நீங்களும் படிக்கலாம் – 43

நீங்களும் படிக்கலாம் – 43

பாதுகாக்க வேண்டிய புத்தகம்

சில புத்தகங்கள் மூலம் நாம் சிலவற்றை அறிந்து கொள்கிறோம். சில புத்தகங்கள் மூலம் நாம் புத்தக ஆசிரியருக்கு அறிவுரை வழங்கலாம் என்று நினைக்கிறோம். இன்னும் சில புத்தகங்களுக்கு நாம் அறிவுரையும் கூற முடியாது. படிக்காமலும் விட்டுவிடவும் தோன்றும்.

‘மறுதுறை மூட்டம்’ என்கிற நாகார்ஜ÷னன் புத்தகத்தை திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டிருக்கிறேன். சரி அது ஒரு கதைப் புத்தகமா? இல்லவே இல்லை.

அது ஒரு நேர்காணல் புத்தகம். அதில் கூறப்பட்ட பல்வேறு தகவல்கள்தான் என்னை ரொம்பவும் யோசிக்க வைக்கிறது.

இப் புத்தகத்தில் நான் பல இடங்களில் கோடுகள் போட்டுக் குறிப்பெடுத்து வைத்திருக்கிறேன்.
நான் இப் புத்தகத்தில் கோடு போட்ட பகுதியிலிருந்து எதாவது சொல்ல முடியுமா என்று பார்க்கிறேன்.

ஐந்தாம் பக்கத்தில் அவர் பேட்டியில் அவர் சொல்ற விஷயம்.

‘உலகெங்கும் ஜாதி மத இன – தேசிய அடையாளங்களை, பாகுபாடுகளைத் தாண்டி நான் சம்பாதித்த நண்பர்கள்தான் இருக்காங்க.’
ஆனா இந்த நண்பர்களுடன் அவருக்கு நேரடித் தொடர்பும் இல்லை.

பக்கம் 21ல் கூறியுள்ளதை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.

‘இசையின் உலக விழைவைத் தாண்டி இந்த ம்யூஸிக் அக்காதெமி நிறுவனமும் சரி, தென் சென்னையில் புற்றீசல் போலப் பெருகிய சபா அமைப்புகüளம் சரி, முற்றிலும் உயர்வர்க்க ஜாதி அதாவது பிராமண மயமாக இருப்பது எனக்கு எப்போதோ பெரும் அலர்ஜியாகிவிட்டது.’

பக்கம் 40ல்

‘தொழில்நுட்பத்தின் போக்கு மாறுவதில் விநோதமுண்டு என்றாலும் அதைக் கணித்துவிடலாம். ஆனால் வரலாற்றில் வெகுமக்கள் பங்கெடுக்கும் விநோதத்தைக் கணிக்க இயலாது என்கிற பிரமாதமான கண்ணோட்டத்தை ஸத்யஜித் ராய் முன் வைப்பதாக இதைப் புரிந்துகொள்ள முடியும்.’

பக்கம் 47ல் ஜெர்மன் தத்துவ அறிஞர் ஷேர்ப்பன்ஹவர் கூறுவதை கூறுகிறார் :

அதாவது வாழ்வின் உச்சத்தை, உட்பொருளின் ஆழத்தை அதன் எதார்த்தத்தை, எதார்த்தத்தின் வலியைப் பிரதிபலிக்கும் அவசியமின்றி அதைத் தொட்டுக் காட்டிச் சென்றுவிடுவது இசை என்பது ஷேர்ப்பன்ஹவ முக்கிய அறிவிப்பு.
இந்த இடத்தில் உணர்தல் என்பதை ஒருவித அறிவாக மாற்றும் ரஸவாதத்தை நிகழ்த்துகிறார் நிட்ஷே.

பக்கம் 59ல்

ஆனால் கலையில் ஈடுபட்டாலே அறிவு வேண்டாம் என எண்ணி அப்படிச் செய்வோரையும் தடுக்கப் பார்க்கும் ஒரு வித lumpen
மனோநிலையைத் தாண்டுவது எளிதல்ல என்றாகிவிட்டது இன்று. சரகடித்து ஒரு கவிதை நூல் போட்டு, காப்பியடித்த கட்டுரையைத் தன் பெயரில் போட்டுக்கொண்டு மசாலாப் பத்திரிகையில் பரபரப்பாகப் பணிபுரிந்து அதன் வழி ஸினிமாவுக்குச் செல்ல முடியுமென விழையும் ஒருவர், ஸ்ட்ரக்சரலிஸத்தை முதலில் வரவேற்று, பிறகு கோட்பாட்டு விழைவையே கரித்துக்கொட்டத் தமக்கு உரிமையுண்டு என் நினைக்கும் உலகம்தான், அதற்கான பிதாமகர்களைத் தேடும் உலகம்தான், தற்போதைய தமிழ் இலக்கிய உலகம்.

பக்கம் 134ல்

அறிவியலுக்கும் கலைக்கும் இருக்கும் பாலமாக அமைப்பியலை நான் பார்க்கிறேன். அறிவியலுக்கும் கலைக்கும் இடையிலான பாலம்தான் என் வாழ்வும் சிந்தனையும். நான் அறிவியல் படித்து தத்துவத்துக்கு வந்தேன். இலக்கியத்தைப் படித்தும் தத்துவத்துக்கு வந்தேன். அவற்றை இணைக்கும் பாதையாக அமைப்பியல் இருப்பதைப் பார்த்தேன்.

பக்கம் 154ல்

கதைசொல்லி என்றால் பிரதியில் மறைந்திருக்கும் பெயரற்ற கதையாளி என அமைப்பியல் ஆய்வு கூறும் பொருளை விட்டுவிட்டு, அவர் கதையை எழுதும் அல்லது சொல்லும் நபர் என்று தமிழின் படப்பாளிகள் உள்ளிட்ட பலரும் கருதிக்கொண்டு எழுதுவது போலத்தான் இதுவும்.

பக்கம் 155ல்

லெவிஸ்ட்ரௌஸ் போன்ற ஒருவரை கற்கத் தேவையான தன்னடக்கமும் ஆர்வமும் தமிழில் எழுதுவோருக்கு எப்போதுதான் வருமோ என்ற ஆயாசம்தான் எனக்கு வருகிறது..

பக்கம் 169ல் தெர்ரிதாவைப் பற்றி இப்படிக் கூறுகிறார் :

தெர்ரிதாவை வாசிக்க கடுமையா உழைப்பு மிக மிக அவசியம். அதாவது ஒருபுறம் தத்துவ – உரைமரபைக் கலை-இலக்கியமாகவும் கலை-இலக்கியத்தை, அதன் வரலாற்றை தத்துவக் கேள்விகளாகவும் மாற்றிப் பிரச்சினைப்படுத்தி பழக்கிக்கொள்ள வேண்டும்.

பக்கம் 187ல்

போத்ரியாரின் நூல்கள் மட்டுமே தத்துவம் என்ற நிலையை எய்தி என் உணர்வையும் அறிவையும் பிரிக்காத நிலையில் பல இரவுகள் என்னை உந்திச் செல்வனவாக அமையும். தவிர ஊடக – உலகில் ஏதோ ஓர் நிகழ்வு தாறுமாறான நிலைக்குச் சென்று படிப்படியாக ஒரு; உச்சத்தை அடையும்போது போத்ரியாரின் நூல்கதளில் உள்ள செய்தி அதன் விளக்கமாக உருமாறி என் எதிரே அதிரடியாக வந்து நிற்கும்.

திரும்பவும் பக்கம் 195ல்

நிதானத்தையே பிரபல்யமற்ற ஹய்ர்ய்ஹ்ம்ண்ற்ஹ்யையே என் மனமும் உடலும் நாடுகின்றன. வீட்டின் அருகில் மீளச்சல் ஆறு, முருகன் கோவில், தாழத்தங்காடி மஸøதி, புனிதர் அல்ஃபோன்ஸ் அம்மாவின் பிறந்த இடம். இங்காவது யாரும் வந்து என்னைத் துரத்த வேண்டாம் என்றும் தோன்றுகிறது.

நாகார்ஜ÷னனின் இந்தப் புத்தகத்தை ஒருவர் திரும்பத் திரும்ப வாசிக்க வேண்டும். புத்தத்தில் குறிப்பிட்ட பல எழுத்தாளர்களைப் பற்றியும் அறிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

மறுதுறை மூட்டம் – நாகார்ஜ÷னன் நேர்காணல் – கலைஞன் பதிப்பகம் – மொத்தப் பக்கங்கள் : 240 – விலை : ரூ. 180.

திருக்குறள் சிந்தனை 25

சமீபத்தில் திருக்குறள் சம்பந்தமாக எந்தப் புத்தகம் இருந்தாலும் நான் வாங்கி வைத்துக் கொண்டிருக்கிறேன். இதுமாதிரி புத்தகங்களை வாங்கி அடுக்கி வைத்துக்கொண்டிருப்பதைப் பற்றி வள்ளுவர் பெருமான் என்ன சொல்கிறார் என்பதை அறியவும் ஆவலாக உள்ளேன்
சமீபத்தில் நான் வாங்கிய புத்தகம் ராஜாஜியின் வள்ளுவர் வாசகம் என்ற புத்தகம்.
ராஜாஜி அந்தப் புத்தகத்தின் முன்னுரையில் இப்படி எழுதுகிறார் :
üமுனிவர் எழுதிய பாட்டுகளை இரண்டாயிரம் வருஷங்களுக்குப் பின் படித்து, அவற்றில் நான் கண்ட பொருளை எழுதுகிறேன். குற்றங்கள் பல இருக்கும். பெரியோர்கள் மன்னிப்பார்கள்.ý
என்ன தன்னடக்கம் பாருங்கள் ராஜாஜிக்கு. இந்த இடத்தில் நானும் அதுமாதிரியே சொல்ல வருகிறேன்.
நான் பல திருக்குறள் உரைகளை வைத்திருப்பதால் ஒவ்வொருவரும் ஒரு குறளுக்கு என்ன பொருள் எழுதியிருக்கிறார் என்று ஆராய்வதில் ஆர்வம் உள்ளவனாக இருக்கிறேன்.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.

இங்கே தெளிவாகவே நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை இப்படிக் கூறுகிறார் :
ஐந்து இந்திரியங்களையும் அடக்குவதால் அடையக் கூடிய ஆற்றலுக்கு இந்திரியங்களை அடக்கி யாகங்களைச் செய்து இந்திர பதவி அடைகின்ற தேவேந்திரன் கதையே சாட்சியாகும் என்கிறார்.
வள்ளுவரே குறளில் கோமான் இந்திரனே என்கிறார். சரி நாத்திகரான நாவலர் என்ன சொல்ல வருகிறார் என்று அவர் உரையை ஆராய்ந்தேன். அவர் நிச்சயமாக இந்திரன் என்ற வார்த்தையைப் பயன்படுத்த மாட்டார் என்பது என் நம்பிக்கை. நான் எதிர்பார்த்த மாதிரியே அவர் உரை இருந்தது.
வான்புகழ் கொண்டோரில் இனிய திறமைமிக்க, அறிவாற்றலில் சிறந்த சான்றோராகக் கருதப்படும் அறிவன் தக்க சான்று ஆவான் என்கிறார். இந்திரன் என்ற பெயரைச் சொல்லாமல் நாவலர் எப்படித் தப்பிக்கிறார் என்று தோன்றியது.
நவீன கவிதை எதாவது கண்ணில் தட்டுப்படுகிறதா என்று பார்த்தேன். நீத்தார் பெருமை என்ற தலைப்பில் எழுதப்பட்ட எந்தக் குறளுக்கும் நவீன கவிதை தட்டுப்படாது என்று தோன்றியது. ஐந்து இந்திரியங்கள் என்றெல்லாம் சொல்கிறார் வள்ளுவர். எழுத்து இதழைப் புரட்டிக்கொண்டு வரும்போது, கடன்பட்டார் என்ற தலைப்பில் டி கே துரைஸ்வாமி என்ற பெயரில் எழுதிய நகுலனின் கவிதை கண்ணில் தட்டுப்பட்டது. அந்தக் கவிதையின் கடைசி பாராவை தருகிறேன்.
கூத்தனே,
உடுக்க ஒரு முழம்
உண்ண ஒரு நாழி
உடன் கூட ஒரு நங்கை
எடுத்து வளர்க்க ஒரு மகவு
அண்டமெல்லாம் எடுத்துச் சாட ஒரு உள்ளம்.
அதுவே உ;னனை நினைந்து
மடங்கிக் குவிய நாட்டம்
இவையன்றோ
மனிதரென நாமம் தரித்தார்
நாடக் கடன்பட்டார்

திருக்குறள் சிந்தனை 24

ஒவ்வொரு முறை திருக்குறளைப் படிக்கும்போது மனதிற்குள் குறள் என்ன சொல்ல வருகிறது என்று நினைத்துக்கொள்வேன். ஒரு முறை அல்ல இரண்டு முறை அல்ல பல முறை குறள் நமக்கு எதோ தகவலை அளித்துக்கொண்டிருக்கிறது. எளிமையான ஒன்றரை அடிகளில் முடிந்து விடுவதில்லை அது. இதோ இந்தக் குறளைப் பார்ப்போம்.

உரனென்னும் தோட்டியான் ஓர்ஐந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.

ஐம்பொறிகள் என்னும் யானைகளை அறிவு என்னும் அங்குசம் கொக்ஷ்;டு அடக்க வல்லவன் எவனோ அவன் எல்லாவற்றையும் துறந்தவன். அவன்தான் இந்த நிலத்திற்கு ஏற்ற ஒப்பற்ற உரமாகவும் இருக்க வல்லவன். நாமெல்லாம் சாதாரண மனிதர்கள். ஆனால் ஐம்புலன்களையும் அடக்கி ஆள்வது என்பது நம்மால் இயலாது.
உதாரணமாக ஐம்புலன்களின் ஒன்றான வாயை நம்மால் அடக்க முடிகிறதா? வெங்கடேஷ்வரா போளி ஸ்டாலுக்குப் போய் உருளைக் கிழங்கு போன்டா சாப்பிடாமல் இருக்க வேண்டுமென்று நினைப்போம். ஆனால் கால்கள் தானாகவே அங்குச் சென்று போன்டா வை ஒரு பிடிபிடிப்போம். அதே மாதிரி நாம் பேசியே எத்தனைப் பேர்களைப் புண் படுத்துகிறோம். அதனால்தான் சொல்கிறேன் திருவள்ளுவர் எவ்வளவு பெரிய மகான். இந்த ஐந்துபுலன்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது என்பது அவ்வளவு சுலபமான ஒன்றாக எனக்குத் தோன்றவில்லை.
எழுத்தாளர் கோபிகிருஷ்ணனின் சொர்க்கவாசி என்ற கவிதையைப் படித்தால், ஐந்து புலன்களையும் அடக்கி ஆள வேண்டுமென்ற எண்ணம் தோன்றுமா என்ன? நக்கலுடன் கவிதை எழுதி இருக்கிறார்.

யேசு வந்தார்
பாவம் ஒழிந்தது
காந்தி வந்தார்
தீண்டாமை ஒழிந்தது
புத்தர் வந்தார்
உயிர்வதை ஒழிந்தது
சாக்ரடீஸ் வந்தார்
மூடச்சிந்தனை ஒழிந்தது
மார்க்ஸ் வந்தார்
ஆதிக்க வர்க்கம் ஒழிந்தது
டால்ஸ்டாய் வந்தார்
வேறுபாடுள்ள சமுதாயம் ஒழிந்தது
லிங்கன் வந்தார்
அடிமைத்தனம் ஒழிந்தது
பெரியார் வந்தார்
அறிவிலித்தனம் ஒழிந்தது
வேறு யாரோ வந்தார்
தீமை ஒட்டுமொத்தமாக ஒழிந்தது
உல்லாசமாக இருக்கிறேன்
காதில் கடுக்கன் போட்டுக்கொண்டு
யார் வருகைக்கோ காத்துக்கொண்டு
tag

உ.வே.சாவும் பதிப்புப் பணியும் – முதல்வர் சரவணன் ஆற்றிய உரை.

ஜாபர்கன்பேட்டையில் உள்ள 7 ராகவன் காலனி கிளை நூலகத்தில் 28.06.2018 அன்று நடந்த முதல் கூட்டத்தில் சரவணன் அவர்கள் உ.வே.சாவும் பதிப்புப் பணியும் என்ற தலைப்பில் உரை நிகழ்ந்தினார். அதன் முதல் பகுதியை இங்கு அளிக்கிறோம்.

மூகாம்பிகை வளாகத்தில் 13 கூட்டங்கள் நடத்தி விட்டேன் தெரியாமல் 12 என்று எழுதி விட்டேன்..

இதுவரை 13 கூட்டங்கள் நடத்தி உள்ளேன். அதைவிட முக்கியம் ஒவ்வொரு கூட்டமும் கவனத்தில் வைத்தக்கொள்ளும்படி அமைவது.
நேற்று நடந்த தமிழ் மணவாளன் கூட்டம் சிறப்பாக இருந்ததோடல்லாமல் ஒன்றரை மணி நேரம் போய்க்கொண்டிருந்தது. வைதீஸ்வரனும் கூட்டத்திற்கு வந்திருந்தார்.
12வது கூட்டம் என்பதால் எனக்குப் பிடித்த இனிப்பான பாதுஷாவை வாங்கிக்கொண்டு வந்தேன். எல்லோருக்கும் இனிப்பை வழங்கினேன்.
ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஆடியோ நிச்சயமாக உள்ளது. கீழ்க்கண்டவாறு நடந்த கூட்டங்களை குறிப்பிட விரும்புகிறேன்.

1. ஜ÷ன் 2017 நடந்த கூட்டம் – திருப்பூர் கிருஷ்ணன் – ஜானகிராமனும் நானும்
2. ஜøலை 2017 நடந்த கூட்டம் – பெருந்தேவி – புதுமைப்பித்தனும் நானும்
3. ஆகஸ்ட் 2017ல் நடந்த கூட்டம் – கடற்கரை – ஏ கே செட்டியாரும் நானும்.
4. செப்டம்பர் 2017 – ஓஷோவும் நானும் – செந்தூரம் ஜெகதீஷ்
5. அக்டோபர் 2017 – சந்தியா நடராஜன் – திருவாசகமும் நானும்
6. நவம்பர் 2017 – ராஜேஸ் சுப்பிரமணியன் – லத்தீன் அமெரிக்க இலக்கியமும் நானும்
7. டிசம்பர் 2017 – தஞ்சாவூர் கவிராயர் – தஞ்சை ப்ராகாஷ÷ம் நானும்
8. பிப்பரவரி 2018 – கல்யாணராமன் – கு அழகிரிசாமியும் நானும்
9. மார்ச்சு 2018 – த நா குமாரசாமியும் நானும் – முனைர் வ வே சுப்பிரமணியன்
10. ஏப்ரல் 2018 – கு ப ராஜகோபாலனும் நானும் – சாருநிவேதிதா
11. மே 2018 -சுனில்கில்கானியும் நானும் – சா கந்தசாமி
12. ஜøன் 2018 – சி ராஜேந்திரன் – திருக்குறளும் நானும்
13. ஜøலை 2018 – வைதீஸ்வரனும் நானும் – தமிழ் மணவாளரன்.
ஜனவரி மாதம் புததகக் கண்காட்சியை ஒட்டி கூட்டம் நடத்தவில்லை. யாருக்காவது கூட்டத்தில் பேசியதை காதால் கேட்க வேண்டுமென்றால் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்கிறேன்.

பன்னிரண்டாவது கூட்டம் இந்த வளாகத்தில்

இன்று மாலை 6 மணிக்கு வைதீஸ்வரனும் நானும் என்ற தலைப்பில் தமிழ் மணவாளன் அவர்கள் பேசுகிறார்கள். இதுவரை ஸ்ரீராம் குரூப் அலுவலகத்தில் நடக்கும் 12வது கூட்டம் இது..
முகவரி இதுதான் :
மூகாம்பிகை வளாகம்
சி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே
ஆறாவது தளம்
மயிலாப்பூர்
சென்னை 600 004
ஏற்கனவே 11 கூட்டங்களையும் பதிவு செய்திருக்கிறேன். இரண்டு கூட்டங்களின் ஆடியோ உள்ளது. மீதி கூட்டங்களின் ஆடியோ வீடியோ எடுக்கப்பட்டிருக்கின்றன. இதோ இந்தக் கூட்டத்தையும் பதிவு செய்ய உள்ளோம்.
இனி வரும் கூட்டங்களில் கூட்டத்தின் தன்மையை மாற்றி யோசிக்கலாம் என்று நினைக்கிறோம்.
வைதீஸ்வரனின் முழுக் கவிதைத் தொகுதியை வாங்கி இக் கூட்டத்தை சிறப்பு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரதியை வைத்துத்தான் இதுவரை கூட்டம் நடைபெற்றிருக்கிறது. இந்த முறை மட்டும் பிரதியுடன் அதை எழுதிய ஆசிரியரின் வருகையும் உள்ளது.

அன்புடன்
அழகியசிங்கர்

திருக்குறள் சிந்தனை 23

திருக்குறளை எடுத்துத் திரும்பவும் படிக்கும்போது அது வேற உலகத்திற்குள் நம்மை கொண்டு சென்று விடும் என்பது உண்மை. இப்போது 23வது குறளைப் பார்க்கலாம்.

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.

இங்கே வள்ளுவர் பெருமை பிறங்கிற்று உலகு என்ற வரியைப் பயன்படுத்துகிறார். பிறங்கிற்று என்று படிப்பதற்கே நன்றாக இருக்கிறது.
ஈண்டு அறம் பூண்டவர் யார்? அந்தத் தகுதி நம்மில் யாருக்கெல்லாம் இருக்கிறது. அப்படியெல்லாம் உள்ளவர்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்களா? காண முடியுமா? என்ற கேள்விகள் எழுகின்றன.
இருமை வகைதெரிந்து என்பதை நாமக்கல் கவிஞர் பிறப்பு இறப்பு என்ற இரண்டு தத்துவங்கள் என்கிறார். ஆனால் நாவலரோ இயற்கையாக உள்ள நன்மை தீமை என்ற இரண்டு பாகுபாடுகள் என்கிறார்.
பிறப்பு இறப்பு என்கிற தத்துவத்தை உணர்ந்து அல்லது நண்மை தீமை என்ற இரண்டு பாகுபாடுகளை உணர்ந்து தர்ம வாழ்க்கை நடத்தும் மகான்காளல்தான் இந்த உலகம் சிறப்படைகிறது.
நம்மில் சிலர்தான் மேலே குறிப்பிடுகிற மகான்களாக இருக்க வாய்ப்பு உண்டு என்று தோன்றுகிறது.
நான் பெரும்பாலும் உதாரணம் கொடுக்கும் நவீன கவிதைகள் ஒரு சமயம் மேலே குறிப்பிடப்பட்டுள்ள திருக்குறளுக்குப் பொருத்தமில்லாமல் போகலாம். ஆனால் கொஞ்சமாவது பொருந்துகிறதா என்று பார்க்க வேண்டும். மேலே குறிப்பிட்ட திருக்குறளுக்கு சரியான நவீன கவிதை தென்படவில்லை.

ஒரு கவிஞரைக் குறித்து இன்னொரு கவிஞர் பேசுகிறார்

வரும் சனிக்கிழமை (21.07.2018) அன்று மாலை 6 மணிக்கு முனைவர் தமிழ்மணவாளன் வைதீஸ்வரன் கவிதைகள் ஆன மனக்குருவி என்ற புத்தகத்தைப் பற்றி பேச உள்ளார். 1961லிருந்து 2017 வரை எழுதப்பட்ட 366 கவிதைகளின் தொகுப்பு நூல் இது. வைதீஸ்வரன் வரைந்துள்ள ஓவியங்களும் இப் புத்தகத்தில் காணலாம். 488 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தின் விலை ரூ.450. ரூ.200க்கு இப் புத்தகத்தை வைதீஸ்வரன் கையெழுத்துப் போட்டு கொடுக்க உள்ளார். முதன் முறையாக ஒரு கவிஞரைக் குறித்து இன்னொரு கவிஞர் பேசுகிற கூட்டத்தில் வைதீஸ்வரனும் நேரிடையாகக் கலந்து கொள்கிறார்.
தமிழ்மணவாளன் அனுப்பிய அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன்.

வருபவர்களும் பேசுபவர்களும்….

விருட்சம் இலக்கியச் சந்திப்பு என்ற பெயரில் 39வது கூட்டம் நடைபெற உள்ளது வரும் சனிக்கிழமை அன்று.
கடந்த 12 மாதங்களாக ஸ்ரீராம் குரூப் அலுவலகத்தில் இக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
முதல் கூட்டத்தை திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் தலைமை தாங்கி ஜானகிராமனும் நானும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அப்போது கூட்டம் ஆரம்பித்தபோது எந்தத் தலைப்பில் இக் கூட்டத்தை தொடர்ந்து நடத்துவது என்பது புரியாமல் இருந்தது. பின் தானாகவே ஒரு எழுத்தாளரைப் பற்றி இன்னொருவர் பேசுவது போல் கூட்டத்தை மாற்றிக் கடந்த 12 மாதங்களாக நடத்திக்கொண்டு வருகிறேன். வருகிறேன் என்று சொல்வதை விட வருகிறோம் என்று சொல்வது சரியாக இருக்கும். பேசுவோர், கூட்டத்திற்கு வருபவர்கள் என்று எல்லோரும் சேர்ந்துதான் இதை நடத்துகிறோம்.
முதலில் இக் கூட்டத்திற்கு எத்தனைப் பேர்கள் வருவார்கள் என்றெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தேன். இப்போது அந்த யோசனை போய்விட்டது. எல்லாக் கூட்டங்களையும் ஆடியோவிலும் வீடியோவிலும் பதிவு செய்து கொண்டு வருகிறோம்.
இக் கூட்டம் நடத்த எனக்கு எப்போதும் உறுதியாக நிற்பவர்கள் கிருபானந்தன், ராஜேஸ் சுப்பிரமணியன், சந்தியா நடராஜன் அவர்கள். இன்னும் பல எழுத்தாள நண்பர்களுடன் தொடர்புகொண்டு பேச அழைத்துக்கொண்டிருக்கிறேன்.
வருபவர்களும் பேசுபவர்களும் நடத்தும் கூட்டம் இது. இக் கூட்டத்திற்கான அழைப்பிதழை இத்துடன் இணைக்கிறேன்.

பிரமிளும் பிரமிளும்

ஞாயிற்றுக்கிழமை நடந்த பிரமிள் படைப்புகள் நூல்கள் வெளியீட்டு விழாவில் பிரமிளைப் பற்றி ஒரு ஐந்து நிமிடங்களுக்கும் குறைவாகவே பேசினேன்.
அதிகப் பேர்கள் பேசப்போவதால் எல்லோரையும் ஐந்து நிமிடங்கள் பேசும்படி கூறினார். விழா ஆரம்பிக்கும் முன்னதாக பேசுபவர்கள் சிலரைக் கூப்பிட்டு பிரமிள் புத்தகம் ஒவ்வொன்றாகக் கொடுத்தார். மொத்தம் ஆறு தொகுதிகளாக பிரமிள் படைப்புகள் முழுவதும் கொண்டு வந்துள்ளார் கால சுப்பிரமணியம். நீதியரசர் மகாதேவன் கடைசி வரை கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பு செய்தார்.
இப்போது 21 வருடங்களுக்கு முன் உள்ள கதைக்குப் போவோம்.
அப்போது நான் வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். பிரமிள் என்னைப் பார்க்க வருவார். பொதுவாக நாங்கள் சந்திக்கும் இடங்கள். மேற்கு மாம்பலத்தில் உள்ள கோதண்டராமன் கோயில், ஜே கிருஷ்ணமூர்த்தியின் பவுண்டேஷன், என்னுடைய அலுவலகக் கான்டின்.
பிரமிள் சரியாக மதியம் நேரம் வருவார். நேராக கான்டீன் போவோம். என் அலுவலக கான்டீன் உணவை விரும்பிச் சாப்பிடுவார். ஒரு முறை என் கவிதைப் புத்தகம் ஒன்றை வாங்கிக்கொள்ள முடியுமா என்று கேட்டார். நிச்சயமாக என்றேன். üமேல் நோக்கிய பயணம்ý என்பது கவிதைத் தொகுதியின் பெயர்.
üüஇந்தப் புத்தகம் விற்றப் பணத்தை இதை வெளியீட்டாளருக்குத் தர வேண்டாம். எனக்குத்தான் இது,ýý என்றார்
திரும்பவும் ஒரு வாரம் கழித்து பிரமிள் என்னைப் பார்க்க அலுவலகத்திற்கு மதியம் நேரம் வர ஆரம்பித்தார். உண்மையில் அவர் வரவை நானும் எதிர்பார்த்திருந்தேன் என்று சொல்வதுகூட சரியாக இருக்கும். ஒருவரை அடிக்கடிப் பார்க்கும்போது நமக்கும் அவர்களைப் பார்க்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்படாமலிருக்காது.
பிரமிள் இந்த முறை கேட்டார் : “என் கவிதைகளைப் படித்தீரா?”
“இல்லை. ஆனால் படித்து விடுகிறேன்,” என்றேன்.
“அது என்ன சின்ன புத்தகம்தானே கடகடவென்று படித்து விடலாமே,” என்றார்.
“எப்படியும் படித்துவிடுகிறேன்,” என்றேன். அவர் போனவுடன் முதலில் அவர் புத்தகத்தைப் படித்து விடவேண்டுமென்று நினைத்தேன். ஆனால் அவ்வாறு செய்யவில்லை.
அடுத்த வாரம் ஒரு நாள் வந்தார். நான் திங்கட் கிழமை வருவார் என்று நினைத்தால் திங்கட் கிழமை வர மாட்டார். செவ்வாய் அல்லது புதன் கிழமை வருவார்.
“என்ன படித்தீரா?” என்று கேட்டார். “இல்லை. கவிதைப் புத்தகத்தை எங்கோ வைத்துவிட்டேன்,” என்றேன்.
“வேண்டாம். கண்டு பிடித்து விடுவேன்..”
“உங்கள் அலுவலக கான்டீன் சாப்பாடு நன்றாக உள்ளது,”
“நீங்கள் அடிக்கடி வரவேண்டும்,” என்றேன்.
பிரமிள் சிலரைத்தான் பார்ப்பார். சிலரிடம்தான் உதவிக் கேட்பார். அவரிடம் பணம் தங்காது. எதையும் சேமித்து வைக்க மாட்டார். அவர் அந்த அளவு ரசித்து வாழ்ந்தார். üüநான் இதுமாதிரிதான் இருக்க முடியும். நானும் ஒரு பிச்சைக்காரன்,ýý என்று ஒரு முறை சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
பிரமிள் அடுத்த முறை வந்தபோது நான் அவர் கவிதைத் தொகுதியைப் படித்து விட்டேன். üமேல் நோக்கிய பயணம் என்ற காவியத்தில் முதலாவதாக உள்ள காவிய முகம் எனக்குப் புரிந்தது. ஆனால் இரண்டாவது பகுதியிலிருந்து என் கவனம் எங்கோ போய்விட்டது. யாரை நோக்கி இந்தக் கவிதை எழுதப் பட்டிருக்கிறது என்று யோசிக்க ஆரம்பித்தேன்.
அந்தத் தொகுதியில் வண்ணத்துப் பூச்சியும் கடலும் என்ற கவிதை எனக்குப் பிடித்திருந்தது.
இதை அவரிடம் சொன்னேன்.
பிரமிள் அதைக் கேட்டு, “டேவிட்டுக்கு அது புரியலைன்னு சொல்றான்…உமக்கு எப்படி புரிந்தது,” என்றார்.
டேவிட் இன்னொரு வங்கியில் பணிபுரிகிறவர். அவரும் அடிக்கடி பிரமிளுடன் என்னைப் பார்க்க வருவார். உண்மையில் கால சுப்பிரமணியமைவிட ரொம்ப நெருக்கம் டேவிட்டிடம். டேவிட் சின்ன வயதிலேயே இறந்து விட்டார்.
பிரமிள் என்னிடம், “என்ன புரிந்து கொண்டீர் அந்தக் கவிதையில்,” என்று கேட்கவில்லை.
ஞாயிற்றுக் கிழமை கூட்டத்தில் பேசும்போது சுப்பிரமணியம் அவர்களிடம் ஒரு விண்ணபப்பத்தைக் கோரினேன். அவருடைய கவிதைகள் எல்லாவற்றுக்கும் உரை எழுதுங்கள் என்று. என்ன காரணத்திற்காக ஏன் அப்படி எழுதினார் என்றுதான், அதற்கு தகுதியானவர் சுப்பிரமணியம்தான்.
கால சுப்பிரமணியம் சொண்டு வந்த ஆறு தொகுப்புகளையும் ரூ.3000 கொடுத்து வாங்கிக்கொண்டேன். அற்புதமாக அச்சடித்துள்ளார். ஒவ்வொரு தொகுதியாக எடுத்து வைத்துக்கொண்டு படித்து விடலாம். ஆனால் அவ்வளவு சுலபத்தில் முடிக்க முடியுமா என்பது தெரியாது.
‘என் புத்தகங்களை எல்லாம் எப்போதும் படிக்கப் போகிறீர்கள்?’ என்று கேட்க பிரமிள் இப்போது இல்லை.
வண்ணத்துப்பூச்சியும் கடலும் என்ற கவிதையை இங்கே அளிக்கிறேன்.
சமுத்திரக் கரையின்
பூந்தோட்டத்து மலர்களிலே
தேன்குடிக்க அலைந்தது ஒரு
வண்ணத்துப் பூச்சி.
வேளை சரிய
சிறகின் திசைமீறி
காற்றும் புரண்டோட
கரையோர மலர்களை நீத்து
கடல்நோக்கிப் பறந்து
நாளிரவு பாராமல்
ஓயாது மலர்கின்ற
எல்லையற்ற பூ ஒன்றில்
ஓய்ந்து அமர்ந்தது.
முதல் கணம்
உவர்த்த சமுத்திரம்
தேனாய் இனிக்கிறது.