அன்புடையீர்,

வணக்கம்.

இந்த முறை சற்று சிரமமாக இருந்தாலும், நவீன விருட்சம் இதழை கொண்டு வந்து விட்டேன். இப்போது வந்துள்ள இதழ் இரு இதழ்களான 85/86ன் தொகுப்பு. 80 பக்கம் கொண்டு வந்துள்ளேன். வழக்கம்போல் பலருடைய படைப்புகள் இடம் பெற்றுள்ளன.

யார் படைப்புகள் இடம் பெற்றுள்ளன என்ற விபரம் இதோ

1. ஐராவதம் – இக்கணத்தின் அருமை
– பாரதிமணி எழுதிய பல நேரங்களில் பல மனிதர்கள் புத்தக
விமர்சனம்
கதைமொழி – எஸ் சண்முகம் புத்தகத்தின் விமர்சனம்

2. விட்டல்ராவ் – பழம் புத்தகக் கடை
3. கோசின்ரா – எனது புனைபெயர்கள் (கவிதை)
4. ஆ முத்துராமலிங்கம் – மழை இரவு (கவிதை)
5. ஏ ஏ ஹெச் கோரி – உறவு ஜீவிகள் (சிறு கதை)
6. அழகியசிங்கர் – சில குறிப்புகள்
7. யோசிப்பவர் – செருப்பு (சிறு கதை)
8. விட்டல்ராவ் – ரிச்சியும் நானும் (சிறு கதை)
9. நீல பத்மநாபன் – விஜய தசமி (கவிதை)
10. மஹேஷ் முணசிங்ஹா – ஜனாதிபதித் தேர்தல்
11. எஸ் வைத்தியநாதன் – சுமை (கவிதை)
12. அழகியசிங்கர் – பத்மநாபன் எதையோ தேடுகிறார் (சிறு கதை)
13. பானுமதி – தனிமை (கவிதை)
14. ஜெயஸ்ரீ – இதையுதிர் காலம் (கவிதை)
15. விஷ்வக்சேனன் கவிதை
16. எம் ரிஷான் ஷெரீப் – என்னை ஆளும் விலங்குகள் (கவிதை)
17. அனுஜன்யா – மகத்தான (கவிதை)
18. ம மோகன் – காட்டை மறத்தல் (சிறு கதை)
19. அழகியசிங்கர் – உறவு, வேண்டாத இடம் (கவிதைகள்)

படைப்பாளிகள் தங்கள் முகவரிகளை அனுப்ப வேண்டுகிறேன். இதழை உடனே அனுப்பி வைப்பேன்.

அன்புடன்

தூண்டிற்புழு

மெளன மொழி புரிகின்றது மனதின் வேஷம் கலைகின்றது முகமூடி உருக்குலைகின்றது மனிதமுகம் தெரிகின்றது மழலை தேனாய் இனிக்கின்றது மீண்டும் குழந்தையாக உள்ளம் துடிக்கின்றது வாழ்க்கை வரமாய் தோன்றுகின்றது மறுமுறை பிறக்க மனம் ஏங்குகின்றது நாட்கள் கணமாய் ஓடுகின்றது நதியலைபோல் சூழ்நிலை மாறுகின்றது தோல்வி கூட இனிக்கின்றது வெற்றி எதில் இங்கு இருக்கின்றது தடுக்கிவிழ கால்கள் துடிக்கின்றது தாங்கும் கைகள் அவளுடையதாய் இருக்க வேண்டுமென உள்ளம் தவம் கிடக்கின்றது கடிதங்கள் தூது போகின்றது கவிமகளை நெஞ்சம் நாடுகின்றது மழை வந்து மேனியை நனைக்கின்றது அவளைச் சந்திக்காமல் உள்ளம் கொதிக்கின்றது ஆகாரம் கண்ணெதிரே இருக்கின்றது எண்ணச் சிறகுகள் எங்கெங்கோ பறக்கின்றது காலை கதிரொளி எழுகின்றது கனவுகள் விடை பெறுகின்றது உறக்கம் மெல்ல களைகின்றது உண்மை வேறாய்த் தெரிகின்றது காட்சிகள் பொய்யெனப் புரிகின்றது கற்பனை நின்றிட மறுக்கின்றது இங்கு எல்லாம் சரியாய் இருக்கின்றது வேறெங்கே என்னைத் தொலைக்கின்றது!

இலையின் பாடல்

நான் இல்லாது போனால் இப்புவியெங்கும் உள்ள மரங்களனைத்தும் மூளிகளாகும்.
நான் பச்சை வண்ணம் சுமந்து வசந்த காலத்தை வளமுள்ளதாக்குகிறேன்.
நான் இன்னோர் இலையாய்த் துளிர்க்க வேனிற்காற்றின் வேகத்தில் மரங்களினுடனான உறவுப்பிணைப்பை முறித்துக்கொண்டு மண்ணில் விழுகிறேன்.
நான் காணுமிடமெங்கும் நிறைந்திருப்பினும் மலர்களின் மீது மட்டும் மோகம் கொண்டலையும் மனிதர்கள் என்னை மரத்தின் ஒரு பாகமாக மட்டுமே பார்க்கின்றனர்.
நானின்றி மொட்டு மலர்ந்திடுமா? காய் கனிந்திடுமா? மரம் நிலைத்திடுமா?
உணவாகிப் பல நோய்கள் தீர்க்கிறேன். எருவாகிப் பயிர்களைக் காக்கிறேன் எரிபொருளாகி வாகனங்களை இயக்குகிறேன்.
என் மீது உரசாத காற்றை சுவாசித்த நபருண்டா இவ்வுலகில்?
பழுத்து மஞ்சளாகி உதிரும்வரை காலையில் நடைப்பயிற்சி செல்லும் வழியெங்கும் உங்களின் கண்களுக்கு இதமாக இலவசமாய் குளுமை தருகின்ற பூமித்தாய் தன் மேனியில் உடுத்தியிருக்கும் பச்சை வண்ண ஆடை நான்!

ஊழிக் காலம்


காய்ந்துபோன ஏரிகளில்காலம் தன்முகம் பார்த்துக் கொண்டதுசுருக்கங்களின்றிபருவம் பூரித்துச் செழித்த தன்முன்பொரு யுகத்தின் யௌவனம் பற்றிபார்த்திருந்த வானத்திடம்தன் முறைப்பாட்டையும் நெடுமூச்சையும்ஒருசேரக் கொடுத்தது எதையும் கண்டுகொள்ளாச் சூரியன்வழமைபோலவேகாற்றைச்சுட்டெரித்ததுஇருக்கும் விருட்சங்களை வெட்டியபடியும்பிளாஸ்டிக் குப்பைகளைப் புதைத்தபடியும்எதுவுமே செய்யாதவன் போலமுகம்துடைத்துப் போகிறேன் நான்உங்களைப் போலவே வெகு இயல்பாக –

எதையாவது சொல்லட்டுமா….16

சமீபத்தில் என் நண்பரும் டாக்டருமான செல்வராஜ் ஒரு இ மெயில் அனுப்பியிருந்தார். அதைப் படித்தவுடன் எனக்கு இரவெல்லாம் சரியாய் தூக்கமில்லாமல் போய்விட்டது. டாக்டர் செல்வராஜ் ஒரு சிறுகதை ஆசிரியர் கூட. வைத்தியம் பார்ப்பவர். 2 சிறுகதைத் தொகுப்பும், 2 மருத்துவ நூல்களும் எழுதி உள்ளார். உற்சாகமாக இருப்பவர். பார்ப்பவர்களையும் உற்சாகப் படுத்துவார். நோயாளிகளின் உடல் மட்டுமல்ல மனதையும் குணப்படுத்தவும் நினைப்பவர். அவர் அனுப்பிய இ மெயிலுக்கு வருகிறேன். தனிமையில் நீங்கள் இருக்கிறீர்களா? உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதுதான் அவருடைய இ மெயில் கட்டுரை. திகைத்து விட்டேன். ஹார்ட் அட்டாக் வரும்போது பக்கத்தில் டாக்டர் இல்லை. நீங்கள் எப்படி உயிர் பிழைக்க வேண்டும் என்பதுதான் அவருடைய கட்டுரையின் சாராம்சம். அவர் கட்டுரையில் எல்லாவிதமான நியாயமும் இருக்கிறது. அவருடைய உலகம் நோயாளிகளையே சுற்றி வந்து கொண்டிருக்கிறது. அவருடன் சற்,று நேரம் கூட பேச முடியாது. அவர் தூங்கி எழுந்தால் அவர் முன்னால் நோயாளிகள்தான் தென்படுவார்கள் என்று தோன்றுகிறது. நானும் அவர் முன்னால் ஒரு நோயாளிதான். சரி, விஷயத்திற்கு வருகிறேன். என் 50வது வயதில் நான் ஒரு தப்பான முடிவை எடுத்தேன். அதாவது பதவி உயர்வுப் பெற்று சென்றதுதான் அது. அந்த முடிவின் அவலத்தை நான் பந்தநல்லூர் என்ற ஊரில் நான்கு ஆண்டுகள் பணி புரிந்தபோது உணர்ந்து விட்டேன். அப்போது நான் என் கண்ணால் பார்த்த 2 மரணங்களைப் பற்றிதான் ”பத்மநாபன் எதையோ தேடுகிறார்,” என்ற பெயரில் ஒரு கதையே எழுதிவிட்டேன். அந்தக் கதை இந்த இதழ் விருட்சத்தில் பிரசுரமாகிறது. அந்த இரு மரணங்களும் ஹார்ட் அட்டாக்கால் ஏற்பட்டதுதான். எதிர்பாராத இடத்தில் எதிர்பாராமல் ஏற்பட்ட மரணங்கள் அவை. உயிருக்குப் போராடிய அந்தத் தருணம் முக்கியமானது. செல்வராஜ் என்ன செய்ய வேண்டுமென்று கட்டுரையில் எழுதியிருக்கிறார். அப்படி ஒரு இக்கட்டில் மாட்டிக் கொண்டவர்கள், தொண்டையைச் செருமிக் கொண்டே இருக்க வேண்டுமாம். சரியான மருத்துவரைப் போய்ப் பிடிப்பதற்குள். ஆனால் எனக்குத் தெரிந்து மாட்டிக்கொண்டவர்கள் மயக்கம் ஆகி விழுந்து விடுகிறார்கள். ஒரு பேராசிரியர் ஒரு பாட்டுக் கச்சேரிக்குத். தலைமைத் தாங்கி பேசி முடித்தவுடன், சிறிது நேரத்தில் மயங்கி கீழே விழுந்துவிட்டார். மருத்துவ மனைக்குச் செல்வதற்குள் அவர் உயிர் போய்விட்டது. சமீபத்தில் சினிமாத் துறையினரால் முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவில்கூட அரசு செய்தித்துறை புகைப்படக்காரர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அந்த இடத்திலேயே இறந்து விட்டார். என்னை அறியாமலயே பந்தநல்லூரில் உள்ள எங்கள் கிளையில் பணிசெய்து கொண்டிருந்த ஒரு ஊழியரை எதிர்பாராதவிதமாகக் காப்பாற்றி விட்டேன். கும்பகோணத்திலிருந்து பந்தநல்லூர் 30 கிலோமீட்டர் தூரம் இருக்கும். என் அலுவலக ஊழியர் காலையில் அலுவலகம் வந்தவுடன் ஒரு மாதிரியாக இருந்தார். சாப்பிட்டதை வாந்தி எடுத்தார். தலையை லேசாகச் சுற்றுகிறது என்றார். உடனே அவரை காரில் அழைத்துக் கொண்டு போனேன். கும்பகோணத்தில் உள்ள சுகம் என்கிற பெரிய மருத்துவமனையில் அவரைச் சேர்த்தேன். அவரைப் பரிசோதித்த டாக்டர். நீங்கள் அழைத்துக்கொண்டு வந்தவருக்கு பயங்கரமான மாரடைப்பு. அவர்கள் வீட்டிலுள்ளவர்களுக்கு உடனே தகவல் சொல்லுங்கள் என்றார். எனக்கு ஒரே திகைப்பு. அந்தப் பெரிய கண்டத்திலிருந்து அவர் தப்பித்து விட்டார். என்னை அறியாமலே ஒரு மாரடைப்பு வந்தவரைக் காப்பாற்றி விட்டேன்.

“மிஞ்சியவன்”

அந்த இடத்தைக் கடக்கும்போதெல்லாம் சின்னையனுக்குத் தனது வண்டி ஸ்டான்ட்தான் ஞாபகத்திற்கு வருகிறது. தினமும் ஒரு வேளையாவது அந்தப் பக்கமாக வந்து போகவில்லையென்றால் அவனுக்கு மனசு ஆறாது. வர, வண்டியை ஓரமாக நிறுத்த, அந்த இடத்தையே பார்த்துக் கொண்டிருக்க என்று பொழுது கழியும். பல நாட்களில் அங்கிருந்து கிளம்பவே மனசு வந்ததில்லை அவனுக்கு. நெஞ்சில் ஆழப் பதிந்து விட்ட சோகம் அது. நகரத்தின் எல்லாப் பகுதிக்கும் கால் கடுக்கக் கடுக்க ரிக்ஷாவை மிதிக்கிறான். இப்பொழுது இன்ன இடம் என்று குறிப்பிட்டு அவனுக்கு எதுவும் இல்லை. எல்லா இடமும் அவன் இடம்தான். எங்கெங்கு நிறுத்துகிறானோ அதெல்லாம் அவன் இடம்தான். ‘ யாரோ போவட்டும்” என்று எல்லோரும் விட்டு விடுகிறார்கள் அவனை. ஆனால் ஒன்று. எல்லோரும் அவனை ஒரு பார்வை பார்த்து விடுகிறார்கள். அவனைப் பார்க்கிறார்களா அல்லது அவன் வண்டியைப் பார்க்கிறார்களா? ரெண்டையும்தானோ? எதைப் பார்த்தால் என்ன பார்க்காவிட்டால் என்ன? கொட்டியா கொடுக்கப் போகிறார்கள், தான் முடிந்துகொண்டு போவதற்கு? அப்படிப் பரந்த மனசோடு இன்றைக்கெல்லாம் யாரும் இருப்பதாகத் தெரியவில்லையே? ஏன் இப்படி ஆகி விட்டார்கள் எல்லோரும்? காலம் எல்லோரையும் அப்படி மாற்றிவிட்டதா? அட, இன்றிருப்பவர்களைச் சொல்லி என்ன பயன்? தனக்குப் பழக்கமான பழைய முகங்களே திருப்பிக் கொண்டல்லவா போகிறது? என் வண்டிக்கு உயிர் இருக்குமானால் அது வாய்விட்டு அழுமே? என் மேல திங்கு திங்குன்னு உட்கார்ந்து எத்தனைவாட்டி போயிருப்பே? சொகுசாச் சாய்ஞ்சிக்கிட்டுப் போனதையெல்லாம் மறந்திட்டியா? உனக்குச் சூடு படக்கூடாதுன்னு என்னை நா தளர்த்திக்கிட்டு, நெளிஞ்சிக்கிட்டு, எத்தனைவாட்டி உனக்குச் சொகமும், சொகுசும் கொடுத்திருப்பேன்? இன்னைக்கு நான் இத்தனை நசிஞ்சுபோய்க் கிடக்குறேனே அது கொஞ்சமாவது உன் கண்ணுல படுதா? அத்தனை ஒதுக்கமாவா போயிட்டேன்? ஏதேர் தீண்டத்தகாதவன் மாதிரிப் போறீகளே எல்லாம்? திடீரென்று வண்டியிலிருந்து இறங்கி, சீட்டை ஓங்கி ஓங்கித் தட்டுகிறான் சின்னையன்.படலமாய் அப்பிக்கொண்டு தூசி பறக்கிறது. க்க்கூங்…க்க்கூங்…என்று மூக்கால் ;விடுவித்துக்கொண்டு துண்டால் வாயையும், மூக்கையும் பொத்திக்கொள்கிறான். ஓங்கி ஒரு உதை விட்டு, நாலு உருட்டு உருட்டி விடலாம் போல் ஒரு கோபம். அந்த உரிமையும் அவனுக்குத்தானே உண்டு! நினைத்ததையெல்லாம் செய்துவிட முடிகிறதா என்ன? என்னதான் உதவாக்கரையாய்ப் போனாலும், இன்றைக்கும் பொழுது கூடி ஒரு ஐம்பது ரூபாயாவது சம்பாதித்துக் கொடுத்து விடுகிறதே? உதையைக் கொடுத்து உருட்டிவிட்டு, உள்ளதும் போச்சு நொள்ளக் கண்ணா என்று கையை விரித்து நிற்கவா? பிறகு எந்த வேலைக்கென்று செல்வது? என்ன வேலை தெரியும் தனக்கு? முதுகை வளைத்து மூட்டை தூக்க முடியுமா தன்னால்? வண்டியிழுக்க முடியுமா? Nஉறாட்டலில் போய்த் தண்ணீர் எடுத்து விட முடியுமா? விறகு தூக்கி அடுக்க முடியுமா? எச்சில் இலை அள்ளிக் கொட்ட முடியுமா? கண்டா முண்டா வேலை என்று எதுவும் பழகவில்லையே? பிறந்ததிலிருந்து தனக்குத் தெரிந்தது இந்த ரிக்ஷா ஓட்டும் வேலை ஒன்றுதானே? அப்பனுக்குப் பிறகு தப்பாமல் பிழைத்தது இதுதானே? ஒடம்ப வேணுங்கிற அளவுக்குக் கெடுத்துக்கிட்டாச்சு! எம்புட்டோ சொன்னா செல்லாயி…நா கேட்டனா? எதுதான் புத்தில ஏறிச்சு? அன்னைக்கெல்லாம் வந்த வருவாய்க்கு எத்தனை திமிராத் திரிஞ்சேன்? “யே…சும்மாக் கெடடி நசு நசுன்னுக்கிட்டு…ஐம்பதாயிரம், அறுபதாயிரம்னு ஆட்டோ லோனை வாங்கிப்புட்டா, எவன் அடைக்கிறது? அதுக்கு வட்டி என்னவாகும்னு தெரியுமா உனக்கு? காலம் ப+ராவும் கடனுக்கு அழுதுக்கிட்டேயிருங்கிறியா? வேறே ஆளப் பாரு…வண்டிய எடுத்தமா, நாம பாட்டுக்கு ஓட்டினமா, காசப் பார்த்தமான்னு இருக்கணும்…அதிலெல்லாம் போய் தலயக் கொடுத்துட்டு மாட்டிட்டு முழிக்கிறதுக்கு நா ஆளுல்ல பார்த்துக்க…” “நா சொல்றதக் கேளுய்யா…ஒன் நன்மைக்குத்தான் எல்லாம்….இப்பவே ஒனக்கு முப்பத்தியேழு ஆகிப் போச்சு…நாப்பதத் தாண்டிட்டன்னு வச்சிக்க…வண்டி மிதிக்க முடியாதய்யா…உன் ஒடம்பப்பத்தி எனக்குத்தான் தெரியும்…உனக்குத் தெரியாதாக்கும்…ஆட்டோ ஓட்டக் கத்துக்க…ஒரு லைசன்சை வாங்கிக்க…அது ஒதவும்…” “போடீ…பொட்டச்சி நீ சொல்றதயெல்லாம் கேட்கணும்னு என் தலைல எழுதி வச்சிருக்கா என்ன? இப்போ எனக்கிருக்கிற வாடிக்கையே இன்னும் பத்து வருஷத்துக்குத் தாங்கும்டீ புரியாதவளே!.ஊரு ஒலகமென்ன ரொம்பச் சின்னதுன்னு நினைச்சியா? பரந்து கெடக்குடி…பரந்து கெடக்கு…இந்த ஏரியா இல்லன்னா இன்னொண்ணு…அதுவும் இல்லன்னா வேறொண்ணுன்னு போய்க்கிட்டேயிருப்பேனாக்கும்…பொழைக்க எடமாயில்லேன்னு நினைச்சே? “ அன்றைக்கெல்லாம் எத்தனை மெத்தனமாய்க் கிடந்தான் சின்னையன். காலையில் ஆறு மணிக்கு வண்டியை எடுத்தான் என்றால் மின்நகரில் மூன்று நான்கு தெருக்கள் அவனுடையதுதான். அந்தப் பிள்ளைகளையெல்லாம் பள்ளியில் கொண்டு விட்டுவிட்டு சேக்கியாதோப்புக்கு வருவான்…அங்கு ரொட்டிக்கடை வாசலில் காத்துக் கொண்டிருக்கும் சின்னஞ்சிறுசுகளை ஏற்றிக்கொண்டு பாலத்துக்கு அந்தாண்டை இருக்கும் கிறிஸ்டியன் பள்ளியில் இறக்கிவிடுவான். அப்படியே சந்தைக்குச் செல்லும் வழக்கமான ஒரு சவாரியையும் கவனித்துவிட்டு, அங்கேயே பாண்டியம்மாள் ஆப்பக்கடையில் நாலு ஆப்பத்தை வாங்கி முழுங்கிவிட்டு ஸ்டான்டுக்கு வந்தானானால் மணி பத்து பத்தரை ஆகும். வண்டியில் படுத்தமேனிக்கு அப்படியே ஒரு தூக்கம். பிறகுதான் மாலை நாலு மணிவரை கிடைக்கும் சவாரிகள். அன்றைக்கெல்லாம் மாதாந்திரச் சவாரிகள் என்று இருந்தவையே கணிசமாய்த்தான் கிடந்தன. வெளிச் சவாரிகளை எத்தனையோ முறை மற்றவர்களுக்குத் தள்ளிவிட்டிருக்கிறான் சின்னையன். “சுகவாசிய்யா நீ…எங்கள மாதிரியா நாய் பட்ட பாடு ஒனக்கு?” “டேய்…பார்த்துப் பேசுங்கடா…இந்த ஏரியா ஒங்களுக்கு இல்லன்னா இதுவும் இருக்காதுடியோவ்…ஒங்களுக்கு முன்னாடி எத்தன வருஷமாக் கெடக்குறேன் தெரியுமா? அப்டி எடம் பிடிச்சதுனாலதான் இன்னைக்கு நீங்கல்லாம் இங்க குப்ப கொட்ட முடியுதாக்கும்! – “இந்தா எதிர்த்தாப்ல தெரியுதே வீடுக…அது ப+ராவும் வெறும் காடாக் கெடந்திச்சாக்கும்…நரி ஊளையிடும் ஒரு காலத்துல…பெறவு பன்னி மேய்ஞ்ச எடமாப் போச்சு…கருவேலங்காடா மாறி கொல கொள்ளைன்னு நடக்குற எடம்…குத்திக் கொன்னுப்புட்டு பாடியத் தூக்கி மறைவா எறிஞ்சிட்டுப் போயிடுவானுக…என்ன எடம்னு கணக்கிருக்கு இப்ப…சுடுகாட்டுக்குப் பக்கத்துலயே வாங்கி வீடுகட்டிருக்காக…ராத்திரி ரெண்டாம் ஆட்டம் முடிஞ்சு சனம் ப+ராவும் அதத்தான் கடந்து போகுது…ஒரு காலத்துல சாமக் கோடாங்கி அங்க ப+ச போட்டுட்டு வருவான்னு தெருவுல பகல்லயே அவனப் பார்க்கப் பயப்படுவாங்க…இப்ப அப்படியா? எல்லாம் மாறிப்போச்சு…அப்பல்லாம் ராத்திரி பகல்னு வித்தியாசமில்லாம பொணம் எறிஞ்சிக்கிட்டேயிருக்குமாக்கும்…தெனம் ரெண்டு பாடி எப்டியும் வந்துடும்…நா ஒத்த ஆளா வண்டிய நிப்பாட்டிக்கிட்டு எவனாவது வர மாட்டானான்னு அரக்கப் பரக்கக் கெடப்பேன்…ஆளுக்குப் பதிலா பொணந்தான் வரும்…தண்ணியப் போட்டுட்டு சலம்பிட்டு வருவானுங்க…எவனாவது நெல தடுமாறி விழுந்தா அவனக் கொண்டு வீட்டுல விடச் சொல்வானுக…அதுதான் சவாரி அப்பல்லாம்…அவிங்ஞகிட்டப் பேரம் பேச முடியுமா? வண்டிய அடிச்சி நொறுக்கிட்டுப் போயிட்டானுகன்னா? ஒன்ன எவன்டா இங்க நிக்கச் சொன்னது மயிருன்னு ஒரு தடவ சண்ட வந்திச்சு பாத்துக்க…அன்னைக்குத் தப்பிச்சதுதான்…ரெண்டாவது கொலயப் பண்ண வைக்காதடான்னு சலம்புறானுக…? என்னா பண்ணுவ? கொடுத்தத வாங்கிட்டு கொண்டு விட்டமா, பொழச்சமான்னு கெடக்குறதுதான்…அப்டியெல்லாம் கஷ்டப்பட்டுப் பிடிவாதமாப் பிடிச்சதுதான் இந்த எடம்… இங்கருந்து மூணு கிலோ மீட்டர் கடந்து ஒரு பொட்டல் கெடக்கு…அங்ஙனதான் ஒரு பஸ்ஸ_ எப்பவாவது வந்து திரும்பும். பக்கத்துல ஏகப்பட்ட ப்ளாட்டுக… அங்கனக்குள்ள பஸ்-ஸ்டான்டு வரப்போவுதுன்னு சொல்லிச் சொல்லியே அந்த எடத்தப் ப+ராவும் வித்துப் புட்டானுக…ஒரு டீக்கடை கூடக் கெடயாது அங்க…பதிலா ஒரு தியேட்டர்தான் வந்திச்சு…அதுவும் கொஞ்சநாளக்கு ஓடிச்சு…இப்போ அதுவும் கோடவுனாக் கெடக்கு…ஏதோ டயர் கம்பெனி…அன்னைக்கு இந்த எடத்தவிட்டு நா ஓடியிருந்தன்னா இன்னைக்கு ஒங்களுக்கெல்லாம இத்தன சுளுவா ஒரு பிடி கெடைக்குமா? -சின்னையனின் பேச்சில் வாயடைத்துத்தான் போனார்கள் எல்லோரும். அன்றைக்கு அங்கு நின்ற ஏழெட்டு வண்டிகளை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்துக்கொண்டவனே அவன்தான். தனக்குச் சவாரி போய்விடும் என்று நினைத்திருந்தால் இது சாத்தியமா? அவனுக்குத்தான் நிரந்தரச் சவாரி என்று பிடிமானம் கிடைத்திருந்ததே? வீடுகள் பெருகப் பெருகத்தானே தன்னால் மட்டும் இனி முடியாது என்கிற எண்ணமே வந்தது. அவர்களெல்லாம் கூட இன்று தன்னோடு இல்லை. எங்கே போனார்கள் என்ன ஆனார்கள்? என்று கூடக் கண்டுகொள்ளவில்லை இவன். ஓரிருவர் மட்டும் டவுனில் ஆட்டோ ஓட்டுவதை அறிவான் இவன். அவர்கள்கூட வெறும் ஆட்டோவைத்தான் ஓட்டிச் செல்கிறார்கள். சவாரியோடு பார்ப்பது அப+ர்வம்தான். “குறைஞ்சது முப்பது நாப்பது ஆட்டோவாவது பஸ்ஸ்டான்டுல சும்மா நிக்குதுண்ணே…எந்தச் சவாரியும் இல்லாம வெட்டிக்கு….விடிகாலம்புற ரெண்டுலேர்ந்து அஞ்சு வரைக்கும் சவாரிபுடிச்சாத்தான் உண்டு. தெனசரி அப்டித் தூக்கம் முழிக்க முடியுமா? அப்டிச் சவாரி புடிச்சி எங்கயாவது போய் முட்டுறதுக்கா? பெறவெல்லாம் பகல்ல அவிங்ஞ ராஜ்யந்தான்…இந்தப் பக்கம் நீதிமன்றத்துலேர்ந்து iஉறவேஸ்ல நெட்டுக்க எவனும் எந்தச் சவாரியும் பிடிக்க முடியாது…அந்தப் பக்கம் வண்டியே சும்மாவாச்சுக்கும்கூடக் கொண்டு போக முடியாதுன்னா பார்த்துக்கயேன்…வண்டி ஆக்ஸிடென்ட் அது இதுன்னா எதுவும் கேட்டுக்க முடியாது…ஒடனே கூடிடுவானுங்க…கேசப் போடட்டும் பார்த்துக்குவம்னு மொறப்பாப் பேசுவானுங்க…இல்லன்னா அடிபட்டவன் கொடுத்தத வாங்கிட்டுக் கம்னு போகணும்…இதான் நெலம இன்னைக்கு…” நிற்க நேரமில்லாமல் போகிற போக்கில் நோ பார்க்கிங் ஏரியாவில் வண்டியை ஆஃப் செய்யாமல் ராமலிங்கண்ணன் அன்றொரு நாள் பேசிவிட்டுப் போனார். எதிலும் உள்ளே நுழைந்து பார்த்தால்தான் தெரியும் கஷ்ட நஷ்டங்கள்! இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதுபோல் புலம்புகிறாள் செல்லாயி. வாடகைக்கு எடுத்து கொடுக்க முடியாமல் திணறும் ஆசாமிகளையும் பார்க்கத்தான் செய்கிறான் அவன். எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து யோசனையிலேயே ஆட்டோ ஓட்டக் கற்றுக் கொள்வதும் தள்ளித் தள்ளிப் போயாயிற்று. இனிமேல் தன்னால் கண்டிப்பாக முடியாது. ஆட்டம் கண்டு போச்சு ஒடம்பு. அன்றொரு நாள் சிக்னலில் போதையில் நிலை தடுமாறி வண்டியிலிருந்து எகிறி விழுந்த போது உயிர் தப்பித்தது தம்பிரான் புண்ணியம். பின்னால் வந்த பஸ் எப்படி சடனாய் நின்றது. ஒரு கணம் உயிர் போயல்லவா வந்தது? அன்று இறந்திருந்தாலும் மூர்ச்சையில் அப்படியே உயிர் பிரிந்திருக்கும். எல்லாம் செல்லாயி தாலி பாக்கியம். ஆனால் அவள் பாடு பெரும்பாடாய்த்தானே போய் விட்டது இன்று? “நா சொல்றதையும் நீ கேட்கல…நீயாவும் எதுவும் செய்யல…வறட்டுப் பிடிவாதத்துல காலத்தக் கழிச்சிட்ட…அப்புறம் இந்த ரெண்டு புள்ளைகள வச்சிக்கிட்டு நா எத்தன நாளைக்குய்யா லோல் படுறது? நா என் ஆத்தா வீட்டுக்குப் போறேன்…தெனம் அவளோட கூலி வேலைக்குப் போனா ஏதாச்சும் கெடைக்காதா? ஏதோ ஊருணி தோண்ட,வாய்க்கா கட்டன்னு தெனம் நூறு ரூபா கொடுக்குறாகளாமுல்லய்யா…அதுவேணா கெடக்குதான்னு பார்ப்பம்…ஆனா ஒண்ணு நா போயிட்டனேன்னு நீ ஜாலியா இருந்துப்புடலாமுன்னு மட்டும் நெனச்சிப்புடாத…தெனம் ஏதாச்சும் துட்டு வந்தாகணும் பார்த்துக்க…அப்புறம் நா மனுஷியா இருக்க மாட்டேன் ஆம்மா…உன்னக் கட்டின பாவத்துக்கு இன்னும் என்னென்ன சகிச்சிக்கிட்டுப் போகணுமோ?” – சபதம் போட்ட மாதிரில்ல போயிட்டா? ஆனா ஒண்ணு என் செல்லாயி செல்லாயிதான்…உன்னோட வாழ மாட்டேன்னு மட்டும் இன்னைக்கு வரைக்கும் அவ வாய்லேர்ந்து வரல்ல…அதுக்காகவாவது அவளையும் எம்புள்ளைகளையும் நா காப்பாத்தியாகணும்…இல்லன்ன நா மனுஷனேயில்ல…” காலையிருந்து ஒரு சவாரிகூட வந்து சேராத சின்னையா ரொம்பவும் மன வேதனையில் உழன்று போனான். அன்று அந்தத் தாங்க முடியாத வேதனைதான் தன்னை இந்தப் பழைய இடத்திற்கு சற்று சீக்கிரமே கொண்டு வந்து சேர்த்துவிட்டதா என்று தோன்றியது அவனுக்கு. தலைக்கு மிஞ்சிப் போச்சு…இனி என்னத்தச் செய்றது? முட்டிக்கிட்டுச் சாகட்டும் என்பதுபோல் போக்குவரத்தைச் சரி செய்து சரி செய்து ஓய்ந்து போயிருந்த அந்தக் கான்ஸ்டபிள் ஓரமாய் நின்று அனுபவித்துப் புகையை விட்டுக் கொண்டிருந்தார். பொது இடத்தில் புகை பிடிக்கக்கூடாது என்பதை அறிந்தவன்தான் என்பதைப்போல் யாரும் பார்க்கும் முன் ஊதித் தீர்த்துவிடுவோம் என்பதான அவசரம்…விரல் நுனிக்கு வரும்வரை இழுத்து விட்டால்தான் கொடுத்த காசுக்குப் பலிதம்…அதற்குள் உயரதிகாரிகள் யாரும் வந்து விடக்கூடாதே என்கிற பதை பதைப்பு …. அந்த நேரம் கிடைத்த இடைவெளியோ என்னவோ, சின்னையனையும் அன்று ஏனோ ஒன்றும் சொல்லவில்லை அவர். அவனையே அவர் கவனித்த மாதிரித் தெரியவில்லை. “உற_ம்…உற_ம்…அநியாயம்…அநியாயம்…இப்படி வசதியுள்ளவங்களெல்லாம் லட்ச லட்சமாய்க், கோடி கோடியாய்க் கொட்டிக் கொடுத்து இப்படி இடத்தையும் மடத்தையும் பிடித்துக்கொண்டால் தன்னை மாதிரி ஓட்டாண்டிகள் என்ன செய்வது? எங்கு போவது? செத்துப் போ என்கிறார்களா? ரோட்டை அடைத்துக் கொண்டு மொக்கை மொக்கையாய் கார்களை வா ங்கிக் கொண்டு…ஒரு முட்டு…அம்புடுதே…ஆள் சட்னி…என்கிற கதையாய் அப்படியானால் நடப்பவர்களுக்கு என்னதான் பாதுகாப்பு? ஏன்ய்யா ரோட்டுக்கு வர்றீங்க? சாகறதுக்கா? சாலையில் நடப்பவர்கள் ஏற்கனவே கணிசமாய்ய் குறைந்து போய்க் கிடக்க, ஒதுங்கி, ஒதுங்கி, கைகளை இடுக்கிக் கொண்டு, ஒருக்களித்துக் கொண்டு, 5பக்கவாட்டிலே இடத்தை விலக்கிக் கொண்டு நுழைந்து நுழைந்து, பயந்து பயந்து போய்க் கொண்டிருக்கிறார்களே? எதுக்கு வம்பு? என்று இனி வீட்டில் கிடக்க வேண்டியதுதானா? ஒழுங்காய் போயிரு…இல்லன்னா இடிச்சுத் தள்ளிப்புடுவேன்…ஆம்ம்ம்மா…என்று உயிருக்கு விலையற்றுப்போய் வாகனங்கள் கண்ணு மண்ணு தெரியாமல் பறக்கின்றன. அம்மாடி…இம்புட்டுக் கூட்டத்துல, சன நெருக்கடில ஆட்டோவ ஓட்டுறதாவது? தப்பிச்சண்டா சாமி…எனக்கிருக்கிற நடுக்கத்துக்கு என்னைக்கோ போய்ச் சேர்ந்திருப்பன் போலிருக்கே? போறதப்பாரு…முன் சக்கரம் நுழைஞ்சாப் போதும்னு…அப்டியெல்லாம் நாமளும் பழகியிருக்க முடியுமா? இந்த நெருக்கடிலதான என்னோட ரிக்ஷாவ ஓட்டிட்டு வர்றேன்…தெனம் ஒரு ரவுண்டாவது வந்துடறேன்ல…பெறவு நா ஏன் பயன்படணும்? மனசு பயப்படுதே…உடம்பு நடுங்குதே…அது சரி, இப்ப நெனைச்சு என்ன பண்ண? எல்லாமும் முன்னமயே செய்திருக்கணும்…விட்டாச்சு….கண்கெட்டபெறவு சூரிய நமஸ்காரம்ங்கிறது எனக்குத்தான் பொருந்தும் போல… தனது வண்டி ஸ்டான்ட் இருந்த இடத்தில் எந்த ஒரு துளி அடையாளம் கூட இன்று கண்டுபிடிக்க முடியாத வகையில் வரிசையாய்த் தலையெடுத்திருந்த நகைக் கடைகளும் ஜொலிக்கும் அலங்காரங்களும் அந்தப் பகுதிக்கே கண்ணை கூசச்செய்யும் பளீர் வெளிச்சத்தையும், ஒரு பணக்கார டாம்பீ மிடுக்கையும், சோபையையும், கொடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து பிரமித்துப்போய் வாயடைத்து நிற்கிறான் சின்னையன். என்னென்னவோ நினைப்பெல்லாம் இன்று ஏனோ கச்சை கட்டிக்கொண்டு வரிசையாய் நின்று தொந்தரவு செய்கின்றன! “எங்கூட இருந்தவனெல்லாம் எவனுமே இல்லை இன்னைக்கு. நா ஒருத்தன்தான் கிறுக்கன் மாதிரி அலைஞ்சிக்கிட்டுக் கெடக்கேன்…ஏதாச்சும் சவாரி கெடைச்சிருந்திச்சா நாம்பாட்டுக்குப் போயிட்டிருப்பேன்…இந்த வேண்டாத நெனப்பெல்லாம் வராதுல்ல? கெடக்குறது கெடக்கட்டும் கெழவியக் கொண்டு மனைல வைங்கிற கதையால்ல இருக்கு இன்னைக்குப் பாடு…ஆம்மா இன்னைக்கு என்னா கௌம? நாங்கெடக்குற கெடப்புல எதுதே ஞாபகம் இருக்கு? ஐயய்யோ…மாமி சவாரில்ல இன்னைக்கு? அடப் பாவமே….சாயங்காலம் சீக்கிரமுல்ல வரச் சொல்லிச்சு…கோவிலுக்குல்;ல கூட்டிட்டுப் போகணும் அவுகள? நாம்பாட்டுக்குக் கெடக்கேன்…? மாமி, மன்னிச்சிக்கிடுங்க மாமி…இதோ வந்திட்டேயிருக்கேன்…பறந்து வந்திடறேன்….அஞ்சு நிமிஷத்துல….” “வந்திட்டயா…சின்னையா…ஏண்டாப்பா இன்னைக்கு இத்தனை தாமசம்? நாந்தான் நேத்தைக்கே சொன்னனேல்லியோ? நாளைக்குப் பிரதோஷம்னு…சித்த சீக்கிரம் வரமாட்டியோ? கூட்டம் வந்திடுத்துன்னா நன்னா தரிசனம் கிடைக்காதுடாப்பா…அதுக்கு நீதான் உதவணும் நேக்கு…சரி…சரி…வண்டியை எடு….விடு சீக்கிரம்…” “நீங்க ஒண்ணுத்துக்கும் கவலைப்படாதீங்க மாமி…நானாச்சு கொண்டு சேர்க்கிறதுக்கு? நேரா பிராகார வாசலுக்கே உங்களக் கொண்டு எறக்கிடுறேன் போதுமா? அங்க நிக்கிற போலீசு நமக்கு வேண்டியவுகதான்…உங்களப் பார்த்தாலே அவருக்கு வாயடைச்சுப் போகுமாக்கும்…விழுந்து கும்பிடாம இருந்தாச் சரி…நானாச்சு பேசாம வாங்க…” “நீ இருக்கிறவரைக்கும் எனக்கு உன்னோட ரிக்ஷாதாண்டாப்பா…தப்பித் தவறிக் கூட ஆட்டோலயோ, பஸ்லயோ போயிடமாட்டேன்…எத்தன வருஷமா உன் வண்டில வந்திண்டிருக்கேன்? சொச்ச காலத்தையும் இப்டியே ஓட்டிடறேன்…உலகம் எப்டியோ மாறிட்டுப் போறது? யாருக்கு வேணும் இந்த டாம்பீகமெல்லாம்…? உன் வாகனம்தான் சுகம் எனக்கு…!” ………6……………… – 6 – பொன்னகரம் பிச்சு மாமி வாய்விட்டுப் புகழும் ஆத்மார்த்தமான வார்த்தைகளின் சுகானுபவத்தை காது குளிரக் கேட்டு அனுபவித்துக் கொண்டே, தாமதமாகி விட்டதே என்கிற குற்ற உணர்ச்சியின்பாற்பட்டு கிடைக்கிற புண்ணியத்தில் தனக்குக் கொஞ்சமேனும் மாமியின் மூலம் வந்து சேரட்டுமே என்ற ஆதங்கத்தில் பெடலை அழுத்தி அழுத்தி மிதித்துப் பாய்ந்து கொண்டிருக்கிறான் சின்னையன். அவனுக்குச் சற்று முன்னே இன்னும் எஞ்சிப் போன அடையாளங்களின் சாட்சியாய் “Nஉற…Nஉற…” என்கிற ராக லயத்தோடு, “டொக்கடிக்கு…டொக்கடிக்கு” என்கிற சீரான காலடிக் குளம்பு ஒலியோடு, ஒரேயொரு குதிரை வண்டியும் சிட்டாய்ப் பறந்து கொண்டிருக்கிறது

வானுக்கு கீழே அதன் வாழ்க்கை

கீழே குனிந்தவுடன்
பின்வாங்கி ஓடும்
நாம் கல்லைத்தான் தேடுகிறேதம்
என்று நினைத்து
நேருக்குநேர் அதன் கண்களை
சந்தியுங்கள்
புனிதப் பேதருக்கே தயாராகும்
அந்த நாய்கள்
எதையுமே அதன் கண்களால்
காணமுடியுமென்பதால்
அது எதையுமே கண்டு
ஆச்சர்யம் கெதள்வதில்லை
வெட்கம் கெதண்டு,
மனிதர்களைப் பேதல்
அது காமத்தைக் கூட
மூடி மறைப்பதில்லை
வானுக்கு கீழே அதன் வாழ்க்கை
திறந்த புத்தகமாய்…
சுவர்களுக்கு மத்தியில் தங்களை
மறைத்துக் கெதள்ளும்
மனிதர்களைக் கண்டு
எள்ளி நகையாடுகின்றன
வீதியில் படுத்துறங்கும் நாய்கள்.

இடர்மழை

நமக்கிடையே வான் தெளித்த
அடர்த்தியான மழையைத் தவிர்த்து
வேறெவருமிருக்கவில்லை
தூறல் வலுத்த கணமது
வீதியின் ஒரு புறத்தில் நீ
இதுவரை கவிழ்ந்திருந்த தலையை
முக்காட்டுக்குள்ளிருந்து நிமிர்த்தி
எதிரே வருமென்னைப் பார்க்கிறாய்
காற்றடித்து வலுத்த மழைக்குத் தப்பியோட
நானிருக்கும்போது நீ முயற்சிக்கவில்லை
உன் நாணத்தை முழுமையாக வழித்தெறியத்
தூறலுக்குத் தெரியவுமில்லை
உன்னிடமோ என்னிடமோ
அந்திவேளையின் மழையை எதிர்பார்த்த
குடைகள் இல்லை
வானிலிருந்து பொழியும் நீர்த்துளிகளைத் தடுக்க
மேனிகளுக்குத் தெரியவுமில்லை
இத்தனைகள் இல்லாதிருந்தும்
ஆண்மையென்ற பலமிருந்து நான்
அருகிலிருந்த என் வீட்டிற்கு ஓடுகிறேன்
காற்சட்டையில் சேறடித்திருக்கக்
கவலையேதுமில்லை
தேய்த்துக் கழுவ அம்மா இருக்கிறாள்
நான் மறையும்வரை காத்திருந்து நீயும்
புத்தகங்களை நெஞ்சில் அணைத்து
பேருந்து நிறுத்தம் நோக்கி
ஓடத்துவங்குகிறாய்
திரைக்காட்சிகளில் வரும்
அழகிய இளம்பெண்களின்
மழை நடனங்கள் பற்றிய கனவுகளோடு
யன்னல் வழியே பார்க்கிறேன் உன்னை
ஆங்காங்கே ஒழுகிவழியும்
பேரூந்து நிறுத்தத்துக்குள்
நீ முழுவதுமாக நனைந்திருக்க
அடிக்கடி பின்னால் திரும்பி
சேற்றோவியம் வரைந்திருந்தவுன்
நீண்ட அங்கியைக் கவலையுடன்
பார்த்தவாறிருக்கிறாய்
தேய்த்துக் கழுவுவது நீயாக இருக்கக்கூடும்

விடுமுறையில் இருப்பவன்

அடையாள அட்டைகைக்குட்டைகடிகாரம் இப்படிஏதாவதொன்றைமறந்து வைத்துவிட்டு அலுவலகம் வருவதுஎனக்குப் பழக்கமாயிருந்ததுஇன்று நடந்ததோஎல்லாவற்றையும்விட உச்சம்என்னையேமறந்து வைத்துவிட்டுவந்துவிட்டேன்!

நான்கு உயிர்களும்

றக்கவே முடியாதபடி மனதில் ஆழப் பதிந்து போனது அந்த வருஷ ‘ஹோலிப் பண்டிகை’. ஹோலி; ஹோலி என்று ஜாலியாய்க் கூவியபடி ஆண்களும் பெண்களும் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை வாரி இறைத்தும், சித்தாள்ப் பெண்கள் ஹோலிப் பாடல்கள் பாடி என்ஜீனியர்களிடமும் ஆபிஸர்களிடமும் காசு கேட்டுக் கலாய்த்துக் கொண்டும் சந்தோஷமாய் அலைந்து கொண்டிருந்த போது, விதி எல்லோருடைய முகங்களிலும் கரியைப் பூசி அழகு பார்த்த கறுப்பு தினமானது அன்றைக்கு.
ஹோலிப் பண்டிகைக் கொண்டாட்டங்களும் மகிழ்ச்சி ஆரவாரங்களும் ஒரு பக்கம் உற்சாகமாக அரங்கேறிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் பால்ராஜும், நரேந்திரனும் மறுநாள் போட வேண்டிய சிலாப் கான்கிரிட்டுக்கான ஆயத்தப் பணிகளில் மும்முரமாய் இருந்தார்கள். அப்போது திடீரென்று வேலை ஆட்களின் கூடரங்களிலிருந்து அழுகையும் கூச்சலுமாய் சத்தம் கேட்கத் தொடங்கவும் ஏதோ விபரீதம் என்று புரிந்து இருவரும் கூடாரம் நோக்கி ஓடினார்கள்.
வேலை ஆட்களின் உபயோகத்திற்காகக் கட்டப் பட்டிருந்த தண்ணீர் தொட்டியின் இரண்டு சுவர்கள் அப்படியே சரிந்து அப்போது குளித்துக் கொண்டும் தண்ணீர் பிடித்துக் கொண்டு மிருந்தவர்களின் மீது விழுந்து ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் விழுந்த சுவற்றிற்கு அடியில் மாட்டிக் கொண்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்கள். பார்த்த மாத்திரத்திலேயே எல்லோருக்கும் நெஞ்சு பதறியது. தண்ணீர்த் தொட்டியில் நீர் நிரப்பிய டேங்க்கர் லாரி ஒன்று அவசர அவசரமாக வெளியேறிக் கொண்டிருந்தது.
சூழல் முழுக்க பதட்டமும் அழுகையும் அவசர ஓட்டங்களுமாய் இருந்தது. எல்லோரும் தங்கள் தங்கள் குழந்தை குட்டிகளும், உறவினர்களும் பத்திரமாய் இருக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டார்கள். தைரியமான சிலர், இடிபாடுகளுக்கிடையில் சிக்கிக் கொண்டிருந்தவர்களை வெளி யில் இழுத்துப் போட்டுக் கொண்டிருந்தார்கள். விழாது நின்று கொண்டிருந்த மற்ற இரண்டு சுவர்களும் எப்போதும் விழுந்து விடலாம் என்பது போல் நிறைய விரிசல்களுடன் பயமுறுத்திக் கொண்டிருந்தன.
“பத்துப் பேர்ருக்கு மேல செத்துட்டாங்க போலருக்கு….”
“இன்னும் கூட இருக்கும்கிறாங்க; குறைஞ்சது இருபது பேர் காலின்னு பேசிக்கிறாங்க”
“அதெல்லாம் சும்மா யாரோ பீதியக் கெளப்பி விடுறாங்க; உயிர்ச் சேதமெல்லாம் ஒண்ணுமில்ல; கொஞ்சப் பேருக்கு அடி பட்டுருக்கு அவ்வளவு தான்….”
பலரும் பலவிதமாய்க் கூடிக்கூடிப் பேசினார்கள். உண்மை நிலவரம் யாருக்கும் தெரிய வில்லை. எல்லாம் அனுமானங்கள், கைகால் முளைத்து கதைகளாகி உலவத் தொடங்கின.
அரசு அலுவலர்களுக்கான அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டும் பணி அது.
ஹைதராபாத் கம்பெனிக்கு டெண்டர் கிடைத்து அப்போது தான் வேலைகள் தொடங்கி இருந்தன.பெரும்பாலான கட்டிடத் தொழிலாளர்கள் ஹைதராபாத்திலிருருந்தே வரவழைக்கப்பட்டு, அவர்களும் வேலைத்தளத்தி லேயே கூடாரங்கள் அமைத்துத் தங்க வைக்கப் பட்டிருந்தார்கள். அந்தத் தொழிலாளர்களின் உபயோகத்திற்காகக் கட்டப் பட்டிருந்த தண்ணீர்த் தொட்டிதான், டேங்க்கர் லாரி மூலம் தண்ணீர் நிரப்பப் பட்டுக் கொண்டிருந்தபோது இடிந்து விழுந்து விட்டது. செய்தி கேள்விப் பட்டதும் கம்பெனியின் முக்கியப் பொறுப்பிலிருந்தவர்கள் எல்லோரும் அடித்துப் பிடித்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு ஓடி வந்தார்கள்.
“ஏதாவது வண்டி ஏற்பாடு பண்ணுங்க; அடிபட்டவங்கள ஆசுப்பத்திரிக்குக் கொண்டு போகலாம்…..” யாரோ ஒருத்தர் சத்தம் போடவும், சிலர் ரோட்டை வழிமறித்து அப்போது அந்த வழியாய்ப் போன சரக்குகள் ஏற்றும் மினிவேன் ஒன்றை நிறுத்தினார்கள். கைகால் நசுங்கிய, மண்டையில் அடிபட்ட மற்றும் பயத்திலேயே மயக்கமாகி விட்ட என்று மொத்தம் பதினெட்டு உடல்களை வேனில் வரிசையாகப் படுக்க வைத்தார்கள்.
வேனின் டிரைவர் முனகிக் கொண்டிருந்தான். “இதென்ன அக்கிரமமா இருக்கு? வண்டி யெல்லாம் ஒரே இரத்தமா வேற ஆக்குறாங்களே! எங்க ஓனருக்கு யாரு பதில் சொல்றது?”
“கொஞ்சம் உதவி பண்ணுப்பா, உன் வேனுக்கு உண்டான வாடகைய செட்டில் பண்ணீடு றோம்; உன் வண்டியையும் அப்புறம் மேல நாங்களே கழுவிக் கொடுத்துடுறோம்…” என்று அவனை சமாதானப் படுத்தினார் திவாகர் ராவ் – கம்பெனியின் அட்மினிஸ்ட்ரேஷன் மேனேஜர்.
அப்புறம் அவனிடம் “இது விபத்துக் கேஸா இருக்குறதால பிரைவேட் ஆஸ்பத்திரியில எடுத்துக்க மாட்டாங்க….அதால நேரா ஜி.ஹெச்சுக்கே கொண்டு போயிரு….” என்றார்.
“ஏன் செலவாகும்னு பாக்குறீங்களாக்கும்! அவ்வளவு தூரம் ஜி.ஹெச்சுக்குக் கொண்டு போனா, போற வழியிலேயே பாதி உயிர் போயிடும்; அதால பக்கத்துல இருக்குற தனியார் ஆஸ்பத்திரிக்கே கொண்டு போகச் சொல்லுங்க…” உண்ர்ச்சி மேலிட உரிமையாய்ச் சொன்னார் அடிபட்டுக் கிடப்பவர்களின் உறவினர் ஒருவர்.
அவர் சொன்னதைக் கேட்டதும் திவாகரின் முகம் சட்டென்று விழுந்து விட்டது. ”பணம் பெரிசில்ல; எத்தனை கோடி செலவானாலும் கம்பெனி மூலம் நான் ஏற்பாடு பண்றேன்; எங்க வேனுமின்னாலும் கொண்டு போங்க , நமக்கு உயிர் பிழைக்குறது தான் முக்கியம்…” என்றார்.
தேறும் என்று நிச்சயமாய்த் தெரிந்தவர்களை மட்டும் தங்களின் மருத்துவமனையில் அனுமதித்துக் கொண்டு, மற்ற இழுபறி கேஸ்களை தங்களின் ஆம்புலன்ஸ் வண்டியிலேயே ஜி.ஹெச். அனுப்பிவைத்தது அருகிலிருந்த தனியார் மருத்துவமனை.
”அதுவும் சரிதான்; எல்லோரையும் ஒரே எடத்துல வச்சு சிகிச்சை குடுத்தா என்னமோ ஏதோன்னு பார்க்குறவங்களுக்கெல்லாம் பதட்ட மாயிடாதா….” என்று தங்களுக்குள்ளாகவே சமாதானம் சொல்லிக் கொண்டார்கள்.
விபத்து நடந்த இடத்தில் உடைந்த வளையல் துண்டுகளும், அறுந்த செருப்புகளும், நசுங்கிக் கிடந்த பாத்திரங்களும், சிதறிக் கிடந்த பொம்மைகளும், அங்கங்கே திட்டுத் திட்டாய் உறைந்து கிடந்த இரத்தத் துளிகளும் பார்க்கும் யாருக்கும் சிலீரென்ற ஓர் உணர்வை ஊட்டி
வாழ்தலின் நிச்சயமின்மையை உணர்த்திக் கொண்டிருந்தன.
போலீஸ் வந்து கூட்டத்தைக் கலைத்தது. தீயணைப்புப் படையினர் வந்து விழுந்து கிடந்த சுவர்களுக்கடியில் இன்னும் வேறு யாரேனும் மீட்கப்படாமல் மாட்டிக் கொண்டிருக்கிறார்களா என்று பரிசோதித்தார்கள். மேலும் விரிசல் விழுந்திருந்த சுவர்களுக்கருகில் பொதுஜனம் யாரும் போகாமல் பார்த்துக் கொண்டார்கள்.
“தண்ணித் தொட்டி கட்டியிருக்கிற இலட்சணத்தப் பாருங்க; அஸ்திவாரமே தோண்டாம தரைக்கு மேல அப்படியே ஏனோதானோன்னு கட்டியிருக்குறாங்க…. “
“உடைஞ்சு கிடக்குற சுவர் எதுலயாவது உயிரோட்டமிருக்கா பாருங்க…. காஃபிக்கு சர்க்கரை போடுறது மாதிரி, சிமெண்ட்ட ஸ்பூன்ல அளந்து போட்டுல்ல கட்டிருப்பாங்க போலருக்கு; இப்படிக் கெட்டுனா சுவர் எப்படி ஸ்ட்ராங்கா இருக்கும்? அதான் வாயப் பொழந்துருச்சு….”
“கவர்மெண்ட் என்ஞீனியர்கள் எல்லாம் என்னத்தப் புடுங்குனாங்கன்னே தெரியல….!”
“அதுங்களா, எச்சக்கல நாயிங்க…..கான்ட்ராக்ட்காரன்ட்ட காச வாங்கிக்கிட்டு வாலாட்டிக்கிட்டு எதையும் கண்டுக்காம இருந்துருக்குங்க…..” வேடிக்கை பார்க்கும் பொதுஜனம் போகிறபோக்கில் காண்ட்ராக்டரின் வேலைத்தரத்தை விமர்சித்துப் போனது.
மருத்துவமனை வட்டாரத்திலிருந்து சேதாராங்கள் பற்றிய செய்தி கசியத் தொடங்கியது. ஒரு பதினைந்து வயதுப் பெண், ஐம்பது வயது மூதாட்டி, ஆறு மற்றும் எட்டு வயதில் இரண்டு சிறுவர்கள் இறந்து போயிருந்தார்கள். ஐந்து பேர் இன்னும் கவலைக்கிடமான நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்கள். மற்றவர்கள் அபாயக் கட்டத்தைத் தாண்டி விட்டிருந்தார்கள்.
“இந்த வேலைக்கு இன்சார்ஸு யாருங்க?” மிடுக்காய் இருந்த இன்ஸ்பெக்டர் லோக நாதன் அதிகாரமாய்க் கேட்டார். நாற்பது வயதிலேயே அறுபது வயதுக்குரிய தளர்வுடனிருந்த நரேந்திரன் “நான் தாங்க …”என்றபடி இன்ஸ்பெக்டரின் அருகில் போனார்.தன்னைக் கைது பண்ணி, ஜெயிலில் அடைத்து சித்ரவதை பண்ணுவார்களோ என்ற பயமும் கலக்கமும் அவரின் முகத்தில் அப்பட்டமாய்த் தெரிந்தது.
“வாங்க ஸ்டேஷனுக்குப் போயிட்டு வந்துடலாம்…” தோளில் கை போட்டபடி இன்ஸ்பெக்டர் மிக மரியாதையாகவே அழைத்துப் போனார். ”பயப்படாதீங்க; நீங்க என்ன கொலையா பண்ணீட்டீங்க! எதிபாராம நடந்த விபத்துக்கு நீங்க என்ன பண்ணுவீங்க? ஒரே ஒரு ஸ்டேட்மெண்ட் மட்டும் குடுத்துட்டு திரும்பிடலாம்…. வில்லங்கமில்லாம எப்படி ஸ்டேட்மெண்ட் கொடுக்குறதுன்னும் நானே சொல்லித் தாறேன்….” நரேந்திரனின் காதுகளுக்குள் கிசுகிசுத்த இன்ஸ்பெக்டரின் கண்களுக்குள் கரன்ஸிகள் படபடத்தன. இது அவருக்கு கொழுத்த வாய்ப்பு!
ரீஜினல் டைரக்டர் சேதுராமன் அவசரமாய் அவர்களுக்கு அருகில் வந்து “நீங்க ஸ்டேஷன்ல போயி இருங்க; ஆனா ஸ்டேட்மெண்ட் எதுவும் கொடுக்க வேண்டாம்…. நான் மினிஸ்ட்டர்ட்டப் பேசிட்டு நம்ம வக்கீலையும் அழைச்சுக்கிட்டு ஸ்டேஷனுக்கு வர்றேன்; அப்புறம் மத்ததப் பார்த்துக்கலாம்…” என்றார். நரேந்திரன் பயம் தெளிந்து இன்ஸ்பெக்டரைத் தொடர்ந்தார்.
போலீஸைச் சமாளிப்பது பெரிய விஷயமாய் இருக்கவில்லை. மினிஸ்டரின் போன்காலும் கொஞ்சம் பணமும் போதுமானதாக இருந்தது. ஹோலிப் பண்டிகைக் கொண்டாட்டங் களில் வேலை ஆட்கள் குடித்துவிட்டு தண்ணீர்த் தொட்டியின் மேலேறி ஆட்டம் போட்டதால் தான் சுவர் விழுந்து விட்டதென்று பதிந்து கொண்டார்கள். மினிஸ்டரின் உத்தரவின் பேரில் அந்தப் பகுதி எம்.எல்.ஏ. ஆச்சரியமாய் அதிகக் கூட்டமும் ஆரவாரமும் இல்லாமல் வந்தார். துக்கம் வழிகிற முகத்துடன் காரிலிருந்து இறங்கி, வேலைஆட்களிடம் போய் ஆறுதலாய் ஏதோ பேசினார். வேலை ஆட்களுக்கும் மௌனமாய்க் கண்ணீருடன் கேட்டுக் கொண்டார்கள். அப்புறம் விபத்து நடந்த பகுதியைச் சுற்றிப் பார்த்து விட்டு விருட்டென்று கிளம்பிப் போய்விட்டார்.
அவர் கிளம்பிப் போன அடுத்த நிமிடமே, அதற்காகவே காத்துக் கொண்டிருந்தது போல, அந்தப் பகுதி சுத்தமாய்த் துடைத்தெடுக்கப்பட்டது. விபத்து நடந்ததற்கான எந்த அடையாளமும் இல்லாமல் இரத்தம் தோய்ந்த, விரிசல் கண்டிருந்த சுவர்களும் அப்புறப் படுத்தப் பட்டன. ஆஸ்பத்திரியில் அபாயக் கட்டத்திலிருந்தவர்களும் இயல்பு நிலைமைக்குத் திரும்பி விட்டார்களென்ற செய்தி வந்ததும் ரீஜினல் டைரக்டருக்கு மூச்சு சீரானது.
விபத்து பற்றிய செய்தியை பெரிது படுத்தாமலிருக்க, பத்திரிக்கைக் காரர்களிடம் தான் பெரிதும் போராட வேண்டியிருந்தது; பெரும் தொகையும் செலவழிக்க வேண்டியிருந்தது. கடைசியில் செய்தியை இருட்டடிப்ப்பு செய்ய முடியாதென்றும் , முக்கியத்துவ மில்லாமல் மூன்றாம் நான்காம் பக்கங்களில் பொடி எழுத்துக்களில் கம்பெனியின் பெயரின்றி வெளியிடவும் ஒத்துக் கொண்டு அதன் படியே வெளியிட்டார்கள்.பணம் பத்திரிக்கை வரையும் பாயும் என்பது நிரூபணமானது.
அடுத்தநாள் களைப்பும் தூக்கமுமாய் அலுவலக அறையில் திவாகர் ராவும் சேது ராமனும் உட்கார்ந்து அடுத்து என்ன செய்யலாம் என்பது பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது, போலீஸின் இன்னொரு பிரிவிலிருந்து தொப்பியும் தொப்பையுமாய் இருவர் வந்து விபத்து பற்றிய விபரங்களை க் கேட்டார்கள். பேச்சில் கறாரான சிடுசிடுப்பு இருந்தது.
“போலீஸுக்குத்தான் ஏற்கெனவே ஸ்டேட்மெண்ட் கொடுத்து பார்மாலிட்டிஸும் பண்ணியாச்சே…..” அலுப்புடன் சொன்னார் திவாகர்ராவ்.
“அது லோக்கல் போலீஸ். நாங்க ….” வந்தவர் முடிப்பதற்குள் சேதுராமன் எழுந்து வந்து அவர்களை பக்கத்து அறைக்குள் அழைத்துப் போனார். கொஞ்ச நேரத்திலேயே சிரித்தபடி அவர்கள் வெளியேறினர். போகிறபோக்கில் “நீங்க எதுக்கும் கவலைப் படாதீங்க; எல்லாத்தையும் நாங்க பார்த்துக்குறோம்… ஏதாவது உதவி வேணுமின்னா தயங்காமப் போன் பண்ணுங்க…” என்று அசடு வழிந்து போனார்கள். சேதுராமனும் திவாகரும் இலேசாய்ச் சிரித்துக் கொண்டார்கள்.
அவர்கள் கிளம்பிப் போன கொஞ்ச நேரத்தில் தும்பைப் பூப்போல வெள்ளை வெளேரென்று வேஷ்டியும் சட்டையும், மிக நிளமான துண்டும் அணிந்திருந்த ஒருவர் தன் பின்னால் ஆறேழுபேர் புடைசூழ புயல் போல வேகமாய் வந்தார். வந்ததுமே ஏக வசனத்தில் ஆரம்பித்தார்.
“இங்க எவன்டா கான்ட்ராக்டர்?” யாரும் அவருக்கு பதில் சொல்லா திருக்கவும் அவர் பாட்டுக்குப் பேசத் தொடங்கினார். “தொழிலாளி உயிருன்னா உங்களுக்கு மயிருக்குச் சமானமாயி டுச்சா… நாலு பேர் தான் செத்துட்டாங்கன்னு ஏன் பொய்த் தகவல் தர்றீங்க? கை, கால் எழந்து நடைப் பிணமா வாழப் போறவங்களுக்கு உங்களோட பதிலு என்ன? கவர்மெண்ட் தந்த சிமெண்ட்ட எல்லாம் வெளிமார்க்கெட்டுல வித்துட்டு சாம்பலக் கலந்து தண்ணித் தொட்டி கட்டுனதால தான் அது சரிஞ்சிடிச்சுன்னு தெரியாதா எங்களுக்கு! இதை நான் சும்மா விடப் போறதில்ல; சாலை மறியல் பண்ணி இந்த விஷயத்தைக் கோட்டை வரைக்கும் கொண்டுபோவேன்….” தாம்தீமென்று குதித்தார்.
அதே வேகத்தில் தன் பரிவாரங்களுடன் போய் வேலை ஆட்களைச் சந்தித்து, “உங்கள எல்லோரும் ஏமாத்தப் பாக்குறாங்க; உங்களுக்கு நியாயம் கிடைக்கப் போராடுவேன்….” என்றபடி நடுவீதியில் நின்றபடி மீட்டீங் போலப் பேசத் தொடங்கினார்.
“இதென்ன ஸார் புதுக் குழப்பம்! சாலை மறியல் அது இதுன்னு பயமுறுத்துறார். கூப்புட்டு ஏதாவது குடுத்து அனுப்பலாமா?” திவாகர் பதறினார்.
“இவனெல்லாம் வெத்து வேட்டு… சும்மா ஃபிலிம் காட்டுறான்….போனதடவை வார்டு எலக்சன்ல நின்னு டெபாஸிட் காலி; இவனுக மாதிரி ஆளுக மிரட்டலுக்கெல்லாம் பயந்து குடுக்க ஆரம்பிச்சா, கம்பெனிய வித்தாலும் குடுத்து மாளாது; ஈசல் மாதிரி வந்துக்கிட்டே இருப்பா னுங்க…. அதனால கண்டுக்காம விட்டுடு; அவனே குதுச்சு அடங்கி காணாமப் போயிடுவான்; அப்படியும் போகலைன்னா, நம்ம போலீஸ் ப்ரண்டுக எதுக்கு இருக்குறாங்க! கூப்பிட்டுச் சொன்னா புடிச்சுட்டுப் போயி பொய்கேசப் போட்டு நாலு தட்டுத் தட்டி அனுப்புனா, அப்புறம் இந்தப் பக்கம் தலை வச்சே படுக்க மாட்டாங்க….” என்றார் சேதுராமன்.
அப்படியே தான் நடந்தது. “தொழிலாளத் தோழர்களே….” என்று ஆரம்பித்து அரை மணிநேரம் பேசினார். அவருடன் வந்த கைத்தடிகள் மட்டும் அவ்வப்போது கைதட்டினார்கள். வேலை ஆட்கள் யாரும் அவர் பேச்சில் ஆர்வம் காட்டாது ஒதுங்கி நிற்க, இங்கு எதுவும் பெயராது என்று தெரிந்து ஆளுக்கொரு பக்கமாய்ச் சிதறிப் போனார்கள்.
லேபர் ஆபிஸிலிருந்து இரண்டு பேர் வந்தார்கள். ஏகப்பட்ட கேள்விகள்! இறந்தவர் களின் பெயர்கள் எதுவும் தினசரி ரோல் ரிஜிஸ்ட்டரிலேயே இல்லை. யாருக்கும் எந்த விதமான விபத்துக் காப்பீடும் எடுக்கப் பட்டிருக்கவில்லை. திவாகர்ராவ் முழிமுழி என்று முழித்தார். சேதுராமன் தான் சாமர்த்தியமாய்ப் பேசிச் சமாளித்து, அலுவலகத்தில் வந்து அவர்களைக் கவனிப் பதாய் உறுதி அளித்து அனுப்பி வைத்தார்.
போஸ்ட்மார்ட்டம் முடிந்து செத்துப் போனவர்களின் உடல்கள் ஜி.ஹெச்.சிலிருந்து வருகிற செய்தி கிடைத்ததும் சேதுராமன் பரபரப்பானார்.
“பாடிய எந்தக் காரணத்துக்காகவும் வேலை ஆட்களின் கூடாரங்களுக்கு கொண்டு வரக் கூடாது.ஆஸ்பத்திரியில் இருந்தபடியே சுடுகாட்டிற்கு கொண்டு போய் இறுதிச் சடங்குகள நிறைவேற்றி விடுங்கள்.பாடிய இங்கு கொண்டு வந்தா பலரும் பலவிதமாய் கிளப்பி விடுவார்கள். அப்புறம் வேறு பிரச்சினைகள் வரலாம்….” சேதுராமன் கண்டிப்பாய் சொல்லி விட்டு அவசர அவ சரமாய் கிளம்பிப் போனார்.
வெட்டியானிடம் சொல்லி குழி எல்லாம் வெட்டி தயாராக வைத்திருந்தார்கள். மாலை 5 மணிக்கெல்லாம் நான்கு உடல்களும் அமரர் ஊர்தி மூலம் சுடுகாட்டிற்கு வந்து சேர்ந்து விட்டன. திவாகர் ராவிற்கு அப்பாடா என்று இருந்தது.இன்றைக்காவது சீக்கிரம் வீட்டிற்குப் போய் கொஞ்சம் தூங்கலாம் என்று நினைத்துக் கொண்டார்.ஆனால் அது அவ்வளவு சுலபமில்லை என்று
அதற்கப்புறம் நிகழ்ந்தவை உணர்த்தின.
இறுதி சடங்குகள் செய்ய சுடுகாட்டிற்கு வர, வேலை ஆட்கள் மறுத்தார்கள்.தங்களின் பெரிய மேஸ்திரி ஹைதராபாத்திலிருந்து வந்த பின்பு தான் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிப் போம் என்று முரண்டு பண்ணினார்கள். சுடுகாட்டிற்கு வெளியே பிணங்களை இறக்கி விட்டு அமரர் ஊர்தி சென்று விட கம்பெனி ஆட்கள் பிணங்களுக்கு காவல் இருந்தனர்.திவாகர் ராவும் மற்றும் சிலரும் வேலை ஆட்களை சமாதானப் படுத்த முயன்று தோற்றுக் கொண்டிருந்தனர்.
“காலைலருந்து இவங்க எதைப்பத்தியும் பேசாம அமைதியா இருந்துட்டு இப்பப் போயி பெரிய மேஸ்திரி வரணும்னு சொல்றாங்கன்னா அதனோட உள்ளர்த்தம் வேற. செத்துப் போனவங்களுக்கு நஷ்ட ஈடு பத்தி பேசி தீர்மானிக்க, பிணங்களை அப்புறப் படுத்தும் முன்பேயே நினைக்கிறார்கள்.அதை வெளிப்படையா கேட்க கம்பெனி விசுவாசம் தடுக்குறதால பெரிய மேஸ்திரி வரணும்னு ஜால்சாப்பு சொல்றாங்க…..” நரேந்திரன் திவாகர் ராவிடம் சொல்ல அவர் சேதுராமனை அவருடைய செல்போனில் தொடர்பு கொண்டார்.
“நஷ்ட ஈடு பத்தி எல்லாம் நானோ நீயோ தீர்மானிக்க முடியாது.மேனேஜிங் டைரக்டர் தான் தீர்மானிக்கணும். நான் அங்க இருந்தா அவங்க என்கிட்ட நஷ்ட ஈடு பத்தி கேட்பாங்கன்னு தான் நான் அப்பவே ஆபிஸீக்கு வந்துட்டேன்.எப்படியாவது சமாளித்து சுமுகமாய் பிணங்களை அடக்கம் செய்கிற வழியைப் பார்……” என்று சிடுசிடுத்தார் சேதுராமன்.
இருட்டிக் கொண்டு வந்தது. குண்டும் குழியும் மனித நரல்களாயும் கிடக்கிற முள் பாதைக்குள் பிணங்களை எப்படி எடுத்துச் செல்வது என்று எல்லோருக்கும் கவலை மேலிட்டது. பிணங்கள் வேறு சிதைந்து துர்நாற்றம் வீசத் தொடங்கி இருந்தன.
இரவு பதினோறு மணியைத் தாண்டியும் வேலை ஆட்கள் மசிவதாய்த் தெரிய வில்லை. பெரிய மேஸ்திரி வருவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.இந்தா இருக்கிற ஹைதராபாத் திலிருந்து வருவதற்கு ஏன் இவ்வளவு தாமதம்? அவருக்கு தகவல் சொல்லப்பட்டதா? ஒருவேளை கம்பெனி அவரைப் போகக் கூடாதென்று ஹைதராபாத்திலேயே தடுத்து நிறுத்தி விட்டதா? ஒன்றும் உறுதியாய்த் தெரியவில்லை. மீண்டும் ரீஜினல் டைரக்டர் சேதுராமனைத் தொடர்பு கொள்ள அவர் ஏகப்பட்ட உஷ்ணத்தில் கத்தினார்.
“இதைக் கூட சமாளிக்க துப்பில்லைனா நீ என்ன அட்மினிஸ்ட்ரேஷன் மானேஜர்? எம்.டி. கிட்ட நஷ்ட ஈடு பத்தி பேசிட்டேன்.அவர் தலைக்கு பத்தாயிரமோ பதினைஞ்சாயிரமோ கம்பெனி சார்புல கொடுக்கலாம்ங்கிறார். செத்துப் போனவங்க யாருக்கும் இன்ஸீரன்ஸ் கூட நம்ம பண்ணியிருக்கல. இதை எல்லாம் இப்பவே அவங்களுக்குச் சொன்னா என்னை நாற அடிச்சிடு வானுங்க. மெதுமெதுவாத் தான் சொல்லி சம்மதிக்க வைக்கணும்…..” என்று சிடுசிடுத்தவர் கொஞ்சம் கோபம் தணிந்து சொன்னார்.
“எப்படியாச்சும் அவங்களை சுடுகாட்டிற்குக் கொண்டு போயிடுங்க. நான் அங்க வந்து அவங்க கிட்ட பேசிப் பார்க்கிறேன்…” என்று சொல்லி போனை வைத்தார்.
“பிணம் தனியாக இருக்கிறது; பெரிய மேஸ்திரி வரும்வரை பிணங்களுக்கு அருகி லாவது போய் காத்திருக்கலாம்…..” என்று பேசி ஒரு வழியாய் வேலை ஆட்களை எல்லாம் சமா
தானப் படுத்தி சுடுகாட்டிற்கு கொண்டு வந்தார் திவாகர்ராவ்.
சேதுராமன் வந்ததும் வேலை ஆட்களிடம் “ஏன் இப்படிப் ப்ண்ணுகிறீர்கள்? எங்களுக்கும் துக்கமாகத்தான் இருக்கிறது. போட்டோகிராபரை வைத்து போட்டோ எடுத்துக்
கொள்வோம். உங்கள் பெரிய மேஸ்திரிக்கு காட்டிக் கொள்ளுங்கள்…” என்று கூறி கையோடு
கூட்டி வந்திருந்த போட்டோ கிராபரின் மூலம் போட்டோக்கள் எடுத்துத் தள்ளினார்.
அப்புறமும் வேலை ஆட்கள் விரைத்துக் கொண்டு தான் நின்றார்கள்.சேதுராமனின் சமாளிப்புகளை செவிமடுக்கத் தயாரின்றி திரும்பிக் கொண்டார்கள்.அப்புறம் தான் அவர் காரிலிருந்து அந்த பெட்டியை இறக்கினார்.
எல்லோருடைய கண்களிலும் தூக்கத்தையும் துக்கத்தையும் மீறி ஒரு பிரகாசம் ஒளிர்ந்தது. காரிலிருந்து இறங்கிய பெட்டியில் உயர்ரக மதுவகைகள் பாட்டில் பாட்டிலாய் அடுக்கப்பட்டிருந்தன.
“எல்லோருக்கும் குடுங்கப்பா. குடிச்சு மனசை ஆத்திக்கிட்டு பெரிய மேஸ்திரிக்கு காத்திருப்போம்…..”திவாகரைப் பார்த்து கண்சிமிட்டியபடி சொன்னார்.
ஆளுக்கொரு பாட்டிலுடன் ஒதுங்கினார்கள்.குடித்து முடித்து வட்டமாய் உட்கார்ந்து குழறலாய்ப் பேசினார்கள். இதை எல்லாம் நமுட்டுச் சிரிப்புடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் சேதுராமன்.
“பிணம் நாத்தமெடுக்கத் தொடங்கியிருச்சு. இன்னும் எதுக்கு இதுங்களை வச்சு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கனும்; குழிக்குள்ள எறக்கி மண்ணத் தள்ளுங்கப்பா….” என்று ஒரு கூட்டம் அபிப்ராயம் சொல்ல, இன்னொரு கூட்டம் அவனுடன் சண்டைக்குப் போனது.
“பெரிய மேஸ்திரி வரணும்; அதுவரைக்கும் எந்தக் காரியமும் பண்ணக் கூடாது…. பேசித் தீர்க்காமப் பிணத்தப் புதைச்சாச்சுன்னா அப்புறம் ஒத்தப் பைசா கூடக் குடுக்காம கம்பெனி நம்மல ஏமாத்திடும்…..”
“பெரிய மேஸ்திரி என்ன பெரிய புடுங்கியா? ஆக்ஸிடெண்ட் நடந்து ரெண்டு நாளாகுது, இன்னும் வந்த பாடில்ல; அவன் வந்து மட்டும் என்ன பண்ணப் போறான்! கம்பெனிக்கு சாதகமாத்தான் பேசப் போறான்……” ஆளாளுக்கு அடித்துக் கொள்ளத் தொடங்கினார்கள். அவர்களை விலக்கி விடப் போன அலுவலக ஆட்களை தடுத்து நிறுத்தினார் சேதுராமன்.
“சண்டை போடட்டும்; அப்புறம் தான் பிரச்னை ஒரு முடிவிற்கு வரும்….” என்றார் குரூரமாய்ச் சிரித்தபடி. சண்டை போட்டபடியே ஒரு கூட்டம் பிணங்களை எல்லாம் ஏற்கெனவே வெட்டி வைத்திருந்த குழிகளுக்குள் தள்ளி மண் பொட்டு மூடினார்கள். காரியங்கள் எல்லாம் போதையிலேயே மளமளவென்று நடந்தேறின.
“எப்படி சுலபமா முடிச்சுட்டேன் பார்த்தியா?” தன் சாமர்த்தியத்தை தானே ரசித்தபடி திவாகரிடம் சொன்னார் சேதுராமன்.திவாகர்ராவிற்குத் தான் தொழிலாளர்களின் மீது பச்சா
தாபமும் கோபமும் ஏற்பட்டது. போதை தெளியாதவர்கள் சுடுகாட்டிலேயே விழுந்து கிடக்க
மற்றவர்கள் அங்கிருந்து வெளியேறினார்கள்.
— முற்றும்.