ஊனப் பிள்ளையார்

அடுக்கு மாடிக் குடியிருப்பின்
கீழ் தளத்தின் குறுஞ்சுவரில்
கையொடிந்த பிள்ளையார்
அண்டுவார் யாருமின்றி….
பட்டினியாய்… பரிதாபமாய்…
இரண்டு தினம் முன்பு
ஆறாவது மாடி
அனந்த நாராயணன்
வீட்டுப் பூஜை அறையில்
புஷ்டியான கைகளுடன்
பருத்த  வயிறோடு
மோதக பாத்திரத்துடன்
பார்த்த நினைவு.  

“ஊனப் பிள்ளையார்” இல் 2 கருத்துகள் உள்ளன

  1. இரண்டு தினம் முன்பு
    ஆறாவது மாடி
    அனந்த நாராயணன்
    வீட்டுப் பூஜை அறையில்
    புஷ்டியான கைகளுடன்
    பருத்த வயிறோடு
    மோதக பாத்திரத்துடன்
    பார்த்த நினைவு. /

    அடடா! கடவுளுக்கு நேர்ந்தகதி!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன