பத்து கேள்விகள் பத்து பதில்கள் – 20 – வண்ணதாசன்

தாமிரபரணி மகா புஷ்கரம் காரணமாக நான் திருநெல்வேலிக்குச் செல்ல நேரிட்டது. இரண்டு நாட்கள் திருநெல்வேலியில் தங்கியிருந்து பல கோயில்களுக்குச் சென்றதும். கல்லிடைக்குறிச்சியில் மகா புஷ்கரத்தில் கலந்து கொண்டதும் மறக்க முடியாத நிகழ்ச்சி.
திருநெல்வேலியில் வசித்து வரும் வண்ணதாசனை சந்தித்து பத்து கேள்விகள் பத்து பதில்கள் பேட்டி எடுத்துள்ளேன். நான் அவசரம் அவசரமாக அவரைச் சந்தித்தேன். முதலில் அவரைச் சந்திக்க முடியுமா என்ற சந்தேகம் கடைசி வரை என்னிடம் ஒட்டிக்கொண்டிருந்தது. பின் எப்படியோ சந்தித்து விட்டேன். பேட்டியும் எடுத்து விட்டேன். அவரும் நிதானமாகப் பதில் அளித்திருக்கிறார். வழக்கம் போல சில தடங்கல்கள் பேட்டி எடுக்கும்போது ஏற்படும். அது மாதிரி ஏற்பட்டது. ஆனால் எல்லாவற்றையும் மீறி வண்ணதாசன் சிறப்பாக பதில் அளித்திருக்கிறார். அவருக்கு நன்றி.

பத்து கேள்விகள் பத்து பதில்கள் – 19 – ஏ எஸ் நடராஜன் பேட்டி – இரண்டாம் பகுதி

நேற்று முதல் பகுதி வெளியிட்டிருந்தேன். இப்போது இரண்டாம் பகுதி வெளியிடுகிறேன்.
நான் தற்செயலாக எதிரி உங்கள் நண்பன் புத்தகத்தைக் கொடுக்கத்தான் கே கே நகரில் உள்ள நடராஜன் வீட்டிற்குச் சென்றேன். என்னமோ தோன்றியது ஒரு பேட்டி எடுக்க வேண்டும் என்று. நடராஜனும் அதற்கு சம்மதிக்கவே பேட்டி எடுத்து விட்டேன்.
ரொம்ப மோசமான ஒரு விபத்திலிருந்து தப்பித்து பின் எப்படி அதை எதிர்கொள்வது என்பதை நடராஜனிடமிருந்து பலரும் கற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த விபத்து நடந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு நடராஜன் தனியாக தானே வாழ பழகிக்கொண்டவர். கால்களைப் பயன்படுத்தாமல் கைகளைக்கொண்டு காரை எடுத்துக்கொண்டு எல்லா இடங்களுக்கும் செல்லக் கூடியவர். அவர் துணிச்சல் யாருக்கும் வராது. நீங்கள் இந்தப் பேட்டியின் இன்னொரு பகுதியையும் பார்க்க வேண்டும்.

பத்து கேள்விகள் பத்து பதில்கள் …..17

இந்துமதி பேட்டி அளிக்கிறார்.

இந்தத் தலைப்பில் இதுவரை எழுத்தாளர் இந்துமதியையும் சேர்த்து 17 படைப்பாளிகளைப் பேட்டி எடுத்துள்ளேன். எல்லாம் எளிமையான கேள்விகள் எளிமையான பதில்கள்.
üதரையில் இறங்கும் விமானங்கள்ý என்ற நாவல் மூலம் புகழ்பெற்றவர் இந்துமதி அவர்கள். இன்றும் தொடர்ந்து எழுதிக்கொண்டு வருகிறார். அவருடைய பேட்டியை இப்போது வெளியிடுகிறேன்.