இன்று தினமலரில் நான் எழுதிய புத்தகமான üபிரமிளும் விசிறி சாமியாரும்ý புத்தகத்திற்கான விமர்சனம் வந்தது. மகிழ்ச்சியாக இருந்தது. நான் விசிறி சாமியாரைச் சந்தித்தது ஒரு தற்செயலான விஷயம். அதற்குமுன் சாமியார்களைச் சந்தித்தது இல்லை. உண்மையில் எனக்கு சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. யாரையும் தேடி சந்திக்க வேண்டுமென்றும் தோன்றியதுமில்லை.
ஆனால் பிரமிள் ஒரு சாமியார் பைத்தியம். அவருடன் நட்பு ஏற்பட்டபோது எனக்கு சாமியார் பற்றிய கவனம் ஏற்பட்டது. எங்கள் அலுவலகம் ஒட்டி இருந்த பீச் ரயில்வே ஸ்டேஷனலில் ஒரு பெண் சாமியார் இருக்கிறார் என்று பிரமிள் சொன்னார். எனக்கு ஆச்சரியம். அந்தப் பெண் சாமியாரையும் அவர் ஒருநாள் சுட்டிக் காட்டினார்.
தினமும் அலுவலகம் போகும்போதும் வரும்போதும் அந்தச் சாமியாரைப் பார்ப்பேன். அவர் ஒரு பிச்சைக்காரியாக எனக்குத் தென்பட்டார். பர்மா பஜார் கடை வாசலைப் பெறுக்குவார்.
“அவர் பிச்சைக்காரி இல்லை. சாமியார் என்றார் பிரமிள்.”
உண்மையில் அந்தப் பெண்மணி கை நீட்டி யாரிடமும் பணம் வாங்கவில்லை. யாராவது பெறுக்குவதைப் பார்த்து காசு கொடுத்தால் வாங்கிக்கொள்வார். பின் சுரங்கப் பாதையில் அவர் இருப்பிடத்தை வைத்துக்கொண்டார். அவர் ஒரு வடநாட்டைச் சார்ந்தவர். பின் ஒருநாள் அந்தப் பெண் காணாமல் போய்விட்டார்.
விசிறி சாமியாரைப் பார்க்க இப்படித்தான் ஒரு முறை பிரமிள் அழைத்துப் போனார். விசிறி சாமியாரை நெருக்கமாகப் பார்த்த அனுபவத்தை எழுதியிருந்தேன். அதன்பின் அதுமாதிரியான நெருக்கத்தில் விசிறி சாமியாரைப் பார்க்க முடியவில்லை. இன்னும் பிரமிள் எனக்கு அறிமுகப்படுத்தியது சாய்பாபா கோயில். அதேபோல் அடிக்கடி கீரின்வேஸில் உள்ள ஜே கிருஷ்ணமுர்த்தி இடத்தில் பிரமிளைச் சந்திப்பேன்.
இன்றைய தினமலரில் வெளிவந்த என் புத்தக விமர்சனத்தில் எல்லாம் சரியாக எழுதியிருந்தார். இதை விமர்சனம் செய்திருப்பவர் பின்னலூரான். ஆனால் புத்தகம் எங்கும் கிடைக்கும் என்ற விபரத்தில் தொலைபேசி எண் குறிப்பிடப்படவில்லை. முகவரியும் சரியாகக் கொடுக்கவில்லை.
இதை சரியாகக் கொடுத்திருந்தால் சில பிரதிகள் இந்தப் புத்தகம் விற்றிருக்கும். அதுதான் எனக்கு அதிர்ஷ்டமில்லை என்று குறிப்பிட்டேன்.
ஒரு நாள் திடீரென்று ஆந்திரா வங்கியில் பணி புரிந்துகொண்டிருந்த ஆர் கே ராமனாதன் என்கிற நண்பருக்கு போன் செய்தேன். ஒரு குறும்படத்தில் நடிக்க வேண்டும் என்றேன்.
அவர் ஒரு நாடக நடிகர். திறமையாக நடிப்பாற்றலை வெளிப்படுத்துபவர். என்னுடைய வசனமே பேசாத குறும்படத்தில் திறமையாக நடித்துக் கொடுத்துள்ளார்.
நான் பழைய சோனி காமெராவில் இந்தப் படத்தைத் தயாரித்தேன். 20 நிமிடங்கள்வரை இந்தப் படம் வரும்.
மேலும் இந்தப் படத்திற்கு மெருகேற்ற வேண்டுமென்று தோன்றியபோது நண்பர் கிருபானந்தனிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டேன். அவர் அதற்கு இசையைச் சேர்த்து, யார் எடுத்தது, யார் நடித்தது என்றெல்லாம் சேர்த்து விட்டார். இதே அந்தப் படம். பார்த்துவிட்டு உங்கள் கருத்தைக் கூறுங்கள்.
நடித்துக் கொடுத்த ஆர் கேவிற்கு நன்றி. கிருபானந்தனுக்கு நன்றி.
தலைப்பு : வண்ணதாசனும் நானும்
சிறப்புரை : தேவகோட்டை வா மூர்த்தி
இடம் : ஸ்ரீராம் குரூப் அலுவலகம்
மூகாம்பிகை வளாகம்
சி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே
ஆறாவது தளம்
மயிலாப்பூர்
சென்னை 600 004
தேதி 20.07.2019 (சனிக்கிழமை)
நேரம் மாலை 6.00 மணிக்கு
பேசுவோர் குறிப்பு : நாவலாசிரியர், சிறுகதை ஆசிரியர், கட்டுரையாளர்.
எவ்விதமதனைப் பயன் படுத்துவதென்ற பெருங்குழப்பத்தால்
சிரம் வெடித்துச்சிதற
கழுத்தின் மேல் அமர்ந்திருக்கிறது அப்புராதனக்குடுவை
சற்றே சிதிலமடைந்து.
நன்றி : மாயப்பட்சி – பா ராஜா – மணல்வீடு, ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல். மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம் – தொலைபேசி : 0989460571 பக்கங்கள் : 64 – விலை : ரூ.60
1990ஆம் ஆண்டு விருட்சம் இதழிற்கு கரிச்சான்குஞ்சு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். இலக்கிய நண்பர் சுவாமிநாதன் என்னை கரிச்சான்குஞ்சுவின் வீட்டிற்கு அழைத்துப் போனார். நான் அவரிடம் விருட்சம் இதழ் கொடுத்துவிட்டு அவருடன் பேசிக்கொண்டிருந்து விட்டு வந்தேன்.
தற்செயலாக 8வது இதழ் விருட்சம் பார்க்கும்போது கரிச்சான் குஞ்சு விருட்சத்திற்கு எழுதிய கண்ணில் பட்டது. 1990ஆம் ஆண்டு ஏப்ரல் - ஜøன் இதழில் எழுதி உள்ளார். அதை அப்படியே இங்கு தர விரும்புகிறேன்.
"இளைய தலைமுறையின் விழிப்புக்கும் திறமைக்கும் தங்களை வெளியீட்டுக் கொள்ளம் ஆர்வத்திற்கும் எடுத்துக்காட்டாகும் üவிருட்சம்ý இதழ்களை என்னைத் தேடி வந்து கொடுத்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியுடன் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன். ஆழமாகச் சிந்திக்கவும், தெளிவாகக் கருத்துக்களை வெளியிடவும் பயிலுங்கள். பத்திரிகை உலகம் எங்கோ திசை மாறிச் செல்லும் பொல்லாத காலம் இது. இந்த ஈர்ப்புகளிலிருந்து விடுபட்டுத் தனித்து நிற்பதே ஒரு பெருமை தரும் விஷயம்."
கரிச்சான்குஞ்சுவின் பசித்த மானுடன் பிரசித்தமான நாவல். அப்போது வாங்கியது. அதை இப்போது இரண்டாவது முறையாக வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன்.
நான் ஒரு சில எழுத்தாளர்களுக்குத்தான் இரங்கல் கூட்டம் நடத்தியிருக்கிறேன். அதில் ஒன்று கரிச்சான் குஞ்சுவின் இரங்கல் கூட்டம். அக் கூட்டத்தில் பெரும்பாலோர் üகரிச்சான் குஞ்சுவிற்கு கொடுக்கவேண்டிய ராயல்டியைக் கொடுக்கவில்லை என்று பேசினார்கள்.
இந்த முறை இரண்டு கவிதை நூல்களுக்குப் பரிசு கிடைத்துள்ளது. ‘ஸ்பாரோ’ இலக்கிய விருது 2019, யுவன் சந்திரசேகருக்குக் கிடைத்துள்ளது. கவிதை வகைமைக்காக. சாகித்திய யுவபுரஸ்கார் விருது சபரிநாதனுக்கு வால் என்ற கவிதைத் தொகுதிக்குக் கிடைத்திருக்கிறது. வாழ்த்துகள்.
இதைத் தவிர ஆத்மாநாம் பெயரில் ஆண்டுக்கு ஒரு கவிதைத்தொகுதிக்குப் பரிசு வழங்குகிறார் சீனிவாசன். தனியாக ஆத்மாநாம் அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி உள்ளார். கவிதை நூலிற்குப் பரிசு கிடைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த வீருதெல்லாம் ஒவ்வொரு ஆண்டும் கவிதை நூலிற்கும் மட்டும் கிடைத்தால் நன்றாக இருக்கும். ஏனென்றால் அந்த அளவிற்கு கவிதை நூல்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஓராண்டில் அதிகமாக பிரசுரமாவதில் கவிதை நூல்கள் முதலிடம் பெறும் என்று நினைக்கிறேன்.
ஆனால் ஒரு கவிதை நூலை விற்பது என்பது பூஜ்யம்தான். தெரிந்தவர்களிடம், உறவினர்களிடம்தான் கவிதை நூல்களை விற்க வேண்டும். அல்லது தள்ள வேண்டும். அதனால் சில பதிப்பாளர்கள் கவிதை நூல்களை வெளியிடுவதில்லை.
நன்றி : நகுலனின் வளர்ப்புப் பூனை – ஜெம்சித் ஸமான் – மணல்வீடு, ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல். மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம் – பக்கங்கள் : 88 – விலை : ரூ.70
க.நா.சு ஒரு பொருளைக் கொடுத்துப் பேசச் சொன்னால் எந்த முன் தயாரிப்புமில்லாமல் பேசத் தொடங்கி விடுவார். இலக்கியத்தின் கட்டடக் கலை என்பதைப் பற்றி ஒரு முறை உரை ஆற்றினார். எந்தவிதத் தயாரிப்புமின்றி, ஞாபகத்திலிருந்து.
ஆனால் பெரும்பாலான எழுதத் தெரிந்தவர்களெல்லோரும் பேசத் தெரியாதவர்கள். எழுத்தாளர் சுஜாதாவிற்கு மேடைப் பேச்சு சரியாக வராது. ஆனால் அவர் கட்டுரை மாதிரி தயாரித்துப் படித்து விடுவார்.
அந்தக் காலத்தில் நகுலன் மேடையில் அமர்ந்து இருக்கும்போது கூனிக் குறுகி அமர்ந்திருப்பார். ஏன்டா மேடையில் உட்கார்ந்திருக்கிறோம் என்று அவருக்குத் தோன்றும். நகுலன் மணிக்கணக்கில் பேசுவார். ஆனால் அவர் எதிரில் உள்ள ஒருவருடன்தான் பேசுவார். பக்கத்தில் இருப்பவர்களுக்குக் கூட அவர் என்ன பேசுகிறார் என்பது புரியாது. ஆனால் பல விஷயங்களைக் குறித்து அலுக்காமல் பேசுவார்.
என்னுடைய இலக்கியச் சந்திப்புக் கூட்டங்களில் பல எழுத்தாளர்கள் பேசியிருக்கிறார்கள். ஒருமுறை சாகித்திய அக்காதெமி விருதுபெற்ற அசோகமித்திரனுக்கு ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்ரீனிவாசா காந்தி நிலையத்தில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தேன். அவரைப் பற்றி ஒரு கட்டுரை எழுதி வாசிக்க வைத்திருந்தேன். என்னைத் தவிர அந்தக் கூட்டத்தில் சா கந்தசாமி பேச அமர்ந்திருந்தார். ஆனால் கூட்டம் நடந்து ஒரு மணி நேரம் கூட இல்லாமல் சீக்கிரமாக முடிந்து விட்டது. கூட்டத்தை ஏற்பாடு செய்த எனக்குப் பெரிய ஏமாற்றமாக இருந்தது. நான் கட்டுரையைச் சுருக்கமாக எழுதி விட்டேன்.
இன்னும் கூட எனக்குக் கூட்டத்தில் யாராவது ஒரு மணி நேரம் பேசுகிறார்கள் என்றால் ஆச்சரியமாக இருக்கும். அவர்கள் என்னதான் பேசுகிறார்கள் என்பதைக் கவனித்துக்கொண்டே இருப்பேன். பெரும்பாலும் உப்புசப்பில்லாத விஷயமே பேசுவார்கள்.
சமீபத்தில் ஒரு இலக்கியக் கூட்டத்தில் பேசிய எழுத்தாளர் எந்தப் புத்தகத்தைப் பற்றி பேச வேண்டுமோ அந்தப் புத்தகத்தைப் படிக்காமல் பேசினார். கில்லாடித்தனமாகப் பேசினார். புத்தகம் படிக்காமலயே அதைப் பற்றி ஒரு மணி நேரம் பேசினார். எவ்வளவு சாமார்த்தியம் வேண்டும். ஆனால் கேட்பவர்கள் புத்திசாலிகள் கவனித்து விடுவார்கள்.
மேடையில் பேசுவதைப் பற்றி என் மூத்த இலக்கிய நண்பர்கள் பலவித அறிவுரை கூறுவார்கள். எதிரில் யாரும் உட்கார்ந்திருக்கவில்லை என்று நினைத்துக்கொள்ள வேண்டுமென்று. அப்போதுதான் பேச வரும் என்று ஞானக்கூத்தன் கூறுவார். அவர் திறமையாகப் பேசக் கூடியவர். மேடைப் பேச்சுக்கு உதாரணமாக அவரைச் சொல்லலாம்.
இன்னொரு எழுத்தாளர் அசோகமித்திரன் ஒரு துண்டு காகிதத்தில் குறிப்புகளை எழுதி வைத்திருப்பார். அந்தக் குறிப்புகளை வைத்துக்கொண்டு திறமையாகப் பேசிவிடுவார்.
ஞானக்கூத்தனோ பேச்சில் தீவிரத்தன்மை உடையவர். அசோகமித்திரனோ அதற்கு எதிர். அவர் பேச ஆரம்பிக்கும்போதே கேட்பவர்களுக்குச் சிரிப்பு வந்துவிடும்.
என் நேர்பக்கம் புத்தக வெளியீட்டு விழாவில் அசோகமித்திரன் பேச ஆரம்பித்தார். புத்தகத்தில் முதல் கட்டுரை சி சு செல்லப்பாவைப் பற்றி இருந்தது. சி சு செல்லப்பாவை வைத்து ஒரு ஜோக் அடித்தார். கேட்டவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
மேடையில் எழுதி வாசிப்பது என்பது சரியாக வராது. அதை நான் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் பேச்சு அனுபவமில்லாததால் எழுதித்தான் வாசிக்க வேண்டி உள்ளது. அப்படிப் படிக்கும்போது மெதுவாக பார்வையாளர்களை அடிக்கடி பார்த்துப் பார்த்துப் படிக்க வேண்டும். ஒருமுறை வல்லிக்கண்ணனைப் பேச அழைத்தேன். அவர் தமிழ் நாவல்களைப் பற்றி பேசினார். அவர் படித்த நாவல்களைப் பற்றி கடகடவென்று ஒப்பித்தார். ஒரு பேச்சாளர் கையில் காùஸட் ரெக்கார்டரை வைத்திருந்தார். பேசுவதற்கு முன் காùஸட் ரெக்கார்டரை ஆன் செய்தார். இதோ நானும் பேசுகிறேன். இந்த ரெக்கார்ட் ப்ளேயரும் பேசுகிறது என்று ஆரம்பித்தார் பேச.
பேசுபவருக்கு ஞாபகமறதி இருக்கக் கூடாது. எதாவது ஒரு கவிதையோ குட்டி கதையோ சொல்லிக் கூட்டத்தை நடத்தி விடலாம். ஞாபகமறதி உள்ளவர்கள் பேசும்போது தாளில் எழுதி வைத்துப் பேசுவது சிறப்பானது. பேச்சு என்பது நடிக்க வேண்டும். பேசும்போதே நடிக்க வேண்டும். சிலரால்தான் அது முடியும். வந்து வந்து என்று பேசும்போது பேசுவது பெரிய உபயோகமாக இருக்கும். எதாவது பேசும்போது தயக்கம் வந்தால் ஒரு வந்தை போட்டுப் பேசி விடலாம்.
சமீபத்தில் நான் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகச் சென்றேன். கூட்டத்தை ஏற்பாடு செய்தவர் என்னை கூட்டத்தை ஆரம்பித்து விடுங்கள் என்று சொல்லி விட்டார். எனக்கு ஒரே திகைப்பு. ஒரு வழியாக சமாளித்தேன்.
பல கூட்டங்கள் அர்த்தமில்லாமல் போகின்றன. சரி கூட்டத்தால் என்ன கிடைக்க வேண்டும். ஒன்றும் கிடைக்க வேண்டாம். ஆனால் போவோம். நண்பர்களை, பிடித்தமானவர்களை சந்திப்பதற்காகப் போவோம்.
19.06.2019 அன்று தக்கர்பாபா வளாகத்தில் உள்ள காந்தி கல்வி நிலையத்தில் சுசிலா நய்யரின் ‘கஸ்தூர்பாபா ஒரு நினைவுத் தொகுப்பு’ (மொழி பெயர்த்தவர் பாவண்ணன்) என்ற மொழிபெயர்ப்பு நூலின் அறிமுக உரை)
கநாசு வை ஒரு இலக்கியக் கூட்டத்தில் பார்த்தேன். கூட்டம் ஒய்எம்சியில் நடந்தது. அரங்கநாதன் புத்தக விமர்சனக் கூட்டம். பாரிமுனையில் அந்தக் கட்டிடம் இருந்தது. அங்கேதான் க நா சுவைப் பார்த்தேன். üüநீங்கள் ஏன் கூட்டம் நடத்தக் கூடாது,ýý என்று கேட்டார். எனக்கு ஆச்சரியம். அப்போது நான் கூட்டம் நடத்துவது பற்றி யோசிக்கவே இல்லை. அவர் சொன்னபிறகு பல மாதங்கள் ஓடி விட்டன. நான் கூட்டம் போடுவதில் நம்பிக்கை இல்லாதவனாக இருந்தேன்.
பின் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. என் நண்பர் சீனிவாசன் அவர் தயாரித்த காயின் பவுடருக்கான விளம்பரம் இந்து நாளிதழில் வெளி வர விரும்பினார். சின்ன விளம்பரம். ஒரு நிகழ்ச்சியைப் பற்றி விளம்பரம் கொடுத்துவிட்டு பின் அவருடைய தயாரிப்பைப் பற்றி விளம்பரம் தர வேண்டும். அந்தச் செலவை அவர் ஏற்றுக்கொண்டு விருட்சம் இலக்கியச் சந்திப்பின் முதல் கூட்டம் ஏற்பாடு செய்தார். தி நகரில் ஒரு பள்ளியில். முதல் கூட்டம் காசியபனை வைத்து நடத்தினேன். அந்த சமயத்தில் க நா சு உயிருடன் இல்லை.
இப்படித்தான் நான் கூட்டத்தை நடத்த ஆரம்பித்தேன். 1988லிருந்து. சில கூட்டங்களுக்கு சீனிவாசன் உதவி செய்தார். பின் உதவி செய்வதை நிறுத்திவிட்டார். அப்போதெல்லாம் ரூ.100 போதும் கூட்டம் நடத்த. ஒரு லேடீஸ் ஹாஸ்டல் மாடியில் திருவல்லிக்கேணியில் கூட்டம் நடந்தது. வாடகை ரூ.50. கார்டு செலவு ரூ.25. டீ, காப்பி வரவழைப்பதற்கு ரூ.25. பேச வருகிற இலக்கியவாதிகளுக்கு பணம் எதுவும் கிடையாது. அவர்களும் எதிர்பார்க்க மாட்டார்கள்.
பல கூட்டங்கள். இரங்கல் கூட்டங்கள். புத்தக வெளியீட்டுக்
கூட்டங்கள். எந்த இலக்கியவாதியும் என் கூட்டத்தில் பேசுவதிலிருந்து தப்பித்ததில்லை. ஒரு முறை என் கவிதைப் புத்தகமான üயாருடனும் இல்லைý என்ற புத்தகத்திற்கு அறிமுகக் கூட்டம் வைத்தேன். தலைமை ஞானக்கூத்தன். என் 4 நண்பர்களை அழைத்தேன். பேசுவதாக சொன்னார்கள். ஆனால் நால்வரும் பேச வரவில்லை. உண்மையில் அவர்கள் ஒப்புக்கொண்டதால்தான் அழைத்தேன். ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு வரவில்லையா என்பது தெரியவில்லை. ஞானக்கூத்தனுக்கு தர்மசங்கடமாக இருந்தது. ஆனால் கூட்டத்திற்கு எப்போதும் வருகிறவர்கள் வந்தார்கள்.
அதுதான் முதல் தடவை ஒருவித சங்கடமான நிலைக்கு நான் ஆளானது. பொதுவாக கூட்டத்திற்கு கலந்துகொள்பவர்கள் வருகிறேன் என்று சொல்லிவிட்டு வர மாட்டார்கள். ஆனால் பேசுபவர்களே வரவில்லை என்றால்? அதுவும் நாலு பேர்களும் வரவில்லை என்றால்? அதில் ஒருவரைத் தவிர மூன்று பேர்களுக்காக எத்தனையோ கூட்டம் நடத்தியிருக்கிறேன்.
பொதுவாக கூட்டம் அதிகமாக வராது. கொஞ்ச பேர்கள்தான் வருவார்கள். கலந்து கொள்ள வருபவர்களுக்காக நான் இரக்கப் படுவேன். அவர்கள் எங்கிருந்தோ வருவார்கள். ஒருமுறை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த ஒருவர் விபத்தில் சிக்கிக்கொண்டு, பல மாதங்கள் அவர் எந்த நிகழ்ச்சிக்கும் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது.
இந்தக் கூட்டம் நடத்துவதால் என்ன பயன் என்று கேட்பவர்கள் உண்டு. ஒரு பயனும் இல்லை. எழுத்தாளர்களைச் சந்திப்பது. புத்தகங்களைப் பற்றி பேசுவதுதான். இந்தக் கூட்டம் நடத்துவதால் அலுக்கவே இல்லையா என்ற கேள்வி என்னைக் கேட்கலாம். அலுக்கவே இல்லை. சரி கூட்டத்திற்கு வருகிறவர்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்க வேண்டும. உண்மையில் நான் நடத்தும் கூட்டத்திற்கு 100 பேர்கள் வந்துவிட்டால் நான் தடுமாறிப் போய்விடுவேன். எப்படி நடத்துவது என்று தெரியாமல் போய்விடும். பத்து பேர்கள் வந்தால் போதும். கேட்பவரும் பேசுபவரும் இருந்தால் போதும். ஆனால் பேசுபவர்கள் அதிகமாக பேர்கள் வர வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள். என்னைப் பொறுத்தவரை கேட்பதற்கு நான், பேசுவதற்கு ஒருவர் இருந்தால் போதும். பெண்கள் பொதுவாக் கூட்டத்திற்கு வர மாட்டார்கள். அவர்கள் கூட்டம் முடிந்து வீட்டிற்குப் போவதற்குள் அதிக தாமதம் ஆகும். என் அலுவலகத்தில் உள்ள பெண்கள் ஐந்து மணி ஆனவுடன் வீட்டிற்கு ஓடுவார்கள். அவ்வளவு வேகமாகப் போய்விடுவார்கள். இலகக்கியக் கூட்டம் என்றால எக்ஸ்டிரா முயற்சி வேண்டும்.
நான் கூட்டம் நடத்தியது பெரும்பாலும் லேடீஸ் ஹாஸ்டல் மாடியில், தெற்கு மாட வீதி, திருவல்லிக்கேணியில் அது இருக்கிறது. ஹாஸ்டலில் தங்கி இருக்கும் ஒரு பெண்மணி மட்டும் வருவார். கூட்டத்திற்கு வருபவர்களின் வயது? எனக்கு அப்போது வயது 35. கூட்டத்திலும் பெரும்பாலும் 35லிரந்து இருப்பார்கள். இப்போது 65. அதனால் கூட்டத்திற்கு வருபவர்களும் 65 வயதிற்கு மேல் இருப்பார்கள்.
நான் மாற்றிக்கொண்டு பந்தநல்லூருக்குப் போனபோது கூட்டம் போட முடியவில்ûல். ரொம்ப நாள் விட்டுப் போய்விட்டது. திரும்பவும் சென்னைக்கு மாற்றிக்கொண்டு வந்தேன். திருவல்லிக்கேணி பிராஞ்சில் பணி.
அசோகமித்திரனுக்கு 82வது வயது கொண்டாட்ட கூட்டம் நடத்த முடிவு செய்தேன். அப்போது கூட்டம் நடத்தியே அதிக ஆண்டுகள் ஆகிவிட்டன. எனக்குப் பெரிய சந்தேகம். கூட்டத்திற்கு வருவார்களா என்று. ஏனென்றால் கூட்டத்தை பாரதியார் இல்லத்தில் வைத்திருந்தேன். எனக்கு நடுக்கம். கூட்டத்திற்கு யாரும் வராமல் இருந்துவிட்டால் என்ன செய்வது? அதனால் பேச வருபவர்களை அதிகப்படுத்தி விட வேண்டுமென்று தோன்றியது. 20 பேர்களுக்கு மேல் பேச அழைத்தேன். நிச்சயமாக கூட்டத்திற்கு 20 பேர்கள் வந்து விடுவார்கள் என்று எனக்குத் தோன்றியது.
உண்மையில் அன்று அதிகமான பேர்கள் வந்தார்கள். கூட்டம் சிறப்பாக நடந்தது. அதை வீடியோ எடுத்தேன். இன்னும் கூட நான் நடத்திய கூட்டத்தில் அது ஒரு சிறப்பான கூட்டம். நான் இதுவரை 200 300 கூட்டங்கள் நடத்தியிருப்பேன். சரி, ஏன் கூட்டம் நடத்துகிறீர்கள் என்ற கேள்வியைக் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்? சும்மாதான் நடத:துகிறேன். க.நா.சு கூட்டம் நடத்தச் சொன்னதால் நடத்துகிறேன்.