கு வணக்கம். உலகத்தில் ஒரு பெரிய நிலப்பரப்பு. மிகுந்த மக்கள் தொகை. மொழிகளலாலும், மதங்களாலும், வேறுபட்டு, பலவகையான குடிநிலங்கள், பச்சை, மருதம், நீல கடற்கரைகள், பழுத்த மலைகள், இவற்றில் வாழும் படித்த, படிக்காத மக்கள், எத்தனை எத்தனை வகைகள். எத்தனை எத்தனை திறங்கள், யாவரும், ஒருவர். இந்தியர். நீண்ட தேர்தலாக இருப்பினும், இந்த 100 கோடி மக்களில் வாக்குகளை, இந்தியாவின் நீண்டகன்ற நிலபரப்பில் ஒரு பட்டி தொட்டி கூட விடுபடாது மிகமிக அமைதியான முறையில் நடத்தி வெற்றி கண்டது மக்களாட்சி – எத்துணை வலிமையானது என்று உலகிற்கும், நமக்குமே உணர்த்தியது. பதிநான்காம் முறையான மகத்தான சாதனை. வளர்ச்சித் திட்டங்களின் தொடர்ச்சிக்கும், பொருளாதார தளர்ச்சி நிலையிலிருந்து மீட்சிக்கும் தங்கள் ஒப்புதலை அரசிற்கு மக்கள் அளித்திருக்கிறார்கள். சாதி என்றொரு தீயசக்தியின் பாதிப்பு சற்று குறைந்திருக்கின்றது என்ற மகிழ்ச்சி, பூதாகாரமாக வளர்ந்திருக்கும் பணக்கையூட்டு சிறிது கவலையை அதிகமாக்கியுள்ளது. இந்தப் பிரச்சினைக்கும் வருங்காலத்தில் மக்கள் சக்தியே தீர்வுகாண வேண்டும். இந்தத் தேர்தலில் ஆட்சியை கோரியவர்களிடம், முழுமையான ஆட்சியை, சாவிக்கொத்தையே கொடுத்துவிட்டனர் மக்கள், அவர்களின் ஒரே கட்டளை ”செய்து காட்டு” என்பதே.
***********

வ்வொரு ஆண்டிலும் ‘மே’ மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையும் உலக முழுவதிலும் ‘அன்னையர் தின’மாகக் கொண்டாடப்படுகின்றது. இதுபோன்ற ‘தினங்கள்’ பொதுவாக வணிகர்களால் ‘விற்பனை’ தினங்களாக மாற்றப்பட்டு மக்களை, ‘இதைவாங்கு’ ‘அதைவாங்கு’ மூளையடித் திருநாட்களாக மாறிவிடும்.

இந்த ஆண்டு ‘அன்னையர் தினத்’தன்று ”டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளிவந்த விளம்பரமொன்று, இந்தியாவின் சாதனை செய்யும் இளம் வீரர்கள், இசை வித்தகர் ஏ ஆர் ரஹ்மான், கிரிக்கெட்டின் டெண்டூல்கர், உலக சதுரங்க மாவீரர் ஆனந்த்., இர்ஃபான் சகோதரர்கள், திரைப்பட நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோர்களின் புகைப்படங்களுடன் எழுதப்பட்டிருந்த வாசகம்தான் ஒரு எளிய ஆயினும் ஆழமான கவிதையாக உருவாகியிருந்தது. இதோ அது
ஒளிவெள்ளத்திற்கு முன்னால்
வெறியேறுவதற்கு முன்னால்
கைதட்டல்களுக்கு முன்னால்
மாயங்களுக்கு முன்னால்
கையெழுத்து வேட்டைக்கு முன்னால்
கொழிக்கும் செல்வத்திற்கு முன்னால்
பாரட்டுதல்களுக்கு முன்னால்
தலைப்புச் செய்திகளுக்கு முன்னால்
யாவற்றிற்கும் முன்னால் அம்மா இருந்தாள்.
*******************

விளம்பரத்துறை ஒரு அருமையான கொதிகலன். ”மாற்றி சிந்தி”ப்பவர்களுக்கு ஒரு விறுவிறுப்பான களம். இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கிரிக்கெட் போட்டிகளை சின்னத்திரையில் ஒளிபரப்பும்போது, கூட வெளியாகும் விளம்பரங்களில், இதுவரை பெருமிடத்தைப் பிடித்துக்கொண்டிருந்த கிரிக்கெட் வீரர்கள் திரைப்பட நடிகைகள் யாவரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னணியில் இருப்பது ‘வோடோ .போன்’ விளம்பரங்களில் தோன்றும் ”ச்ஜீ..ச்ஜீ..”க்கள்தான். கேலிச்சித்திரங்கள், கார்ட்டூன்களை இயக்கி ‘அனிமேஷன்’ என்ற உத்தியை ”மாற்றி யோசித்து” மனிதர்களையே கார்டூன்களாக மாற்றி, திரைப்படமாக ஒளிப்பதிவு செய்யும் 22 ப்ரேம்களை, 20 ப்ரேம்களாக சற்று மெதுவாக ஓடவிட்டு, படமெடுத்து ஒரு அனிமேஷன் படம்போல் செய்து நிகழ்வுகளையும் கற்பனை வளம் நிரம்பிய காட்சி அமைப்புகளாக மாற்றியிருக்கிறார்கள், தயாரிப்பாளரும், இயக்குனர்களுமான, ‘நிர்வாணா’ விளம்பர நிறுவனம். பல ”ச்ஜீ..ச்ஜீ..” விளம்பரங்கள் மக்களின் கவனத்தையும் கவர்ந்து, அவ் விளம்பரங்களை காண்பதற்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி விட்டன. படுத்துத் தூங்கும் முதலையை உசுப்பி விளையாடும் ஒருவனை அந்த முதலை விழுங்கிவிடும் அந்த விளம்பரம் பலரால் நினைவு கூரப்பட்டது.

அஞ்சலி

கவிஞர் சி மணி அண்மையில் இயற்கை எய்தினார். ஆங்கிலத்தை தனது முதுகலைப் படிப்பாகத் தொடர்ந்து, ஆங்கில விரிவுரையாளராகப் பணியாற்றிய சி மணியின் கவிதைச் சிந்தனையை, டி எஸ் எலியட்டும், ஆடனும், தங்களது கவிதைகளால் ஈர்த்தது வியப்பில்லை. அமரர் சி சு செல்லப்பாவின் ‘எழுத்து’ வில் கவிதை எழுதத் தொடங்கி, பின், தானே ‘நடை’ என்ற சிற்றிதழைப் பதிப்பித்து வெளியிட்டார். மனிதர், எளியவர், யாருடனும் உடனே சரளமாகப் பழகிவிடாத சிறிது கூச்ச சுபாவம். பழகிவிட்டால் கூட மற்றவர்களின் அந்தரங்களில் அதிரடியாகப் புகுந்துவிடாத ஒருவகை ‘கனவான்’ மனப்பான்மை.

சேலத்தில் வசித்த அவர் மாலை வேளைகளல் கடைத் தெருவிலிருந்த நண்பரின் துணிக்கடைக்கு, தவறாத வருவார், வந்து ஒரு காப்பி0 அருந்திவிட்டு, ஓரிரு சிகெரெட் புகைத்து விட்டு விடைபெறுவார். சேரம் செல்லும்போது, மாரியம்மன் கோவிலுக்கு அருகே இருந்த துணிக்கடைக்கு, நானும் போவேன்; தொழில் முறையிலும், நட்புமுறையிலும். அந்தத் துணிக்கடைக்காரர், இன்னும் என் நெஞ்சில் நண்பராகவேஉள்ளவர். அவர்தான் என்னிடம் சி மணி ‘நடை’ நடத்தியபோது தன் சொந்தப் பணத்தை பெருமளவு தோழர்களாகக் கருதியவர்களினால் ஏமற்றப்பட்டு இழந்தார் என்றும், பண இழப்பைவிட தோழமையின் இழப்பு, அவரை மிகவும் வாட்டியதாக கூறினார். கவிதை எழுதுவது போலவே, சி மணி மிகவும் அழகாக தையல் கலையையும் பயின்றிருந்தாராம்.

ஐந்து கவிதைகள்

இன்று முத‌ல்
வழிதப்பிய குறுஞ்செய்தியொன்றுஒலித்தது. வேணுகோபால் இறந்துவிட்டான்உடனே கிளம்பி வா.
உண்மையில் வேணுகோபால்என்று எனக்கு யாரும் இல்லை. இன்று முத‌ல்அந்தக் கவலையும் தீர்ந்தது.

முத‌ல் நிலவு
இறுக மூடிக்கிடக்கும்அந்தக் குழந்தையின்கைகளை யாரோவிடுவிக்கிறார்கள்.
அந்தக் குழந்தைதன்னோடு கொண்டு வந்தநட்சத்திரங்கள், நிலவுகள்உ…ரு…ண்…டோடுகின்றன.
கனவில்கடவுள் கோபிக்கிறார்.குழந்தை சிரிக்கிறது.
இரண்டாம் முறையும்நட்சத்திரங்கள், நிலவுகளைதருகிறார்.அது ஒருபோதும்முதல் நிலவுமுதல் நட்சத்திரங்கள்போல் இருந்ததில்லை.

யாரும் சொல்லாத கவிதைஇதுவரை யாரும் சொல்லாதகவிதையைஎடுத்துக்கொண்டுதிரும்பினேன்.
அ‌ங்கேநீ இல்லை.நான் இல்லை.யாரும் இல்லை.எதுவும் இல்லை.எதுவுமற்ற அதுவும் இல்லை.
நீட்சி
முன்பொருநாள்எவனோ ஒருவன்தன் சதைகளை அரிந்துகழுகுக்கு போட்டானாம். அவனது நீட்சியென்றுஅடுக்குமாடி குடியிருப்பின்என் ஜான்னலூரம்காத்துக்கிடக்கின்றனஅதே புறாக்கள்.
***********பாரியின் காலத்திலிருந்துகிளம்பி வந்தகொடியென்று இருசக்கரவாகனம் மீதுபடர்ந்தெழுந்திருந்தது.எடுக்கவா தொடுக்கவாஎன்றதுஎன்னைப் பார்த்து.

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்……15


ஏழு ஜென்ம வதைப்படுத்தி
எம்.ரிஷான் ஷெரீப்
உன் மௌனத்தில் வலியுணர்த்தி
எதுவும் பேசாமல்
நின்று நின்று பார்த்தபடியே
மெல்ல நகர்கிறாய் நீ
காயப்பட்டவுன்னிதயத்துக்கு
ஆறுதலாகவொரு துளிக்கண்ணீரோ
ஒரு கண அரவணைப்போ
தரவியலாத் துயரத்தோடு நான்
எந்த நம்பிக்கையிலுன் சிறு ஜீவனை
எனதூர்தியின்
நான்கு சக்கரநிழலுக்குள்
நீ வந்து உறங்கவைத்தாய்
நசுங்கிச் சிதைந்தவுன் வாரிசின்
சடலத்தைக் காணநேர்ந்த பிற்பாடும்
எந்தவொரு அனல்பார்வையோ,
சாபமிடலோ,வைராக்கியமோ இன்றி
ஒதுங்கிப் பார்த்திருக்கிறாய்
ஆறறிவாய் நீ
கணங்களைச் சப்பிவிழுங்கும்
பணியின் அவசரநிமித்தம்
ஒரு நிமிடமொதுக்கி
வண்டியின் கீழ்ப் பார்க்கமறந்து
ஏழேழு ஜென்மத்துக்குமான
வேதனையில் சிக்கித் தவிக்கும்
ஐந்தறிவாய் நான்