பத்து கேள்விகள் பத்து பதில்கள் – இந்திரா பார்த்தசாரதி

25.11.2017 அனறு பத்து கேள்விகள் பத்து பதில்கள் என்ற தலைப்பில் 16வதாக இந்திரா பார்த்தசாரதி அவர்களைப் பேட்டி எடுத்தேன். இந்தப் பேட்டியை எடுக்க எனக்கு உதவியவர் ராஜேஸ் சுப்பிரமணியன் அவர்கள். அமைதியாக இந்திரா பார்த்தசாரதி அளித்தப் பதிலை கேட்டு ரசிக்கவும். பொறுமையாக பதில் கூறிய இந்திரா பார்த்தசாரதிக்கு என் நன்றி.

தொடர்ந்து இத் திட்டத்தின் கீழ் பலரை பேட்டி எடுக்க உத்தேசம்.

த நா குமாரசாமியைப் பற்றி முனைவர் வ வே சுப்பிரமணியன் பேசிய ஒளிப்பதிவு- 4 – கடைசிப் பகுதி

முனைவர் வ வே சு அவர்கள் விவேகானந்தா கல்லூரியில் பணி ஆற்றியவர். மரபு கவிஞர். பல கவிதைப் புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழ் வளர்த்த சான்றோர் என்ற தலைப்பில் ஒவ்வொரு மாதமும் பேரூரை ஆற்றி வருகிறார்

16.03.2018 வெள்ளிக்கிழமை அன்று பேசிய ஒளிப்பதிவின் 4வது பகுதியை இங்கு வெளியிடுகிறேன் –

த நா குமாரசாமியைப் பற்றி வ வே சுப்பிரமணியன் பேசிய ஒளிப்பதிவு- 3

16.03.2018 வெள்ளிக்கிழமை அன்று பேசிய ஒளிப்பதிவின் 3வது பகுதியை இங்கு வெளியிடுகிறேன் –

த நா குமாரசாமியைப் பற்றி வ வே சுப்பிரமணியன் பேசிய ஒளிப்பதிவு 1, 2….

16.03.2018 வெள்ளிக்கிழமை அன்று பேசிய ஒளிப்பதிவை இங்கு வெளியிடுகிறேன்

பத்து கேள்விகள் பத்து பதில்கள்

09.02.2018 அனறு பத்து கேள்விகள் பத்து பதில்கள் என்ற தலைப்பில் 15வதாக கடற்கரை அவர்களைப் பேட்டி எடுத்தேன். அமைதியாக அவர் அளித்தப் பதிலை கேட்டு ரசிக்கவும். சமீபத்தில் பாரதி விஜயம் என்ற தலைப்பில் மகாகவியுடன் கூடி வாழ்ந்தவர்களின் குறிப்புகள் கொண்ட புத்தகத்தைத் தயாரித்துள்ளார்.1040 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் ஒரு அரிய பொக்கிஷம்.

பத்து கேள்விகள் பத்து பதில்கள் …..14 – பகுதி 2

நேற்று பா ராகவன் பேட்டியில் முதல் பகுதி வெளியிட்டேன். இப்போது இரண்டாவது பகுதி. கேள்வி கேட்பவரை விட பதில் சொல்பவர்தான் முக்கியமானவர். அந்த விதத்தில் ராகவன் சிறப்பாக பதில் அளித்துள்ளார். அவருக்கு என் வாழ்த்துகள்.

பத்து கேள்விகள் பத்து பதில்கள் …..14 – பகுதி 1

இந்தத் தலைப்பில் இதுவரை பா ராகவனையும் சேர்த்து 14 பேர்களைப் பேட்டி எடுத்துள்ளேன். எல்லாம் எளிமையான கேள்விகள் எளிமையான பதில்கள். சமீபத்தில் நான் ராகவன் வீட்டிற்குச் சென்றேன். உண்மையில் அமேசான் கின்டலில் என் புத்தகத்தை மின்னூலாக மாற்றுவதற்கான வழிமுறைகளை அறிந்துகொள்ளச் சென்றேன். அப்போது பத்து கேள்விகள் பத்து பதில்களுக்கான பேட்டியும் எடுத்தேன்.

என்னுடைய ‘திறந்த புத்தகத்திற்கான’ அறிமுக உரை பகுதி 5

சமீபத்தில் நடந்த புத்தகக் காட்சிக்காக வந்திருந்த பா ராகவனிடம் என் ‘திறந்த புத்தகம்’ பிரதியைக் கொடுத்தேன். உடனே படித்துவிட்டு ராகவன் எனக்கு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அவரை இப் புத்தகம் பற்றி சில நிமிடங்கள் பேச இயலுமா என்று கேட்டுக்கொண்டேன். அவர் அதற்கு சம்மதித்தார். இதோ அவர் பேசியதை இங்கு ஒளிபரப்புகிறேன். ஏற்கனவே 4 பேர்கள் இப் புத்தகத்தைப் பற்றி பேசி உள்ளார்கள். ஐந்தாவதாக ராகவன்.
புத்தகம் வேண்டுபவர் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண். 9444113205.

என்னுடைய ‘திறந்த புத்தகத்திற்கான’ அறிமுக உரை பகுதி 4

என் ‘திறந்த புத்தகம்’ பற்றிய அறிமுக உரையை 14.11.2017 அன்று ராஜேஷ் சுப்பிரமணியன் என்பவர் பேசி துவக்கி வைத்தார். எல்லோரும் கேட்டிருப்பீர்கள். அதன்பின் வ வே சுப்ரமணியன் அவர்கள் இந்தப் புத்தகத்தைப் பற்றி பேசியதையும் கேட்டிருப்பீர்கள். இன்னும் பலர் பேச உள்ளார்கள். எல்லோரும் 5 நிமிடங்களிலிருந்து 10 நிமிடங்களுக்குள் பேச உள்ளார்கள. மூன்றாவதாக ஆர் கே ராமனாதன் என்கிற என் நண்பர் 20.12.2017 அன்று பேசி உள்ளார். இப்போது மருத்துவர் ஜெ பாஸ்கரன் அவர்கள் பேசி உள்ளார். புத்தகக் காட்சியால் இதை ஒளிபரப்பத் தாமதமாகிவிட்டது. என் புத்தகத்தைக் குறித்துப் பேசுவதை கேட்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.