துளி – 67 தீபாவளி மலரும் நானும்…2

அழகியசிங்கர்

எப்போதும் நான் தீபாவளி மலர்களை வாங்குபவன் கிடையாது.  பல ஆண்டுகளாக எனக்குத் தீபாவளி மலர் என்ற நினைப்பே இருக்காது.  ஆனால் நான் எப்போது தீபாவளி மலர்களைப் பார்க்கவும் வாங்கி வைத்துக்கொள்ளவும் நினைப்பு ஏற்பட்டது.  யார் மூலம் இது ஏற்பட்டது?  ஐராவதம் மூலம்தான்.  அவரும் தீபாவளி மலர்களை வாங்கிப் படியுங்கள் என்று சொன்னதே கிடையாது.  உண்மையில் அவர் தீபாவளி மலர்களைத் தீபாவளி அன்று வாங்குவதே கிடையாது.  அப்படியே வாங்கினாலும் மிகக் குறைவான விலையில் கிடைக்கும் தீபாவளி மலர்களைத்தான் வாங்குவார்.

ஆனால் அவர் லென்டிங் லைப்ரரியில் தீபாவளி மலர்களைப் படித்துவிட்டுக் கொடுத்து விடுவார்.  எந்த ஆண்டு தீபாவளி மலர் என்ற கணக்கெல்லாம் கிடையாது.  அடிக்கடி அவர் வீட்டிற்குப் போவேன்.  அவர் பழைய தீபாவளி மலர்களைப் படித்துவிட்டு அதைப் பற்றி எழுதுவார்.  அதில் வெளிவந்திருக்கும் சிறுகதைகளைப் பற்றி விமர்சனம் செய்திருப்பார்.  என்னிடம்தான் விருட்சத்தில் பிரசுரிக்கக் கொடுப்பார்.  அப்போதுதான் எனக்கும் தீபாவளி மலர்கள் ஒன்றிரண்டு வாங்கவேண்டுமென்று தோன்றியது.  

ஐராவதம் உலக இலக்கியமெல்லாம் அறிந்தவர்.  சிறந்த சிறுகதை ஆசிரியர்.  ஏன் சம்பத் என்ற எழுத்தாளரை விட சிறந்த சிறுகதை எழுத்தாளர்.  அவரை யாரும் கொண்டாடவில்லை.  அசோகமித்திரன் அவரை மதிப்பார்.  அவரிடமிருந்து சில எழுத்தாளர்களைப் பற்றித் தெரிந்து கொண்டிருக்கிறார்.  

ஆனால் எந்தத் தீபாவளி மலரிலும் அவருடைய படைப்புகளைக் கேட்டதே இல்லை.  அவர் கவிதை எழுதுவார், கதை எழுதித் தருவார், கட்டுரை எழுதுவார், ஏன் மொழிபெயர்த்தும் கொடுப்பார்.  ஆனால் எந்தத் தீபாவளி மலரிலும் அவர் படைப்பு வந்ததில்லை.  ஏன்?  ஒரு தீபாவளி மலரைத் தயாரிக்க பத்திரிகை ஆசிரியர் முக்கியப் பங்கு வகுக்கிறார்கள்.  யாருக்கும் அவரிடமிருந்து எழுதி வாங்கவேண்டுமென்று தோன்றவில்லை.  இதுதான் கொடுமை.

ஆனாலும் தீபாவளி மலர்களை லென்டில் லைப்பரரியிலிருந்து வாங்கி வந்து புரட்டிப் புரட்டிப் பார்க்கும் ஆவலை என்னால் நம்ப முடியவில்லை.  அவரைப் பார்த்துக்கொண்டுதான் நான் தீபாவளி மலர்களை வாங்கி வைத்துக்கொள்ள ஆரம்பித்தேன்.  தீபாவளி மலர்கள் தயாரித்த ஆசிரியர்கள் எல்லோரும் ஐராவதத்திற்குத் துரோகம் செய்து விட்டதாக நான் நினைப்பேன்.

ஆனால் ஒருபோதும் இது குறித்து அவர் பொருட்படுத்தியது இல்லை.  பல தீபாவளி மலர்களில் ஒரே எழுத்தாளரின் பல படைப்புகள் வந்திருக்கின்றன.  இதையெல்லாம் ஐராவதம் கூறக் கேட்டிருக்கிறேன்.  அசோகமித்திரன் எத்தனை தீபாவளி மலர்களில் கதைகள் எழுதியிருக்கிறார் என்று சொல்வார்.  அவர் தன்னுடைய படைப்புகள் வரவேண்டுமென்று லாபி பண்ணியது கிடையாது.  ஆனால் தீபாவளி மலர்களைப் பார்க்கும்போது நம் படைப்புகள் ஒரு ஓரமாவது வரவேண்டுமென்று நினைக்காமல் அவர் இருந்திருப்பாரா?  

முப்பத்தாறாம் நாளின் வாசிப்பனுபவம் (07.10.2019)


அழகியசிங்கர்

இரண்டு நாட்களாக நான் படித்துக்கொண்டிருக்கும் புத்தகம் நாட்டுக்கு உழைத்த நல்லவர் வரிசையில் கஸ்தூர்பா காந்தியைப்பற்றி எம் வி வெங்கட்ராம் எழுதிய புத்தகம்.

இந்தத் தலைப்பில் பல புத்தகங்களைத் தாயாரித்திருக்கிறார் எம் வி வெங்கட்ராம்.  74 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் ஒரு அரிய பொக்கிஷம்.  நம் நாட்டுத் தலைவர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாறுகளை ஓரளவு விரிவான வழியில் எழுதியிருக்கிறார் எம்.வி வெங்கட்ராம்.  18 தலைப்புகளில் கஸ்தூர்பா காந்தியின் வாழ்க்கை யை நம் கண் முன் நிறுத்துகிறார் எம் வி வெங்கட்ராம்.

பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்டுள்ள இப் புத்தகத்தை ஒவ்வொருவரும் வாங்கிப் படிப்பது அவசியம்.  இந்தப் புத்தகத்தின் விலை ரூ.35தான்.

குஜராத் மாகாணத்தில் போர்பந்தர் என்னும் நகரத்தில் கோகுல்தாஸ் மாகன் ஜீ, விரஜகும்வர்பா என்ற தம்பதிகளுக்கு மூத்த மகளாய்  அவதரித்தவர் கஸ்தூர்பா.  அவர் 1869ஆம் ஆண்டு பிறந்தார்.  மகாத்மாவைவிட ஆறுமாதம் மூத்தவர்.  அக்காலத்தில் பெண்களைப் படிக்க வைக்கும் வழக்கம் பெரும்பாலும் கிடையாது.   கஸ்தூர்பாவும் பள்ளிக்கூடத்தின் பக்கமே போகவில்லை.  ஆனால் குடும்ப வேலைகளில் பயிற்சி இருந்தது.  காந்திஜிக்கும், கஸ்தூர்பாவிற்கும் 13 வயதில் திருமணம் நடந்தது.

காந்திஜியை நெறிப்படுத்திய பெருமை கஸ்தூரி பாவுக்கு உண்டு. காந்திஜி உயர்தரப் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது ஒரு தீய நண்பனோடு அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது.  அந்த நண்பனோடு சேர்ந்துகொண்டு கஸ்தூர்பாவின் கற்பொழுக்கம்மீதே சந்தேகம் கொண்டார்.  பின்னர் தன் குற்றத்தை ஏற்கிறார் காந்திஜி. அவர் மனைவியிடம் செய்த பல தவறுகளுக்காக அவருக்குப் பச்சாதாபம் எற்பட்டு தந்தையிடம் மன்னிப்புப் பெற விழைந்தார்.  நேரிடையாக கஸ்தூர்பாவிடம் மன்னிப்புக் கேட்க அவருக்கு வெட்கமாக இருந்தது.

சிற்றின்ப நாட்டத்தினால் கடைசிக்காலத்தில் தந்தையாருக்குப் பக்கத்தில் இருக்க முடியாமல் போனதைப் பற்றி காந்திஜி வெகுகாலம் வருத்தப்பட்டார். காந்திஜி செம்மையாகப் படித்து பாரிஸ்டராகி விட்டார்.  ஆனால் மனைவியிடம் சந்தேகப்படுவதை நிறுத்தவில்லை.  உண்மையில் கஸ்தூர்பா மட்டுமல்லாமல் வேற யாராவது இருந்திருந்தால் காந்திஜியின் தொந்தரவு தாஙக் முடியாமல் காந்திஜியை விட்டுப் போயிருப்பார்கள். காந்திஜியை மகாத்மாவாக உருவாக்கிய பெருமை கஸ்தூர்பாவைத்தான் சேரும்.

தன் வக்கீல் தொழிலை சரிவர இந்தியாவில் தொடர முடியவில்லை. அதனால் காந்திஜி தென்னாப்பிரிக்காவிற்குப் பயணம் ஆகிறார். ஒரு வருடத்திற்குள் மறுபடியும் சந்திப்போம் என்று காந்திஜி மனைவிக்கு ஆறுதல் கூறிவிட்டு விடை பெற்றார்.  பிரிவுத் துயரை கஸ்தூர்பா ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.  அப்போது அவருக்கு வயது இருபத்துநான்கு.

ஓராண்டு தங்கும் எண்ணத்தோடு போனவர் மூன்றாண்டுகள் தென்னாப்பிரிக்காவில் தங்கிவிட்டார்.  தென்னப்பிரிக்க இந்தியரின் போராட்ட சம்பந்தமாக இங்கு பல தலைவர்களையும், பத்திரிகை ஆசிரியர்களையும் சந்தித்தார்.  பின், கஸ்தூரிபாவும். இருகுழந்தைகளையும், சகோதரி மகனையும் மகளையும் அழைத்துக்கொண்டு தென்னப்பிரிகாகவுக்குக் கப்பல் ஏறினார்.  குடும்பத்தோடு அவர் செய்த முதல் கப்பல் பிரயாணம் இதுதான்.

தென்னாப்பிரிக்க அரசாங்கம் காந்திஜி மீண்டும் அந்நாட்டுக்கு வருவதை விரும்பவில்லை.  அதனால் வெள்ளைக்கார இளைஞர்களால் காந்திஜி தாக்கப்பட்டார்.  வெளிநாட்டில் முதன் முதலாக காலடி எடுத்து வைத்த கஸ்தூரிபாவுக்கு இந்த அனுபவம்.  அடியுண்ட காயங்களுடன் கணவரைக் கண்ட பதைத்துப் போனார் கஸ்தூர்பா.

தென்னப்பிரிக்காவில் காந்திஜி சத்தியக்கிரக இயக்கத்தைத் தொடங்கிய காலம் கஸ்தூர்பா நோய்வாய்ப்பட்டார் ஓயாத ரக்தப் பெருக்கு. 

ஆபரேஷன் செய்த பிறகு மிகவும் பலவீனமாக இருந்தார் கஸ்தூரிபா.   கஸ்தூரிபாவுக்கு மாட்டிறைச்சி சூப் கொடுக்கலாமா என்று டாக்டர் காந்திஜிக்குக் கடிதம் எழுதி கேட்கிறார்.  கஸ்தூர்பா வே அதை ஏற்றுக்கொள்ளவில்லை.  தான் இறந்தாலும் பரவாயில்லை என்ற முடிவுடன் இருந்தார் கஸ்தூர்பா.  மருத்துவமனûயிலிருந்த வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார்கள் கஸ்தூர்பாயை.  உடம்பு குணமாக உப்பையும் மசாலாவையும் விடும்படி கஸ்தூர்பாவை வற்புறுத்துகிறார் காந்திஜி.  ‘டாக்டர் சொன்னா நீங்க விடுவீங்களா உப்பையும் மசாலாவையும்,’ என்று எதிர்க்கேள்வி கேட்கிறார் கஸ்தூர்பா.  கஸ்தூர்பாவிடம் அன்பைக் காட்ட நல்ல சந்தர்ப்பம் என்று நினைக்கிறார் காந்திஜி. ‘இன்று முதல் ஒரு வருஷ காலம் நான் உப்பு, மசாலாக்களைத் தொடமாட்டேன்.  நீ விட்டாலும் சரி, விடாவிட்டாலும் சரி,’ என்கிறார் காந்திஜி.

உப்பையும் மசாலாவையும் நீக்கியதால் கஸ்தூரி விரைவில் நலமுற்றார். ரத்தப்போக்கு அறவே அகன்றுவிட்டது.  ஏற்கனவே üபாமர வைத்தியன்ý என்று பெயர் எடுத்தவர் காந்திஜி.  இந்த நிகழ்ச்சியால் அவருடைய புகழ் பரவியது.

இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது எனக்கு இது காந்திஜியைப் பற்றிய புத்தகமா கஸ்தூர்பாவைப் பற்றி புத்தகமா என்று சந்தேகம் வந்து விட்டது. ஆனால் இது கஸ்தூர்பாவைப் பற்றிய புத்தகம்தான்.  காந்திஜி எந்த அளவிற்குப் பிடிவாதமாக இருந்தாரோ அந்த அளவிற்கு கஸ்தூர்பா தன் உரிமைகளை விட்டுக்கொடுக்காமலிருந்தார்.  தனக்கும் தனிப்பட்ட கருத்துக்கள் உண்டு என்ற பல நிலைகளில் உறுதி படுத்தியிருக்கிறார்.

காந்திஜி தாம் சிற்றின்ப வேட்கையை ஒடுக்க மிகவும் துன்பப்பட்டவர்.  கஸ்தூர்பாவுக்கோ அது மிகவும் எளிதாக இருந்தது.    இறுதியாக தென்னாப்பிரிக்க இந்தியரின் அறப்போர் வெற்றிகாமாக முடிந்தது.  அந்நாட்டு அரசாங்கம் இந்தியருக்கு நீதி வழங்க முன் வந்தது.

இந்தியா திரும்பியதும் சபர்மதி ஆசிரமத்தை நிறுவி காந்திஜியும் கஸ்தூரிபாயும் வசிக்கலானர். ஆசிரமத்தின் முதல் உறுப்பினர் கஸ்தூரிபா. அங்கு இருபத்தைந்து பேர்கள் இருந்தார்கள். எளிய முறையில் வாழ்ந்து சேவை செய்வதே அவர்கள் நோக்கம்.

ஆரம்பத்தில் ஹரிஜனங்களை ஆசிரமத்தில் சேர்க்க உடன்படவில்லை. ஆசிரமத்தின் லட்சியங்களில் அதுவும் ஒன்று என்று காந்திஜி பிடிவாதமாக இருந்தார்.  கஸ்தூர்பா இதற்கு உடன்படவில்லை என்ற போது மனம் வேதனைப் பட்டார்.  ஏழநாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்.  கஸ்தூர்பாவிற்குத்தான் இது தெரியும்.  தீண்டத்தகாதவர்கள் என்று மக்களுள் ஒரு பிரிவினர் ஒதுக்கி வைக்கப்பட்டு மனிதவுயிர்களுக்குள்ள எல்லா உரிமைகளும் அவர்களுக்கு மறுக்கப்படுகின்றன என்பதை உணர்ந்து கஸ்தூர்பா மனம் மாறினார்.  மகாத்மா 1921இல் ஒத்துழையாமை இயக்கம் நடத்தினார்.  1922ஆம் ஆண்டு அவர் கைதானார்.  அந்த வழக்கு பிரபலமான வழக்கு.  பல தலைவர்கள் சிறையில் இருந்தார்கள்.  அப்போது கஸ்தூர்பாதான் தலைமை ஏற்று ஒரு அறிக்கை வெளியிட்டார்.

காந்தி அடிகள் வாழ்நாள் முழுவதும் ஹிந்து – முஸ்லிம் ஒற்றுமைக்காகப் பாடுபட்டார்  1924ஆம் ஆண்டு தில்லியில் 21 நாட்களுக்கு உண்ணாவிரதம் இருந்தார்.  அன்னை கஸ்தூர்பா கலக்கம் அடைந்து விட்டார்.  காந்திஜிக்கு அவர் உயிர் பெரிதல்ல. ஆனால் அன்னைக்கு அந்த உயிர் பெரிதாயிற்றே.  மகாத்மா நாட்டுக்கு துன்பம் ஏற்றார்.  அன்னையோ நாட்டுக்காகவும் கணவருக்காகவும் துன்பங்களை ஏற்றார்.  எம் வி வெங்கட்ராமன் இந்தப் புத்தகத்தை சிறப்பாக எழுதியிருக்கிறார்.

பா தன் மகன் ஹீராலாலுக்குக் கடிதம் எழுதுகிறார்.  அவர் முகம்மதியராக மதம் மாறியபோது அதை ஏற்றுக்கொள்ளவில்லை பா. 

பையனிடம் இப்படி கடிதம் எழுதுகிறார்.  ‘நீ மதம் மாறியதை நான் விரும்பவில்லை.  ஆயினும் üநன்னேறி செல்லவே மதம் மாறினேன்,ý என்று நீ அறிவித்தபோது மதமாற்றங்கூட நல்லதுதான் என்று உள்ளுக்குள் மகிழ்ந்தேன்.’ என்கிறார்.

ஹரீலால் மீண்டும் ஹிந்துவானார்.  தம் செய்கைகளுக்காக வருந்தினார்.  ஆனால் அவர் பெற்றோர்களிடம் வாழ விரும்பவில்லை.

‘வெள்ளையனே வெளியேறு’ என்ற கோஷத்துடன் மகாத்மா 1942ஆம் ஆண்டு தம் இறுதிப் போராட்டத்தைத் தொடங்கினார்.  பல தலைவர்களையும் மகாத்மாவையும் கைது செய்தார்கள்.  மகாத்மாவை காலையில் கைது செய்தார்கள்.  கஸ்தூர்பா மகாத்மாவுடன் பிர்லா மாளிகையில் தங்கியிருந்தார்.

அன்று மாலை சிவாஜி பார்க்கில் மகாத்மா ஒரு பெரும் கூட்டத்தில் பேசுவதாக இருந்தார்.  அவர் சிறைப்பட்டதால் அக் கூட்டத்தில் பா பேசுவதென்று முடிவு செய்தார்.  அவ்வாறே அறிவிக்கப்பட்டது.  இதை அறிந்து போலீஸ், பாவையும், பியாரிலாலையும் டாக்டா சுசீலா நாயரையும் கைது செய்தார்கள்.  மகாத்மா காந்தி பூனாவில் ஆகாகான் அண்மனையில் சிறை வைக்கப்பட்டிருந்தார்.  அங்கு பாவையும் அழைத்துச் செல்லப்பட்டார். மகாத்மா காந்தியுடன் இருந்த மகாதேவ தேசாய் ஆகாகான் அரண்மனையில் உயிர் துறந்தார்.  சொந்த மைந்தரை இழந்ததுபோல் கதறினார் பா.

பா உடல்நிலையும் நாளுக்குநாள் நலிந்து வந்தது.  1945ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒரே வாரத்தில் இரண்டு முறை அவருக்கு ஹிருதய நோய் வந்தது. டிசம்பர் மாதம் மறுபடியும் இரண்டு முறை குணமாகிவிட்டாலும் மிகவும் பலவீனமாகவே இருந்தார்.  அவர் வேண்டிக்கொண்டதற்கு இணங்கி பிள்ளைகளும் பேரர்களும் அவரைப் பார்க்க் அரசாங்கம் அனுமதி வழங்கியது.  1944  பிப்பரவரி 22ஆம் தேதி சிவராத்திரி புண்ணியதினம் 75ஆம் வயதில் உயிர் துறந்தார்.

அவர் உயிரோடு போராடியபோது பென்சிலின் என்ற மருந்தை அப்போதுதான் கண்டுபிடித்திருந்தார்கள்.  அதை போடலாமா வேண்டாமா என்ற குழப்பம் இருந்தது.  இறுதியில் பென்சிலின் ஊசி போடவில்லை. ஊசிப் போட்டிருந்தால் அவர் இன்னும் சில மணி நேரங்கள் உயிரோடு இருந்திருப்பார்.

இந்தப் புத்தகத்தைப் படிக்க படிக்க  உருக்கமாகவே இருந்தது.  பா என்ன விதமான தியாக வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்.  74 பக்கங்களுக்குள் ஒரு முழு வாழ்க்கைச் சரிதத்ததை எம் வி வெங்கட்ராம் கொடுத்துள்ளார். இதுமாதிரி வாழ்க்கைச் சரிதத்தை எழுதுவது அவ்வளவு சுலபமில்லை.  பல புத்தகங்களைப் படித்து சரியாக எழுத வேண்டும்.  அதை திறன்பட தந்திருக்கிறார் எம்.வி வெங்கட்ராம்.  

.

துளி – 67 தீபாவளி மலரும் நானும்…1

அழகியசிங்கர்

தமிழில் தீபாவளி மலர்கள் எப்போது ஆரம்பமானது என்று தெரியவில்லை. அது ஆரம்பமாக யார் அல்லது எந்தப் பத்திரிகை துணிந்தது என்று தெரியவில்லை.  2015ஆம் ஆண்டு நான் எல்லா தீபாவளி மலர்களையும் வாங்கினேன்.  பட்டாசு வாங்கி கொளுத்தி பணத்தை வீணடிக்க வேண்டாமென்றும் அதற்குப் பதில் தீபாவளி மலர்கள் வாங்கி வைத்துக்கொள்ளலாமென்று நினைத்தேன்.

அப்படி வாங்கிச் சேகரித்த தீபாவளி மலர்களில் ஒன்றைக் கூட எடுத்துப்படிக்கவில்லை.  புரட்டிப் பார்த்ததோடு சரி.  அதன் பின் வந்த ஆண்டுகளில் தீபாவளி மலர்கள் வாங்குவது கிடையாது.  நான்கு முறைகள்தான் தீபாவளி மலர்களில் என் படைப்புகள் இடம் பெற்றன.  கல்கி தீபாவளி மலரில்  ராகவன் ஆசிரியர் பொறுப்பிலி ருந்தபோது என் சிறுகதை ஒன்று பிரசுரமானது.  ஆனந்த விகடன் தீபாவளி மலரில் ச சி சிவக்குமார் முயற்சியில் சிறுபத்திரிகைகள் குறித்து எழுதிய கட்டுரை ஒன்று பிரசுரமானது.  மூன்றாவது முறையாக அமுதசுரபி தீபாவளி மலரில் திரூப்பூர் கிருஷணன் ஆசிரியப் பொறுப்பில் ஸ்டெல்லா புரூஸ் பற்றி எழுதிய கட்டுரை வந்தது.  தற்போது லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலரில் 2019ஆம் ஆண்டில் üபயணம்ý என்ற சிறுகதை பிரசுரமானது. தேர்ந்தெடுத்தவர் கிரிஜா ராகவன். 

ஒவ்வொரு தீபாவளி மலரிலும் எனக்குப் பிடித்தது அதனுடைய வழவழப்பான வண்ண அட்டைப்படங்கள்.  என்னிடமுள்ள தீபாவளி மலர்களைக் குறித்து எனக்கு எப்போது தோன்றுகிறதோ அப்போதெல்லாம் எழுதலாமென்று நினைக்கிறேன்.  

முப்பத்தைந்தாம் நாளின் வாசிப்பனுபவம் (06.10.2019)


அழகியசிங்கர்


ஞாயிற்றுக்கிழமையோடு சேர்த்து (20.10.2019) மூன்று நாட்கள் எதுவும் எழுத முடியாமல் போய்விட்டது. இதோ இன்று (திங்கள்) மயிலாடுதுறை பயணம். கையில் பா.ராகவனின் ‘மெல்லினம்’ புத்தகம். இன்னும் சில புத்தகங்களையும் கொண்டு போயிருக்கிறேன். ஆனால் படிக்க முடியுமா என்று தெரியவில்லை.
நான் ஏற்கனவே ஆரம்பித்த ‘மெல்லினம்’ என்ற பா.ராகவனின் நாவலை ஒரு வழியாகப் படித்து முடித்துவிட்டேன். அதன்பின் இன்னொரு நாவலையும் எடுத்துப் படிக்க ஆரம்பித்து விட்டேன். கையில் ஒரு நோட்டு எடுத்துக்கொண்டு போனேன். ராகவன் நாவலைப் பற்றி எழுதத் தொடங்கினேன்.


‘மெல்லினம்’ என்ற நாவல் ‘கல்கி’ பத்திரிகையில் தொடர்கதையாக வந்தது. இந் நாவலைப் படிக்கும்போது கல்கி வாசகர்களுக்காக எழுதப்பட்ட நாவல் போல் தோன்றவில்லை. நாவல் சொல்லும் முறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார். சிறுவர்களை மையமாக வைத்துக்கொண்டு ஒரு நாவலை எழுதி விட்டார். ஒரு விதத்தில் இது சிறார்களின் நாவலா என்பதை ஏற்க முடியவில்லை. நாவலை எப்படி வேண்டுமானாலும் கட்டமைத்துக் கொள்ளலாம் என்பதற்கு இந்த நாவல் ஒரு உதாரணம்.


நாவலில் ஜக்குவும், குட்டியும் அறிமுகமாகிற விதமே சிறப்பாக இருக்கிறது. ஜக்கு மூலம் பட்டாம்பூச்சியை அறிமுகப்படுத்துகிறார். அறிமுகப்படுத்துகிற விதமே சிறப்பாக இருக்கிறது.
ஜக்கு பட்டாம்பூச்சியைப் பிடித்து அதைக் கொஞ்சிவிடடு திரும்பவும் பறக்கவிடுவான். அவனுடைய அரவணைப்பில் பட்டாம் பூச்சி மயங்கி இருக்கும். நாய், பூனையுடன் விளையாடிக்கொண்டிருக்கும். ஜக்கு எப்படிப் படிப்பில் கெட்டிக்காரனாக இருக்கிறான் என்ற சந்தேகம் குட்டிக்கு.


குட்டியிடம் ஜக்கு சொல்கிறான் : ‘பாடம் படிக்கிறது மட்டும் போதாது குட்டி. பலதும் கத்துக்கணும். அப்பத்தான் சயின்டிஸ்டாக பொயட்டாக இன்னும் என்னென்னவாக நினைக்கிறோமோ அதெல்லாம் முடியும்,’ என்கிறான்.


ஆறாம் வகுப்புப் படிக்கும் ஜக்குவும், நான்காம் வகுப்பு படிக்கும் ககுட்டியும் இப்படியெல்லாம் பேசுகிறார்கள். ஜக்குவின் அப்பா – அம்மாவின் அறிமுகம் நடக்கிறது. ஜக்கு அப்பா குமார் குற்றச் செய்தியாளனாகச் சேர்ந்து ஆறு வருடங்கள் ஆகியிருந்தன. அவனுடைய மனைவி அழகு சாதன நிறுவனத்தில் கணக்காளராக இருக்கிறாள்.


குட்டி ஜகனைப் பார்த்துக் கேட்கிறாள் : ‘நீ எதிர்காலத்துல என்னவாக ஆக விரும்புகிறாய்?’


ஜக்கு சொல்கிறான். ‘நான் ஒரு பட்டாம்பூச்சியாக விரும்புகிறேன்.’


ஜக்கு பட்டாம்பூச்சியுடன் பேசுகிறான், ஒரு நாயை வளர்க்கிறான். அதற்கு வெங்கடாஜலபதி என்று பெயர். மகாபலிபுரம் போய்விட்டு வந்தபின் ஒரு குரங்குடன் அவனுக்கு சகவாசம் உண்டாகிறது. அவனுடன் குரங்கு பேசுவதுபோல் வருகிறது. இதெல்லாம் நிஜமா? கற்பனைதான். கற்பனையை அப்படி எழுதுகிறார். இதெல்லாம் சாத்தியமா? சாத்தியமில்லைதான். ஆனால் இதை என்ன சொல்வது? மேஜிக்கல் ரியலிஸம் என்று குறிப்பிடலாமா? அந்தத் தியரியை ராகவன் நாவலில் கொண்டு வருகிறாரா? ஆனால் ஒரு பிரபல பத்திரிகையில் தொடர்கதையாக இதைக் கொண்டு வருகிறார். பெரிய முன்னேற்றம். இயல்பான கதை கிடையாது. துணிச்சலான முயற்சி.
ஜக்கு சராசரியாக இருக்கக் கூடாது என்று கதாசரியர் நினைக்கிறார். ஒரு இடத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார்.


‘சராசரிகளின் அந்தரங்கம் அநேகமாக ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள். இடங்களும் பெயர்களும் சம்பவங்களும் மாறினாலும் உணர்ச்சிகள் ஒரேதரம்தான்.’
அப்பாவின் பழைய டைரிகளை எடுத்து எதாவது காலிப்பக்கங்கள் இருக்குமா என்று தேடுகிறான். அந்த டைரியில் அப்பா எழுதி வைத்ததைப் படிக்கிகாற்ன.


கல்யாணத்திற்கு முன்னால் அப்பாவிற்கு ஒரு காதலி இருக்கிறாள். அவள் பெயர் நிர்மலா. டைரி மூலம் இதைத் தெரிந்து கொண்டு விடுகிறான். அன்றிலிருந்து அவன் நிம்மதி இல்லாமல் தவிக்கிறான். படிப்பில் கவனம் இல்லாமல் போகிறது. வகுப்பில் வந்தால் கூட வெறித்து எங்கோ பார்த்துக்கொண்டிருக்கிறான். குட்டியோடு அவன் சரியாகப் பேசவில்லை. அவன் பள்ளிக்கூடத்தில் காதலைப் பற்றி ஏற்கனவே அவனுக்கு ஒரு அனுபவம் இருக்கிறது. காதலை நோய்க் கிருமியாகப் பார்க்கிறான். அப்பாவின் டைரியில் வரும் காதலை அவன் படிக்கும்போது இப்படி நினைக்கிறான். ‘வரிகளில் நிறைந்திருந்த எழுத்துகளிலிருந்து கிருமிகள் எழும்பி வந்து அவனது கண்கள் வழியே ஊடுருவி நேரே அவனது மூளையைத் தாக்கியது..’
அப்பா காதலித்த நிர்மலா அதிகப் பணம் சம்பாதிக்க அமெரிக்கா செல்ல நினைக்கிறாள். ஜக்கு அப்பா குமார் இதற்கு சம்மதிக்கவில்லை. தன்னுடைய அப்பா அம்மாவை தனியாக விட்டுவிட்டு வரப்பிடிக்கவில்லை. காதல் முறிந்து விடுகிறது. நிர்மலா அமெரிக்கா போய்விட்டாள்.


இந்த நாவலில் ஒரு இடத்தில் பெயர் குழப்பம் இருக்கிறது. குட்டியோடு அம்மா பெயர் காஞ்சனா. நிர்மலா என்ற பெயரி ஜெகன் அப்பா குமாரின் காதலியின் பெயர். நிர்மலா குட்டியின் அம்மா பெயராக் ஒரு இடத்தில் தவறுதலாகக் குறிப்பிடப்படுகிறது. எப்படி பா.ராகவன் இந்தத் தவறை தெரியாமல் விட்டுவிட்டார்?
குட்டியிடம் ஜகன் நிறையா பொய் சொல்கிறான். அப்பா டைரியில் எழுதிய கனவை தான் கண்டதாக சொல்கிறான். பின் வயலட் புடவைக் கட்டிய மேட்டுத் தெரு பொல்லாத ஆவி ஒன்று இரவு தன் அப்பாவை பயமுறுத்துகிறது என்கிறான். யாரிடமும் சொல்லாதே என்று குட்டியை மிரட்டுகிறான். குட்டி கேட்கிறாள். ஏன் அந்த ஆவி உன் அப்பாவை மட்டும் பயமுறுத்த வேண்டும் என்று. அதற்கு ஒரு கதை சொல்கிறான்.


குட்டி ஜகன் சொன்னதையே கற்பனை செய்து ரத்தக்காட்டேரி என்று ரஞ்சனா என்ற வகுப்புத் தோழியிடம் சொல்கிறாள். ரஞ்சனா அவள் அம்மாவிடம் சொல்ல குட்டி அம்மாவுடன் ரஞ்சனா அம்மா சண்டைக்கு வந்து விடுவாள் போல் தோன்றுகிறது. சின்னவர்கள் பேசிக்கொள்வது பெரியவர்கள் சண்டையாகப் போய்விடும்போலிருக்கிறது.


ஜக்கு இரண்டாவது டூரில் தனியாக பள்ளிக்கூட ஆசிரியார்கள் மாணவர்களோடு போகிறான். மூன்று நாள். அவன் ஒருநாள் காணாமல் போய்விடுகிறான். வேண்டுமென்றே. அவன் அப்பாவை இறுதியில் பார்க்கும்போது அவன் குழப்பமெல்லாம் தீர்ந்து விடுகிறது.
இந்தக் கதையல் ஒன்று புரியவில்லை. ஆரம்பத்தில் குட்டி நாலாங்க்ளாஸ் படிப்பதாகவும், ஜகன் ஆறாம் வகுப்புப் படிப்பதாகவும் நாவலாசிரியர் எழுதியிருக்கிறார். இங்கேதான் லாஜிக் உதைக்கிறது. ஜகன் எட்டாம் க்ளாஸ் படிக்கிறவனாகவும் குட்டி ஆறாம் க்ளாஸ் படிக்கறவளாகவும் விவரித்தால் சரியாக இருக்கும்போல் தோன்றுகிறது. காதல் என்கிற விஷயம் சிறுவர்களிடம் எப்படிப் புகுந்து போகிறது என்பதை விவரிப்பதுதான் இந்த நாவல்

.
இந்த நாவல் 2004 ஆம் ஆண்டு கிழக்குப் பதிப்பகதில் வந்துள்ளது. அப்போது விலை ரூ.70.


முப்பத்துநான்காம் நாளின் வாசிப்பனுபவம் (05.10.2019)


அழகியசிங்கர்

சுப்ரமண்ய ராஜ÷ கதைகள் என்ற தொகுப்பை எடுத்து வைத்துக்கொண்டேன்.  32 கதைகள் கொண்ட இத் தொகுப்பில் இரண்டு குறுநாவல்கள். ‘இன்று நிஜம்,’  ‘இரவுகள் தவறுகள்.’ 

ஒரு பத்து கதைகளைப் படித்தேன்.  இந்தப் புத்தகத்தையும் முழுதாக முடிக்காமல் இன்னும் படிப்பதற்குப் பாக்கி வைத்துள்ளேன். இலக்கியச் சிந்தனை கூட்டங்களில் சுப்ரமண்ய ராஜ÷, பாலகுமாரனை பார்த்திருக்கிறேன். சுப்ரமண்ய ராஜ÷ ஒரு மோட்டர் பைக்கில் கம்பீரமாக வந்து இறங்குவார். அப்போது இலக்கியச் சிந்தனைக் கூட்டம் ஆழ்வார்பேட்டையில் ஒரு சர்ச் இருக்கும் இடத்தில் நடக்கும் என்று நினைக்கிறேன்.

இலக்கியச் சிந்தனை கூட்டங்களை சுப்ரமண்ய ராஜ÷வும், பாலகுமாரனும் கலகலப்பாக பேசிக்கொண்டிருப்பார்கள். அசோகமித்திரன் சுப்ரமண்யராஜ÷ கதைகளைக் குறித்து இப்படிக் குறிப்பிடுகிறார். ‘முன்மாதிரி என்று யாரையும் குறிப்பிடத் தோன்றவில்லை.  அவருடைய எழுத்தில் சமகாலத்துச் சமூக, தனி மனித ஒழுக்கச் சிக்கல்களும், மனசாட்சி நெருக்கடிகளும் சமகாலத் தமிழ் நடையில் வடிவம் தரப்பட்டிருக்கின்றன.  ஆனால் இந்தச் சிக்கல்களையும் இந்த நெருக்கடிகளையும் இவர்தான் எழுதியிருக்க முடியும் என்று தோன்றுகிறது,’  என்று எழுதியிருக்கிறார்.  ஏன் என்று தெரியவில்லை எனக்கு சுப்ரமண்ய ராஜ÷ கதைகளைப் படிக்கும்போது இன்னொரு எழுத்தாளரான ஆதவன் ஞாபகம் வருகிறது. எதிர்பாராதவிதமாய் இரு எழுத்தாளர்களுக்கும் ஏற்பட்ட விபத்துக்கள் இந்த எழுத்தாளர்களுடைய கதைகளைப் படிக்கும்போது தோன்றுகிறது.  ஆனால் ஆதவன் அதிகமாக எழுதியிருக்கிறார்.  சுப்ரமண்ய ராஜ÷ இரண்டு குறுநாவல்களுடன் 30 கதைகளுடன் நிறுத்தி விட்டார். 

‘நினைவாக’ என்ற தலைப்பில் தேவகோட்டை வா மூர்த்தி எழுதியிருக்கும் நினைவுக் குறிப்புகள் உருக்கத்தின் உச்சம் என்று எனக்குத் தோன்றுகிறது.  

இப்படி ஆரம்பிக்கிறார் மூர்த்தி. üஇன்று நிஜம்ý சிறுகதைத் தொகுதி வெளியானது.  ‘முதல் பிரதி மூர்த்திக்கு’ என்று எழுதிக் கையெழுத்திட்டு எனக்குத் தந்தான்.  ‘மோனை நயம் கருதியா’ என்று கேட்டேன். ‘இல்லை. மூர்த்தியின் நயம் கருதி’ என்று புன்னகை செய்தான்.  அந்தப் புன்னகைதான சுப்ரமண்ய ராஜ÷. அந்தப் புன்னகைதான் சுப்ரமண்ய ராஜ÷, என்று குறிப்பிடுகிறார் மூர்த்தி. 

இப்படி சுப்ரமண்ய ராஜ÷வை அறிமுகப்படுத்திக் கொண்டு ++ போகிற விஷயம் இந்தப் புத்தகத்தை மேலும் மெருகூட்டுகிறது.  நெகிழ வைக்கிறது. 

பொதுவாக எழுத்தாளர்களுக்கு உதவக் கூடியவர் சுப்ரமண்ய ராஜ÷.  இந்தப் புத்தகத்தில் 07.01.85ல் கல்யாண்ஜி தேவ கோட்டை வா மூர்த்திக்கு ராஜøவைப் பற்றி எழுதிய கடிதத்தை இங்கே குறிப்பிடுகிறார்.

‘ராஜ÷வைக் கேட்டதாகச் சொல்லுங்கள்.  சுப்ரமண்யராஜ÷ சென்னையின் சாயலே இல்லாத நல்ல மனுஷன்.  மே அல்லது ஜøன் இலக்கியச் சிந்தனையில் பார்க்கும்போது, üஎன்ன ராஜ÷ ஆளே மாறிப் போயிட்டீங்க?ý என்றேன்.  üவயசு ஆயிட்டுதில்லியா சுவாமி,ý என்றார்.  மனம் அப்படியேதான் இருக்கிறது.  69-70ல் கோடம்பாக்கம் வெள்ளாளர் தெருவிலிருந்து லிபர்டி வரை – அப்போது சிறுமழை பெய்தது – என்னைக் கூட்டிக்கொண்டு போன, அப்புறம் ஆதம்பாக்கத்திலிருந்து சைக்கிளைத் தள்ளிக்கொண்டே பழவந்தாங்கல் பிரிகிற பாதைவரை பேசிக்கொண்டு அதிக நேரம் எனக்காக ஒரு காலையை ஒதுக்கின அதே முகம் இந்தப் பதினாறு வருஷத்திலும் இருக்கிறது.  ராஜ÷, நான் சென்னையில் இருந்திருந்தால், எனக்கு இணக்கமான ஒரு சிநேகிதராக நிச்சயம் இருந்திருப்பார்.  இப்போது மட்டுமென்ன சிநேகிதர்தான்.’ என்று உருகி எழுதியிருக்கிறார் கல்யாண்ஜி.

தான் உபயோகிக்கத் தொடங்கியிருந்த ஒரு விலையுயர்ந்த பேனாவை ராஜ÷வுக்குத் தந்தார் பிரபஞ்சன், இந்தப் பேனாவுக்கு ராஜ÷தான் தகுதி என்பதுபோல.üபிரபஞ்சன் கொடுத்த பேனாý என்று ராஜ÷ ஓரிருமுறைக்கு மேலேயே மூரத்தியிடம் சொல்வாராம். ýஓர் எழுத்தாளன் தன் பேனாவை இன்னொரு எழுத்தாளனுக்கு அளிப்பது சாதாரண விஷயமில்லை மூர்த்தி,ý என்பாராம் ராஜ÷.

இந்தக் கட்டுரையில் ஜே.கே பற்றி ராஜ÷ சொன்னது முக்கியமாக எனக்குப் படுகிறது. ஜே.கிருஷ்ணமூர்த்தி உரையாடல் ஒன்றில் தனக்கு நேர்ந்த அனுபவத்தை ராஜ÷ விவரிகிறார்.  ஆண்டுக்கொரு முறை டிசம்பர் மாலைகளில் ஜே.கேயின் கூட்டத்தொடர் ஒன்று சென்னையில் நடக்கும். அந்த உரையாடல்கள் ஒன்றில் “யாருமே சிந்தித்துச் செயலாற்றுவதில்லை. வாழ்க்கையில் எல்லா நேரங்களுமே பழக்கத்தின் பாதையிலேயே செல்கின்றன..” என்று ஜே.கே கூற, ராஜ÷ எழுந்து, “இந்தக் கூட்டத்திற்கு நான் வந்தது எந்தப் பழக்கத்தின் அடிப்படையிலும் இல்லை.  மிகவும் தீர்மானித்து நான் செய்தது நான் இங்கு வந்தது.  இதற்கு என்ன ஸôர் உங்கள் பதில்?”  என்று கேட்டிருக்கிறார்.  அதற்கு ஜே.கே, ‘நீங்கள் கேள்வி கேட்கும் பழக்கத்தில் இருக்கிறீர்கள் ஸôர்,’ என்று ஜே.கே பதிலளித்தாராம்.  கூட்டம் மொத்தமும் சிரித்ததாம்.  இதை மூர்த்தியிடம் கூறிய ராஜ÷ ‘ஜே.கே என் கேள்விக்குப் பதில் தந்தாரா மூர்த்தி?’ என்று கேட்கிறார் மூர்த்தியிடம். 

ராஜ÷வின் கதைகள் பொதுவாகக் கொஞ்சப்  பக்கங்களுக்குள் முடிந்து விடுகின்றன. இரண்டு குறுநாவல்கள் தவிர.  ஒவ்வொரு கதையையும் படிக்கத் தொடங்கினால் கீழே வைக்கத் தோன்றாது.  வாசகன் ஊகிக்க முடியாத முடிவுகளைக் கதைகளில் கொண்டு வருகிறார். üமீண்டும் ஓர் ஆரம்பம்,ý என்ற முதல் கதையை எடுத்துக்கொண்டால், எதிர்பாராத நிகழ்ச்சிதான் இந்தக் கதையில் முக்கியமாகத் தோன்றுகிறது. ரமணி என்பவர் ஒரு ஓட்டலில் பணிபுரிகிறார்.  ஓட்டல் முதலாளிக்கு விசுவாசமாக இருக்கிறார்.  எப்போதும் ரமணியின் தயவு அவர் முதலாளிக்கு தேவைப் படுகிறது.  அதனால் அவர் வீட்டிலேயே ஒரு அறையை ஒதுக்கித் தங்க வைக்கிறார்.  24மணி நேரமும் பணிபுரிந்து கொண்டிருக்கும் வேலை.  அந்த வேலையைத் தொடர்ந்தால ரமணியின் லட்சியம் நிறைவேறாமல் போய்விடும்.  

சுவாமிநாதனுக்கு ஒரு சோகம் உண்டு.  அவர் அவருடைய மனைவியையும், பத்து வயது பையனையும் விட்டுவிட்டு தனியாக கோபித்துக்கொண்டு வந்து விடுகிறார்.  பின் தன் வாழ்க்கையில் முன்னேறி ஒரு ஓட்டலுக்கு அதிபதியாக இருக்கிறார்.  உடல் சரியில்லை என்பதால் தன் மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்புகிறார்.  ரமணியை சிதம்பரத்தில் உள்ள தன் மனைவியையும் பிள்ளையும் பார்த்து அவர்களை அழைத்துக்கொண்டு வர ஏவுகிறார். ஆனால் அவர் மனைவி வர விரும்பவில்லை.  அவர் பையனும். இங்கு ரமணிக்கும் அவர் பையனுக்கும் நடக்கும் உரையாடலில்தான் கதையின் மொத்த திருப்பமும் ஏற்படுகிறது.  திறமையாக எழுதப்பட்ட கதை

.  இரண்டாவது கதை ‘இருட்டில் நின்ற’ என்ற கதை.   கதை ஆரம்பிக்கும்போது ரயில் நின்று விட்டது என்று ஆரம்பிக்கிறது. ஒரு விபத்து. கணேசன் ரயிலை விட்டு இறங்குகிறான்.  எல்லோரும் கூட்டம் கூட்டமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.  நிகழ்காலம் எதிரகாலம்தான் இந்தக் கதை. பலவாறு யோசனை செய்து கொண்டே இருக்கிறான்.  கடைசியில் வண்டி புறப்படும்போது எல்லோரும் ரயிலில் ஏறி விடுகிறார்கள்.  வண்டியும் புறப்படுகிறது.  ஆனால் இவன் வண்டியில் ஏற எந்த முயற்சியும் எடுத்துக்கொள்ளவில்லை.

மூன்றாவது கதையான கேள்விகள் என்ற கதையில் கைலாசம் என்பவனிடமிருந்து ஒரு மொட்டைக் கடிதாசு வருகிறது.  தன் மனைவியைப் பற்றி. அவள் கற்பை சந்தேகப்படும்படியாக.  வெளியில் தன் பதட்டத்தைக் காட்டாமல் இதை ஆராய மதுரைப்போய் கைலாசத்தைப் பார்க்க நினைக்கிறான்  ஒரு லாட்ஜில் தங்குகிறான்.  மொட்டைக் கடுதாசி எழுதியவன் அந்த ஓட்டலுக்கு அடிக்கடி வருவான் என்ற கேள்விப்படுகிறான். அந்த ஓட்டலில் விபச்சாரம் நடக்கிறது. ஒரு பெண்ணுடன் இரவை கழிக்கிறான்.  அவன் மனது மாறி விடுகிறது.  கைலாசம் என்பவனைச் சந்திக்காமல் அந்த இடத்தைக் காலி செய்துகொண்டு போய்விடுகிறான். ஒன்றும் வெளிப்படையாக சொல்லாமல் மனதிலிருந்து உருவாகி மனதிலேயே முடிந்து விடுகிற கதை.  அதிர்ச்சியான விஷயத்தை எப்படி எடுத்துக்கொண்டு போக வேண்டும் என்ற இக் கதை புகட்டுகிறது.

இன்னொரு கனவு என்ற கதையில் முன்னதாக நடக்கப் போகிறதைக் கனவுமூலம் ஒருவன் டாக்டரிடம் வெளிப்படுத்துகிறான். கடைசியில் டாக்டரை சந்திப்பதையே கனவாக வருகிறது என்று கொல்கிறான். டாக்டருடன் பேசிக்கொண்டிருக்கும்போது டாக்டரை கத்தியால் குத்துவதுபோல் கனவில் வருகிறது.  

முகமெல்லாம் வியர்க்க, மூர்த்தி திடீரென்று விழித்துக்கொண்டான்.  அதுவே ஒரு கனவுதான்.  நேரே அவன் டாக்டரைப் பார்க்கவில்லை. 

வண்டியில் பெற்றோல் தீர்ந்துபோய் தள்ளிக்கொண்டு போகும்போது வரப்பில் ஒரு பெண்ணைப் பார்த்துச் சபலப்படும் கதை. உண்மையில் கற்பனையில் சபலப்பட்டு முடிந்து விடுகிற கதை.  

கைலாசம்னு ஒருத்தர என்ற கதையில் வாரம் ஒருமுறை கடன் வாங்குவதற்கென்று சுவாமிநாதனைப் பார்க்க வீட்டிற்கு வருவான்.  அவன் கேட்கிற பணத்தை சுவாமிநாதன் கொடுப்பான். அவன் மனைவிக்கு இது பிடிக்கவில்லை.  ஒருமுறை அவன் இல்லாதபோது அவன் வருகிறான்.  பின் அவனைத் திட்டி அனுப்பி விடுகிறாள்.  சுவாமிநாதன் இதைத் தெரிந்துகொண்டு மனைவியைத் திட்டுகிறான்.  பணம் இல்லாதபோது படிக்கும்போது கைலாசம் எப்படி உதவி செய்தான் என்பதைக் குறிப்பிடுகிறான். கைலாசத்தை நேரில் பார்க்கப் போகிற சுவாமிநாதனுக்கு அவன் குடித்துவிட்டு கெட்டழிகிற போக்ûப் பார்த்து அவனைப் பார்க்காமலேயே வந்துவிடுகிôன்.  பத்து நான் வராதவன் அவன் வீட்டில் இல்லாதபோது கைலாசம் வருகிறான்.  அவன் மீது இரக்கப்பட்டு சுவாமிநாதன் மனைவி அவனுக்குப் பணம் கொடுத்தனுப்புகிறாள்.  

இப்படியே போகிறது சுப்ரமண்ய ராஜ÷வின் கதைகள்.  அடிக்கடி கதா மாந்தர்கள் சிகரெட் பிடிக்கிறார்கள்.  தண்ணீ அடிக்கிறார்கள்.  பரர்க்கிற பெண்களுடன் விபரீத சகவாசம் வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள்.  சுலபமான நடையில் விதம் விதமாய் கதை எழுதிக்கொண்டு போகிறார்.  மேலும் படிக்க வேண்டுமென்ற எண்ணத்தைத் தூண்டுகிறது.

பத்து கதைகளை படிக்கும்போது கதைகளில் தன்னை மையப்படுத்தி கதைகள் எழுதிக்கொண்டு போகிறார்.  ஆனால் விதம்விதமாக கதைகளைக் கூறுகிறார்.  படிப்பதற்கு அலுப்பே ஏற்படுத்தவில்லை. 39 வயதுக்குள் சாதனை செய்திருக்கிறார் சுப்ரமணிய ராஜø. 

சுப்ரமண்ய ராஜøவின் முழுத் தொகுப்பை கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.  அதேபோல் ஆதவன் கதைகளையும்.  ஒருவர் இந்த இரண்டு தொகுப்புகளையும் வாங்கிப்படிப்பது அவசியம்.  

துளி – 66 திருப்பதி பயணம்.

அழகியசிங்கர்

எனக்கு திருப்பதி பயணம் என்றாலே நடுக்கமாக இருக்கும்.  அவ்வளவு எளிதாக ஏழுமலையானைப் பார்த்து விட முடியாது.  நான் கடவுள் பக்தி உள்ளவனா நாத்திகனா என்று எனக்குத் தெரியாது.  கோயிலுக்குள்ளேயே போகாமல் நான் நண்பர்களுடன் கோதண்டர் ராமர் கோயிலுக்குள் உட்கார்ந்து பேசிவிட்டு வந்து விடுவேன்.

இந்த முறை காரில் கோயிலுக்குப் போவதாக முடிவு எடுத்தோம்.  குடும்பத்தோடு எல்லோரும்.  பேத்திக்கு மொட்டை அடிக்க வேண்டுதல்.  காலை 7 மணிக்கே கிளம்பிவிட்டோம்.

ஒரு இடத்தில் நின்று இட்லி சாப்பிட்டோம்.  நான் இரண்டு இட்லி மட்டும் எடுத்துக்கொண்டேன்.  முன்பெல்லாம் 5 அல்லது 6 இட்டிலிகளை உள்ளே தள்ளுவேன்.  வயிற்றை நம்ப முடியாது. பயம். 

ஒரு முறை 10 நிமிடத்தில் 20 இட்லிகளைச் சாப்பிட வேண்டும்.  நோ சட்னி. நோ சாம்பார். வெறும் இட்லி மட்டும்.  நான் இந்தப் போட்டியில் கலந்துகொண்டு 9 நிமிடங்களில் சாப்பிட்டேன்.  எழுத்தாளர் நா பார்த்தசாரதி ஒரு ரயில் பயணம் போது, ‘இட்டிலிக்குண்டோ இணை,’ என்ற ஈற்றடி கொடுத்த வெண்பா எழுதச் சொன்னாராம்.

கீழ்த் திருப்பதியில் அலர்மேல் மங்கம்மாள் கோயிலுக்குச் சென்றோம்.  அங்கும் கூட்டம் அதிகம்.  க்யூவில் நின்றோம்.  எனக்குக் கூட்டம் கண்டாலே பிடிக்காது.  ஆனால் கூட்டத்தைப் பார்த்து ரசிப்பது என்று கூட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

நல்ல ஓட்டலில் அறை எடுத்துக்கொண்டு தங்கினோம்.  அடுத்தநாள் காலையில்தான் மேல் திருப்பதி. பேத்தி மொட்டை அடிக்கும்போது அழவில்லை.  ஆச்சரியம்.  ஒரு ஓட்டலில் போய் டிபன் சாப்பிட்டோம்.  மினி டிபன்.  ஏகப்பட்ட ஐட்டம்களை வைத்தவிட்டான்.  திணறினேன். ரூ.300க்கு டிக்கட் வாங்கியிருந்தோம்.  ஆனால் காலை பத்து மணிக்குமேல்தான் உள்ளே போக விட்டார்கள்.  பிரேக் தர்சன் என்ற பெயரில் 600 பேர்களை விட்டார்கள்.  எம்எல்ஏ, எம்பி சிபாரிசு கடிதம் வாங்கி ரூ.500 பணம் செலுத்தினால் இந்தத் தரிசனத்திற்கு உள்ளே விடுவார்கள்.  

சாமி சந்நிதானத்தை எட்டிப்பிடிக்க 2 மூன்று மணி நேரங்கள் போய்விடுகின்றன.  பிடித்துத் தள்ளுகிற மாதிரி கூட்டம்.  உள்ளே போனால் சில வினாடித் துளிகள்தான் சாமியைப் பார்க்க முடிகிறது.  கூட்டத்தை விட்டு வெளியே வந்தால் போதும் போதுமென்றாகி விடுகிறது.  உண்டியில் காணிக்கைச் செலுத்துமிடத்தில் அடிதடி சண்டையே நடக்கும் போல் தோன்றுகிறது.  

ஒரு நாளைக்கு காணிக்கையாக கோடி ரூபாய்க்கள் வருவதாக சொல்கிறார்கள். ஜே கிருஷ்ணமூர்த்தி இதைக் கிண்டல் செய்து பேசியிருக்கிறார். ஆனால் கிருஷ்ணமூர்த்தி இங்கே க்யூவில் நின்று தரிசனம் செய்திருக்க முடியாது. எங்கள் குழுவிற்கு பத்து லட்டுகள் கிடைத்தன. பீமவிலாஸில் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பும்போது மணி 2 ஆகிவிட்டது. வீட்டிற்கு வந்தபிறகு திருப்பதி போய் வந்தது பயங்கர கனவுபோல் தோன்றியது.    

முப்பத்துமூன்றாம் நாளின் வாசிப்பனுபவம் (04.10.2019)

அழகியசிங்கர்

இரண்டு நாட்கள் குடும்பத்துடன் திருப்பதிக்குச் சென்றேன். கூடவே இரண்டு புத்தகங்கள் எடுத்துக்கொண்டு போனேன். ஒரு புத்தகம். சுஜாதாவின் ‘கணையாழியின் கடைசிப் பக்கங்கள்.’  இன்னொரு புத்தகம் பா ராகவனின் ‘மெல்லினம்’ என்ற நாவல்.

காரில் பயணம் செய்யும்போதே படித்துக்கொண்டு வந்தேன்.   கோயிலுக்குப் போகும்போது புத்தகத்தை உள்ளே எடுத்துக்கொண்டு போகவில்லை.  அங்குள்ளவர்கள் கோயிலுக்குள் போகும்முன் கையில் எதையும் வைத்துக்கொள்ளக் கூடாது.  தூக்கி விசிறி அடித்து விடுவார்கள்.  முன்பே இது தெரியுமாதலால் புத்தகத்தை எடுத்துக்கொண்டு போகவில்லை.

சுஜாதாவின் üகணையாழியின் கடைசிப் பக்கங்களை (1965-1998)ý படித்தேன்.  அதனால் பா ராகவன் நாவலைப் படிக்க முடியவில்லை.  சுஜாதாவின் புத்தகத்தையும் 140 பக்கங்கள் வரைதான் படித்தேன்.  1965லிருந்து 1973வரை.  இப்படி பாதிப்பாதியாய் படித்த புத்தகங்களின் லிஸ்ட் தர விரும்புகிறேன்.

1. கண்ணதாசனின் ‘வனவாசம்.’

2. தேவதச்சனின் ‘மர்ம நபர்.’

3. புதுமைப்பித்தன் கதைகள்.

4. தொ.மு.சி ரகுநாதனின் ‘பாரதி காலமும் கருத்தும்’.

மற்றபடி எல்லாப் புத்தகங்களையும் முழுதாகப் படித்து விட்டேன். 

இன்னும் ஆயிரம் பக்கங்கள் உள்ள புத்தகங்களைத் தொடவில்லை.   படிப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயமில்லை.

பதிப்புரையில் மனுஷ்ய புத்திரன், தமிழில் பத்தி எழுத்து என்ற வடிவத்திற்கு ஒரு குணாதிசயத்தையும் அழகியலையும் வழங்கியவர் சுஜாதா என்கிறார். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக  சுஜாதா எழுதிய பத்திகளின் இப்பெருந்தொகுதி ஒரு காலகட்டத்தின் கலை, இலக்கிய, சமூக வரலாற்றின் நுட்பமான பதிவுகளாக இருக்கின்றன என்கிறார். உண்மைதான்.

1965ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத இதழில் தமிழ் சினிமா என்ற தலைப்பில் தமிழ் சினிமாப் படங்களை கிண்டல் செய்திருக்கிறார்.  ‘ஓட்டைப் படம் வந்தாலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தவறாமல் போய் தரிசிப்பார்கள்.’  வேற வழியில்லை.  தமிழ்ப்படம் என்று எது வந்தாலும் போய்ப் பார்த்துவிடுவார்கள்.  

ஜானகிராமனின் ‘நாலு வேலி நிலம்,’ என்ற படத்தில் பாட்டைப் போட்டுக் கெடுத்துவிடுகிறார்கள்.  நம் டைரக்டர்களிடம் ஸ்ரீதர், கோபாலகிருஷ்ணனுக்கு திறமை கிடையாது என்று எழுதுகிறார் சுஜாதா.  ஆகஸ்ட் 1965ல் எழுதி உள்ளார்.

சிறுகதை தற்போது எதைப் பற்றி வேண்டுமானாலும் புதுசு புதுசாக எழுதுகிறார்கள்.  ஆனால் தமிழில் இல்லை.  இங்கிலீஷில் என்கிறார் நவம்பர் 1965 கணையாழி இதழில்.

இப்படி சுஜாதா கூறும் குறிப்புகளிலிருந்து அந்தக் காலத்தில் சரியாக சிறுகதைகள் வரவில்லை என்று அர்த்தப்படுத்திக்கொள்ளலாம்.

இந்தப் பத்தியில் அங்கங்கே நகைச்சுவை உணர்வுடன் எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டே போகிறார்.  

‘மெஸ்ஸில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் என் நண்பர் ஸ்ரீ….திடீரென்று தேசபக்தி மிஞ்சிப் போய் ஜவான்களுக்கு ரத்தம் கொடுக்க வெலிங்கடன் ஆஸ்பத்திரிக்குச் சென்றார்.  அவருக்கு ரத்தம் கொடுத்து அனுப்பினார்கள்.’  இதுதான் சுஜாதா.  இந்தப் புத்தகம் முழுவதும் அதிகமாக நக்கல், நையாண்டி எல்லாம் உண்டு. அதே சமயம் பாராட்ட வேண்டுமென்று நினைத்தால் தாராளமாகப் பாராட்டுகிறார்.   இந்தக் கடைசிப் பக்கங்களைப் படிக்கும்போது இவருக்கு சிறுபத்திரிகை மீதும், அதில் எழுதும் படைப்பாளிகள் மீதும் மரியாதை உண்டு என்பது தெரிகிறது.

ஒரு இடத்தில் இப்படி எழுதுகிறார் : ü லா.ச.ராவின் üபாற்கடல்ý என்ற கதையைப் படித்துப் பாருங்கள்.  அதற்கு ஈடான கதை இதுவரை  எழுதப்படவில்லை என்று போகிற போக்கில் எழுதுகிறார். 

இந்தப் பத்திகளில் ஜோக்ஸ் ஏராளமாக எழுதிக்கொண்டு போகிறார்.  üகனாட் பளேஸ் கம்பெனி ஒன்றில் மிஸ்….டைபிஸ்டாகச சேர்ந்தாள்.  அதன் மானேஜர் முதல் மாதச் சம்பளத்துடன் ஒரு புடவையும் அவளுக்குப் பரிசாகக் கொடுத்தார்.. அடுத்த மாசம் முதல் அவளிடமிருந்து சம்பளம் பெற்றார் மானேஜர்.  கிண்டல் பண்ணுவதில் ஜென்னையும் விட்டு வைக்கவில்லை இவர். 

‘நான் ஒரு வெண்பா எழுத ஆரம்பித்து பாதியில் நின்றுபோய்விட்டது. இதை முடிக்க யாராவது முயற்சிக்கலாம் : 

குத்தாத முள்ளுண்டோ கொத்தாத பாம்புண்டோ

பத்தாத வீமெண்ணை தானுண்டோ?’

என்று சவால் விடுகிறார் சுஜாதா.

ஒரு இதழில் குறுக்கெழுத்துப் போட்டி நடத்துகிறார்.  தமிழ் சினிமாப் பாட்டுக்களை கொஞ்சம் மாற்றிப் போட்டு எழுதுகிறார். உதாரணமாக :

காற்று வாங்கப் போனேன் – ஒரு 

கழுதை வாங்கி வந்தேன், அதைக்

கேட்டு வாங்கிப் போனேன் அந்த 

வண்ணான் என்ன ஆனான் – ஆ ஆ

என்கிறார்.  புகுந்து விளையாடி இருக்கிறார்.  அறிவுப் பூர்வமாகபும் எழுதி இருக்கிறார்.

நகுலனின் நிழல்கள் நாவலை சிலாகித்து எழுதியிருக்கிறார்.

ஒரு முறை லா.ச.ரா டில்லி வந்திருந்தார்.  சுஜாதா வீட்டிற்குப் போயிருக்கிறார்.  அவர் வீட்டில் சாப்பிட நிபந்தனைகளை விதித்திருக்கிறார்.  ‘புளியைக் குறை. எலுமிச்சம் பழம் நிறையச் சேர்த்துக்கொள், மோர் வேண்டும், ரசத்தில் தாளித்துக் கொட்டும்போது கொஞ்சம் சீரகம் சேர்த்துக்கொள்…சமையலறையில் பிரவேசித்து இன்றைக்கு மத்யானம் என்ன சமைத்தாய் என்று கேட்கும் சகஜ பாவம் அவருடைய வெற்றியின் ரகசியங்களில ஒன்று.’

நண்பர் கவிஞர் தேவதத்தன் எழுதியது என்று அடிக்கடி சில கவிதை வரிகள் எழுதியிருக்கிறார்.  எனக்கு சந்தேகம்.  இது சுஜாதாவின் வரிகள்தானா என்று.

உம். தாவணியும் பூவாளியும் சின்னப்பெண் போலே

தேவையான பௌடர்பூச்சு கன்னத்தின் மேலே.

1969 ஜøன் மாத இதழில்: üஎஸ்.வைதீஸ்வரன் சென்ற சில இதழ்களில் எழுதிய சில கவிதைகளைப் படிக்கையில் நிச்சயம் அவரைப் புதுக்கவிதை எழுதுபவர்கள் எல்லோரிலும் சிறந்தவர் என்று சொல்லத் தோன்றுகிறது. இவர் கவிதைகள் தொகுப்பாக வராதது ஒரு பெரிய குறை.  இந்த மாதிரி இன்றைய தினத்தின் சலனங்களைத் தெரிவிக்கும் கவிதைகளை வெளியிடவே பத்திரிகைகள் குறைவாக இருக்கின்றள.ý என்று மனதார பாராட்டுகிறார்.  யார் இதுமாதிரி பாராட்டுவார்கள்? சுஜாதாவைத் தவிர. சக கவிஞர்களைப் பாராட்டாத உலகமிது.

சோ வைப் பற்றி ஒரு தமாஷ்.  ‘தமிழ் நாட்டிலே எதுவுமே நம்ம இஷ்டப்படி நடக்காது. அப்பா அம்மா இஷ்டபடி கல்யாணம் பண்ணிக்கணும். ஹோட்டலுக்குப் போனா சர்வர் இஷ்டப்படி சாப்பிடணும்.  சினிமாக்காரங்க எடுக்கிற சினிமாவை நாம் பார்க்கணும். சபாôக்காரங்க போடற டிராமாவை நம்ப ரஸிக்கணும். பஸ்லே போனா டிரைவர் நிறுத்தற இடத்திலே இறங்கணும். டாக்ஸிகாரன் அழைச்சுகிட்டு போற ரூட்லே நாம போகணூம்…’

முடிக்கும்போது சுஜாதா இப்படி சொல்கிறார் ; “ஸ்ரீரங்கம் எஸ.ஆர் எழுதுவதை நாஙக (வாசகரக்ள) படிக்கணும்..”

தமிழை எங்கே கொண்டு நிறுத்த என்று ஞானக்கூத்தன் கேட்கிறார்.  நிறுத்த வேண்டாம் என்று குறிப்பிடுகிறார் சுஜாதா புதிதாக கசடதபற இதழைப் பார்த்து.  எங்கே கிடைக்கும் என்ற விபரத்தையும் குறிப்பிடுகிறார்.  எவ்வளவு நல்ல மனது சுஜாதாவுக்கு. சுஜாதா மாதிரி ஒருவர் சொல்லும்படி இல்லை.

இன்னொரு இடத்தில் தமிழில் தீவிரமாக எழுதுபவர்களைக் கிண்டல் செய்கிறார். ‘என்ன சொல்கிறாரகள் என்று தெரிந்து கொள்வதற்கு திரும்பத் திரும்பப் படித்துப் படம் வரைந்து பாகங்களைக் குறிக்க வேண்டியிருக்கிறது’ என்கிறார். 

இந்தப் புத்தகத்தில் 170 பக்கங்கள்  ஒரு ஓட்டமாக ஓட்டி விட்டேன. இன்னும் 540 பக்கங்கள் இருக்கிறது.  இப்போதுதான் செப்டம்பர் 1973 வரை முடிததிருக்கிறேன். 

உயிர்மை வெளியீடாக இப் புத்தகம் வந்துள்ளது. 540 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் விலை : ரூ.460.

விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 51


    தலைப்பு  :  வ.உ.சியும் நானும் 

சிறப்புரை :  ரெங்கையா முருகன்

இடம் :      ஸ்ரீராம் குரூப் அலுவலகம்
         மூகாம்பிகை வளாகம்
         சி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே
         ஆறாவது தளம்
          மயிலாப்பூர்
         சென்னை 600 004

தேதி        19.10.2019  (சனிக்கிழமை)    

நேரம்       மாலை 6.00 மணிக்கு

பேசுவோர் குறிப்பு  : நூலகர் மற்றும் பண்பாட்டு ஆய்வாளர்

அன்புடன்
அழகியசிங்கர்
9444113205

முப்பத்திரண்டாம் நாளின் வாசிப்பனுபவம் (03.10.2019)

அழகியசிங்கர்

கடந்த 2 நாட்களாக அலைச்சல். போகுமிடமெல்லாம் புத்தகங்களைத் தூக்கிக்கொண்டு போனேன்.  ஆனால் படிக்க முடியவில்லை.  எப்படியோ முயற்சி செய்து ஒரு நாடகப் புத்தகத்தைப் படித்து விட்டேன்.  அந்தப் புத்தகம் பெயர் : ‘மகாத்மா காந்தியின் ஐந்து வினாடிகள்.’

அது ஒரு நாடகம்.  மூல ஆசிரியர் வால்டெர் ஏரிஷ் ஷேபெர் என்கிற ஜெர்மன் ஆசிரியர்.  அதைத் தமிழில மொழி பெயர்த்தவர் ஜி.கிருஷ்ணமூர்த்தி.

1995ஆம் ஆண்டு வெளியானது.  ஏ கே கோபாலன் வெளியிட்டுள்ளார்.  இந்த நாடகம் 1949-ல் எழுதப்பட்ட ஒரு ரேடியோ நாடகம் என்ற குறிப்பு இந்தப் புத்தகத்தில் உள்ளது.  இதில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் பாத்திரங்கள்.  அறிவிப்பாளர், பண்டிட் நேரு, மருத்துவர். 

காந்தி : ஆண்குரல் . மத்திய குரல் ஒலியில்

பூமி  : பெண் குரல், ஆழமான குரல் ஒலியில்

நதி : ஆண் குரல் ஆழமான குரல் ஒலியில்

காற்று : ஆண் குரல். உயர்ந்த குரல் ஒலியில்

தோட்டா (ரவை) : பெண் குரல், மத்திம குரல் ஒலியில்

குரல் : பெண் குரல், உயர்ந்த குரல் ஒலியில்

இந்த நாடகத்தை ஆரம்பிக்கும் முன் மகாத்மா காந்திஜியின் பொன் மொழிகள் என்று கொடுக்கப்பட்டிருக்கிறது.  அதில் குறிப்பிட்ட சிலவற்றைப் பார்ப்போம். 

செய்தித்தாள் இன்று பைபிளையும், குரானையும், கீதையையும் ஓரத்தில் ஒதுக்கி விட்டது. 

உண்ணாவிரதம் என்பது எனக்கும் இறைவனுக்குமிடையே உள்ள விஷயம்.  எப்போதெல்லாம் தீர்க்க முடியாத பிரச்சனைகள் வருகிறதோ அப்போதெல்லாம் விரதமிருந்து இறைவனைத் தொழவே என் மதம் கற்பிக்கிறது.

நல்லவைகளுடன் உங்களது இணக்கம் எவ்வளவு அவசியமோ அதைவிட அவசியம் தீயவற்றிலிருந்து விலகல்.  

இந்து மதத்தின் மூலமாகத்தான் கிறிஸ்துவர்களையும், முஸ்லீம்களையும் மதிக்கக் கற்றுக்கொண்டேன்.

இதெல்லாம் காந்திஜியின் பொன்மொழிகள் இந்தப் புத்தகத்தில் கொடுக்கப் பட்டிருக்கிறது.

மகாத்மாகாந்தியின் ஐந்து விநாடிகள் என்ற இந்த நாடகம் ஜெர்மன் ரேடியோ நாடக வரலாற்றில் மிக முக்கியமான ஒன்று. காந்திஜி கொல்லப்பட்ட அடுத்த ஆண்டே இது அங்கு எழுதப்பட்டிருக்கிறது.  காந்திஜியை ஒரு உலகப் பொதுபார்வையில் பார்கிறது இந்த நாடகம். 

இந்த நாடகத்தைக் கூத்துப்பட்டறை மூலம் ந முத்துசாமி அவருடைய மேற்பார்வையில் கூத்து கலைஞர்களை வைத்து மேடை ஏற்றிருக்கிறார். ஆனால் இது நிச்சயமாக ரேடியோ நாடகம். மேடை நாடகம் அல்ல.  ஏன் எனில் மேடை நாடகத்தின் தன்மை இதில் மிகமிகக் குறைவு.

ஆனால் முத்துசாமி அவருடைய முன்னுரையில் நாடகத்தைப் பற்றிய அவருடைய பார்வையைக் கொண்டு வந்துள்ளார்.

இங்கே இப்படிக் கூறுகிறார்.  üகருத்து வடிவமைப்பு இநத நாடகத்தில் இருக்கிறது.  ஆனால் நீங்கள் தயாரிப்பது ஒரு வாசிப்பை ஒத்த தயாரிப்பாக இருக்கக் கூடாது.  ஒரு சங்கீதத்தை ஒட்டிய தயாரிப்பாக இருக்க வேண்டும்,ý என்கிறார்.  டாக்டர் கே எஸ் சுப்பிரமணியத்திடம் கூத்துப் பட்டறை நடிகர்கள் சென்று இந் நாடகத்திற்கான சங்கீதத்தை பயிற்சிப் பெற்றார்கள்.  சங்கீதத்தை நாம் பலமுறை கேட்டுக் கேட்டு இன்புறுகிறோம்.  அதே போல் சங்கீதத்திற்கான நாடகமாக மாறினால் பலமுறை இந்த நாடகத்தைப் பார்த்து மகிழலாம் என்கிறார் முத்துசாமி.

நாடக நிகழ்வு என்பது மிகச் சிறந்த ஒரு கச்சேரியை ஒத்ததாக இருக்க வேண்டும் என்கிறார்.  ஆனால் இந்த நாடகம் மேடை ஏற்றத்திற்கு ஒத்ததாக இருப்பதாக எனக்குப் படவில்லை.  ஏன் முத்துசாமி ஒரு ரேடியோ நாடகமாக இதைப் பார்க்காமல் மேடை நாடகமாகப் பார்த்தார் என்பது எனக்குத் தெரியவில்லை.

இன்னொரு இடத்தில் இப்படிக் கூறுகிறார் : üநாங்களோ காந்திஜியின் மரணத்தை ஒரு ஓலமாகக் கருதி இருந்தோம்.  நமக்குச் சுதந்திரம் வாங்கிக்கொடுத்த காந்தியை நாம் இப்போது தினமும் பல முறை கொலைசெய்து வருகிறோம்.  அந்த ஓலத்தையே நாங்கள் கருதினோம்.  வெறும் அழுகை அல்ல.  ஒப்பாரி அல்ல.  அடி வயிற்றிலிருந்து பீறிக்கொண்டு வரும் அவலம்.

இந்த நாடகத்தைப் பொறுத்தவரை எல்லாம் குரல்கள்தான் பேசுகின்றன. பூமி, நதி, காற்று, தோட்டா பேசுவதுபோல் வருகின்றன. இதை எப்படியும் உருவகமாக காட்சிப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை.  ஆனால் இதை ரேடியோ நாடகமாக வாசித்தால் அதன் மூலம் எல்லாவற்றையும் உணர்த்த முடியும்.

பெண் குரல் ஒன்று : என்னை மன்னித்து விடு மகாத்மா

காந்தி : யார் நீ?

பெண் குரல் : உன் மார்பில் வழியாக உள்ளே நுழைந்து கொண்டிருக்கும் (துப்பாக்கித்) தோட்டா நான்.  என்னை மன்னித்துவிடு.

இப்படி தோட்டாவே தன்னை காந்தியிடம் வெளிப்படுத்துவதுபோல் வருகிறது.  

இந்த நாடகத்தை நம்மால் காதால் கேட்டு ரசிக்க வேண்டுமென்று தோன்றுகிறது.  நாடக நடிகர்களை வைத்து நடிக்க வைக்கக்கூடாது.  இதை மேடை நாடகமாகப் போடாமல் திரும்பவும் ஒருமுறை ரேடியோ நாடகமாக அரங்கேற்றம் செய்தால் என்ன என்று தோன்றுகிறது.

காந்தி பேசுவதைக் கவனியுங்கள் : üஉன் மீது எந்தக் குற்றமும் இல்லை. துப்பாக்கியின் மீதும் குற்றமில்லை.  என் மீது துப்பாக்கிய நீட்டிய அந்த இளைஞனும் குற்றமற்றவன்.  இரைந்து கூவ முடியும் என்றால் எல்லோர் காதிலும் விழும்படி நான் கத்திக் கூவுவேன், அவன் நிரபராதி என்று. 

நான் அவன் நெற்றியைத் தொட்டு ஆசிர்வதித்திருக்கிறேன்.  என்னுடைய உறுதியான பழைய விரல்களில் இன்னும் கொஞ்சமாவது சக்தி இருந்திருக்கிறது என்றால் அவன் நெற்றியில் நான் இட்ட அந்த அடையாளத்தை இறைவன் கண்டுகொள்வான்.

உடனே தோட்டா சொல்கிறது : என்னையும் ஆசிர்வதித்துவிடு

காந்தி : உன்னையும் ஆசிர்வதிக்கிறேன் என் தோட்டாவே என்கிறார்.

தோட்டா சொல்கிறது காந்தியிடம்.  உனக்கு ஐந்து நிமிடங்கள்தான் இருக்கின்றன. அதன் பின் நீ இறந்து விடுவாய் என்கிறது.  இப்படி பலவித குரல்கள் மூலம் இந்த நாடகம் நடக்கிறது. அடுத்து காற்று பேசுகிறது.  நதி பேசுகிறது.  பூமி பேசுகிறது. 

இந்த நாடகத்தைப் படிக்கும்போதே முத்துசாமியால் இதை மேடையில் திறமையாக நடத்தி இருக்க முடியாது என்று தோன்றியது.  அவர் மேடை ஏற்றத்தை நான் பார்க்கவில்லை.  ஆனால் இதை வாசித்தப்பிறகு வேறுவிதமாக அடையாளப்படுத்தப் பட வேண்டிய நாடகம்.  அல்லது இந்த நாடகத்தை அமைதியாகப் படிக்கலாம்.  படிக்க வேண்டிய நாடகமாக மாற்றலாம்.

எனக்கு ஒரு ஆசை.  இந்த நாடகத்தை எல்லோரும் ஒரு இடத்தில் கூடி படித்துப் பார்தது வசனம் பேசினால் என்ன என்று தோன்றியது.  அது மாதிரியான முயற்சியைப் பண்ணிப்பார்த்தால் என்ன? நடு நடுவே இசையைப் 

புகுத்தினால் என்ன? 

கடைசியாக அறிவிப்பாளர் இப்படிக் கூறுகிறார். அந்தச் சிறிய பறவை வெண்மேகத்தினுள் உட்புகுகிறது.  யமுனை நதி மீண்டும் பேரிரைச்சலுடன் ஓடத் தொடங்கியது.  காந்தியின் தலை சற்று தாழ்ந்து சாய்ந்தது. 

கடைசியில் நேரு, üஎன் குழந்தைகளே. எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை.  மகாத்மா காந்தி நம் தந்தை மரணம் எய்திவிட்டார். 

இந்த நாடகத்தைப் படித்து ரசித்தேன். ஆனால் இப்போது இந்தப் பிரதி விற்பனைக்குக் கிடைக்காது என்று நினைக்கிறேன. 


இன்றைய தினமணி கதிரில் என் கதை



அழகியசிங்கர்

தினமணி-சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் என் கதை üதஸ்தயேவ்ஸ்கியின் கரமாஸவ் சகோதரர்கள்,ý என்ற கதை ஆறுதல் பரிசாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரசுரமாகி உள்ளது.

தினமணியில் வெளிவந்த என் கதையைப் படித்து நண்பர்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.