தஞ்சாவூர் கவிராயர் தஞ்சை ப்ரகாஷ் குறித்து 16.12.2017 அன்று பேசிய பேச்சின் ஒரு பகுதியை இங்கு அளிக்கிறேன். இது மூன்று பகுதிகளாக உள்ளது.
Author: virutcham
பத்து கேள்விகள் பத்து பதில்கள்
சில தினங்களுக்கு முன் நான் பங்களூர் சென்றிருந்தேன். நெருங்கிய உறவில் ஒரு திருமணம். பங்களூரில் வசிக்கும் ஸிந்துஜாவைச் சந்தித்து அவரைப் பேட்டி எடுக்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டிருந்தேன். அந்தப் பேட்டி எடுத்த இடம் வேடிக்கையான இடம். அவரை கல்யாணத்திற்கு அழைத்திருந்தேன். கல்யாண சத்திரம் முழுவதும் எதாவது தனியாக அமர்ந்து பேச இடம் கிடைக்குமா என்று பார்த்தோம். ஒரு இடமும் கிடைக்கவில்லை. சரி வேற வழி இல்லை என்று ஸிந்துஜா அவர்களின் காரில் அமர்ந்து பேட்டி எடுத்தேன்.
அந்தப் பேட்டியில் சில இடங்களில் எடிட் செய்ய வேண்டியிருந்ததால் நான் உடனடியாக அதை வெளியிட முடியாமல் தவித்தேன். அமெரிக்காவிலிருந்து வந்த பையனிடம் கொடுத்து இதைச் சரி செய்து தரும்படி கேட்டுக்கொண்டேன். அவன் அதைச் செய்ததோடு அல்லாமல் என்னைத் திரும்பவும் பேசச் செய்து அதையும் ஏற்கனவே எடுத்தப் பேட்டியுடன் சேர்த்துவிட்டான். என்னதான் முயன்றாலும் இதை என்னால் கற்றுக்கொள்ள முடியுமா என்பது தெரியவில்லை. இதோ அந்த ஒளிப்பதிவு. இந்தத் தலைப்பில் நான் எடுக்கும் 13வது பேட்டி இது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
என்னுடைய ‘திறந்த புத்தகத்திற்கான’ அறிமுக உரை பகுதி 3
என் ‘திறந்த புத்தகம்’ பற்றிய அறிமுக உரையை 14.11.2017 அன்று ராஜேஷ் சுப்பிரமணியன் என்பவர் பேசி துவக்கி வைத்தார். எல்லோரும் கேட்டிருப்பீர்கள். அதன்பின் வ வே சுப்ரமணியன் அவர்கள் இந்தப் புத்தகத்தைப் பற்றி பேசியதையும் கேட்டிருப்பீர்கள். இன்னும் பலர் பேச உள்ளார்கள். எல்லோரும் 5 நிமிடங்களிலிருந்து 10 நிமிடங்களுக்குள் பேச உள்ளார்கள். .இப்போது ஆர் கே ராமனாதன் என்கிற என் நண்பர். ஆந்திரா வங்கியில் பணிபுரியும் ஆர் கே ஒரு நாடக நடிகர். திறமையாக நடிப்பவர். நாடகங்களை இயக்குபவர். அவர் என் புத்தகத்தைக் குறித்துப் பேசுவதைக் கேட்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
புத்தகத்தின் விலை ரூ.170. புத்தகம் வேண்டுபவர் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண். 9444113205.
சனிக்கிழமை நடந்த கூட்டம்
ஒவ்வொரு மூன்றாவது சனிக்கிழமையும் (16.12.2017) நான் கூட்டம் நடத்துவது வழக்கம். நான் என்று சொல்வதை விட என் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து நடத்தும் கூட்டம் என்பதால் நாங்கள் என்று சொல்வது சரியாக இருக்குமென்று தோன்றுகிறது. மூகாம்பிகை காம்பௌக்ஸில் ஏழுôவது கூட்டமாக 16ஆம் தேதி ஒரு கூட்டம் நடத்தினேன். தஞ்சாவூர் கவிராயர் தஞ்சை ப்ரகாஷ் பற்றி பேசினார். வழக்கத்தைவிட கூட்டத்திற்கு வருபவரைவிட இந்த முறை அதிகமாகவே கூட்டத்திற்கு வந்திருந்தார்கள்.
தஞ்சாவூர் கவிராயரைப் பார்க்கும்போது எனக்கு ஜெயகாந்தான் ஞாபகம் வருவதுண்டு. அதேபோல் தஞ்சை ப்ரகாஷ் ஸ்டெல்லா புரூûஸ ஞாபகப்படுத்துவார்.
இக் கூட்;டத்தை முழுவதும் நான் பதிவு செய்து வைத்திருக்கிறேன். தஞ்சாவூர் கவிராயர் கூட்டத்தில் பேசும்போதும் ஜெயகாந்தனை ஞாபகப்படுத்தினார். நெகிழ்ச்சியான கூட்டம் இது. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் தஞ்சை ப்ரகாஷ் குறித்துப் பேசினார். ப்ரகாஷ் தஞ்சாவூரில் ஆற்றிய இலக்கியப் பணியைப் பற்றி கோர்வையாகப் பேசினார். ப்ரகாஷ் குறித்து சில புதிய தகவல்களை தெரிந்துகொள்ள முடிந்தது.
விருட்சம் சார்பாக இதுவரை நடந்த 7 கூட்டங்களும் சிறப்பாக நடந்ததற்குக் காரணம். திருப்பூர் கிருஷ்ணன் முதன் முதலா தி ஜானகிராமன் குறித்துப் பேசியதுதான் காரணம் என்று தோன்றுகிறது. இன்னும் பல எழுத்தாளர்களைப் பற்றி இக் கூட்டங்களில் தொடர்ந்து பேச வேண்டுமென்று நினைக்கிறேன். ஊரப்பாக்கத்திலிருந்து வந்திருந்து கலந்துகொண்ட தஞ்சாவூர் கவிராயருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் என் நன்றி.
தஞ்சை ப்ரகாஷ÷ம் தஞ்சாவூர் கவிராயர்ரும்
நாளை மாலை 6 மணிக்கு நடைபெறும் விருட்சம் இலக்கியச் சந்திப்புக் கூட்டத்தில் தஞ்சாவூர் கவிராயர் தஞ்சை ப்ரகாஷ் குறித்துப் பேசப் போகிறார்.
எல்லாவிதங்களிலும் தஞ்சாவூர் கவிராயர் பேசுவது சிறப்பாக இருக்கும். ஏனென்றால் ப்ராகஷை பக்கத்ரில் இருந்து பார்த்துப் பழகியவர்.
நான் ப்ராகாஷை இரண்டு மூன்று முறைகள் சந்தித்திருக்கிறேன். அவர் உடல்நிலை சரியில்லாதபோது டாக்டர் ரெட்டியிடம்தான் சிகிச்சை எடுத்துக்கொண்டார். டாக்டர் ரெட்டி ஒரு இயற்கை மருத்துவர். அவரிடம் போய் சிகிச்சைப் பெறுகிறாரே என்ற எண்ணம் அப்போது எனக்கிருந்தது.
கடைசிவரை இலகத்தியத்தைப் பற்றி சிந்தித்திருப்பவர் ப்ராகாஷ். சும்மா இலக்கியக் கும்பல் என்ற பெயரில் தஞ்சாவூரில் கூட்டம் நடத்தினார். இக் கூட்டதில் கலந்துகொண்டவர்கள் கதைகளைப் படிப்பார்கள். பேசுவார்கள். எனக்குத் தெரிந்து அவர் ஒரு பத்திரிகை நடத்தினார். அந்தப் பத்திரிகையின் பெயர் வெ சா எ. வெங்கட்சாமிநாதன் ஒருவரே அந்தப் பத்திரிகையில் எழுதியிருக்கிறார். இப்படி ஒரு பத்திரிகை நடத்தத் துணிச்சல் வேண்டும். ப்ரகாஷ÷டம் இந்தத் துணிச்சல் இருந்தது.
தஞ்சாவூர் கவிராயரைப் பற்றி சிலவற்றை சொல்லவேண்டும். எனக்கு அவரை அதிகமாக ஐராவதம் என்ற எழுத்தாளர் மூலம்தான் தெரியும். அவர் ஐராவதத்தைப் பார்க்க வரும்போதெல்லாம் அவர் வந்துபோனதுபற்றி செய்தி எனக்குக் கிடைத்துவிடும். இன்று அவருடைய சிறுகதைத் தொகுப்பும், கட்டுரைத் தொகுப்புகளும் புத்தகங்களாக வந்துவிட்டன. தமிழ் இந்துவில் வாரம் ஒரு முறை எழுதும் கட்டுரைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. எழுத்திலும் பேச்சிலும் நகைச்சுவை உணர்வு மிக்கவர்.
நீங்கள் தவறாமல் இக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
விருட்சம் இலக்கியச் சந்திப்பு 32வது கூட்டம் பற்றிய அறிவிப்பு.
தஞ்சை ப்ரகாஷ் குறித்து அவருடைய நெருங்கிய நண்பரான தஞ்சாவூர் கவிராயர் அவர்கள் உரை ஆற்றுகிறார். வரும் சனிக்கிழமை -16.12.2017. எல்லோரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இதோ அதற்கான அழைப்பிதழ்.
மரபு கவிதைகளை ஒழித்தவர் பாரதியார்
பாரதியின் பிறந்த தினம் இன்று. எல்லாவிதங்களிலும் இன்று எழுதிக்கொண்டிருக்கிற கவிஞர்கள் பாரதியாருக்குக் கடமைப் பட்டவர்கள். மரபு கவிதைகளை எழுதிக் குவித்த பாரதியார் ஒரு மாற்றாக வசன கவிதைகளை எழுதினார். அதவாது சுதந்திரமான கவிதைகள். அக் கவிதைகள்தான் பெரிய மாற்றத்தை தமிழில் இன்று ஏற்படுத்தி உள்ளது.
பாரதியாரின் வசன கவிதைகளைத் தொடர்ந்து ந பிச்சமூர்த்தி கொஞ்சம் மரபு கொஞ்சம் புதுவிதமான கவிதை என்று எழுதினார். க நா சு முழுவதும் மரபைத் தவிர்த்துவிட்டார். கவிதையில் புதிய உத்தியை கநாசுவும் நகுலனும் ஆரம்பதில் ஏற்படுத்தியவர்கள். இன்றும் சிலர் மரபு கவிதைகளை எழுதுவது வேடிக்கையாக இருக்கிறது. ஏன்னெனில் புதுவிதமான கவிதைகள் எழுதுவதில் உள்ள சுதந்திரம் மரபு கவிதைகளில் இல்லை. இன்று அதன் எல்லை தாண்டி எங்கோ போய்க்கொண்டிருக்றது.
என்னிடம் 400க்கும் மேற்பட்ட கவிதைத் தொகுதிகள் உள்ளன. எல்லாக் கவிதைப் புத்தகங்களும் மரபு கவிதையை உதறிவிட்டு எழுதப்பட்ட புதுவிதமான கவிதைகள்.
பாரதியாருக்குப் பின் பாரதிதாசன், சுரதா, நாமக்கல் கவிஞர் என்று பலர் மரபு கவிதைகள் எழுதி இருக்கிறார்கள். ஏன் இன்னும் கூட மரபு கவிதைகள் எழுதும் கூட்டம் இல்லாமல் இல்லை. மரபு கவிதையில் வார்த்தையின் ஒழுங்கை ஏற்படுத்த முன்பு கற்பனையை கருத்தை விட்டுவிடுவோம். சொன்னதையே சொல்லும்படி இருக்கும். இதையெல்லாம் கருதிதான் பாரதியார் மரபு கவிதையிலிருந்து கவிதையை வசன கவிதைக்கு மாற்றிக்கொண்டு போயிருக்கிறார்.
பாரதிக்குப் பின் விருத்தத்தில் எழுதிய கண்ணதாசன் கவிதைகள் மீது எனக்கு ஒருவித லயிப்பு உண்டு. ஆனால் அவரும் கூட தேரோட்டம் என்று எழுதினால் காரோட்டம் என்று எதுகைக்கு தடுமாறியதாகத் தோன்றுகிறது. ஆரம்பத்தில் நானும் வெண்பாக்கள் சிலவற்றை எழுதிப் பார்த்திருக்கிறேன். ஆனால் அதைத் தொடர முடியாது என்று தோன்றிவிட்டது. ஏன்எனில் மரபு கவிதைகளில் சுதந்திரம் இல்லை. நம் எண்ணங்களை எல்லோருக்கும் ùதியப்படுத்த மரபு ஒரு கடிவாளமாக நம்மைச் சிறைப்பிடித்து விடுகிறது. ஆனால் இன்னும் பலர் மரபு கவிதைகளை எழுதிக்கொண்டு வருகிறார்கள். புத்தகமாகப் போடுகிறார்கள். அதை ரசிக்கவும் செய்கிறார்கள். ஆனால் அங்கு போய் அதில் கலந்துகொள்ள என்னால் முடியவில்லை. ஒரு பத்திரிகை வெண்பா போட்டி வைத்து அதை ஒவ்வொருமாதமும் பிரசுரம் செய்கிறது.
பாரதியாரின் பிறந்த நாள் ஆன இன்று அவர் வசன கவிதை ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்.
சிற்றெறும்பைப் பார்.
எத்தனை சிறியது!
அதற்குள்ளே கை, கால், வாய், வயிறு எல்லா
அவய ங்களும் கணக்காக வைத்திருக்கிறது
யார் வைத்தனர்? மஹா சக்தி.
அந்த உறுப்புகளெல்லாம் நேராகவே தொழில் செய்கின்றன.
எறும்பு உண்ணுகின்றது, உறங்குகின்றது. மணம் செய்து
கொள்கின்றது. குழந்தை பெறுகிறது, ஓடுகிறது,
தேடுகிறது, போர் செய்கிறது, நாடு காக்கிறது.
இதற்கெல்லாம் காற்றுத்தான் ஆதாரம்.
மஹாசக்தி காற்றைக்கொண்டுதான் உயிர்
விளையாட்டுவிளையாடுகின்றாள்.
காற்றைப் பாடுகிறோம்
அஃது அறிவிலே துணிவாக நிற்பது;
உள்ளத்திலே விருப்பு வெறுப்புக்களாவது.
உயிரிலே உயிர் தானாக நிற்பது.
வெளியுலகத்திலே அதன் செய்கையை நாம் அறிவோம்.
நாம் அழிவதில்லை.
காற்றுத் தேவன் வாழ்க.
என்னுடைய ‘திறந்த புத்தகத்திற்கான’ அறிமுக உரை பகுதி 2
என் ‘திறந்த புத்தகம்’ பற்றிய அறிமுக உரையை 14.11.2017 அன்று ராஜேஷ் சுப்பிரமணியன் என்பவர் பேசியதை எல்லோரும் கேட்டிருப்பீர்கள். இதோ வ வே சுப்ரமணியன் அவர்கள் இந்தப் புத்தகத்தைப் பற்றி பேசுகிறார். இன்னும் பலர் பேச உள்ளார்கள். எல்லோரும் 5 நிமிடங்களிலிருந்து 10 நிமிடங்களுக்குள் பேச உள்ளார்கள். வ வே சுப்ரமணியன் விவேகானந்தா கல்லூரியில் முதல்வராக இருந்து பணி மூப்பு பெற்றவர். சிறந்த பேச்சாளர்.பல புத்தகங்கள் எழுதி உள்ளார். கவிஞர். தமிழ் வளர்த்த சான்றோர் என்ற சிறப்பு நிகழ்ச்சியை விடாமல் வெற்றிகராமாக நடத்துபவர்.
புத்தகத்தின் விலை ரூ.170. புத்தகம் வேண்டுபவர் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண். 9444113205.
மாம்பலம் டாக் பார்த்தீர்களா?
இன்று வந்துள்ள மாம்பலம் டாக் என்ற பத்திரிகையில் போஸ்டல் காலனியில் துவங்கியுள்ள நூல் நிலையத்தைப் பற்றி எழுதியிருந்தது. இன்னும் சில தகவல்களை சரியாகப் பத்திரிகையில் தரவில்லை.
புத்தகம் படிக்க விரும்புவோர் பதிவு செய்துகொண்டு வரவேண்டும். ஒரு மணி நேரத்திற்கு மேல் ஒருவர் இருக்கக் கூடாது. புத்தகம் படிக்க ஒரு மணி நேரத்திற்கு ரூ.10 செலுத்த வேண்டும். புத்தகம் படித்துவிட்டு அங்கயே வைத்துவிடவேண்டும். இரவல் கொடுக்கப்பட மாட்டாது. யாராவது இலவசமாக தங்களுடைய புத்தகங்களை நூல்நிலையத்திற்குக் கொடுக்கலாம்.
விருட்சம் புத்தகங்கள் விற்கப்படும். கூடவே மற்றப் பதிப்பாளர்களின் புத்தகங்களும் விற்கப்படும். ஆனால் முன்னதாகவே சொல்ல வேண்டும்.
10பேர்கள் கொண்ட கூட்டம் நடக்க அனுமதி உண்டு. ஒரு மணி நேரக் கூட்டத்திற்கு ரூ.100 தரவேண்டும்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் : 9444113205 மற்றும் 9176613205.
விசிறி சாமியாரின் பிறந்த தினம் இன்று
நான் பெரிய மனிதர்களைப் பார்ப்பதில் சங்கடப்படுவேன். அவர்கள் முன் எப்படி நடந்துகொள்வது என்பது எனக்குத் தெரியாது. அதாவது சரியாக வராது. அதைவிட நான் போய் பார்க்க விரும்பாதது. சாமியார்களைப் பார்ப்பது.
அவர்கள் முன் நிற்பது எனக்கு சங்கடத்தைத் தரும். எதாவது சொல்லி விடுவார்களோ என்று யோசனை ஓடும்.
ஆனால் தீவிர இலக்கியவாதியான பிரமிள் சாமியார் பின்னால் போனது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பார்த்தால் இலக்கியத்தைப் பற்றி பேசுவார் என்றால், ஜே கிருஷ்ணமூர்த்தி, ஷீரிடி சாய்பாபா, ரமணர், யோகி ராம்சுரத் குமார் என்று பேசிக்கொண்டிருப்பார். எனக்கு ஆச்சரியமாக இருக்கும். பூக்கோ, தெரீதா என்றெல்லாம் பேசுவதை விட்டு, சாய்பாபா, ராம்சுரத் குமார் ஜே கிருஷ்ணமூர்த்தி என்று பேசுகிறாரே என்று தோன்றும்.
ஒருமுறை என்னை திருவண்ணாமலைக்கு அழைத்துக் கொண்டு போய்விட்டார். யோகி ராம்சுரத்குமாரைப் பார்க்கலாம் என்றார். அவருடன் போனதால் சாமியார் என்னைப் பார்த்து எதுவும் சொல்லிவிட மாட்டார் என்ற நம்பிக்கை இருந்தது. நான் வீட்டிலேயே கூட சொல்லாமால் விசிறி சாமியாரைப் பார்க்க பிரமிளுடன் சென்றேன்.
போகும் வழியெல்லாம் சாமியார்களைப் பற்றி நிறையா கதைகள் சொன்னார். கேட்க கேட்க ஆச்சரியமாக இருந்தது. சில சாமியார்கள் எல்லாம் கெட்ட வார்த்தை சொல்லி திட்டுவார்கள் என்று சொன்னார். ரொம்ப ஆச்சரியம். சாமியார்கள் எல்லாம் அப்படியெல்லாம் பேசுவார்களாவென்ற ஆச்சரியம்.
விசிறி சாமியார் முன் நாங்கள் போய் நின்றோம். எனக்கு எல்லாம் வித்தியாசமாக இருந்தது. இவ்வளவு எளிமையாக ஒரு சாமியார் தென்படுகிறாரே என்ற ஆச்சரியம். அவர் வீட்டு முன்னால் மாலைகள் எல்லாம் அழுக்கடைந்த நிலையில் சுவரில் தொங்கிக் கொண்டிருந்தன. மற்றப் படைப்பாளிகள் முன் சிம்ம சொப்பனமாக இருந்த பிரமிள், சாமியார் முன்னால் பவ்யமாவ இருந்தார். எனக்கு அதுவும் ஆச்சரியம். நாங்கள் உட்கார்ந்த பிறகு, (கால சுப்பிரமணியனும் வந்திருந்தார்) சாமியார் பிரமிள் முதுகில் இரண்டு மூன்று முறை தட்டினார். பின் தெய்வத்தின் குரல் புத்தகம் கொடுத்துப் படிக்கச் சொன்னார். ஏதோ ஒரு பக்கத்தை எடுத்து. அங்கு இருந்த சில மணி நேரங்கள் வித்தியாசமாக இருந்தன. விசிறி சாமியார் அழுக்கான உடை உடுத்தியிருந்தார். ஆனால் அவர் முகத்தில் தென்பட்ட தேஜஸ் ஆச்சரியமாக இருந்தது. விரல்களைச் சிமிட்டி ஜபம் செய்து கொண்டிருந்தார். அதைவிட ஆச்சரியம். சாமியார் சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தது. சிகரெட் தீர்ந்துபோனபிறகு பிரமிள் சிகரெட் வேண்டுமா என்று கேட்க, ஆமாம் என்றார் சாமியார். பிரமிள் என்னைப் பார்க்க, நான் உடனே பணத்தை எடுத்து சாமியாரிடம் நீட்டினேன். ஆனால் விசிறி சாமியார் என்னிடமிருந்து பணம் வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டார். நான் பிரமிளிடம் கொடுத்து அதை அங்குள்ள ஒரு பையனிடம் கொடுத்து சிகரெட் வாங்கிவரச் சொன்னார்.
இந்தச் சம்பவம் எனக்கு இன்னும் கூடப் புரியவிôல்லை. ஏன் என்னிடம் பணம் வாங்க விரும்பவில்லை என்ற கேள்வி என்னை அன்று முழுவதும் குடைந்து கொண்டிருந்தது. என் யோஜனைகளை சாமியார் மாற்றி விட்டார் என்று தோன்றியது. அதன் பின் நான் திரும்பவும் அங்கு போகவில்லை. ஆனால் பிரமிள் இரண்டு மூன்று தடவைகள் போயிருப்பார்.
பல வருடங்கள் கழித்து நான் ஒரு முறை குடும்பத்தோடு திருவண்ணாமலை சென்றபோது விசிறி சாமியாரைப் பார்க்கக் கூட முடியவில்லை. நான் பிரமிளுடன் பார்த்தபோது எளிய வீட்டில் இருந்தார். அதன் பின் எல்லாமே பெரிய மாற்றமாக மாறி விட்டது. விசிறி சாமியார் சைக்கிள் ஓட்டிக்கொண்டு வருவதுபோல் ஒருமுறை கனவு கண்டேன்.
ஏன் இதெல்லாம் எழுதுகிறேன் என்றால், விசிறி சாமியாரின் பிறந்தநாள் இன்று. ஒருமுறை .இதே பிறந்த தினம்போது பெரிய விழா எடுத்து சிலர் கொண்டாட முயற்சித்தார்கள். ஆனால் அவர் அந்த விழாவிற்குப் போகவில்லை. அந்த அளவிற்கு விளம்பரப் படுத்திக்கொள்ளாத எளிதில் புரிந்துகொள்ள முடியாத மகான் அவர். என்னோட பிறந்த நாளும் இன்று.