கடைச் சொல்

 
கிளையிலிருந்து
தரைக்கு வீழ்கிற
இலையைப்  போன்றே
கணித நுட்பம்

தவிப்பு மனிதர்களின்
தந்திர வழி என்கிறார்கள் ?

தீர வலிக்குச்செய்து கொள்ளும்
நித்தியப்பணிவிடை என்கிறார்கள் ?

காதல் ஜோடிகளின்
கைகளிலிருக்கிற
கடைசி துருப்புச்சீட்டுஎன்கிறார்கள் ?

போதுமான தொரு
வாழ்விலிருந்து மீளும்
சுய விலகல் என்கிறான் ஞானி
ஒரு வேளை

துடித்தடங்கும்
இக்கயிற்றை அறுத்து
தரையிறக்குகையில்
உடைந்த என் குரல்வளையில்
எஞ்சியிருக்கலாம்

ஒரு தற்க்கொலையின்
காரணத்திற்கான
கடைசிச்சொல்.

2 Replies to “கடைச் சொல்

  1. அந்தக் கடைச் சொல்லை அறிவதில் தான் மானிடத்தின் துயரறுக்கும் மந்திரம் அடங்கியுள்ளது! எத்தனை எத்தனை கடைசொற்கள் கண்டறியப் படுகின்றனவோ அத்தனையையும் துடைத்தெறிய வேண்டும் என்று தோன்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *