மழைக்காலங்களில்மனிதர்களுக்கு முளைக்கும்மூன்றாம் கைமேகக் கருமைவந்து ஒட்டிக் கொண்டதுகைகளில் தவழும் குடைகளில்தூறல்களில் நனைந்தேவீடு சேரும் நேரங்களில்பைகளில் தூங்கும்புதிதாய் வாங்கிய குடைகள்கணினி யுகமானாலும்குடைகளின் வடிவம் மட்டும்மாறுவதே இல்லைகுடை மீது விழும்மழைத்துளிகள் வருத்தப்பட்டனநனைதலின் சுகம்மனிதர்களுக்கு தெரிவதில்லையென
Tag: ப.மதியழகன்
கையறு நிலை
வானவெளியெங்கும் நட்சத்திரக் கூட்டங்கள்இடைவெளியின்றி ஜொலிக்கின்றனகாற்று வெளியெங்கும் பூ வாசம்மனவெளியை மயக்குகின்றனவெளியினூடே வெளிச்சம் பாய்ச்சும்கிரணங்கள் முயங்கிக் கிடக்கின்றனபேரவஸ்தையானதொரு விசும்பல்ஆகாயமெங்கிலும் எதிரொலிக்கின்றனகுட்டியை பறிகொடுத்தயானையின் பிளீறிடல் சத்தம்வனமெங்கிலும் ஆக்ரமிக்கின்றனஇரவுக்கு முத்தம் தந்துவழியனுப்பி வைக்கின்றன குழந்தைகள்தனது வாழ்வினூடேகுட்டி குட்டி கதைகளைசேகரித்து வைத்திருக்கின்றார்கள்பாட்டிமார்கள்அநீதியை எதிர்த்து சமர்செய்யாமல்கையறு நிலையில்நின்று கொண்டிருந்தார் கடவுள்அவரது கட்டற்ற
கட்டற்ற அற்புதசக்தியை
கடன் வாங்கிப்
போயிருந்தது சாத்தான்.
பால்ய வன பட்டாம்பூச்சிகள்
பொக்கிஷமாய் சேர்த்து வைத்தோம்நாம் சிற்றிலாடிய பருவங்களைகற்பனைகளில் நிலவைதொட்டுவிட்டு வந்த பருவமதுகனவுலகில் மோட்ச தேவதைகளாகஉலாவினோம்சமுத்திர நீரலைகள் வற்றிப்போனாலும்முகத்தில் புன்னகை வற்றா பருவமதுஎந்நேரமும் விளையாட்டு எப்பொழுதும்குதூகலம்பூமியே எங்களது விளையாட்டு மைதானம்கேளிக்கைக்காக பூமிப்பந்தையேஎறிந்து விளையாடும்வேடிக்கையான பருவமதுதுயர மூட்டைகளை தோளில் சுமக்காமல்சுற்றுலா பயண மூட்டைகளை சுமந்துதிரியும் உல்லாச வாழ்க்கையதுகாண்பனவெல்லாம் வேண்டும்கட்டிப்பிடித்து தூங்க பொம்மைகள்ரக ரகமாய் வேண்டும்என அப்பாவிடம் அடம்பிடிக்கும்நினைவைவிட்டு அகல மறுக்கும்காலமதுபால்ய வனத்தை தாண்டி வந்தோம்சிறகற்ற பட்டாம்பூச்சிகளாய்தவிக்கும் வாழ்க்கையில்வழுக்கி விழுந்தோம்.
பங்குனிப் பெருவிழா
ராட்சஸ ராட்டினம்
ஐஸ்கிரீம்,வளையல்
கடைகள் எல்லாம் உண்டு
திருவிழா நடைபெறுகின்ற
பதினைந்து நாட்களுக்கு
நடக்கும் அன்னதானத்துக்கு
கூடும் கூட்டத்தால்
கோயிலே அல்லோலஹல்லோலப்படும்
ராஜகோபாலசுவாமிக்கு
ஏற்றவளாகத்தான் வாய்த்திருக்கிறாள்
செங்கமலத்தாயார்
பங்குனிப் பெருவிழாவில்
கண்ணனுக்கு வெண்ணெய்யை
தின்னக் கொடுக்காமல்
முகத்தில் அடித்து சந்தோஷப்படும்
கோபிகைகள் கூட்டம்
விழா முடிந்து
பெருமானும், பிராட்டியும்
ஊஞ்சல் ஆடுவதைப்பார்த்து
ஆதிசேஷன் பொறாமைபடக்கூடும்
ஏகாந்தமாய் இருக்கும்
பெருமாளின் மனசு
அன்னையாய் அணைவரிக்கும்
தாயாரின் மனசு
நெறைஞ்சி போய் கிடக்கும்
மக்களின் மனசு.
அப்பாவி
காய்கறிகாரனிடம் பேரம் பேசுவதில்லை
எதிர் வீட்டுக்காரனிடம் முறைத்துக் கொள்வதில்லை
உறவுகளிடம் உரசிக் கொள்வதில்லை
மளிகைக் கடை அண்ணாச்சியிடம் கடன் வைப்பதில்லை
நடத்துனரிடம் மீதிச்
சில்லரைக்காக சண்டையிடுதில்லை
மாமனாரிடம் பணம் கேட்டு நச்சரிப்பதில்லை
யாராவது கிண்டல் செய்தாலும்
பதிலுக்கு அவர்களை நையாண்டி செய்வதில்லை
இப்படி இருப்பதினாலேயே
ஊரில் அவனுக்கு பெயர்
அப்பாவியென்று.
கழைக்கூத்தாடிச் சிறுவன்
எதற்காகவென்று
தெரியவில்லை
கண்ணீர் வந்தது
சாலையோரத்தில்
தன்னையே சாட்டையால்
அடித்தடித்து
வருவோர் போவோரிடம்
காசு வாங்கிக்கொண்டிருந்தான்
கழைக்கூத்தாடிச் சிறுவன்
தினப்படி நடப்பது தான் இது
இன்று என் செங்குருதி
அவன் உடலிலிருந்து
வழிந்தது.
3 கவிதைகள்
வேதாளம்
நள்ளிரவில் நடைபாதையில் வேதாளம் நடமாட அதைக் கண்டு பயந்து மேனி காய்ச்சலில் படுத்து கிடக்க கனவினில் ஓர் காட்சி நள்ளிரவில் நடைபாதையில் தனியாய் செல்வதைப் போல வேதாளம் மட்டும் அங்கில்லை வேறு ஒருவரின் கனவுகளுக்குள் சென்று விட்டது போலும்.
யாருக்காக
பொழுது யாருக்காக விடிகிறது சேவல் யாருக்காக கூவுகிறது மழை யாருக்காக பெய்கிறது தென்றல் யாருக்காக வீசுகிறது நாமனைவரும் யாருக்காக வாழ்கிறோம் சூட்சுமம் புரிபடவில்லை புரிந்துவிட்டால் புரிந்தவர்கள் எவரும் இப்பூமியில் இருப்பதில்லை
எது ஊனம்
யாருக்கு பின்னம் இல்லை உடலிலோ, மனசிலோ ஏசு சாமி சொன்னது போல உடலிலோ, மனதிலோ பின்னமில்லாதவர்கள் கேலி செய்யுங்கள் அங்கஹீனமானவர்களை படைப்புகளில் எது உயர்ந்தது எது தாழ்ந்தது எல்லாம் ஒரு பிடி சாம்பல் தானே இறுதியில் தலையில் கம்பால் அடிக்கும் வெட்டியானிடம் சொல்லுங்கள் நான் உயர்ந்தவனென்று இன்னும் இரண்டு அடிகள் கூடத் தருவான் வாங்கிப் போங்கள்
அப்பா என்கிற ஸ்தானம்
அவனுடைய மனைவியின்
முதல் பிரசவத்துக்கு குறிக்கப்பட்ட
அந்த நன்னாள் நெருங்கிக் கொண்டே வந்தது
பணியாற்றும் இடம்
பலமைல் தொலைவிலிருந்தும்
பிறக்கப்போகும் ஒரு உயிருக்காக
பிரார்த்தனை செய்தபடியே
அவன் இதயம் துடித்துக் கொண்டிருந்தது
அந்த நகரத்தின்
சாலையோரக் கடைகளில் ஒட்டப்பட்டிருந்த
சின்னஞ்சிறு குழந்தைகளின் படங்களும்
‘கற்பூரமுல்லை ஒன்று…. ’ -என எதேச்சையாக
அருகாமையில் ஒலித்த இனிய கானமும்
அவன் மனதைப் பிசைந்தன.
அன்றைய மாலைப் பொழுதில
அடுக்குமாடி வணிக வளாகமொன்றில்
‘டாடி’ என்றழைத்தபடி
ஓடிவந்த குழந்தையொன்று
தவறுதலாக அவன் கால்களைக்
கட்டிக் கொண்டது
சில வினாடிகள் கழித்து
அண்ணாந்து முகம் பார்த்து
தனது தந்தையல்ல என்றுணர்ந்த பின்னர்
அந்நியர் ஸ்பரிசத்தை தொட்டுவிட்ட
சங்கோஜத்தில் விலகிச் சென்றது
நிமித்தங்கள் அவன் தந்தையானதை
இந்நிகழ்வினால் உறுதிப்படுத்த
‘நான் அப்பாவாகிவிட்டேன்’ என்ற எண்ணம்
அவன் உள்ளத்தில் உதித்த அக்கணத்தில்
வாயில் கைப்பிடி சர்க்கரை போடாமலேயே
உடலில் ஓடும் உதிரம் கூட
அவனுக்கு இனித்தது.
தூண்டிற்புழு
மெளன மொழி புரிகின்றது மனதின் வேஷம் கலைகின்றது முகமூடி உருக்குலைகின்றது மனிதமுகம் தெரிகின்றது மழலை தேனாய் இனிக்கின்றது மீண்டும் குழந்தையாக உள்ளம் துடிக்கின்றது வாழ்க்கை வரமாய் தோன்றுகின்றது மறுமுறை பிறக்க மனம் ஏங்குகின்றது நாட்கள் கணமாய் ஓடுகின்றது நதியலைபோல் சூழ்நிலை மாறுகின்றது தோல்வி கூட இனிக்கின்றது வெற்றி எதில் இங்கு இருக்கின்றது தடுக்கிவிழ கால்கள் துடிக்கின்றது தாங்கும் கைகள் அவளுடையதாய் இருக்க வேண்டுமென உள்ளம் தவம் கிடக்கின்றது கடிதங்கள் தூது போகின்றது கவிமகளை நெஞ்சம் நாடுகின்றது மழை வந்து மேனியை நனைக்கின்றது அவளைச் சந்திக்காமல் உள்ளம் கொதிக்கின்றது ஆகாரம் கண்ணெதிரே இருக்கின்றது எண்ணச் சிறகுகள் எங்கெங்கோ பறக்கின்றது காலை கதிரொளி எழுகின்றது கனவுகள் விடை பெறுகின்றது உறக்கம் மெல்ல களைகின்றது உண்மை வேறாய்த் தெரிகின்றது காட்சிகள் பொய்யெனப் புரிகின்றது கற்பனை நின்றிட மறுக்கின்றது இங்கு எல்லாம் சரியாய் இருக்கின்றது வேறெங்கே என்னைத் தொலைக்கின்றது!
இலையின் பாடல்
நான் இல்லாது போனால் இப்புவியெங்கும் உள்ள மரங்களனைத்தும் மூளிகளாகும்.
நான் பச்சை வண்ணம் சுமந்து வசந்த காலத்தை வளமுள்ளதாக்குகிறேன்.
நான் இன்னோர் இலையாய்த் துளிர்க்க வேனிற்காற்றின் வேகத்தில் மரங்களினுடனான உறவுப்பிணைப்பை முறித்துக்கொண்டு மண்ணில் விழுகிறேன்.
நான் காணுமிடமெங்கும் நிறைந்திருப்பினும் மலர்களின் மீது மட்டும் மோகம் கொண்டலையும் மனிதர்கள் என்னை மரத்தின் ஒரு பாகமாக மட்டுமே பார்க்கின்றனர்.
நானின்றி மொட்டு மலர்ந்திடுமா? காய் கனிந்திடுமா? மரம் நிலைத்திடுமா?
உணவாகிப் பல நோய்கள் தீர்க்கிறேன். எருவாகிப் பயிர்களைக் காக்கிறேன் எரிபொருளாகி வாகனங்களை இயக்குகிறேன்.
என் மீது உரசாத காற்றை சுவாசித்த நபருண்டா இவ்வுலகில்?
பழுத்து மஞ்சளாகி உதிரும்வரை காலையில் நடைப்பயிற்சி செல்லும் வழியெங்கும் உங்களின் கண்களுக்கு இதமாக இலவசமாய் குளுமை தருகின்ற பூமித்தாய் தன் மேனியில் உடுத்தியிருக்கும் பச்சை வண்ண ஆடை நான்!