பூனைகள்…..பூனைகள்…..பூனைகள்…27

பூனை
ப.மதியழகன்
ஆட்களை கண்டால் உற்று நோக்கும் மாயக் கண்களில் ஆயிரம் மர்மங்கள் புதைந்திருக்கும் அதுவும் கறுப்புப் பூனையைக் கண்டாலே மனசு விதுக்கென்று இருக்கும் நாய் வீட்டில் நல்லது நடக்கும் நாலுவாய் சோறு திங்கலாம் என்று நினைத்திருந்தால் பூனை எப்ப இழவு விழும் யாருமற்ற வீடாகும் என்று நினைக்கும் புழங்காத இடம் தேடியலையும் பூனை மனிதர்களும் உலகில் உண்டு பதுங்கிப் பாயும் புலியினமாயிற்றே பூனை!

பூனைகள்…..பூனைகள்…….பூனைகள்……26.


பூனைக் கவிதைகள்
செல்வராஜ் ஜெகதீசன்
01 கடைசியாய் காரொன்றில் அடிபட்டு இறக்குமுன் அந்தக் கறுப்புப் பூனை முழித்தது யார் முகத்திலோ? o 02 திருடனொருவனை காட்டிக்கொடுத்த அடுத்த வீட்டுத் திருட்டுப் பூனைக்கு அதற்குப் பிறகும் அதே பெயர்தான். O 03 இருந்தும் கடந்தும் போயின எத்தனையோ. இன்னும் பல எங்கோ எப்படியோ இருந்து கடக்க. O

குட்டிக்கதைகள்

ஒரு தேதி
வன் கதவைத் திறந்துகொண்டு படிக்கட்டில் உட்கார வந்ததுமே ஒரு பழுப்பு நிற பூனைக்குட்டி விருட்டென்று பாய்ந்தோடியது. சற்று நேரத்திற்கு முன்தான் மழை பெய்து ஓய்ந்திருந்தது. சுற்றிலும் ஈரம் புற்களும் சின்னஞ்சிறு செடிகளும் ஆங்காங்கே மழையில் பளிச்சென்றிருந்தன. சாலையின் இரண்டு புறங்களிளும் எதிரெதிராய் இரண்டு தெரு நாய்கள் ஒன்றையொன்று கடந்தன. மாலை மணி ஐந்திற்கே மணி ஆறுபோல் ஒளி மங்கியிருந்தது. வானத்தின் நீலம் முற்றிலும் மறைந்து கொஞ்சம் கொஞ்சம் இடைவெளி விட்டு மேகங்கள் திரண்டிருந்தன. அந்த இடைவெளியில் வெள்ளை நிற மேகங்கள் முன்முகம் காட்டிக் கொண்டிருந்தன. திடீரென்று பூனைக்குட்டி பக்கத்தில் வந்து அதனுடைய ஓசையை எழுப்பத் துவங்கிற்று. எட்டிப் பார்த்தான். உருண்டைக் கண்கள் இரண்டையும் விழித்தபடி அவனைப் பார்த்து கத்திக் கொண்டிருந்தது. அதனுடைய இடத்திற்கு தான் வந்து தொல்லை கொடுத்து விட்டோமோ என்று எண்ணினான். சிறிது நேரத்தில் பூனைக்குட்டி ஓடிப்போய் தூரத்திலிருந்து கத்திக் கொண்டிருந்தது. அவன் உட்கார்ந்த இடத்திற்குப் பின்னால் சிறிய கறுப்பு எறும்புகள் சென்று கொண்டிருந்தன. படிக்கட்டுகளில் இரண்டிரண்டு கோடுகளாய் கோலமாவில் போடப்பட்டிருந்தது. எறும்புகள் அவற்றையெல்லாம் கடந்து சென்று கொண்டிருந்தன. இதைச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே தான் வேறு யாரோவாகச் செயல்பட்டு சிந்தித்துக் கொண்டிருந்தான். தான் நினைத்துக் கொண்டிருப்பதையெல்லாம் பக்கத்தில் இருந்த தென்னை மரம் கேட்டுக் கொண்டிருக்குமோ என்று தோன்றிற்று. அப்பொழுது மின்னல் ஒன்று கிழக்குப்புற வானில் பளிச்சிட்டது. திடீரென்று நான்கு சிறு பறவைகள் இரண்டு காகங்களுடன் அணிவகுத்துச் சென்றன. அவன் குறித்து வைத்திருந்த நாளில் அப்படி ஒன்றும் பெரிதாக நடக்கப் போவதில்லையோ என்று தோன்றிற்று. ஒரு கணம், நடந்தால் என்னவெல்லாம் ஆகும் என்று மனக்கணக்கு போட ஆரம்பித்தான். உறக்கத்திலிருந்து அவன் விடுபடுகிறான். நிச்சயம் சில மாறுதல்கள் நிகழக்கூடும். மதிப்புடன் போற்றிப் பாதுகாத்தவை எல்லாம் ஒரு கணத்தில் அர்த்தம் இழந்து புதியதோர் தளத்தில் இயங்கத் தொடங்கும். அவன் அனுபவத்தில் உலகம் புதியதோர் பொருள் கொள்ளும். அவன் நினைவுகள் எல்லாம் கடந்த காலத்தில் மட்டுமே சஞ்சரித்துக் கொண்டிருக்கும். அவற்றின் மாறுபடும் பொருள்கள் மட்டுமே நிகழ் காலத்திலிருந்து எதிர் காலத்திற்கு கடந்து செல்லும். மேலும் சில காகங்கள் பல்வேறு திசைகளிலிருந்து கிழக்கு நோக்கிப் பறந்து கொண்டிருந்தன. இரண்டு பச்சைக் கிளிகள் கூவிக் கொண்டே பறந்தன. எல்லாமே பார்ப்பதுபோல் மட்டுமே இருக்கிறது. கைகளை நீட்டித் தொட்டுப் பார்த்தான். எல்லாமே செங்கல் கட்டிடங்கள். நிச்சயம் ஏதோ தவறு நேர்ந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. தலை நிமிர்ந்து மேலே பார்த்தான். ஆகாயம் முழுக்க அவன் பெயர். நான் இல்லை அது என்றான். உரக்கக் கூவினான். எந்தப் புறத்திலிருந்தும் எவ்வித எதிரொலியும் கேட்கவில்லை. அவன் விழித்துப் பார்த்தபோது வேலைக்காரியின் முகம் பூதாகாரமாய் தெரிந்தது. தேதியைப் பார்த்தான். அவன் குறிப்பிட்டு வைத்திருந்த தேதி கடந்து விட்டிருந்தது.
– ஆத்மாநாம்

பூனைகள்…..பூனைகள்……..பூனைகள் – 24

ஐயப்ப மாதவன்
அணிற்பிள்ளைகள்…பூனைகள்
மாமல்லன் தெருவில் அதிகம் பூனைகள் இருக்கின்றன பல்வேறு நிறங்கள் ஒவ்வொன்றுக்குள்ளும் ஒவ்வொரு விநோதம் சில அணில்பிள்ளைகளை கொன்று தின்கின்றன பசியின் வெறியோடு சில எஜமானர்களின் அன்பு பிடிக்குள் கிடைக்கும் எலும்புகள் அதிகம் கலந்த மாமிசத் துண்டுகளை முட்களோடு ஒட்டிய சிறிய சதைப்பகுதியோடு கூடிய மீன்களை உண்டு மகிழ்கின்றன அவனது மாடியில் எப்போதும் ஒரு பூனை சதா அலைந்துகொண்டு விசுவாசத்தின் அடையாளமாக மேலும் அவன் உதடசைவுகளுக்கு ஏற்றவாறு தன் நடத்தையை மாற்றியவாறு அவனை விரும்பும் அது ஒரு பெண் பூனை குரல்வழியே துரத்தும் ஓரிரு சமயங்களில் எதாவது தேவைப்படின் அப்புறம் படுத்துக்கிடக்கிறது நிலவின் நிழல்போல பெரிதாயிருந்த அதன் வயிற்றின் எடை குறைந்தவேளை அதைச் சுற்றி மூன்று சிறு குட்டிப்பூனைகள் அவனுக்கு பொறுப்பு கூடிவிட்டதாக் நினைத்துக்கொண்டான் மாடிக்கு வரும் தருணங்களில் அவற்றிற்காக எதாவது தருகிறான் அவ்வாறான பொழுதில் வன்மத்திலிருந்து ஒரு கிழட்டு ஆண் பூனை அங்கு வந்துவிட்டது அவன் அதை அங்கிருக்கும் பொழுதுகளில் விரட்டியடிக்கிறான் அதன் பார்வை அவனை அச்சுறுத்துகிறது குட்டிகள் மாயமாய் போன வேளை தரையெங்கும் ரத்தக் கசிவு பின்னங்கால்கள் சிதைந்த பெண் பூனை பதறிய அவன் விழிகள் அசையாது உறைந்த குருதியை சிதைந்த பெண் பூனையை பார்த்துவிட்டு விலங்குகள் சரணலாயத்திற்கு போன் செய்துகொண்டிருந்தான்.

பூனைகள்…..பூனைகள்…….பூனைகள்…..பூனைகள்….23

தாரா கணேசன்
அனாதை இல்லத்துசயாமிப் பூனைக்குக் கண்கள் குருடுஅறை மூலை மென்னிருக்கையில்தன் அரூபக்கனவின் மீசைகள் துடிக்ககைகள் தந்து சந்தித்ததுஅது என்னை முதன் முதலாய்தூக்கியெடுத்து மீசையுரசிக் கொஞ்சித்திரும்பபிரியத்தின் கண் இடுங்கச் சோம்பல்முறித்ததுஅங்குமிங்கும் அலைந்தன கண்ணாடிவிழிகள்தேவதையின் இறக்கைகளுடன்கனவின் அடுக்குகள் ஒளிரமதில் மேல் சயனித்திருந்த அதன்கூவலில் கலைந்தது உறக்கம்மருண்ட பார்வையில் நானும் அதுவும்மயங்கி நின்றவள்துயருற்று நடுங்கும் மென்கரத்தால்கண்கள் சுழற்றி அதற்குப்பொருத்தினேன் அந்தப் பூனை பறவையாகிப் பறந்ததுஅன்றிலிருந்து இரவுகளில்பூனைக்குரலில் பேசும் பறவையொன்றுபின் தொடரவிநோதங்கள் நிறைந்த பூனைகளின்தீவில்அலைகிறேன் கோமேதகக் கண்களுடன்.

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்……20

மீனுவும் பூனையும்குமரி எஸ்.நீலகண்டன்மீனு அவளது அம்மாவிடம் அநியாயத்திற்கு கோபப்படுவாள். அம்மாவைப் பற்றியே அம்மாவைப் பிடிக்காதவர்களிடம் ஆயிரம் குசும்பு சொல்லி இருக்கிறாள்
கணவன் ஏதாவது சொன்னால் பாம்பாய் படமெடுப்பாள் மாமியாரிடம் மணிக் கணக்கில் சண்டை போடுவாள்
அவளை யாரும் குத்தம் சொன்னால் கொத்துகிற பாம்பாய் விஷத்தை பீய்ச்சுவாள்
ஆனால் மீனு அவளது பூனையுடன் மட்டும் மிகுந்த அன்பு காட்டுவாள். அதற்கு நேரம் தவறாமல் பால் கொடுப்பாள் அதன் பஞ்சு போன்ற முதுகைத் தடவிக் கொடுப்பாள். அதனை ஷாம்பு போட்டு நாள் தவறாமல் குளிப்பாட்டுவாள்.
பூனையோடு கொஞ்சியும் விளையாடுவாள் பூனையின் காலில் ஏற்பட்ட சிறிய காயத்திற்காக அண்டை அயலாரிடம் ஐயோ பாவம் ஐயோ பாவமென துக்கித்து துவண்டு போனாள்.
எல்லோரும் அந்த பூனையை பதுங்கி பதுங்கி ஒரு திருட்டுப் பார்வையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்……18

பூனையாய்…

புதுவை சீனு. தமிழ்மணி

வீடில்லை
பல்லாண்டுகளாக
கட்டச்சொல்லி
அலுத்துப் போனாள் –
இல்லாள்
8 x 10 அளவுள்ள வீட்டில்
இல்லாள், இருமகள்கள், வீடு முழுக்கப் புத்தகங்கள்
எனப் படுக்கவும் முடியாத
வீட்டில்
பூனையொன்று வந்தது –
மூன்று குட்டிகளோடு
வாடகை வீட்டில்
வாடகை இல்லாமல்

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்……18

த.அரவிந்தன்

பிரசவம்
—————

பிரசவத்திற்காக
வந்திருக்கிறது வெள்ளைப் பூனை.
பரண் மேல் ஒண்டியிருக்கும்
அதற்கு
குளிரூட்டப்பட்ட அறையில்
காற்றால் நிரம்பிய
மெத்தையமைத்துக் கொடுக்கலாம்
நாலைந்து மருத்துவர்களை
எப்போதும் உடனிருக்க வைக்கலாம்
பிரசவ வலி தெரியாதிருக்க
அதன்
தலையை, உடலைக் கோதி விடலாம்
ஈன்று சோர்கையில்
பெரிய வஞ்சீர மீனை
உண்ணக் கொடுக்கலாம்
பத்தொரு தாதிகளை நியமித்து
குட்டிகள் உடலில் பிசுபிசுக்கும்
பனிக்குட நீரைக் கழுவலாம்
பால் காம்புகளை
சிறு நேரமும் தேட விடாமல்
முதல் பருகலுக்குத் துணை புரியலாம்
நாய்கள்
கழுகுகள்
வாகனங்கள் நுழையாத
கூரை வேய்ந்த மைதானம் அமைத்து
அவற்றை விளையாட விடலாம்
இன்னும்
இன்னும்
என் குழந்தைகளுக்குச் செய்வதுபோல
என்ன வேண்டுமானாலும் செய்யலாம்
அதற்கு முன்-
என் மீதான
அதன் நடுக்கத்தைப் போக்க
என்ன செய்ய?

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்……17

பூனை

ஆலா

எலிமட்டும் பிடிப்பதில்லை
எல்லோர் வீட்டிலும் பூனை
பூரான், தேள், பல்லியென
பசியெடுத்தால் நச்சுயிரியைப் பிடித்துத் தின்னும்
எங்கள் வீட்டு வாசலில் ஒருநாள்
கொம்பேறிமூக்கன் குட்டியொன்றை
வாயில் கவ்வி வந்தது பூனை
பின்னங்காலால் தூக்கியெறிந்து
முன்னம் வேடிக்கைப் பார்த்தது.
ஓடவிட்டு பாம்பைப் புரட்டி எடுத்தது
துண்டாடித் துண்டாடித் தின்று தீர்த்தது

பால் குடிப்பதும்
பசிக்குச் சோறு தின்பதும் இயல்பல்லவே.
யாரும் பார்க்காத நேரத்தில்
குழித்தோண்டி மலம் மறைக்கும்
இயற்கையின் எழில் உருவே பூனை

புலியினம்தான் பூனையும்
போனதெப்படி அதன் போர்க்குணம்?
இந்தியாவில் ஒண்டி வாழும் தமிழர்களைப்போல்
மரபணுவின் வீரம் மங்கி விட்டதோ

அண்டிப் பிழைப்பது அழகல்ல
ஆகவே எனக்குப் பூனையைப் பிடிக்காது
புலியைப் பிடிக்கும்

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்……16


பூனை மழலைகல்யாண்ஜிசமீப வார நாட்களில்அலுவலகத்தில் பூனைச் சத்தம்அதிகமாகக் கேட்கிறது.உணவு இடைவேளையில் முன்புஒரே ஒரு பூனைதான்மீன் முள்ளுக்கும்மிச்ச மாமிசத்துக்கும்சாப்பாட்டு மேஜையைச்சுற்றிவரும்.சேவை / வாடிக்கைக்கு மத்தியில்இருபுறமும் இருந்துசிந்துகிற வணிகமொழிக்கிடையில்பூனைக்குட்டிகளின் குரல் இப்படிக்கேட்பது புத்துணர்வு தருவதுதான்என்னைப் போன்ற ஒருவனுக்கு.எனினும் -அந்த ஒற்றைப் பூனையைப்போலஇந்த மூன்றோ நான்கோசாப்பாட்டு மேஜையடியில்பசித்துக் கெஞ்சுகிற காட்சியின் கற்பனைபதற்றம் கொள்ள வைக்கிறதுஒவ்வொரு பூனை மழலைஒலிக்கும் போதும்.