64வது விருட்சம் நேசிப்புக் கூட்டம்

 
அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 64வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வருகிற, சனிக்கிழமை – நாளை – மாலை 6.30மணிக்கு (14.08.2021) நடைபெற உள்ளது. இது ஒரு மொழி பெயர்ப்பு கூட்டம்.

எல்லோரும் என்.டி.ராஜ்குமார் மொழிபெயர்த்த பவித்ரன் தீக்குன்னி கவிதைகளை வாசிக்க உள்ளோம். கலந்துகொண்டு சிறப்பு செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Topic: சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 64வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி Time: Aug 14, 2021 06:30 PM India Join Zoom Meeting https://us02web.zoom.us/j/86577606745?pwd=L2NQRFJkQlUwbWtEMlpuUG9MVlJiQT09

Meeting ID: 865 7760 6745

Passcode: 789708

சில குறிப்புகள்….


அழகியசிங்கர்


சமீபத்தில் சிறுபத்திரிக்கைகள் பற்றி ஒரு கூட்டத்திற்குத் தயாராக இருந்தேன். என் கையில் மணிக்கொடி காலம் என்ற பி.எஸ் ராமையாவின் புத்தகம் இருந்தது. அதை எடுத்துப் படித்து சில குறிப்புகள் எடுத்தேன்.


அந்தப் புத்தகம் இப்போது அச்சில் இல்லை. ஆனால் அற்புதமான புத்தகம். புத்தகத்தில் உள்ளக் குறிப்புகள் இதோ:


– பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்பாதியில்தான் தமிழில் நடை, பொருள், அமைப்பு ஆகியவற்றில் புதுயுக இலக்கியம் தோன்றியது.
– வேதநாயகம் பிள்ளை, ராஜம் அய்யர், மாதவ அய்யர் மூவரும் தமிழ் இயக்கத்தை உலக இலக்கிய உருவ ஒற்றுமை இயக்கத்துடன் இணைத்து வைத்த முன்னோடிகள் என்று சொல்வது பொருந்தும்.
– இருபதாம் நூற்றாண்டின் முதல் கால் பகுதி காலத்தில் தமிழில் ஆங்கிலத்திலிருந்து மறந்த துப்பறியும் நாவல்கள் மொழி பெயர்க்கப்பட்டும், உள்ளூர் ஆடை மாற்றம் மட்டும் செய்விக்கப்பட்டும், தழுவியும் ஏராளமாக வெளிவந்தன.
அந்தப் பொழுதில்தான் பாரதியார் கவிதை அமைப்பில் புதிய வடிவங்களையும் தோற்றுவித்தார்.
– அதே நேரத்தில் வ.வே.சு அய்யர் மற்ற நாடுகளில் பரவி வளர்ந்து கொண்டிருந்த சிறுகதை என்ற இலக்கிய வடிவத்தைத் தொட்டுக் காட்டித் தமிழில் புதிய இலக்கியம் பெருகி வளருவதற்குச் சிறுகதை வடிவம் மிகவும் உதவியாக இருக்கும் என்பதையும் விளக்கினார்.- சுதேசமித்திரன் பத்திரிகையில் புதிய வடிவ எழுத்துக்கு புதிய வடிக எழுத்துக்கு இடம் கிடைத்தது. – 1932-33 ம் ஆண்டுகளில் சென்னையில் மேல் நாட்டு இலக்கியங்களையும் சுவைத்து, பழைய இலக்கியங்களிலும் திளைத்த சிலர் கூடி இருவகைச் சுவைகளையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளும் ஒரு வட்டம் தோன்றிச் சிறிது சிறிதாக விரிவடைந்து கொண்டிருந்தது.
1933ல் ஆனந்தவிகடன் ஒரு சிறுகதைப் போட்டி நடத்த முன் வந்தது. போட்டியின் விளைவாக அரசியலுக்காகப் பத்திரிகை படித்தவர்கள் கவனம் இலக்கியத் துறையின் புறம் திரும்பியது.
– 1933ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அந்த வட்டத்தினரின் முயற்சியாகச் சென்னையில் தமிழ் அன்பர் மாநாடு நடந்தது. மாநாட்டில் உ.வே.சாமிநாத அய்யர், திருவிக, வையாபுரிப்பிள்ளை முதலியவர்களும் கலந்து கொண்டார்கள்.
– இந்தக் காலத்தில்தான் மணிக்கொடி பத்திரிகை தொடங்கியது.
– 75 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் விவேக சிந்தாமணி என்று ஒரு தமிழ் மாதப் பத்திரிகை நடந்து சொண்டிருந்தது. அதில்தான் பி ஆர் ராஜம் அய்யர் தமது கமலாம்பாள் சரித்திரத்தைத் தொடர்கதையாக எழுதினார்.
– ஸண்டே அப்சர்வார் என்ற பத்திரிகை உலக முழுவதுமிலிருந்த தந்திச் செய்திகள் யாவும் இருக்கும். அதோடு, கலை, இலக்கியம் போன்ற சிறப்புப் பகுதிகளும் இருக்கும். ஞாயிற்றுக் கிழமைகளில் செய்திப் பத்திரிகையாகவும் கட்டுரைகள், கதைகள், வாழ்க்கைப் போக்குகள், சிந்தனையாளர்களின் கருத்துக்கள் யாவும் கொண்ட ஒரு வார இதழாகவும் இருந்தது.
– மணிக்கொடி பத்திரிகை அந்த நேரத்தில் தமிழ்ப் பத்திரிகைகளைப் படிக்கும் எல்லா மக்களுக்கும் சுவைக்காது என்பது அதைத் தொடங்கியிருப்பவர்களுக்கும் தெரியும். மணிக்கொடி தரத்தைச் சுவைத்து வரவேற்பவர்கள் இரண்டாயிரம் முதல் ஐயாயிரம்இருப்பார்கள் என்று எதிர்பார்த்ததன் அது தொடங்கப்பட்டது. பன்னிரண்டு இதழ்கள் வெளிவந்த பிறகும் அந்தத் தரத்து வாசகர்கள் ஒரு ஆயிரம் பேர்கள்கூட கிடைக்கவில்லை என்ற நிலைமைதான் இருந்தது.
– அரசின் ஆதரவில் நடந்த சென்னை நூலகம் அசோஸியேஷன் என்ற புத்தகாலயச் சங்கத்தின் முந்நூற்றைம்பது உறுப்பினர்களுக்கும் மணிக்கொடி இதழ்கள் இலவசமாக அனுப்பப்பட்டன.
ஒரே ஒருவர்தான் மணிக்கொடிக்கு ஒரு வருடச் சந்தா அனுப்பி ஆதரவு காட்டினார். நமது உலகறிந்த விஞ்ஞான மேதை சர் ஸிவி ராமன் அவர்களின் மனைவியர் திருமதி லோககூந்தரி ராமன்தான் ஆதரவளித்த அந்த ஒரே ஒருவர்.
– விற்பனையாளர்கள் பத்திரிகை உருவத்தை மாற்ற வேண்டுமென்றார்கள்.
உண்மையில் பத்திரிகை உருவத்தை மாற்றினார்கள். அதனால் விற்பனை கூடவில்லை என்பது உண்மை.

கவிதையும் ரசனையும் – 20 – சுகந்தி சுப்ரமணியன்

அழகியசிங்கர்


சுகந்தி சுப்ரமணியன் படைப்புகள் என்ற புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டேன். தமிழில் மனப்பிறழ்வுடன் இலக்கிய உலகத்தில் பவனி வந்தவர்களில் ஆத்மாநாம், கோபி கிருஷ்ணன் முக்கியமானவர்கள்;.

கவிதை மூலமாக ஆத்மாநாமும், சிறுகதைகள் மூலமாக கோபிகிருஷ்ணனும் சாதித்துக் காட்டியவர்கள்.

பெண் படைப்பாளியான சுகந்தி சுப்ரமணியனும் மனப்பிறழ்வுடன் தன் வாழ்நாளைக் கடத்தியவர். இவருடைய கவிதைகள் எல்லாம் மனப்பிறழ்வை இன்னும் துல்லியமாகக் காட்டுகின்றன.

இப் புத்தகத்தில் ஜெயமோகன் சுகந்தி சுப்ரமணியன் கவிதைகளைக் குறித்து இப்படிக் கூறுகிறார். “எப்படியானாலும் சுகந்தியின் கவிதைகளை இப்போது பார்க்கும்போது, அர்த்தமுள்ள ஒன்றை சுப்ரபாரதிமணியன் செய்திருக்கிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது.” என்கிறார்.

இன்னொரு இடத்தில் ஜெயமோகன் இப்படி எழுதியிருக்கிறார். ‘2009இல் சுகந்தியின் மறைவை சுப்ரபாரதிமணியன் ஒரு குறுஞ்செய்தியில் எனக்குத் தெரிவித்திருந்தார். அந்த குறுஞ்செய்தி விதவிதமான நினைவுகளை எழுப்பியது. பல வருடங்கள் தாண்டிச் சென்று விட்டிருந்தன. சுகந்தி கவிதைகள் எழுதுவதை நிறுத்தி விட்டிருந்தார். சிலகாலம் மனநோய் விடுதியில் இருந்துவிட்டு மீண்டு வந்திருந்தார். அவரை நானேகூட நினைத்துப்பார்த்ததும் இல்லை. அந்த மரணம் ஒரு பெரிய விடுதலை என நினைத்துக்கொண்டேன். உடல் என்ற அடையாளம் என்ற வாழ்க்கை என்ற அறையைத் திறந்து அவர் வெளியேறிவிட்டார்.

திருப்பூர் தமிழ்ச் சங்க விருது வாங்கத் திருப்பூர் சென்றபோது சுகந்தி சுப்ரமணியனைப் பார்த்திருக்கிறேன். அப்போது என்னிடம் அவர் கவிதைக் குறித்துத்தான் பேசிக்கொண்டிருந்தார். அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும் அவருடன் பேசும்போது இவருக்கா மனப்பிறழ்வு என்று தோன்றியது.

அவருடைய ‘புதையுண்ட வாழ்க்கை‘ என்ற கவிதைத் தொகுதியைக் குறித்து விமர்சனம் எழுதியிருந்தேன். இந்தத் தொகுதியில் இருப்பவை பெரும்பாலும் கவிதைகள். சில கதைகள். சில டைரிக் குறிப்புகள். எந்த ஆண்டில் இதையெல்லாம் எழுதினார் என்பது பற்றிக் குறிப்புகள் இல்லை. அவர் கணவர் சுப்ரபாரதி மணியன் ஒரு சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர் என்பதால் சுகந்தி எழுத்துக்களைப் பாதுகாத்துத் தொகுத்துள்ளார். இப்போது ஒரு கவிதையைப் பார்ப்போம்.


ஒரு கவிதை முழுக்க ஒரே விஷயம்

எத்தனை வீர சாகசம் பெண்ணே

முதல் வரியில் வந்தது

குழந்தை சிரிப்பு மனதில்.


இரண்டாவதில் தண்ணீர் பிடி சண்டைகள்.

மூன்றாம் வரியில் குளிரில் விறைத்து

செத்த லட்சுமி கிழவி நான்காவதில்

கேஸ் தீர்ந்த அலுப்பில்

ஸ்டவ்வின் உதவியான இம்சைகள்


ஐந்தாம் வரியில்

ஓசியில் டிவி சினிமாவுக்கு

அலைந்து கதவு தட்டும் குழந்தைகள்

ஆறாவதாய் சின்னம்மாவின்

மெனோபாஸ் கஷ்ட அழுகைகள்

ஏழாவது வரியில்.


இன்னும் சமையல் ஆகவில்லை.

இன்னொரு கடைசி வரியாய்

கவிதையை முடிக்க

ஒரு வரி சொல்லேன் பெண்ணே!


சுகந்தி சுப்ரமணியன் கவிதையில் முக்கியமான ஒரு விஷயம் கவனிக்க வேண்டும். சின்னம்மாவின் மெனோபாஸ் கஷ்ட அழுகைகள் என்று ஒரு இடத்தில் எழுதியிருக்கிறார். பெண்கள் படும் துயரங்களை பதிவு செய்திருக்கிறார்.

பொதுவாக ஆண்கள் வழியாக உலகத்தைப் பார்க்கும் பெண் கவிஞர்கள் தங்களுடைய பிரச்சினைகளை எழுத்தில் பதிவு செய்ய மாட்டார்கள். சுகந்தியின் கவிதையில் பெண் தான் படும் வலிகள் பதிவாகி உள்ளன.

முதன் முதலில் சுகந்திதான் தன் கவிதைகளில் தன் வலியை அதாவது பெண் படும் வலியைப் பதிவு செய்திருப்பதாகத் தோன்றுகிறது. தமிழில் இவர்தான் முன்னோடியாக இருப்பாரா என்று தோன்றுகிறது.

இன்னும் ஆராய்ந்து பார்த்துத்தான் இந்த முடிவுக்கு வரமுடியும். இவருடைய இரண்டாவது கவிதையில் ஒரு ஆணின் திமிர்தனம் எப்படி வெளிப்படுகிறது என்பதை நாசூக்காகத் தெரியப்படுத்துகிறார். இதோ அந்தக் கவிதை.

நான் போகின்ற பாதையெல்லாம்

பெண்ணென்று பயமுறுத்தும் எல்லாரும்.


என் குழந்தை தவிர

ரேஷன் கடையில்

சர்க்கரை எடை

குறைந்த காரணம் கேட்டதும்

பாமலின் டின்னுக்கு எழுதியவன்

அதை அடித்து ஸ்டாüக் இல்லையென்றான்.


பெண்ணுக்கென்ன கேள்வி என்றான்

கியூவில் நின்ற ஆண்களும், பெண்களும்,

வானம், வீதி, வாசனம் பார்த்தனர்


இடுப்பிலிருந்த என் குழந்தை

முகம் பார்த்துச் சிரித்தது.


சுகந்தியின் கவிதையை மேலும் நான் விவரிக்க விரும்பவில்லை. கவிதையைப் படித்தவுடன் நமக்கு அக் கவிதையில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று புரிகிறது. பெரும்பாலும் சுகந்தி அவருடைய வீட்டைப் பற்றி அவருடைய வாழக்கைக் சூழல் பற்றி குழப்பமான மனநிலையைப் பற்றி எழுதி உள்ளார். இப்படி குடும்ப உறவைப் பற்றி கவிதைகள் எழுதியதால் இவர் கவிதைகள் நான்கு சுவருக்குள் முடிந்து விட்டனவோ என்று தோன்றுகிறது. தலைப்பில்லாமல் எல்லாக் கவிதைகளையும் எழுதி உள்ளார்.

மூன்றாவதாக நான் குறிப்பிடுகிற கவிதை முழுக்க முழுக்க பெண் மையக் கவிதை. நான் சமீபத்தில் ஒரு பெண் கவிஞரின் கவிதைகளைப் படித்தேன். அது “முழுக்க காதல் கவிதைகள். எல்லாம் கருத்துக் கொட்டல்கள். அனுபவம் சற்றுக்கூட இல்லை. போஙூயான வார்த்தைகள். ஆனால் சுகந்தி கவிதைகள் இயல்பாக அவர் நிலையைப் புலப்படுத்துவதாக உள்ளது. இதோ இன்னொரு கவிதை.


என் குழந்தையின்

தொப்புள் கொடியை

அறுத்தது யார்?

பாட்டியா? நர்ஸô?

நினைவில்லை


என் முதல் கர்ப்பம்

பற்றிய முதல் செய்தியை

யாரிடம் சொன்னேன்?

ஞாபகமில்லை


பள்ளியில் அ, ஆ, இ, ஈ

கற்றுக் கொடுத்த ஆசிரியர் யார்

மறந்து போனது


பள்ளி மைதானத்தில்

விளையாடும்போது ருதுவான கணத்தில்

என் கைபிடித்து சந்தோஷம் கொண்ட

முகம் எது?

நினைவில்லை.


சட்டெனச் செத்துப் போன அப்பா

எனக்காய் விட்டுப் போன வார்த்தைகள்

எவை? எவை?

நினைவில்லை.


முதல் பிரசவம் குறித்து

பயமுறுத்திச் சொன்னவர் யார்?

மறந்து போனது

பாஷை புரியாத ஊரில்

புது பாஷையில்

முதல் கேள்வி கேட்ட பெண்?

நீள்கிறது நினைவில்லைகள்,

ஏதோ ஒருவகையில்

எல்லாவற்றிற்கும்

முக்கியத்துவம் இருந்தும்


அடுக்கடுக்காய் ஒரு பெண் படுகிற பதற்றம் இக் கவிதை முழுவதும் தெரிகிறது. பெண்களால் உணருகிற பெண்ணைப் பற்றிய கவிதை இது. மொத்தத்தில் இவர் கவிதைகள் மூலம் இவர் குரல் இப்படி ஒலித்துக்கொண்டிருக்கிறது. மனப்பிறழ்வான மனநிலையைத் தத்ரூபமாக வெளிப்படுத்துகிறார் இன்னும் இவர் படைப்புகளை ஆராய விரும்புகிறேன்.
(இன்னும் வரும்)


(தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை திண்ணையில் 8 ஆகஸ்ட் 2021அன்று வெளிவந்தது.)

07.08.2021 அன்று விருட்சம் நடத்திய 63வது கவிதை நேசிக்கும் நி கழ்ச்சி

அழகியசிங்கர்

இந்த 63வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சியில் 30 பேர்களுக்கு மேல் கலந்துகொண்டு ஆத்மாநாம் கவிதைகளை வாசித்ôர்கள்.  அதைத் தொகுத்து காணொளியாக உங்கள் முன் அளிக்கிறேன்.
கண்டு களியுங்கள்.

கதைஞர்களைக் கொண்டாடுவோம்.


அழகியசிங்கர்


சூம் மூலமாக விருட்சம் நடத்திய 16வது கதை வாசிப்புக் கூட்டம். வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைஞர்கள் 1. இந்திரா பார்த்தசாரதி 2. அம்பை.


வழக்கம்போல் 8 இலக்கிய நண்பர்கள் கதைகளைக் கூறி கதையைப் பற்றி உரையாடினார்கள்.


இக் கூட்டம் 23.07.2021 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது.

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 61வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி

நாளை சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு (24.07.2021) நடைபெற உள்ளது.

இந்த முறை கவிதை உரையாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கலந்துகொண்டு கூட்டத்தைச் சிறப்புச் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.

Topic: சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 61வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சிTime: Jul 24, 2021 06:30 PM IndiaJoin Zoom

Meetinghttps://us02web.zoom.us/j/85020886877…

Meeting ID: 850 2088 6877

Passcode: 302597

கதைஞர்களைக் கொண்டாடுவோம்.

21.07.2021

அழகியசிங்கர்


சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 16வது  கதை வாசிப்புக்  கூட்டம்.  வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைஞர்கள் 1. இந்திரா பார்த்தசாரதி 2. அம்பை.
வழக்கம்போல் 8 இலக்கிய நண்பர்கள் கதைகளைக் கூறி கதையைப் பற்றி உரையாடுகிறார்கள்.


இக் கூட்டம் 23.07.2021 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. 
எல்லோரும் அவசியம் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.  

Topic: சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 16வது கதை வாசிப்புக் கூட்டம்.Time: Jul 23, 2021 06:30 PM IndiaJoin Zoom Meetinghttps://us02web.zoom.us/j/84977959551…Meeting ID: 849 7795 9551Passcode: 175093

ஒரு கதை ஒரு கருத்து – அசோகமித்திரனின் குருவிக்கூடு

அழகியசிங்கர்

சமீபத்தில் எனக்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டது. மாஜிக்கல் ரியாலிசம் என்றால் என்ன? என்பதுதான் பிரச்சினை. தமிழில் யார் யார் இதுமாதிரி வடிவத்தில் கதைகள் எழுதியிருக்கிறார்கள் என்று பார்த்துக்கொண்டு வருகிறேன். சரி, உண்மையில் ஆங்கிலத்தில் வந்துள்ள மாய யதார்த்தக் கதையைப் படிக்கலாமென்று குகூளில் தேடினேன். நூற்றுக் கணக்கான கதைகளைக் கண்டு பிடிக்க முடிந்தது. The Remember by aimeebender என்பவர் எழுதிய கதையைப் படித்தேன். மார்குவேஸ் எழுதிய கதையைப் படித்தேன் Aimeebender கதையில் அவள் காதலன் உருமாறி ஒருநாள் குரங்காகவும் அதன்பின் ஆமையாகவும் மாறிவிடுவதுபோல் வருகிறது.அக் கதை வேடிக்கையாக எழுதப் பட்டிருக்கிறது. அந்தக் கதையுடன் மட்டும் நான் திருப்தி அடையவில்லை. A very Old Man with Enormous Wings by Gabriel Garcia மார்க்கில்ஸ் இக் கதையை எனக்குப் படிக்க இரா. முருகன் அளித்தார்.

இந்த இரண்டு கதைகளையும் மொழி பெயர்க்க உள்ளேன். Magical realism, or magic realism, is an approach to literature that weaves fantasy and myth into everyday life. What’s real? What’s imaginary? In the world of magical realism, the ordinary becomes extraordinary and the magical becomes commonplace. மேஜிக்கல் ரியலிஸ கதைகளை சாதாரணமாக பலரும் தமிழில் எழுதியிருப்பதாக தோன்றுகிறது. ஆனால் நாம் இதைச் சொல்ல தயங்குகிறோம்.

புதுமைப்பித்தனின், ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ ஒரு மேஜிக்கல் ரியலிஸ கதை.

மகாபாரதத்தில் துச்சாதனன் திரௌபதியின் துகிலை உருவும்போது தொடர்ந்து துகில் பெருகிக்கொண்டே வரும். பகவான் கிருஷ்ணன் அருளால். இது மேஜிக்கல் ரியலிஸம்.

நான் ஒருநாள் சாதாரணமாகக் கட்டிலில் உட்கார்ந்திருந்தேன். என் எதிரில் பஞ்ச முக ஆஞ்சநேயர் படம். திடீரென்று அந்தப் படத்தை உற்றுப் பார்க்கிறேன். எட்டுக் கைகளோடும், மனித மிருக தலைகளுடன் அருள் புரிந்நது கொண்டிருந்தார். எனக்கு இது மாஜிக்கல் ரியலிச படம் என்று தோன்றியது. இப்படியாக மாஜிக்கல் ரியலிஸம் நம்முடன் கலந்துதான் இருக்கிறது .

அம்புலிமாமா கதைகள் எல்லாம் மாஜிக்கல் ரியலிஸ கதைகள். என்ன அதெல்லாம் நீதி போதிக்கிற மாதிரி வருகிறது.

நான் இப்போது எடுத்துக்கொண்டு பேசப் போகிற கதை அசோகமித்திர னின் ‘குருவிக்கூடு’ என்ற கதை. அசோகமித்திரன் 275 கதைகள் எழுதியிருக்கிறார். அவர் ஒரு கதையாவது மேஜிக்கல் ரியலிஸ கதை எழுதியிருக்கிறாரா என்று பார்த்தேன்.

இக் கதை ஒரு மேஜிக்கல் ரியலிஸ கதை. கதையைப் பற்றி இங்கு சொல்கிறேன். அந்த வீட்டில் அன்று சரஸ்வதி பூஜை. பாலுவின் அம்மா அவனைக் கூப்பிட்டு ஹார்மோனியப் பெட்டியை எடுத்துக்கொண்டு வரச் சொல்கிறாள். எப்போதும் சரஸ்வதி பூஜை அன்று

ஹார்மோனியப் பெட்டியை எடுத்துக்கொண்டு பூஜை செய்வது அவர்கள் வீட்டில் வழக்கம். அசோகமித்திரன் ஹார்மோனியப் பெட்டி எங்கே இருக்கிறது என்பதைப் பற்றி இப்படி வர்ணிக்கிறார். ‘மாடியில் ஹார்மோனியம் ஒரு கள்ளிப் பெட்டியில் வைக்கப்பட்டு, அக்கள்ளிப் பெட்டி ஒரு பெரிய பரம்புத் தொட்டிலுள்ள வைக்கப்பட்டு, அக்கள்ளிப் பெட்டி ஒரு பெரிய பிரம்புத் தொட்டிலுள் வைக்கப்பட்டு, அத்தொட்டில் பரண்மீது ஏற்றி வைக்கப்பட்டிருந்தது.’

இப்படி ஒரு நீளமான வரியை அசோகமித்திரன் இந்தக் கதையில் எழுதியிருப்பது வியப்பளிக்கிறது.

பாலு நாற்காலி மீது ஒரு ஸ்டூலைப் போட்டு ஏறி பரணை எட்டிப் பார்த்தான். கரப்பான், பாச்சை, எலிப் புழுக்கை, எல்லா நாற்றமும் வீசியது. கைப்பட்ட இடத்திலெல்லாம் எத்தனையோ நாட்களாய் படிந்திருந்த தூசி கலைந்து மேல் கிளம்பி மூச்சையடைத்தது. தொட்டிலை தொட்டவுடன் தன் கையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டான்.

தொட்டிலுள் வைக்கப்பட்டிருந்த ஹார்மோனியப் பெட்டிக்கும் தொட்டிலின் ஒரு பக்க விளிம்புக்கும் உள்ள இடைவெளியில் ஒரு குருவிக் கூடு இருந்தது. எதையும் தொடாமல் பாலு எம்பி எட்டிப் பார்த்தான். அக்குருவிக் கூட்டினுள் இரண்டு முட்டைகள் இருந்தன. பாலு ஹார்மோனியப் பெட்டியை எடுத்து வரவில்லை. அம்மாவுக்கு வருத்தம்.

அன்று ஹார்மோனியப் பெட்டி இல்லாமலேயே சரஸ்வதி பூஜை நடந்தது. ஒரு வாரம் பொறுத்து மாடியில் சத்தம் அதிகமாகவே இருந்தது. பாலு பரணில் எட்டிப் பார்த்தான். கூட்டில் இரு குருவிப் குஞ்சுகள் இருந்தன. பெரிய குருவி விர்ரென்று வெளியே பறந்து போயிற்று. நாலைந்து மாதங்களுக்குப் பிறகு ஒரு பழைய புஸ்தகத்தைத் தேடி எடுக்க வேண்டி இருந்தது. பாலு இம்முறையும் பரண் மீது இருந்த அந்தப் பிரம்புத் தொட்டினுள் எட்டிப் பார்த்தான். கூட்டினுற் உட்கார்ந்திருந்த பெரிய குருவி விர்ரென்று வெளியே பறந்து போயிற்று. உள்ளே இம்முறை இரண்டு முட்டைகள் இருந்தன.

இந்தக் கதையில் அசோகமித்திரன் ஒவ்வொரு முறையும் இரண்டு முட்டைகள் இருந்தன என்று குறிப்பிடுகிறார். பின் கட்டிலிருக்கும் அம்மாள் சாவிக் கொத்தை அவன் வீட்டில் கொடுத்துவிட்டு ஆஸ்பத்திரிக்குச் சென்றாள். அவளுடைய மூத்த மகள் பிரசவித்திருந்தாள். ஆண் குழந்தை. ஒன்பது பவுண்டு,ஆறு தையல்கள் என்றார்கள்.

இரண்டு நாட்கள் மழை. ஒரு நாள் ஆபிஸிலிருந்து வந்த பாலு திகைத்து விட்டான். ஹார்மோனியப் பெட்டி கீழே ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்தது. பரணில் தொட்டில் வைத்த இடம் காலியாக இருந்தது. பாலு பதறி விட்டான். குருவிக் கூடு எங்கே என்று பதறியபடி அம்மாவிடம் கேட்கிறான்.

அங்கே உள்ள தொட்டிலை பின் கட்டில் அம்மாவிற்குப் பிறந்த குழந்தைக்காக அவன் அம்மா கொடுத்திருந்தாள். குருவிக் கூட்டில் உள்ள இரண்டு முட்டைகளும் உடைந்து போய் விட்டன. தரையில் அந்த இடத்தில் ஏதோ வெல்லப் பாகு சிந்தின மாதிரி இருந்தது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இந்தக் கதை ஒரு சாதாரண சம்பவம். ஒரு கட்டுரையாகக் கூட இது முடிந்திருக்கக் கூடும். ஆனால் இந்த இடத்தில் அசோகமித்திரன் ஒரு மேஜிக் பண்ணுகிறார். குருவிக்கு ஏற்பட்ட கதியை நினைத்து பாலு இரண்டு மூன்று நாட்கள் சாப்பிடக் கூட இல்லை. குருவிக்கூடெல்லாம் நாசமாகிப் போனபிறகு, பாலு மாடியில் இருந்தான். அவன் மாடிக்கு வரும்போதெல்லாம் அந்தத் தாய்க் குருவி பறந்து போய் ஜன்னல் கதவு மீது உட்கார்ந்து கொள்ளும். அன்று அதைக் காணோம்.

இந்த இடத்தில் குருவி பேசுகிற மாதிரி கதையைக் கொண்டு போகிறார். அப்படி சென்றால்தான் இந்தக் கதைக்கு ஒரு அர்த்தம் இருக்கும். இதுதான் மேஜிக்கல் ரியலிஸம். பாலு அந்த ஜன்னல் கதவைப் பார்த்த மாதிரியே உட்கார்ந்திருந்தான். திடீரென்று எங்கிருந்தோ வந்து அந்தக் குருவி ஜன்னல் கதவு மீது உட்கார்ந்து கொண்டது. பின் பாலுவைப் பார்த்து குருவி பேச ஆரம்பித்தது.


“வந்து விட்டாயா? வந்து விட்டாயா? நீ தானா? நீதானா நீ?” என்று பாலு பதறினான். “ஆமாம். நான்தான். நான்தான்” என்றது குருவி “உன் மக்கள் பிறக்காமலேயே இறந்து விட்டார்களே?” “ஓகோ.. என் மக்கள் பிறக்காமலேயே இறந்து விட்டதற்காக நீ அழுகிறாயா?” என்று குருவி கேட்டது. “ஐயோ இப்படி ஆகிவிட்டதே நான் என்ன பண்ணுவேன்” என்று பதறுகிறான் பாலு. “நீ என்ன பண்ண முடியும்?” என்று குருவி சொல்ல, பாலுவின் அழுகை சடாரென்று நின்றது. “என்ன சொல்கிறாய்? என்ன சொல்கிறாய்?” “உன்னால் என்ன பண்ண முடியும்?”
பாலு கத்துகிறான். “உன்னையும் உன் குழந்தையையும் எவ்வளவு மாதங்கள் ஜாக்கிரதையாகக் காப்பாற்றினேன். புஜையன்று கூட நான் உன்னைத் தொந்தரவு செய்யவில்லையே?”

குருவி இரக்கமில்லாமல் பேசிக்கொண்டே போகிறது. “பிறக்காத என் குஞ்சுக்காக ரொம்ப அழுகிறாயே, இப்போது அந்தத் தொட்டிலை ஒரு மனுஷக் குஞ்சுக்காகத்தானே இங்கிருந்து எடுத்துப் போயிருக்கிறார்கள்?” குருவி பேசுவதைத் தாங்க முடியாமல் பாலு மாடிப்படியருகே விரைந்தான். குருவி பறந்து போய்விட்டது. அப்புறம் எவ்வளவோ தடவைகள் அது

முட்டையிட்டுக் குஞ்சு பொரித்தது. ஆனால் பாலுவுடன் அது மறுபடியும் பேசவில்லை. இந்தக் கதையில் குருவி பேசுவதுபோல் இல்லையென்றால் கதையே உருவாக வாய்ப்பில்லாமல் போயிருக்கும். அவரை அறியாமலயே அசோகமித்திரன் மாஜிக்கல் ரியலிஸ கதையை எழுதியிருப்பதாகத்தான் தோன்றுகிறது.


(தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை திண்ணையில் 18 ஜூலை 2021அன்று வெளியானது)

60வது கவிதை விருட்சம் நேசிப்புக் கூட்டம்


அழகியசிங்கர்


சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 60வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சியின் காணொளியைக் கண்டு ரசிப்போம்.


எல்லோரும் சமகால உலகக் கவிதை என்ற புத்தகத்திலிருந்து கவிதைகள் வாசித்தார்கள். சிறப்பாக நடந்து முடிந்தது கூட்டம்.

அமரர் பெ.சு மணியின் ஆக்கங்கள் குறித்து உரை

அமரர் பெ.சு மணியின் ஆக்கங்கள் குறித்து உரைஅழகியசிங்கர் வெள்ளிக்கிழமை (16.07.2021) மாலை 6.30 மணிக்கு நடந்த அமரர் பெ.சு மணியின் ஆக்கங்கள் குறித்து ஆராய்ச்சியாளர் ரெங்கையா முருகன் பேச்சின் ஒளிப்பதிவைக் காணொளி மூலம் கண்டு களிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.