இரண்டு கவிதைகள்



01 தொடர்பிலிருந்து நீ விலகிச் செல்லும் ஒவ்வொரு முறையும் பிறிதொரு மார்க்கத்தில் உன்னை பின்தொடர யத்தனிக்கும் வேளையில் நீயாகவே அழைத்துப் பேசி தொடரச் செய்கிறாய் இந்த விளையாட்டை இன்னுமோர் முறையும். O 02 புதிதாய் வந்து நின்றிருந்த காரின் முன்புறம் நெடுநேரம் விளையாடிக்கொண்டிருந்த இரண்டரை வயது மகனின் கையிலிருந்த கல்லொன்றை காண நேர்ந்த பொழுதுக்குள் வரைந்து தள்ளியிருந்தான் நிறைய கோட்டோவியங்களை. சுற்றியிருந்தோரிடமிருந்து ஏதும் சுடுசொல் வருவதற்குள் பட்டென்று சொல்லி ஓடிப்போனான் ‘பெரிய ரப்பர் கொண்டு அழித்தால் போய்விடும் அப்பாவென்று.’ o

“இரண்டு கவிதைகள்” இல் ஒரு கருத்து உள்ளது

  1. முதல் கவிதை பலப்பரிமாணங்களை உள்ளடக்கிய உள்ளது, இதுதான் இதன் பொருளென்று சொல்லி கவிதையின் பொருள் சுருக்க விருப்பமில்லை ஜெகதீசன்..

    //'பெரிய ரப்பர் கொண்டு

    அழித்தால்

    போய்விடும் அப்பாவென்று.'//

    இரண்டாம் கவிதையில் உள்ள இந்த வரிகள் மிக ஆழமானவை..

    வெறும் சிறுவாய் மொழியாக நோக்க மனம் ஒப்பவில்லை..

    இது போல எத்தனைவிடயங்கள் மிக மெத்தனமாக செய்துவிட்டு இன்னும் அழிக்க முடியாமல் வருந்தியோ/மற்றவரை வருத்தப்படுத்தியோ கொண்டிருக்கிறோம்..

    வாழ்த்துக்கள் ஜெகதீசன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன