முனைவர் தமிழ்மணவாளன் அவர்களின் கடைசி ஒளிப்பதிவு வைதீஸ்வரன் கவிதைகள் குறித்து. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் பேசி உள்ளார் சிலர் பேசும்போது தன்னை மறந்து பேசி விடுவார்கள். அதுமாதிரியான உரையாக இது எனக்குத் தோன்றியது. பரவசத்துடன் பேசினார்.
Author: virutcham
விருட்சம் இலக்கியச் சந்திப்புக் கூட்டம்
முனைவர் தமிழ்மணவாளன் அவர்களின் மூன்றாவது ஒளிப்பதிவு வைதீஸ்வரன் கவிதைகள் குறித்து. இந்த இலக்கியச் சந்திப்புக் கூட்டம் 21.07.2018ல் நடந்தது. ஏற்கனவே நீங்கள் ஒன்றாவது இரண்டாவது ஒளிப்பதிவுகளைக் கேட்டு ரசித்திருப்பீர்கள்.
ஜøலை மாதம் நடந்த விருட்சம் இலக்கியச் சந்திப்புக் கூட்டம்
வைதீஸ்வரனும் நானும் என்ற தலைப்பில் முனைவர் தமிழ் மணவாளன் விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டத்தில் 21.07.2018 அன்று உரையாற்றினார். அதன் இரண்டாவது ஒளிப்பதிவை இங்கு அளிக்கிறேன்.
ஜøலை மாதம் நடந்த விருட்சம் இலக்கியச் சந்திப்புக் கூட்டம்
வைதீஸ்வரனும் நானும் என்ற தலைப்பில் முனைவர் தமிழ் மணவாளன் விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டத்தில் 21.07.2018 அன்று உரையாற்றினார். அதன் முதல் ஒளிப்பதிவை இங்கு அளிக்கிறேன்.
சில கதைகள்
1986ஆம் ஆண்டிலிருந்து தி ஜானகிராமன் குறுநாவல் போட்டியில் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 4 குறுநாவல்களை üசில கதைகள்ý என்ற பெயரில் புத்தகமாகக் கொண்டு வந்துள்ளேன். அப் புத்தகத்தை நேற்று அமேசான் கின்டலில் சேர்த்து உள்ளேன். அதைப் பார்க்க கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்.
திருக்குறள் சிந்தனை 26
சில தினங்களாக திரும்பவும் திருக்குறளைப் படிக்க மறந்து விட்டேன். இன்று ஞாபகம் வந்தது. விருட்சம் நூலகத்தில் இருந்தபோது (நான் மட்டும்தான் நூலகத்தைப் பயன்படுத்துகிறேன்) என் கண்ணில் ஒரு புத்தகம் தட்டுப்பட்டது. ஐக்கூ வடிவில் திருக்குறள் கருத்துகள் என்ற புத்தகம். முனைவர் யு ஜெயபாரதி, முனைவர் ந தேவி, திருமதி சுபாஷிணி தயாரித்தப் புத்தகம்.
என்னடா இது என்று தோன்றியது. ஏற்கனவே எளிய வடிவில் திருக்குறள் இருக்கிறது. அதையும் தாண்டி இன்னும் எளிய வடிவில் ஒரு புத்தகமா?
சரி நான் பேசப்போகிற குறளுக்கு ஐக்கூ வடிவில் திருக்குறள் எப்படி இருக்கிறது என்று புரட்டிப் பார்த்தேன்.
அரிய செயல்
செய்பவர் –
பெரியோர்!
அவ்வளவுதான். ரொம்ப சுலபமாக ஐக்கூ எழுதி விட்டார்கள். ஆனால் குறள் இப்படி இருக்கிறது.
செயற்கரிய செய்வார் பெரியார் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
பலராலும் செய்வதற்கு அரியனவாகும் செயல்களைச் செய்பவர் பெரியார் என்றும் அவ்வாறு செய்ய முடியாதவர்கள் சிறியோர் என்றும் இக் குறள் கூறுகிறது. இதை இன்னும் குறுகலாக ஐக்கூ வடிவில் கவிதை அமைக்கப் பட்டுள்ளது. முதலில் அரிய செயல் என்றால் என்ன? எந்த ஒரு செயலும் ஒருவரால் செய்யக் கூடியதாக இல்லை. பலர் முயற்சி செய்தால்தான் ஒரு செயல் உருவாகும். நான் தினமும் நடைப்பயிற்சி செய்யும் பூங்காவில் சிலர் சேர்ந்து ஒரு செயலை செய்கிறார்கள். பூங்காவில் போடப்பட்டுள்ள குப்பைகளை எல்லாம் திரட்டுகிறார்கள். அஙகுள்ள செடிகளுக்கும் மரங்களுக்கும் தண்ணீர் ஊற்றுகிறார்கள். இதைச் செயல்படுத்துகிறவர்களை அரியச் செயலை செய்பவர்களாக நான் கருதுகிறேன்.
சரி நவீன கவிதை எதாவது தட்டுப்படுகிறதா என்று பார்ப்போம் என்று யோசித்தபோது நான் எழுதிய கவிதை ஒன்று எனக்கு ஞாபகத்திற்கு வந்தது.
செயல் என்பதை காரியம் என்று நான் எழுதியிருக்கிறேன். 1992ல் எழுதிய கவிதை இது. கவிதையின் தலைப்பு ‘பெரிய காரியங்களும் சிறிய காரியங்களும்.’
சிறு வயதிலிருந்து பெரிய காரியங்கள்
செய்யவேண்டுமென்று நினைப்பதுண்டு
பெரிய காரியங்கள் எதுவென்று தீர்மானிப்பதற்குள்
ஆண்டுகள் ஓடின பல
தீர்மானித்த காரியங்கள் பெரிய காரியங்களாக
இருந்ததால்
நிறைவேற்றுவது எப்படியென்று யோசித்தேன்
இன்னும் சில ஆண்டுகள் ஓடின
காரியத்தை நினைத்துக்கொண்டு
காரியம் சித்தியாவதற்குள் வயதும் ஓடின
இனி ஓடி ஆடி எதுவும் செய்யமுடியாது என்றும் பட்டது
பெரிய காரியங்களைச் செய்த துணிந்ததால்
தடைகளும் கூடி வருகின்றன
பெரிய காரியம் ஒன்றும் வேண்டாமென்ற நிலைக்குத்
தள்ளப்பட்டேன்
இப்போதோ சிறிய காரியங்களே போதும்
அதுவே பெரிய காரியங்களாகப் பயமுறுத்துகின்றன
சுதந்திரத் தினத்தை முன்னிட்டு முன்பதிவுத் திட்டம்
வித்யா சுப்ரமணியம் அவர்களின் üஉப்புக்கணக்குý என்ற நாவல் நம் நாடு சுதந்திரம் அடையும் தறுவாயில் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தை பின்னணியாகக் கொண்ட சரித்திரம் கலந்த சமூக நாவல். விருட்சம் வெளியீடாக திரும்பவும் வெளிவந்துள்ளது. 340 பக்கங்கள் கொண்ட இந் நாவலின் விலை ரூ.300.
கிட்டத்தட்ட 100 நாவல்களும் 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதி உள்ளார் வித்யா சுப்ரமணியம். உப்பு சத்தியாக்கிரகத்தை அடிப்டியாக வைத்து எழுதப்பட்ட üஉப்புக்கணக்குý என்ற நாவல் வாசிப்பதற்கு புதிய அனுபவத்தை ஏற்படுத்தும்.
சுதந்திரத் தினத்தில் இப்புத்தகம் வெளியாக உள்ளது. முன்பதிவு திட்டத்தில் சலுகை விலையாக ரூ.200க்குத் தர உத்தேசித்துள்ளேன்.
ஆகஸ்ட் 15 தேதிக்குள் பதிவு செய்பவர்கள் கீழ்க்கண்ட விருட்சம் கணக்கில் ரூ.200-ஐ முன்பணமாகச் செலுத்திப் புத்தகத்தை வாங்குவதற்கு ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
அழகான குடும்பக்கதையில் மிக லாவகமாக சுதந்திரப் போராட்டத்û8த நுழைத்து இறுதி வரை குடும்பத்தையும் சுதந்திரப் போராட்டத்தையும் இரு தண்டவாளங்கள் போல் கொண்டு சென்றிருக்கிறார் இந் நாவலில்.
கீழ்க்கண்ட கணக்கில் பணம் செலுத்தி முன்பதிவுத் திட்டத்திற்கு ஆதரவு தர கோருகிறேன்.
NAVINA VIRUTCHAM ACCOUNT
INDIAN BANK,
ASHOKNAGAR BRANCH
ACCOUNT No. 462584636
IDIB Number. IDIB000A031
CONTACT : AZHAGIYASINGAR – 9444113205
நீங்களும் படிக்கலாம் – 44
முகநூல் மூலம் வெளிவந்த புத்தகங்கள்…
டாக்டர் ஜெ பாஸ்கரின் ‘அது ஒரு கனாக் காலம்,’ என்ற புத்தகத்தை முழுவதும் படித்துவிட்டேன். படித்துக் கொண்டிருக்கும்போது இது சம்பந்தமான வேறு சில புத்தகங்களையும் படிக்க வேண்டுமென்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. கடந்த சில ஆண்டுகளாக எனக்கு எழுத்தாள நண்பர்களின் பல புத்தகங்கள் படிக்கக் கிடைக்கின்றன. ஆனால் என்னுடைய நல்ல பழக்கம் அந்தப் புத்தகங்களை உடனே படிப்பதில்லை. அது தவறு என்று எனக்குத் தோன்றுகிறது. ஏன்? உண்மையில் இந்தக் கேள்வியை பாஸ்கரன் புத்தகம்தான் என்னைக் கேட்டது.
இந்தப் புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டதும் சில மாதங்களுக்குமுன் ‘யானை பார்த்த சிறுவன்,’ என்ற புத்தகத்தைப் படிக்கக் கொடுத்த சுந்தரபுத்தன் புத்தகம் ஞாபகத்திற்கு வந்தது. மேலும் மாதவ பூவராக மூர்த்தியின், ‘இடம், பொருள், மனிதர்கள்,’ என்ற புத்தகம் ஒன்றையும் இங்குக் குறிப்பிட விரும்புகிறேன். ஏன் என்னுடைய புத்தகமான ‘திறந்த புத்தகத்தை’ப் பற்றியும் சொல்ல விரும்புகிறேன்.
டாக்டரின் புத்தகத்துடன் ஏன் இந்த மூன்று புத்தகங்களையும் தொடர்புகொள்ள விரும்புகிறேன் என்பதற்குக் காரணம் இருக்கிறது. மூன்று புத்தகங்களும் முகநூலிற்குக் கடமைப்பட்டிருக்கின்றன. டாக்டர் புத்தகமான அது ஒரு கனாக் காலம் தொடராக லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகையில் வெளிவந்திருந்தாலும், அவற்றில் வெளியான சில கட்டுரைகள் முகநூலில் வராமல் இல்லை. முகநூலில் ஆர்வமுள்ளவர் டாக்டர், சுந்தரபுத்தன், மாதவ பூவராக மூர்த்தி, ஏன் நான் கூட.
சரி இந்த நான்குப் புத்தகங்களுக்கும் உள்ள பொதுவான தன்மை என்ன? எல்லாம் தன்னைப் பற்றிய வரலாறு. இந்த வரலாறு தினம் தினம் முகநூலில் வெளியிடப்படுகிற வரலாறு. டாக்டர் இதுவரை இரண்டு கட்டுரைத் தொகுப்புகள் கொண்டு வந்திருக்கிறார். ஒன்று அப்பாவின் டைப்ரைட்டர். இன்னொன்று ‘அது ஒரு கனாக் காலம் ‘.
இந்த நான்குப் புத்தகங்களும் ஒவ்வொருவருடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக வெளிப்படுகின்றன.
இந்த நான்குப் புத்தகங்களிலும் ஒரு ஒற்றுமை. தன்னைச் சொல்வதுதான் அது. தன் மூலம் பிறரைப் பற்றி சொல்வது குறைவாக இருக்கிறது.
‘அது ஒரு கனாக்காலம்’ புத்தகத்தில் அவர் வாழ்ந்த கடந்த கால வாழ்க்கை இப்போது காணாமல் போய்விட்டதை எண்ணி துக்கப் படுவதுபோல் இருக்கிறது.
கடந்தகால வாழ்க்கையைப் பற்றி சொல்வதைத் துல்லியமாக விவரிக்கிறார். இந்த விவரணை எனக்கு சந்று ஆச்சரியமாக இருக்கிறது. அவர் இப்போது பார்க்கும் அகஸ்தியர் கோயிலையும் முன்பு பார்த்த அகஸ்தியர் கோயிலையும் நேரில் பார்க்கிற உணர்வோடு விவரிக்கிறார். அம்மாவைப் பற்றி, தாத்தாவைப் பற்றி எல்லாம் ஒரு புகைப்படக் கலைஞர் போல் விவரிக்கிறார்.
கடந்தகாலத்தை மனதில் பதிய வைத்துக்கொள்வதை நான் முக்கியமான ஒன்றாக நினைக்கிறேன். பலருக்குக் கடந்தகாலம் மறந்து விடும். ஏன் நானே ஒரு உதாரணம். எனக்குக் கடந்தகாலம் மறந்து போய்க்கொண்டே இருக்கும். ஒரு புத்தகம் பத்தாண்டுகளுக்கு முன் படித்திருந்தால் அது மறந்து போயிருக்கும். அதே போல் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களும். மானசரோவர் என்ற அசோகமித்திரன் நாவலை மூன்றாவது முறையாக இப்போது படித்து மனதில் ஆழமாகப் பதித்து வைத்திருக்கிறேன். இதோ கொஞ்சம் கொஞ்சமாக மறக்க ஆரம்பிக்கும்.
üகார்லஸ் காஸ்டினேடாýவின் ‘ஆக்டிவ் சைட் ஆப் இன்பினிடி’ என்ற புத்தகம். அந்தப் புத்தகத்தில் காஸ்டினேடாவைப் பார்த்து டான் ஜ÷வான் என்பவர் நடத்தும் உரையாடலில், பழைய முக்கியமான நிகழ்ச்சிகளை ஞாபகப்படுத்தி நம் மூளையில் சட்டம் போட்டுப் பாதுகாத்து வைக்கச் சொல்கிறார். நாம் வாழ்க்கையில் நாம் எத்தனையோவற்றை கடந்து வந்திருப்போம். அவற்றையெல்லாம் ஞாபக அடுக்குகளாக சட்டம் போட்டு பாதுகாத்து வைக்க வேண்டும். வேண்டும்போது எடுத்துப் பார்க்க வேண்டும். அதில் தென்படும் தவறுகளைத் திருத்திக் கொள்ளவேண்டும். இதைத்தான் பாஸ்கரன் புத்தகத்தில் நான் பார்ப்பதாகத் தோன்றுகிறது.
முகநூலில் எழுதும் யாவருமே கடந்த கால நிகழ்ச்சிகளைத்தான் எழுதுகிறோம் ஆனால் எப்போதோ எந்தக் காலத்திலோ நடந்த நிகழ்ச்சிகளை எழுதுவதில்லை.
என்னுடைய திறந்த புத்தகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியை அல்லது ஒரு வாரம் அல்லது ஒரு வருடம் முன் நடந்த நிகழ்ச்சியைத்தான் எழுதகிறேன். 20 ஆண்டுகளுக்கு முன் நான் பழகிய எழுத்தாளரைப் பற்றி எழுதுவதாக இருந்தால், என்ன அவரிடம் முக்கியமாகப் பேசினேன் என்பது ஞாபகத்தில் எனக்கு இருக்காது. அவரைப் பற்றிய நிகழ்ச்சியை மட்டும் எழுதி இருப்பேன். ஆனால் டாக்டர் அவருடைய புத்தகத்தில் எல்லா நினைவுகளையும் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு, அசாத்தியமாக எழுதி இருக்கிறார்.
முகநூலில் எழுதுவது என்பது நாமே நமக்கு ஆசிரியராக இருந்து செயல்பட வேண்டிய ஒன்று. சாதாரண நிகழ்ச்சியிலிருந்து அசாதாரண நிகழ்ச்சி வரை எதை வேண்டுமானாலும் முகநூலில் எழுதலாம். முக்கியமில்லாத சாதாரண நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு அதிகம் கிடைக்கிறது என்பதற்காக முகநூலில் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பது அவசியமில்லை. முகநூலில் எழுதும் யாராக இருந்தாலும் இதை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும்.
டாக்டரின் இந்தப் புத்தகத்தில் ஒளிவு மறைவு இல்லாத தன்மை வெளிப்படுகிறது. ‘சரணம் ஐயப்பா’ என்ற தலைப்பில் எப்படி ஐயப்பன் மீது பக்தி ஏற்பட்டது என்று எழுதி இருக்கிறார். என்னுடைய திறந்த புத்தகத்தில் நான் எந்த சாமியை வணங்குவேன் என்று வெளிப்படையாக எழுதவில்லை. ஆனால் பாஸ்கரனுக்கு அந்தத் துணிச்சல் இருக்கிறது.
சிவாஜியை சந்தித்த நிகழ்ச்சியைப் பற்றி எழுதியிருக்கிறார். லண்டன் அனுபவத்தைப் பற்றியும். சிதம்பரம், சென்னை என்று அந்தந்த ஊர்களை விவரிக்கிறார். எல்லா எழுத்துக்களிலும் ஒருவித நெகிழ்ச்சித் தன்மை. இது இயல்பாகவே அவரிடமிருந்து வெளிப்படுகிறது.
அவர் அம்மாவை மனதில் ஆழமாகப் பதித்திருக்கிறார். இப்படி மனதில் பட்டதை எழுதுவதற்கு இந்த முகநூல் ஒரு வரப்பிரசாதம்.
அது ஒரு கனாக் காலம் – கட்டுரைகள் – டாக்டர் ஜெ பாஸ்கரன் – மொத்தப் பக்கங்கள் : 130 – விலை : ரூ. 100 – மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் : 1447, 7 தணிகாசலம் சாலை, தியாகராயநகர், சென்னை 600 017
தினமணியில்……….
என் ஒன்றுவிட்ட சகோதரர் ஸ்ரீதர்-சாமா எழுதிய மொத்த சிறுகதைகளையும் ‘வழங்க வளரும் நேயங்கள்’ என்ற தலைப்பில் ஒரு சிறுகதைத் தொகுப்பு விருட்சம் வெளியீடாகக் கொண்டு வந்துள்ளேன். 161 பக்கங்கள் கொண்ட இத் தொகுப்பின் விலை ரூ.120. இன்றைய தினமணி இதழில் இத் தொகுப்பைப் பற்றிய சிறிய விமர்சனம் வந்துள்ளது. அதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். தினமணி இதழுக்கு என் நன்றி உரித்தாகும்.
வழங்க வளரும் நேயங்கள் – ஸ்ரீதர்-சாமா; பக்.161; ரூ.120, விருட்சம் வெளியீடு, சீத்தாலட்சுமி அபார்ட் மெண்ட்ஸ் , 7, ராகவன் காலனி, மேற்கு மாம்பலம், சென்னை – 600033.
தமிழ் இலக்கியத்தில் சிறு கதை என்பது சமூகத்தின் நிலையை சுருக்கமாக விளக் கும் தனி இலக்கியமாகவே இருந்துவருகிறது. இந்நூலாசிரியர் சமூகத்தின் நிலையை கண்ணாடி போல பிரதிபலிக்க தமது சிறுகதைகளைப் பயன்படுத்தியுள்ளார்.
நூலில் இடம் பெற்றுள்ள அனைத்துகதைகளும் யதார்த்தமான வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்றன. கதைக்களங்களில் நம்மை நிறுத்தி வைக் கின்றன. நுனிப்புல் மேயும் எழுத்தாளர்களையும், சடங் குகளாக நடைபெறும் பாராட்டு நிகழ்வுகளையும் தமது முதல் கதையில் தத்ரூபமாக படம்பிடித்துக் காட்டும் நூலாசிரியர், ‘வாக்கு’ எனும் கதையில் அம்மாவின் அர வணைப்புக்கு ஏங்கும் தேவியின் மூலம் இன்றைய சமூ கத்தின் பெரும்பான்மையான வளரிளம் பெண்களின் வாழ்க்கையைப் படம்பிடித்துள்ளார். ஆயிரங்காலத்து பயிரான திருமண பந்தத்தின் பின்னால் இருக்கும் துன்பங்களை தெள்ளத்தெளிவாக விளக்குகிறது அந்தகதை.
அதேபோல தொகுப்பில் உள்ள 11 கதைகளும் சமூக சூழலால் மனித நேயம் பாதிக்கப்படுவதையும், தனிமனித வாழ்வில் வெளிச்சமும், இருட்டும் சமமாக இருப்பதையும் நூலா:காட்டும் காலக்கண்ணாடிகளாகவே உள்ளன.
| ‘தொட்டில் பழக்கம் மரப்பெட்டி மட்டும்’ என்ற கதை கடைக்காரர், நுகர்வோர் இருவரையும் சமமான தராசுத்தட்டில் வைத்து எடைபோடுவதாகவும், மிகநுட்ப மான நகைச்சுவை உணர்வுடன் எழுதப்பட்டதாகவும் இருக்கிறது.
வழக்கத்தில் இருந்து மறைந்த சில சொற்கள், மீண்டும் படித்தாலே புரியும்படியான சில சொற்றொடர்கள் என சிலவற்றை மறந்து நாம் இந்த தொகுப்பைப் படித்தால் புதிய அனுபவங்களைப் பெறுவது உறுதி.
பத்து கேள்விகள் பத்து பதில்கள் …..18
ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி பேட்டி அளிக்கிறார்.
இந்தத் தலைப்பில் இதுவரை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தியையும் சேர்த்து மொத்தம் 18 படைப்பாளிகளைப் பேட்டி எடுத்துள்ளேன். எல்லாம் எளிமையான கேள்விகள் எளிமையான பதில்கள். இன்னும் பலரை பேட்டி எடுக்க சித்தமாக உள்ளேன்.
ஒரே ஒரு கேள்விதான் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டேன். அதற்கே அவர் நீண்ட பதிலை அளித்துள்ளார். புதுக்கோட்டையில் பல்லாயிரகணக்கான புத்தகங்களை வைத்து நூல்நிலையம் ஒன்றை பல ஆண்டுகளாக திறமையாக நடத்தி வருகிறார். அவர் அனுபவத்தைக் கேட்டு ரசிப்போம்.