சிறுமி காகிதத்தின் மீது
ஏழு கடலின் சித்திரத்தைத் தீட்டுகிறாள்
அதில்
ஏழு மீன்களை நீந்தவிடுகிறாள்
ஏழு மலைகளின் சித்திரத்தைத் தீட்டுகிறாள்
அதன் முகடுகளில்
ஏழு பஞ்சு மேகங்களை மிதக்கவிடுகிறாள்
ஏழு மேகங்கலிருந்து
சில மழை துளிகளை உதிர விடுகிறாள்
ஏழு கடலின் சித்திரத்தைத் தீட்டுகிறாள்
அதில்
ஏழு மீன்களை நீந்தவிடுகிறாள்
ஏழு மலைகளின் சித்திரத்தைத் தீட்டுகிறாள்
அதன் முகடுகளில்
ஏழு பஞ்சு மேகங்களை மிதக்கவிடுகிறாள்
ஏழு மேகங்கலிருந்து
சில மழை துளிகளை உதிர விடுகிறாள்
மழைத் துளிகள் விழுமிடத்தில்
ஒரு பூவின் சித்திரத்தைத் தீட்டுகிறாள்
அதனடியில்
தன் பெயரை எழுதுகிறாள்
இனி அவளை காண்பதென்றால்
ஏழு கடல் ஏழு மலைளைத் தாண்டி
பயணிக்க வேண்டியிருக்கும் நமக்கு
காகிதத்தின் மீது கடல்… பள்ளி கொள்கிறது கவிதை… வாழ்த்துக்கள் ரவி உதயன்…
அருமையான கவிதை .. முடிவில் அசத்தி விட்டீர்கள் ..
மிக அருமை.
நல்லாயிருக்குங்க.
thaalum vanna pencilum eandhi vayathai izhanthu pinne poivida eakkam thantha kavithai