23.10.2020 அன்று ஆத்மாநாம் கவிதைகள் குறித்து முனைவர் கல்யாணராமன்


அழகியசிங்கர்


முனைவர் கல்யாணராமன் நிகழ்த்திய உரையின் ஒளிப்பதிவை இங்கு தருகிறேன்.ஆவேசமான உரை. அவர் பேச்சின் போது இன்னும் சில கவிஞர்களைக் குறித்து அவர் கூறிய கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. உரையை முழுவதும் கேட்டு ரசியுங்கள்


அசோகமித்திரன் கதைகளைப் படித்தோம்….

அழகியசிங்கர்



22ஆம் தேதி அசோகமித்திரன் பிறந்தநாள்.  24ஆம் தேதி நாங்கள் ஒரு 18  பேர்கள் கூடினோம்  ஒவ்வொருவராக ஒரு கதையை வாசித்தோம்.  எல்லோரும் 3 நிமிடங்களுக்குள் ஒரு கதையை வாசிக்க வேண்டும்.  நான் 2.30 நிமிடங்களுக்குள் அவருடைய இந்திரா வீணை கற்றுக்கொள்ளவில்லை என்ற கதையைப் பற்றி சொன்னேன்.  இது ஒரு அற்புதமான அனுபவம்.  சூம் மூலமாகப் படித்ததை யாருடனும் அப்போது பகிர்ந்து கொள்ளவில்லை.  கலந்துகொள்பவர்கள் மட்டும்தான் அந்தக் கூட்டம். மொத்தமே 18 பேர்கள் அதாவது கதையை வாசித்தவர்கள் மட்டும் பகிர்ந்துகொண்ட கூட்டம்.  
இங்கே உங்களுடன் அந்தப் ஒளிப்பதிவைப் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
https://www.youtube.com/watch?v=pCYVrNebwAk&t=115s

புத்தகக் காட்சி கூட்டம் – 2 – ஒளிப்பதிவு

அழகியசிங்கர்

ஆதிரா முல்லை 11.01.2020 எல் ரகோத்தமன் 
கவிதைத் தொகுதி நிழல் விரட்டும் பறவைகள் குறித்து ஆற்றிய உரை.

சில கேள்விகள் சில பதில்கள் – பாரதி மணி – ஒளிப்பதிவு 1,2

அழகியசிங்கர்

பாரதிமணியை (புள்ளிகள் கோடுகள் கோலங்கள்) நேற்று பெங்களூரில் (02.12.2019) வீட்டில் சந்தித்தேன். பத்து கேள்விகள் பத்து பதில்கள் என்ற தலைப்பில் நான் இதுவரை 25 படைப்பாளிகளைப் பேட்டி எடுத்துள்ளேன். பாரதி மணியை 26ஆவதாக பேட்டி எடுத்தேன். பத்து கேள்விகள் பத்து பதில்கள் என்பதற்குப் பதிலாக சில கேள்விகள் சில பதில்கள் என்று மாற்றி உள்ளேன். என்னுடன் எழுத்தாள நண்பர் சிந்தூஜாவும் வந்திருந்தார். அவரையும் பாரதிமணியிடம் சில கேள்விக்ள கேட்கச் சொன்னேன். அவரும் கேட்டிருக்கிறார்.

நவீன தமிழ் விமர்சன இயக்கங்களும் கருத்தியல் போக்குகளும் (1950-2000) – பிரவீன் பஃறுளி ஒளிப்பதிவு 1

விருட்சம் இலக்கியச் சந்திப்பின் 49வது கூட்டம் பிரவீன் பஃறுளி  தலைமையில் 17.08.2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது.  ஒன்றரை மணிநேரம் அவர் பேச்சு நீடித்தது.  நவீன தமிழ் விமர்சன இயக்கங்களும் கருத்தியல் போக்குகளும் (1950-2000) என்ற தலைப்பின் கீழ் அவர் பேசினார். கொஞ்சங்கூட விடுபடல் இல்லாமல் எல்லாவற்றையும் பேசினார்.  அவர் பேச்சை மூன்று ஒளிப்பதிவுகளில் இங்கு அளித்துள்ளேன்.

வண்ணதாசனும் நானும் ஒளிப்பதிவு 1,2,3…

அழகியசிங்கர்

வண்ணதாசனும் நானும் என்ற தலைப்பில் எழுத்தாளர் தேவகோட்டை வ மூர்த்தி 20.07.2019 ஆம் தேதி விருட்சம் இலக்கியச் சந்திப்பில் உரை நிகழ்த்தினார். அப்போது நடந்த ஒளிப்பதிவை இங்கே அளிக்கிறேன்.


www.youtube.com/watch?v=VhrAI1Fx1rk – 1

www.youtube.com/watch?v=Q0gszMkNqBA – 2

www.youtube.com/watch?v=g061d3lYsNA -3

சத்தமில்லாத ஒரு குறும்படம்

அழகியசிங்கர்

ஒரு நாள் திடீரென்று ஆந்திரா வங்கியில் பணி புரிந்துகொண்டிருந்த ஆர் கே ராமனாதன் என்கிற நண்பருக்கு போன் செய்தேன்.  ஒரு குறும்படத்தில் நடிக்க வேண்டும் என்றேன். 

அவர் ஒரு நாடக நடிகர்.  திறமையாக நடிப்பாற்றலை வெளிப்படுத்துபவர்.  என்னுடைய வசனமே பேசாத குறும்படத்தில் திறமையாக நடித்துக் கொடுத்துள்ளார்.

நான் பழைய  சோனி காமெராவில் இந்தப் படத்தைத் தயாரித்தேன்.  20 நிமிடங்கள்வரை இந்தப் படம் வரும்.  

மேலும் இந்தப் படத்திற்கு மெருகேற்ற வேண்டுமென்று தோன்றியபோது நண்பர் கிருபானந்தனிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டேன்.  அவர் அதற்கு இசையைச் சேர்த்து, யார் எடுத்தது, யார் நடித்தது என்றெல்லாம் சேர்த்து விட்டார்.  இதே அந்தப் படம். பார்த்துவிட்டு உங்கள் கருத்தைக் கூறுங்கள்.  

நடித்துக் கொடுத்த ஆர் கேவிற்கு நன்றி.  கிருபானந்தனுக்கு நன்றி. 

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் …32

அழகியசிங்கர்

நண்பர் அரவிந்த் சுவாமிநாதன் சென்ற நூற்றாண்டின் சிறுகதைகள் என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தைத்  தொகுத்திருந்தார். அப் புத்தகத்தைக் குறித்து புத்தகக் காட்சியில் அவர் பேசியதை ஒளிபரப்பு செய்கிறேன். இது குறித்து டாக்டர் பாஸ்கரனும் பேசியிருக்கிறார். 

 

திறந்த புத்தகம் பற்றி இந்திரா பார்த்தசாரதி

என் திறந்த புத்தகம் பற்றி இந்திரா பார்த்தசாரதி அவர்கள் ஒரு நிமிடம்தான் பேசி உள்ளார். அந்த ஒளிப்பதிவை இங்கே அளிக்க விரும்புகிறேன். 50 கட்டுரைகள் கொண்ட இப் புத்தகத்தின் விலை ரூ.170. 200 பக்கங்களுக்கு மேல்.

அரவிந்தன் வாங்கிக் கொடுத்த சோனி காமெரா..

2011 ஆம் ஆண்டு நானும் மனைவியும் அமெரிக்காவில் உள்ள ப்ளோரிடா என்ற ஊருக்குச் சென்றோம். ஒரு மாதம் இருந்தோம். எல்லா இடங்களுக்கும் சுற்றிப்பார்த்தோம். என்னதான் அங்கிருந்தாலும் எதற்கெடுத்தாலும் என் பையன் அரவிந்தை நம்பி இருக்க வேண்டியிருந்தது.
எல்லா இடத்திற்கும் காரில் போக வேண்டியிருந்தது. அங்கிருந்த சமயத்தில் அரவிந்தன் வாங்கிக்கொடுத்த சோனி காமெராவில் முதன்முதலாக பின் டிரம்மர்ஸ்ûஸ படம் பிடித்தான். இது நடந்து ஏழாண்டுகள் முடிந்து விட்டது.
எனக்கு ரொம்ப தாமதமாகத்தான் இந்த காமெராவைப் பயன்படுத்தத் தெரிந்திருக்கிறது. என் புதல்வனின் முதல் ஒளிப்பதிவை இங்கே வெளியிடுகிறேன்.

www.youtube.com/watch?v=DXfNpSBZNrQ