அழகியசிங்கர்
யுவால் நொவா ஹராரியின் 'சேப்பியன்ஸ்' பற்றி எழுத்தாளர் சா கந்தசாமி 16.11.2019 அன்று உரை நிகழ்த்தினார். அந்த உரையின் ஒளிப்பதிவை இங்கு பகிர்கிறேன்.
அழகியசிங்கர்
யுவால் நொவா ஹராரியின் 'சேப்பியன்ஸ்' பற்றி எழுத்தாளர் சா கந்தசாமி 16.11.2019 அன்று உரை நிகழ்த்தினார். அந்த உரையின் ஒளிப்பதிவை இங்கு பகிர்கிறேன்.
அழகியசிங்கர்

இன்று காலையில் தினமணி நாளிதழை பார்த்தவுடன் நான் புதிதாகக் கொண்டு வந்த ‘காஞ்சி மகா ஸ்வாமிகளின் உபதேசங்கள்’ என்ற ஸ்ரீதர்-சாமா புத்தகம் மதிப்புரை நூல் அரங்கம் பகுதியில் இடம் பெற்றிருந்தது.
ஆனால் தொலைபேசி எண் 044-24710610. இது நவீன விருட்சம் பெயரில் உள்ள தொலைபேசி எண். நான் அவசரம் அவசரமாக வீட்டிற்கு வந்தவுடன் இந்தப் புத்தகம் குறித்து விசாரணை இருக்குமென்று நினைத்தேன். எதுவுமில்லை. ஏன்எனில் கடந்த 10 நாட்களாக என் வீட்டிலுள்ள போன் சரியில்லை இதற்குப் புகாரும் கொடுத்திருந்தேன். ஏன் பிஎஸ்என்னில் உள்ள முகநூல் நண்பர் மந்திரமூர்த்தியும் எனக்காக புகார் கொடுத்திருந்தார். ஆனால் ஒரு பிரயோஜனுமில்லை. சற்றுமுன் அதாவது மதியம் 2 மணிக்கு மேல் வந்திருந்து போன் மாத்திரம் சரிசெய்துவிட்டு அவசரம் அவசரமாக போய்விட்டார்கள். ஆனால் நெட் சரியில்லை.
பிஎஸ்என்லின் சேவை வருத்தமளிக்கிறது. சீக்கிரமாக எல்லோரும் பிஎஸ்என்லைவிட்டு விருப்ப ஓய்வு போகப் போவதால் இந்தத் தொய்வா என்பது தெரியவில்லை.
ஆனால் தினமணியில் வந்த மதிப்புரைக்குக் குறைந்தது 10பேர்களாவது போன் செய்வார்கள். ஒன்றுமில்லாமல் போய்விட்டது. அதாவது கைக்குக் கிடைத்தது வாய்க்குக் கிடைக்கவில்லை.
தினமணியில் வந்த மதிப்புரை.
காஞ்சி மகா ஸ்வாமிகளின் உபதேசங்கள்
” காஞ்சி மகா பெரியவர் ஒரு நடமாடும் தெய் வம். அவர் திருவாக்கிலி ருந்து வெளிவந்த உபதேச மொழிகள் ஏராளம் என்றாலும், அவற்றி லிருந்து முதன்மையான சில உபதேசங்களையும் நிகழ்வுகளையும் முத்துக் குளிப்பதைப் போல குளித் துத் தேடித் தொகுத்துத் தந்திருக்கிறார் ஸ்ரீதர் சாமா.
நம் பாரத தேசத்தில் இளம் வயது முதலே நம் தேசத்துக்குரிய ஒழுக்கம், பண்பாடு, இறை வணக் கம், ஆத்ம தியானம் என்கிற நல்ல பழக்கம் இல்லா மலிருந்து வருவது குறித்து எடுத்துரைக்கும் மகா பெரியவர், “நெருப்பை வாயாலே ஊதப்படாது என்பதற்குக் கூட சாஸ்திரம் சொல்கிற காரணம், வாயால் ஊதுவதால் எச்சில் காற்று அக்கினி பகவான் மேலே பட்டு அபசாரமாகிவிடும் என்ப தால்தான்” என்கிறார்.
மேலும், ‘சிவ’ என்கிற சொல்லில் (ஆண்பெண் பெயர்களில் உள்ள அக்ஷரங்கள்) உள்ள தத்துவத்தை உணர்த்தும் இடம் அற்புதம்.
“கல்வியின் முதல் பிரயோஜனமான விநயம் ஏற் படவேண்டும். அடக்கம் இல்லாதபடிப்புபடிப்பே ஆகாது. தன்னைத்தானே அடக்கிக் கொள்ளும் படியான நல்ல குணம் முதலில் வரவேண்டும். கல்வியின் பயன் மெய்யான பொருளாகிய ஆண்ட வனைத் தெரிந்து கொள்வதுதான். ஆனால் இந்தக் காலத்தில் படிக்கிறவர்களில் அநேகருக்குத் தெய்வ பக்தியே இருப்பதில்லை. முன்பு நம் மாணவர் களிடம் குருபக்தி இருந்தது. தற்போது அடியோடு போய்விட்டது” என்று கூறுவதுடன், “குருகுலக் கல்வியும், குருபக்தியும்தான் இன்றைய மாணவர் களின் கோளாறைத்தீர்க்கின்ற பெரிய அருமருந்து என்கிறார்.
“தரமான வாழ்க்கை வாழ்வது என்பது மன நிறைவோடு இருப்பதுதான். பூரண சந்தோஷம் பழைய தர்மங்களை நாம் பூரணமாக அநுஷ்டிக்குமாறு நம்மைச் செய்து கொள்ளும் போதுதான் உண்டாகும். மேலும் மேலும் பணம் தருகிற தொழில், மேலும் மேலும் வியாதி தருகிற காரியங் களை விட்டுவிட்டு, நிம்மதியோடு நிறைவோடு அடங்கி வாழ்வதற்கு மனஸார முயற்சி செய்ய வேண்டும்” – இப்படி நூலில் கோடிட்டு வைத்துப் படிக்க வேண்டிய வைர வரிகள் ஏராளம் உள்ளன. திருமணம் மற்றும் பிறந்த நாளில் பரிசளிக்க வேண்டிய அற்புதமான அருள்மொழி நூல் இது.”
அழகியசிங்கர்
பல ஆண்டுகளாக ஒரு கவிதை எழுதுபவர் என்னுடன் நண்பராக இருந்தார். அவருடன் பழகும்போது எனக்கு அவரைப் பற்றி எழுத வேண்டுமென்று தோன்றியது. அவர் ஒரு கவிஞர். கவிதை மட்டுமல்ல சிறுகதை ஆசிரியர் விமர்சகர். ஆனால் அவர் நாவல் எழுத வேண்டுமென்ற முயற்சியில் தோல்வி அடைந்து விட்டார். அவருடைய வாழ்க்கை முறை எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒருவர் எப்படி அதுமாதிரி வாழ்க்கை நடத்த முடியுமென்று தோன்றியது. ஆனால் அவர் வாழ்ந்து காட்டினார். தனக்கு தோன்றியபடி வாழ்ந்தார். திறமை உள்ள ஒருவர்.
புத்தகம் படிப்பார். எழுதுவார் அவ்வளவுதான் அவர் வாழ்க்கை. வறுமையில் அவர் ரொம்பவும் சிரமப்பட்டார். மற்ற எழுத்தாளர்களை அவர் மதித்ததே இல்லை. இப்படிப்பட்ட ஒருவரைப் பற்றி நாவல் எழுதினால் என்ன? இந்தக் கேள்விதான் இந்த நாவல்;. என் நாவல் இப்படித்தான் ஆரம்பித்தது. ஆனால் அதைத் தொடர்ந்து எழுதி முடிக்க முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக நினைத்தபோது எழுதிக் கொண்டிருப்பேன். முடிப்பேன் என்று கூட நினைத்துப் பார்க்கவில்லை.
திடீரென்று இந்த ஆண்டு அந் நாவலை முடிக்க வேண்டுமென்று தோன்றியது. அப்படி முடித்ததுதான் üதனி இதழ் நன்கொடை ரூ.20ý. எந்தத் திட்டமிடாமல் எழுதப்பட்டதுதான் இந் நாவல். இதை ஒவ்வொருவரும் படிக்கவேண்டும். அமேசான் கிண்டலில் இந் நாவல் கிடைக்கும்.
https://www.amazon.in/Thani-IthazhNunkodai-Rs-20-AZHAGIYASINGAR-Chandramouli-ebook/dp/B081LTS17Q/
படித்துறை
காரிகைக் குட்டி

மாலை நேரங்களில் படித்துறை மிக அழகு
நடுவே நிற்கும் குளக்கோபுரம் மீது படரும்
வெயில் மோதிக் கோபுர நிழல்
நீரில் விழுகிற போது
மீன்கள் நீரினுள் சலசலத்து நீந்திச் சென்று
படர்ந்த படித்துறைப் பாசிகளைத் திண்ண
செதில்களை அசைத்து அசைத்து
என் முகம் காண வந்தது போல
ஒரு பாவனை.
குளித்துக் கரையேறிய ஒருவர் வழுக்கி
மீண்டும் குளத்தில் விழுந்த போது அடிவயிற்றில் குபீரென்றச் சிரிப்பு வெடித்துக் கொண்டு எழும்
மதிலின் மீது வளரத் தொடங்கும் அரசமரச் செடி
உச்சி கோபுரத்தில் வந்தமரும் ‘
குனுகுனு”க்கும் மயில்நிறப் புறா
மெல்லப் படரும் இருள், குளிரும் காற்று
சிலுசிலுக்க வைக்கும் ஒரு நொடி
நன்றி : யாரோ ஒருவன் – காரிகைக் குட்டி – பக்கம் : 120 – விலை ரு: 100 – வெளியீடு : இனிய நந்தவனம் பதிப்பகம், 17 பாயக்காரத்தெரு, உறையூர், திருச்சி – 620 003 – தொ. பேசி : 9443284823
அழகியசிங்கர்

கடந்த சில தினங்களாக ஒரு தீபாவளி மலரைத் தேடிக் கொண்டிருக்கிறேன். அது ஆனந்தவிகடன் தீபாவளி மலர். அதில் நகுலன் சிறுகதை இருந்தது. காவ்யா ஷண்முகசுந்தரத்திற்குக்கூட அந்தக் கதையைப் பிரதி எடுத்து நகுலன் சிறுகதைகளுடன் சேர்க்க அனுப்பியிருந்தேன். அந்தத் தீபாவளி மலரை என் நண்பர் கொடுத்திருந்தார். அது இப்போது காணும்.
நகுலன் சிறுகதையை வாங்கிப் பிரசுரம் செய்திருக்கிறார்களே என்று நினைத்தேன். ஒவ்வொரு தீபாவளி மலரிலும் நான் முதலில் விரும்பிப் படிப்பது தலையங்கள்.
2019ல் வெளிவந்த அமுதசுரபி தீபாவளி மலரில் எனக்குப் பிடித்த தலையங்கத்தின் ஒரு பகுதி :
‘உயர்ந்த ஆன்மிகவாதியின் மனத்தில் பிறமத விரோதம் கடுகளவும் இராது. அப்படிப்பட்ட மிக உயர்ந்த ஆன்மிகவாதியாய்த் திகழ்ந்ததால் தான் நம் தேசப்பிதாவால் üரகுபதி-ராகவ ராஜாராம்’ என்று சொன்னதோடு ஈஸ்வர அல்லா தேரே நாம்’ என்று சேர்த்துச் சொல்ல முடிந்தது.’
லேடீஸ் ஸ்ஷெல் தீபாவளி மலரில் அதன் ஆசிரியர் இப்படி எழுதியிருக்கிறார்.
‘லேடீஸ் ஸபெஷல் தீபாவளி மலர் என்னைப் பொறுத்தவரை ஒரு லட்சியக் கனவு. மராத்தான் ஓட்டம். ஒவ்வொரு வருடமும் முதல் மலரை எடுத்துக்கொண்டு போய் என் தந்தையிடம் காட்டுவேன். கஷ்டப்பட்டு தன் மகள் சாதித்திருக்கிறாள் என்பது மட்டும் புரிந்து சந்தோஷப்படும் அவர் இந்த வருடம் இல்லை.’
தினமணி தீபாவளி மலரில் : ‘ஏதாவது ஒரு ஏழைக் குடும்பத்தைத் தேர்ந்தெடுத்து, அந்தக் குழந்தைகள் புத்தாடை உடுத்தி, வயிறார உண்டு மகிழ்ச்சியாகப் பட்டாசு வெடித்து மகிழ்வதையும் உங்களது தீபாவளிக் கொண்டாடத்தின் ஒரு பகுதியாக்குங்கள் என்பதுதான் இந்த ஆண்டும் நாங்கள் விடுக்கும் வேண்டுகோள்.’
இந்த ஆண்டு மூன்று தீபாவளி மலர்கள்தான் என்னிடம் உள்ளன. இந்த மூன்று தீபாவளி மலர்களில் நான் மதிக்கும் தலையங்கம் தினமணி தீபாவளி மலரில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்கள்.
05.11.2019
துளி – 71 இந்த விலையில் நிச்சயமாகக் கிடைக்கவே கிடைக்காது
அழகியசிங்கர்

நானும் நண்பரும் ஏ கே கோபாலன் பப்ளிஷர் குடும்பத்தாரைப் போய்ப் பார்த்தோம். இப்போது ஏ கே கோபாலன் இல்லை. அவர் புதல்வர் ஜி கிருஷ்ணமூர்த்தியும் இல்லை. அவர்கள் பதிப்பித்த புத்தகங்கள் இருக்கின்றன. நாங்கள் தற்செயலாக மகாத்மா காந்தியின் ஐந்து வினாடிகள் புத்தகத்திற்காகப் போனோம். அங்கு இன்னும் சில புத்தகங்கள் வருடக் கணக்கில் யார் கண்ணிலும் வெளிச்சம் படாமல் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் பாரதியார் புத்தகம்.
849 பக்கங்கள் கொண்ட புத்தகம் இது. பாரதியார் கவிதைகள், கட்டுரைகள், கதைகள் எல்லாமே இருக்கின்றன. இப்படி ஒரு புத்தகத்தை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. இரண்டாயிரத்து ஒன்றில் வந்த புத்தகத்தைக் கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம் போல் தோன்றுகிறது. எல்லாம் பொடி எழுத்தில் எப்படி அச்சடித்தார்கள் என்பதே தெரியவில்லை. கைக்கு அடக்கமாக இருக்கிறது. பாரதி முழுவதும் கைக்கு வந்துவிட்ட உணர்வு எனக்குள் ஏற்படுகிறது. இந்தப் புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு இங்கும் அங்கும் நடக்கிறேன்.
இதன் விலை ரூ.125தான். இந்த விலையில் நிச்சயமாக இந்தப் புத்தகம் இனிமேல் கிடைக்க வாய்ப்பே இல்லை. மிகக் குறைவான பிரதிகள் உள்ளன. பாரதியாரின் முழு கவிதைகள், முழு கட்டுரைகள், முழு கதைகள் எல்லாம் இருக்கின்றன. பாரதி மொழி பெயர்த்த பகவத்கீதையும் இருக்கிறது. வேண்டுவோர் கீழ்க்கண்ட கணக்கில் பணத்தைச் செலுத்தவும். கூடவே ரிஜிஸ்டர்டு தபாலில் அனுப்பி ரூ.50 சேரத்து அனுப்பவும். மொத்தம் ரூ.175 அனுப்புங்கள் பணத்தை அனுப்பிவிட்டு தொலைப்பேசியல் தகவல் தரவும்.
NAVINA VIRUTCHAM ACCOUNT INDIAN BANK, ASHOKNAGAR BRANCH ACCOUNT No. 462584636 IDIB Number. IDIB000A031 CONTACT : AZHAGIYASINGAR – 9444113205
அழகியசிங்கர்

சில தினங்களுக்குமுன் வாசிப்போம் வாசிப்போம் பகுதியில் ஒரு புத்தகத்தைப் பற்றி எழுதியிருந்தேன். அதைப் படித்தவுடன் என் இலக்கிய நண்பர் ஒருவர் தீவிரமாகி விட்டார். அவர் முயற்சியில் நான் குறிப்பிட்டப் புத்தகத்தின் விற்காத பிரதிகளை எடுத்து வந்தோம். இது ஒரு ரேடியோ நாடகம். காந்தி இறந்தபின் உடனடியாக எழுதப்பட்ட ரேடியோ நாடகம். ஜெர்மன் மொழியிலிருந்து நேரிடையாக தமிழில் மொழி பெயர்த்தவர் ஜி கிருஷ்ணமூர்த்தி. இந்தப் புத்தகத்தை ஏ கே கோபாலன் என்பவர் பதிப்பித்துள்ளார்.
இந்தப் புத்தகம் எல்லோருக்கும் போகவேண்டும் என்ற உயரிய நோக்கமே தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை. புத்தகத்தின் பெயர் ‘மகாத்மா காந்தியின் ஐந்து வினாடிகள்.’ கெட்டி அட்டைப் போட்டு இந்தப் புத்தகத்தை அருமையாக தயாரித்துள்ளார்கள்.
இந்தப் புத்தகத்தின் விலை ரூ.25தான். பணத்தை என் கணக்கில் அனுப்பி வைத்தால் உடனடியா புத்தகத்தை அனுப்பி வைப்பேன். இந்தப் புத்தகத்தை நண்பர்கள் யாருக்காவது அன்பளிப்பாக நீங்கள் தரலாம். அல்லது திரும்ணம் போன்ற ஒருவைபவத்தில் நன்கொடையாகக் கொடுக்கலாம். பணத்தை அனுப்பிவிட்டு முகவரியை தொலைப்பேசியில் தெரிவிக்கவும்.
அழகியசிங்கர்

2015 ஆம் ஆண்டுதான் பத்துக்கும் மேற்பட்ட தீபாவளி மலர்கள் வாங்கினேன். முக்கிய காரணம். பட்டாசு வாங்கி பணத்தை வீணடிக்கக் கூடாது என்பதுதான். எல்லாம் வாங்கி வைத்ததுடன் சரி, புரட்டிப் பார்த்ததோடு சரி, தீபாவளி மலர்களில் வழவழப்பான அட்டைகளைத் தடவியதோடு சரி. கோபுர தரிசனம் என்ற தீபாவளி மலர். எப்போதும் தீபாவளி மலர்கள் வாங்கும் கடைகளில் கிடைக்கவில்லை. தி நகரில் உள்ள ஒரு கடையில் வாங்கினேன். அந்த வருடம் விரட்டி விரட்டி தீபாவளி மலர்களாகச் சேர்த்தேன்.
என் இலக்கிய நண்பர்களுக்கு தீபாவளி மலர்கள் பொருட்டல்ல. யாருக்கும் நான் வாங்கினதும் தெரியாது. கேட்கவும் இல்லை. ஆனால் என் பெண்ணின் மாமியார் ஆனந்தவிகடன் தீபாவளி மலரை வாங்கி நிதானமாகப் படித்துவிட்டுக் கொடுத்து விட்டார்.
தீபாவளி மலர்களை நான் பரன் மீது ஒளித்து வைத்தேன். அந்த வருடம் முழுவதும் நான் எந்த தீபாவளி மலரையும் படிக்கவில்லை. 2016ஆம் ஆண்டு எந்தத் தீபாவளி மலரையும் வாங்கவில்லை. 2015 தீபாவளி மலர்களையும் இன்னும் படிக்கவில்லை. என்னுள் இருந்த இந்தத் தீபாவளி மலர் மோகம் கொஞ்சம் கொஞ்சமாகத் தீர்ந்து விட்டது. ஆனால் மனதிற்குள் ஒரு தீபாவளி மலர் தயாரித்துக்கொண்டே இருக்கிறேன்.
அழகியசிங்கர்
இரு குருவிகள்
குலசேகரன்

வழி தவறிப் புகுந்த
ஒரு குருவி நீண்ட நேரமாக
சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது
நான் மையத்திலிருந்து
பறப்பதைக் காண்கிறேன்
அது இறகுகள் தொய்ந்து
எதிரில் நின்றுள்ள
கண்ணாடியின் மீது அமர்கிறது
அருகிலிருக்கும் உருவத்தை இனம் கண்டு
குனிந்து அலகால் கொத்துகிறது
குருவியின் பிம்பமும் தொடுகிறது
ஒரே புள்ளியில்
இரு அலகுகளும்
தொடர்ந்து சப்தித்துக் கொண்டிருக்கின்றன
உயிரின் சலனங்கள் உண்டாகாத பீதியில்
இடத்தை விட்டெழுந்து
அம்பாக வானில் குருவி மறைகிறது
நான் தேடிப் பார்க்கிறேன்
உள்ளே சிறகுகள் துடித்துக் கொண்டிருக்கின்றன
நன்றி : ஆயிரம் தலைமுறைகளைத் தாண்டி – குலசேகரன் – உயிர்மை பதிப்பகம் 11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 600 018 – முதல் பதிப்பு :டிசம்பர் 2008 பக்கம் : 80 – விலை : 50.
அழகியசிங்கர்

முதலில் ஒரு புத்தகத்தை எடுத்துப்படிப்பதற்கு முன் பக்கங்களை எண்ணிப் பார்க்கிறேன். இந்தப் புத்தகத்தை எத்தனை நாட்களில் படிக்க முடியும்? இதைப் பற்றி எதாவது எழுத முடியுமா என்றெல்லாம் பார்க்கிறேன். என் மனசில் எப்படிப் படுகிறதோ அப்படியே புத்தகம் பற்றி சொல்கிறேன். இதில் எந்தத் தியரியையும் இணைக்கவில்லை. உண்மையில் தியரி புத்தகத்தையும் படித்துக் குறிப்பிட விரும்புகிறேன்.
இரண்டு நாட்களாக படித்தப் புத்தகம் ‘சித்தார்த்தா’ என்ற புத்தகம். ‘ஹெர்மன் ஹெஸ்ஸி’ன் புகழ்பெற்ற நாவல் இது. தமிழில் மொழி பெயர்த்தவர் ஜெகதா. பல ஆண்டுகளுக்கு முன்னால் ஆங்கிலத்தில் இந்த நாவலைப் படித்திருக்கிறேன். எல்லாம் மறந்து விட்டது. சில நாவல்களை நாம் பலமுறை படித்துக்கொண்டிருக்க வேண்டும். அது மாதிரியான நாவல்களில் இது ஒன்று.
ஜெகதா நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார். சிறுகதை, நாவல், கவிதை, சினிமா, வரலாறு, ஆன்மிக ஆய்வு என்று பல துறைகளில் புத்தகங்கள் எழுதி உள்ளார்.
பிரபஞ்ச ரகஸ்யங்களை அதன் அடையாளங்களை நதியிடமிருந்து கற்றுக்கொள்ளும் படகோட்டியாய் இந்த நாவல் எல்லையற்ற ஞானவெளியில் நம்மையெல்லாம் மாணவ நிலையில் அமரச் செய்கிறது.
சித்தார்த்தாவும் கோவிந்தனும் நண்பர்கள். பக்கத்து பக்கத்து வீடுகளில் இருவரும் வசிக்கிறார்கள். சித்தார்த்தனுக்கு கடவுளுக்கு ஹோமம் செய்வது நைவேத்தியம் படைப்பது வணங்குவது எதுவும் பிடிக்கவில்லை. மனோ வலிமை பெற்றவனே ஆத்ம தரிசனம் பெறுவான் என்று நம்புகிறான் சித்தார்த்தா. அப்பாவிடம் வலுகட்டாயமாக அனுமதி பெற்று பைராகிகளுடன் ஞானத்தைப் பெற பயணம் செய்கிறான். அவனுடன் கோவிந்தனும் வருகிறான்.
உலகம் மாயையாகத் தோன்றியது. எல்லாவற்றிலும் போலித்தன்மை தெரிந்தது. வாழ்க்கையின் சகலத்திலும் வஞ்சம் நிறைந்திருப்பது போல் தோன்றியது. ஆழிவும் வேதனையும் வாழ்க்கை அவதாரமாகக் கொண்டதாக சித்தார்தன் நினைத்தான். பைராகிகளோடு திரியும் வாழ்க்கை மிகவும் கடினமானதாக இருந்தது. ஓய்வு என்பதே இல்லாது ஒரே அலைச்சலாக இருந்தது. üநான்ý என்ற உணர்வைத் துறப்பதற்கு மிருகத்தைப் போலவும் மரக்கட்டை போலவும் நீண்ட காலத்தை செலவழித்த பின்னரும் மீண்டும் அந்த ‘நான்’ என்ற வாழ்க்கை வளையத்திற்குள்தான் வரúவ்ண்டியுள்ளது.
சித்தார்தாவிற்கு பைராகிகளோடு சுற்றுவதும் பிடிக்கவில்லை. கோவிந்தனும் அவனும் 3 வருடங்கள் மேல் ஆகிவிட்டது. பைராகிகளிடமிருந்து விடுதலை பெற நினைக்கிறார்கள் சித்தார்தாவும் கோவிந்தும்.
பிறகு அவர்கள் புத்தரை சந்திக்கச் செல்கிறார்கள். புத்தர் முன்பாகப் போய் நின்று, ‘உங்களது உபதேசங்களை முழு மனதுடன் ஏற்று தங்களது சீடனாக நான் விரும்புகிறேன்.’ என்கிறான் கோவிந்தன். புத்தரும் அவன் விருப்பப்படி அவனை சீடனாக ஏற்றுக் கொள்கிறார். சித்தார்தனுக்கு அப்படி சேர விருப்பமில்லை. தனியாக வந்து விடுகிறான்.
ஆற்றின் மறுகரைக்குக் கொண்டு சென்று விட்டுவிடுமாறு வேண்டிக் கொண்டான் சித்தார்த்தன் படகோட்டியிடம்.
படகோட்டி சித்தார்தனிடம் சொல்கிறான் : “இந்த நதி அழகுடையதுதான் இந்த உலகத்தில் யாவற்றையும் விட இந்த நதியை நான் மிகவும் விரும்புவேன். அலைகள் ஒவ்வொன்றும் புதிய புதிய செய்தியை எனக்குச் சொல்லியிருக்கிறது. மனித வாழ்வின் துயரப் போராட்டங்களுக்குத் தீர்வு சொல்லக்கூடிய ஞானத் திரவியங்கள் இந்த நதியின் ஆழத்தில் உள்ளது,” என்கிறான் படகோட்டி.
‘நான் ஒரு பைராகி. படகுப் பயணம் வந்ததற்கு என்னால் எதுவுமே கொடுக்க இயலாது என்கிறான் சித்தார்த்தா.
மூன்றாவதாக தேவதாசி கமலாவை சந்திக்கிறான். பைராகி தோற்றத்தை துறந்து ஷேவ் செய்துகொண்டு புத்தம் புதிய தோற்றத்துடன் போய்ப் பார்க்கிறான் சித்தார்த்தா.
“எனக்கு கவிதை எழுதத் தெரியும். நான் கவிதை சொன்னால் நீங்கள் எனக்கு முத்தம் தருவீர்களா?” என்று சித்தார்த்தன் தேவதாசி கமலாவிடம் கேட்கிறான்.
“நீங்கள் சொலகிற கவிதை எனக்குப் பிடிக்க வேண்டும். பிடித்திருந்தால் முத்தம் தர ஆட்சேபணை இல்லை,”என்கிறார் கமலா.
கவிதை அவளுக்குப் பிடித்துப் போகிறது. உதட்டில் முத்தமும் கிடைக்கிறது சித்ததார்தனுக்கு.
சித்தார்த்தாவை காமசாமி என்கிற பணக்கார வியாபாரியைப் பார்க்கச் சொல்கிறாள்.
‘காமசாமிக்கு இணையாகப் பார்க்க ஆசைப்படுகிறேன். பணமும் செல்வாக்கும் உள்ள அவரை அடிமை கொள்ளுங்கள்,’ என்கிறாள் கமலா.
“வசீகர சக்தி உங்களிடம் ஏதும் உள்ளதா சித்தார்த்தா?” என்று கேட்கிறாள் கமலா.
“எனக்கு காத்திருக்கவும், சிந்திக்கவும், உபவாசம் இருக்கவும் தெரியும்,” என்கிறான் சித்தார்த்தா.
தேவதாசி கமலாவுடன் லௌகீக வாழ்க்கையில் முற்றிலுமாய் கரைந்து சித்தார்த்தான் அனுபவித்துத்தான் வந்தான். ஆனாலும் அவனுள் ஒரு நிம்மதியற்ற தவிப்பு தொடர்ந்து இருந்துகொண்டே யிருந்தது.
வியாபாரத்தில் சித்தார்த்தன் நிறையா சம்பாதித்தான். மேலும் மேலும் சம்பாதிக்க வேண்டுமென்ற வெறி அவனுக்குள் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கில் சூதாட்டத்தில் பணத்தை சம்பாதிப்பதும் இழப்பதும் வழக்கமாக இருந்தது. பணம் சம்பாதிப்பதே ஒரே நோக்கமாகக் கொண்ட அவன், மிகச் சராசரி மனிதனாக மாறிவிட்டான்.
ஒருநாள் மாடமாளிகைகள், நகருக்குள் இருந்த ஆடம்பர மாளிகை வாசனை திரவியங்கள் தெளிக்கப்பட்ட படுக்கை அறையும் விதவிதமான உணவுபொருட்களையும் விட்டுவிட்டு சித்தார்த்தன் பட்டணத்தை விட்டு கிளம்பி விட்டான்.
சித்தார்த்தன் காணமல் போய்விட்டான் என்பதை அறிந்தவுடன் மறுநாளிலிருந்து தனது தாசித்தொழிலை விட்டுவிட்டாள். அதற்காகப் பயன்படுத்திய அறையையும் பூட்டி விட்டாள். கடைசி முறையாக சித்தார்த்தனுடன் கொண்ட உடலுறவில் அவள் கர்ப்பமுற்றுருந்தாள்.
காட்டில் சித்தார்த்தன் சுற்றிக்கொண்டிருக்கும்போது அவனுடைய நண்பன் கோவிந்தனை சந்திக்கிறான். கோவிந்தனோ புத்தரோடு ஐக்கியமாகிவிட்டான். திரும்பவும் முன்னே சென்ற ஆற்றங்கரைக்கு வருகிறான். எஞ்சியுள்ள தன்னுமடைய வாழ்நாளை
இந்த ஆற்றங்கரையிலேயே முடித்துக்கொள்ள வேண்டியதுதான் என்று சித்தார்த்தன் நினைக்கிறான்.
ஆற்று நீரின் சலசலப்புச் சத்தம் சித்தார்த்தனின் அந்தராத்மாவின் மீண்டும் ஓங்கார நாதத்தின் மந்திர தொனியை மீட்டுகிறது.
நதி ஒரு ரகசியத்தை மட்டும் சித்தாத்தனுக்குச் சொல்கிறது.
இந்த ஆற்று வெள்ளம் நிரந்தரமானது என்றாலும் ஒவ்வொரு வினாடியும் ஒவ்வொரு துளியும் புதியது என்ற உண்மையை புரிந்து கொண்டான் சித்தார்தன்.
ஏற்கனவே அந்த ஆற்றில் இருக்கும் படகோட்டியைத் திரும்பவும் பார்க்கிறான் சித்தார்த்தன். ஆடம்பரமாய் தரித்திருக்கும் தன் உடைகளை படகோட்டியிடம் கொடுத்து விடுகிறேன் என்கிறான் சித்தார்த்தன். அவனை ஆச்சரியத்தோடு பார்த்த படகோட்டி அவனை சித்தார்த்தன் என்று அடையாளம் காண்கிறான். படகோட்டி தன்னை அறிமுகப்படுத்துகிறான் வாசுதேவன் என்று.
கடைசி வரை சித்தார்த்தன் எதிலும் திருப்தி இல்லாமல் இருக்கிறான் சித்தார்த்தன். தன்னுடைய பழைய கதைகளை எல்லாம் சித்தார்த்தன் வாசுதேவனிடம் சொல்கிறான். பின் வாசுதேவன் சித்தார்த்தைப் பார்த்துச் சொல்கிறான்.üüநதி உங்களிடம் பேசியிருக்கிறது. உங்கள் மீது அன்பு காட்டியிருக்கிறது. நீங்கள் என்னுடன் தங்கலாம். என்னுடைய மனைவி இறந்து பல ஆண்டுகளாகி விட்டது. இந்தக் குடிசையில் நான் மட்டும் இருக்கிறேன். நீங்களும் என்னுடன் தங்கலாம்ýýஎன்கிறான் வாசுதேவன்.
வாசுதேவனுடன் சேர்ந்து படகு கட்டுவதைக் கற்றுக்கொள்கிறான். தோட்டத்தில் செடிகொடிகள் போடுகிறான். காட்டுக்குப் போகிறான். இப்படி எல்லா விதங்களிலும் உதவியாய் இரக்கிறான் வாசுதேவனுக்கு.
எலலாவற்றையும் கற்றுக் கொடுக்கிறது நதி. எல்லாவற்றையும் மறந்து கூர்ந்து கவனிக்கும் ஆற்றலையும் மனம் சஞ்சலமடையாதத் தன்மையும் நதி சொல்லிக் கொடுக்கத்தான் செய்கிறது. ஒருமுறை புத்தர்பிரான் நோய்வாய்ப்பட்டு படுத்தப் படுக்கையாக இருக்கிறார். அவரைப் பார்க்க புத்த பிட்சுகள் மஞ்கள் உடை அணிந்து சாரி சாரியாக வருகிறார்கள்.
அவர்களுடன் தேவதாசி கமலாவும் அவள் பையனை அழைத்துக்கொண்டு வருகிறாள். புத்தர்பிரானைப் பார்க்க. தேவதாசி கமலா அவளுடைய எல்லா செல்வத்தையும் புத்தர்பிரானுக்கு அர்பணித்து விடுகிறாள். அவளுடைய பையனுக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. ஏன் இந்தக் கிழவனைப் பார்க்க இவ்வளவு தூரம் வருகிறாய் என்று திட்டுகிறான் அம்மாவை.
சித்தார்த்தனும் மரணப்படுக்கையில் இருக்கும் புத்தர்பிரானைப் பார்க்க வருகிறான். அவன் கமலாவையும் தன் மகனையும் பார்க்கிறான்.
தன் பையனின் தொந்தரவு தாங்கமுடியாமல் போகிற வழியில் ஒரு இடத்தில் தங்குகிறாள். ஒரு புல்தரையில் அவளை அறியாமல் தூங்கி விடுகிறாள். அப்போது ஒரு கரும்பாம்பு அவளைத் தீண்டி விடுகிறது. ஓ என்று கத்துகிறாள். அவள் பையன் துடித்துவிடுகிறான். அந்த இடத்தில் யாருமே இல்லை. படகுகாரன் வாசுதேவன் வேற வழியில்லாமல் அவளை தூக்கிக்கொண்டு வந்து படகில் கிடத்துகிறான். அவளை தன் குடிசைக்கு அழைத்து வருகிறான்.
கமலாவை சித்தார்த்தன் சந்திக்கிறான். கமலாவிற்கு ஆச்சரியம் சித்தார்த்தனை சந்திப்போம் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. பால சித்தார்த்தனை சித்தார்த்தனிடம் விட்டுவிட்டு கமலா இறந்து விடுகிறாள்.
அம்மாவின் மரணம் பால சித்தார்த்தனுக்குப் பேரிழப்பாக இருக்கிறது. அவளை சிதை மூட்டிய குன்றுப் பகுதிக்குச் சென்று ஓவென இடைவிடாது அழுதான்.
சித்தார்த்தனை இதுவரை பார்த்ததில்லையாதலால் பால சித்தார்த்தனுக்கு தந்தை பாசம் என்று எதுவும் ஏற்படுவதில்லை. அவனை சரியாக கமலா வளர்க்கவில்லை என்பதை சித்தார்ததன் உணர்ந்தான். அவனுக்கு எந்தக் காரியம் செய்வதற்கும் உதவியாள் தேவைப்பட்டது.
ஒருமுறை சித்தார்த்தனைப் பார்த்து பால சித்தார்த்தன் சொல்கிறான் : “உங்களைப் பழி வாங்க ஒரு கொலைகாரனாக மாறி நான் நரகத்திற்குப் போவேன். நீங்கள் என் அம்மாவுடைய காதலன் மட்டுமே. நீங்கள் ஒரு போதும் என் அப்பாவாக முடியாது.”
மறுநாள் காலை பால சித்தார்த்தான் அங்கிருந்த படகை எடுத்துக்கொண்டு அக்கறைக்குப் போய்விட்டான். படகில் உள்ள துடுப்புகளை நாசம் செய்து விட்டுப் போய்விட்டான். தன் பையன் தன்னை விட்டுப் போனதை சித்தார்த்தனால் மறக்க முடியவில்லை. அவனை யொத்த பையன்களைப் பார்த்கும்போது அவன் பைன் ஞாபகம் வரகிறது.
‘இப்போது நதி பேசுகிறது. முடிவு மற்றும் தொடக்கம் என நதி கருதுவதெல்லாம் நிஜமாகவே நிகழ்கிறது. சந்தோஷம், துயரம் எல்லாமே ஒன்றுதான் என்று நதி தீரிமானித்தது.’
சின்ன வயதில் தன் அப்பாவை விட்டுவிட்டு வந்ததை சித்தார்த்தன் ஞாபகப்படுத்திக் கொள்கிறனர். அவன் முழுவதும் மாறி விடுகிறான். வாசுதேவன் அவனை விட்டு, குடிசையை விட்டுவிட்டு, ஓட்டிவந்த படகை விட்டு விட்டு காட்டுக்குப் போய் விடுகிறான் இன்னும் ஞானத்தைத் தேடி.
ஆற்றங்கரையில் படகோட்டியாக ஆருளொளி ததும்பிய யோகீஸ்வரர் ஒருவர் இருப்பதாக கோவிந்தனிடம் பலரும் சொலலியிருக்கிறார்கள். கோவிந்தன் அந்த யோகீஸ்வரரைப் பார்க்க வந்திருக்கிறான்.
சித்தார்தனுக்கு அவன் கோவிந்தன் என்று அடையாளம் தெரிந்து விடுகிறது. கோவிந்தனுக்கு அவனை அடையாளம் தெரியவில்லை.
கோவிந்தனைப் பார்த்துச் சொல்கிறான் சித்தார்த்தன். “தேடுபவர்கள் எல்லாம் தாங்கள் தேடுவதை மட்டும் தேடிக் கொண்டிருப்பார்கள். அதனை மட்டுமே உற்று கவனித்துக் கொண்டிருப்பவர்கள் மற்றவற்றைப் பார்க்கவும் புரிந்துகொள்ளவுமான தங்களது வலிமையை இழந்து விடுகிறார்கள்.”
கோவிந்தன் சித்தார்த்தனுடன் குடிசையில் தங்குகிறான். வாசுதேவன் விட்டுச் சென்ற கட்டிலில் படுத்துக்கொள்கிறான். காலையில் எழுந்து விடை பெறும்போது, சித்தார்த்தன் அவன் நெற்றியில் முத்தம் இட சொல்கிறான்.
தான் முத்தமிட்ட அந்தக் கருணை பொங்கும் முகத்தை கோவிந்தன் அசைவற்று பார்த்தபடி அவன் பாதம் தொட்டான்.
ஹெர்மன் ஹெஸ்ஸியின் இந்த நாவல் உலகப் பிரசித்துப் பெற்ற நாவல். ஒவ்வொருவரும் இதை அவசியம் படிக்க வேண்டும். ஒரு முறை மட்டுமல்ல பல முறை படித்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான் சித்தார்த்தின் அலைச்சல் நமக்குப் புரியும். நம்மிடம் கூட சித்தார்த்தின் தன்மை இருக்கிறது. இது ஒரு ஆன்மிக நாவல். நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த நாவல் பல விஷயங்கள் மூலம் பலவற்றைத் தெரிந்து கொள்ளலாம். படிப்பவரையே புரட்டிப் போடக் கூடிய நாவல் இது.
சாருபிரபா பப்ளிகேஷன்ஸ் மூலம் தமிழில் ஜெகாதா மொழி பெயர்த்துள்ளார். 110 பக்கஙகள் கொண்ட இந்த நாவல் விலை ரூ.35தான்.2007ஆம் ஆண்டில்.