கசடதபற ஜøலை 1971 – 10வது இதழ்
அம்மாவின் பொய்கள்
ஞானக்கூத்தன்
பெண்ணுடன் சிநேகம் கொண்டால்
காதறுந்து போகும் என்றாய்
தவறுகள் செய்தால் சாமி
கண்களைக் குத்தும் என்றாய்
தின்பதற்கேதும் கேட்டால்
வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்
ஒருமுறத் தவிடடுக்காக
வாங்கினேன் என்னை என்றாய்
எத்தனைப் பொய்க் முன்பு
என்னிடம் சொன்னாய் அம்மா
அத்தனைப் பொய்கள் முன்பு
சொன்ன நீ எதனாலின்று
பொய்களை நிறுத்திக் கொண்டாய்?
தவறு மேல் தவறு செய்யும்
ஆற்றல் போய் விட்டதென்றா
எனக்கினி பொய்கள் தேவை
இல்லை யென்றெண்ணினாயா?
அல்லது வயதானோர்க்குத்
தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும்
பொறுப்பினி அரசாங்கத்தைச்
சார்ந்ததாய்க் கருதினாயா?
தாய்ப்பாலை நிறுத்தல் போலத்
தாய்ப் பொய்யை நிறுத்தலாமா?
உன் பிள்ளை உன்னை விட்டு
வேறெங்கு பெறுவான் பொய்கள்?
பாரதியாரைப் பற்றிய நினைவுகள்
எதையாவது சொல்லட்டுமா 100……
புத்தக விமர்சனம் ………
ப்ரோகோவன்
மரணித்தவர்களுக்கு ஓர் அமைதியையும், இன்னும் இருப்பவர்களுக்கு ஒரு மூர்க்கத்தனமான
வலியையும் கொடுக்கவல்லது !அது தோற்றுவிக்கும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளும்,
காலங்களைக் கடந்த மிக நுட்பமான வாழ்க்கை பிம்பங்களும் ஆழ்மனதில் வலியைக் கொடுப்பவை
!
மிகுந்த ஒரு நாள் காலை, காபியின் மணத்துடன் எழுந்து கொள்கிறாள் – ஜூல்ஸ்
வழக்கம்போல் காலைச் சிற்றுண்டியையும், காபியையும் தயார் செய்வதன் மணம்தான் அது.
படுக்கையறையிலிருந்து வந்து, ஹாலில் சோபாவில் அன்றைய தினசரியுடன் அமர்ந்திருக்கும்
கணவன் அருகில் அமர்கிறாள் ஆலிஸ். அசைவுகள் ஏதுமில்லாமல் அமர்ந்திருக்கும் அவரைக்
கூப்பிடுகிறாள் – தோளில் கைவைத்த போதுதான் தெரிகிறது ஜூல்ஸ் இறந்து போயிருக்கிறார்
என்று !
அலங்கரிக்கப் பட்ட அழகிய பெட்டியில் சில மணி நேரங்களில் ஜூல்ஸை எடுத்துச்
சென்றுவிடுவார்கள். மனது ஏற்கவில்லை. இன்னும் ஒரே ஒரு நாள் ஜுல்ஸுடன் வாழ்ந்து
விடுவது என்று முடிவு செய்கிறாள். வெளி உலகிலிருந்து மறைப்பதற்கான வழிகளைத்
திட்டமிடுகிறாள். அவளது மனப்போராட்டங்களும், துயரங்களும், தினசரி நிகழ்வுகளும்
ஜூல்ஸின் உடலைச் சுற்றி நடப்பதுவும், கடந்த கால நினைவுகளும், நிகழ்கால வலிகளும்,
எதிர்கால வெறுமையும் அவளை வாட்டுகின்றன. அலுவலக நேரத்தில், மகனிடம் இந்தச்
செய்தியைச் சொல்வது தவறு என்று அவனிடம் கூட தெரிவிக்க மனம்
ஒப்பவில்லை.
சதுரங்கம் ஆட வரும் ஆடிஸ்டிக் சிறுவன் டேவிட் அன்று சற்று முன்னதாகவே வந்து விட,
அவனுடன் ஜூல்ஸுக்கு பதிலாகத் தான் விளையாடுகிறாள். ஆனால் டேவிட் ஜூல்ஸின் மரணத்தை
அறிந்து கொள்கிறான் – ஆலிஸின் மனத்தை அறிந்தவன் போல், அது பற்றி ஒன்றும் கூறாமல் –
தன் அம்மாவிடம் கூட – மிக இயல்பாக தன்னை நடத்திக் கொள்கிறான். சிற்றுண்டி தயாரிக்க
சமையலறையில் ஆலிஸுக்கு உதவுகிறான். அவனது இந்தப் புரிதல், ஆலிஸை மட்டும் அல்ல,
வாசகனையும் வியக்க வைக்கிறது.
மருத்துவ மனையில் தங்க நேர்வதால், அன்று இரவு தன் வழக்கத்திற்கு மாறாக, டேவிட்
ஆலிஸுடன், ஜூல்ஸின் படுக்கையில் உறங்கி விடுகிறான் – அவனுக்கு அவன் நேரப்படி
எல்லாம் நடக்க வேண்டும்.
கிடக்கும் அவரது மூக்குக்கண்ணாடியைத் தன் நைட்டியில் துடைத்துப் போட்டுவிடுகிறாள்;
குளிர் என்பதால், அவரது கட்டம் போட்ட சால்வையைப் போர்த்தி, கால்களில் காலணிகளை
மாட்டி விடுகிறாள். சிறிது நேரம் அருகே படுத்து உறங்க முயற்சி
செய்கிறாள்.
கேட்கிறாள். “ அப்போது நாம் போர்வைக்குள்ளேயே ஒரு குட்டித் தூக்கம்
போட்டிருக்கலாம்.”
தப்பிக்கவே முடியாத இந்த உண்மை மீண்டும் அவளைத் தாக்கியபோது, அவள் கண்கள் கண்ணீரால்
நிரம்புகின்றன.
போட்டுவிட்டு, காலைச் சிற்றுண்டி உண்கிறாள். குளித்து, தேர்ந்தெடுத்த ஆடைகளை
அணிகிறாள். வெளியே இனி கடைகளுக்குத் தனியாகச் செல்லவேண்டும் என்ற நினைப்பில், மனம்
உடைந்து போகிறாள்.
அவரிடமே சொல்கிறாள். அவருக்கு மிகவும் பிடித்த, வோல்கா என்னும் பெண்ணிடம்
அவருக்கிருந்த காதலை (அவளை உங்களுக்கு அவ்வளவு பிடிக்கும்தானே ?), அவர் அறியாமலே
எப்படி முறியடித்தாள் என்று விவரிக்கிறாள். அந்த வன்மத்தின் பின்னே, அடிநாதமாக,
அவள் அவருக்காக ஏங்கும் அன்பும் காதலும் இழைந்தோடுவதை உணர்ச்சி பூர்வமாக
வெளிப்படுத்துகிறாள். பனிக்கட்டிபோல் சில்லிட்டிருந்த அவரது இதழ்களில் முத்தமிட்டு,
“ தயவு செய்து என் மேல் கோபப்படாதீர்கள்.” என்று சொல்கிறாள் . “கடைசீயில் நான்
அதைச் சொல்லிவிட்டேன் என்பது எனக்குச் சந்தோஷமாக இருக்கிறது .“
இப்போது இல்லை.
சென்றதையும் ,
தலைமுடியில் தைலம் தடவி, பனிபோல் வெண்மையான சட்டையை அணிந்திருந்தீர்கள். என் நாசி
உங்கள் கழுத்தில் உரச, உங்கள் சட்டையில் கழுத்துப்பட்டையைப் பொருத்தும்போது,
உங்களிடமிருந்து எழுந்த வாசனை எனக்கு தெள்ளத் தெளிவாக நினைவில்
இருக்கிறது.”
நினைத்துப் பார்க்கிறாள். ‘ நாம் இருவருமே இதைப் பற்றி பிறகு பேசிக்கொள்ளவே இல்லை –
உங்கள் கல்லறைக்கு எடுத்துப் போகும் இந்த ரகசியம் மட்டும் நாம் இருவரும்
பகிர்ந்துகொள்ளும் ஒன்று ‘ என்று நெகிழ்கிறாள்.
எண்ணத்தையும் பிம்பமாக வரைந்திருக்கிறார் இதன் ஆசிரியர் டயான் ப்ரோகோவன் –
ஃப்ளெமிஷ் எழுத்தாளர் ; ஒரு நேர்காணலில் அவர் கூறுகிறார், ‘ வயதாக ஆக எழுதுவதற்குக்
குறைவான சொற்களே தேவைப் படுகின்றன. சொற்களுக்கிடையில் உள்ள மெளனங்கள், சொற்களின்
அளவுக்கு முக்கியமானவை “ . இந்த நாவலைப் படிக்கும்போது, நம்மால் இதனை உணர
முடியும்.
நாவலாசிரியர்; ஜோஸே ஸரமாகோவ், ராபர்ட்டோ கலாஸ்ஸோவ் ஆகியோர் நூல்களை இவர்
மொழிபெயர்த்திருக்கிறார்.
நம் முன் தோற்றுவிக்கிறது இந்த நாவல். ஒரு வித்தியாசமான படைப்பு என்றுதான்
சொல்லவேண்டும்.
முதுமையின் இடப்பெயர்தல்
பிரேம பிரபா
கருணை துளியுமற்ற
கட்டுப்பாடுகளின்
முட்கிரீடம் தரித்த முதுமை
கனிந்துறுகிய
கடைசித் தருணங்களில்
தவிப்பின் உச்சமாய்
தத்தளிக்கிறது
இமைகளின் மென் துடிப்பு.
முதியவரின் அளப்பறிய யாசிப்பின்
அனைத்து வேண்டுதல்களும்
நிறைவேறிடத் துடிக்கும்
மௌனமாக இடப் பெயர்தல்.
துளியும் அறிமுகம் இல்லாத
பெரு வெளியில்
முதியவரின் முதல்
சுதந்திரப் பயணம்.
பாதைகளில் கிடக்கும்
முட்கிரீடங்களை விலக்கி
குழந்தையின் மகிழ்ச்சியில்
முன்னேறுகிறார் முதியவர்
புதுப் பிறவி அடைந்த மகிழ்ச்சியில்.
கசடதபற ஜøன் 1971 – 9வது இதழ்
ஆங்கிலத்தில் : எட்வர்டு லீய்டர்ஸ்
தமிழில் : மகாகணபதி
என்னுள் ஒரு குழந்தை
இருள் வெளியில்
விழும் பனியை விரும்பும்
என்னுள் ஒரு குழந்தை
இருள் வெளியில்
விழும் பனியிடம் அஞ்சும்
என்னுள் ஒரு குழந்தை
வெளியில் இருட்டில்
விழும் பனியைக் காணமுடியும்
அக் குழந்தை
என்னுள்ளே
நான் உள்ளே
இருள் வெளியில் விழும் பனியை ஒவ்வொரு முறையும் பார்க்கும்போது குழந்தையாக மாறி விடுகிறது மனம். என்னுள்ளேயே குழந்தையும் இருக்கிறது.
கசடதபற ஜøன் 1971 – 9வது இதழ்
என்னுடைய 30வது வயதில்
சீனம் : ச்சி ஸ÷யென்
ஆங்கிலம் வழி தமிழில் : ப கங்கை கொண்டான்
“சிகரெட் சாம்பல்கள்
சிதறிப் படிகின்றன –
எனது
வாழ்க்கை மலரின்
உதிர்ந்த இதழ்கள்
அவை.
தொடுவானத்தின்
சங்கமத்திற்கும்
அப்பால் –
மிகவும் அப்பால்
எனது ஒற்றை
நிழல் வளர்கிறது
நீளமாக –
மிகவும் நீளமாக! “
புத்தக விமர்சனம் 8
கசடதபற ஜøன் 1971 – 9வது இதழ்
ஹரி : ஓம் : தத் : ஸத்
ஐராவதம்
நெடுஞ்சாலை நடுவினிலே
நான்
நீண்ட நேரம் படுத்திருக்க
நினைத்ததுண்டு
பச்சை விளக்கு எரிகையிலே
பாய்ந்து வரும் கார்கள்
பஸ்கள், லாரிகள், டாக்ஸிகள்
ஸ்கூட்டர்கள், சைகிள்கள்
அத்தனையும் என் பொருட்டு
நின்றுவிடும் எனக் கற்பனை
செய்ததுண்டு.
கடற்கரைக் கூட்டத்தில் கல்லெறிய
துடித்ததுண்டு
ஒளிச்சர விளக்குகள்
ஒலித்துச் சிதற
பலி ஆடு மந்தையென
பார்த்திருப்போர் கூட்டம்
ம்மே ம்மே என அலறிச் சிதற
மேடையில் நிற்பவர் மணலுக்குத் தாவ
களேபரச் சந்தடியில்
காற்றாய் மறைய நினைத்ததுண்டு
பாட்டுக் கச்சேரியில்
பட்டுப் புடவைகள் வைரத்தோடுகள்
நவரத்தினக் கழுத்தணிகள்
நாற்புறமும் சிதற
கீர்த்தனை கிறீச்சிட
முத்தாய்பபு விழிதெறிக்க
சங்கதிகள் அந்தரத்தில்
சதிராட
வெடிகுண்டு வீசிடவும்
என் கைகள் துடித்ததுண்டு.
நகரத்தின் தெருக்களில்
நான் இன்னமும் நடக்கிறேன்…..
நடக்கிறேன்…..நடக்கிறேன்…..