அழகியசிங்கர்
இன்று பாரீஸில் உள்ள ஒலிம்பிக்ஸ் கடைக்குச் சென்று துணிப்பை வாங்கினேன். ஒரு பையின் விலை ரூ.2. அதிக விலை கொடுத்து வாங்கினேனா அல்லது குறைவான விலையில் வாங்கினேனா என்பது தெரியவில்லை.
என் வீட்டிலிருந்து 18 கே பஸ் பிடித்துச் சென்றேன். வண்டிகடைசியில் நின்ற இடத்தில்தான் ஒலிம்பிக்ஸ். 500 பைகள் வாங்கிக் கொண்டு வந்தேன். ஒரு முட்டாள்தனம் செய்து விட்டேன். வீட்டிலிருந்து பெரிய பையை எடுத்துக்கொண்டு போகவில்லை. அதனால் அவஸ்தைப் பட்டேன். பைகளை விரல்களால் தூக்க முடியவில்லை. நான் திரும்பவும் 18 கே பஸ் பிடித்து வருவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது. தூக்க முடியாமல் பையைத் தூக்கிக்கொண்டு வந்ததால் பையைப் பார்க்கும்போது ஏனோ வெறுப்பாக இருந்தது. 500 பைகள் ஆயிரம் வரை ஆகிவிட்டது.
மொத்தப் பைகளும் தீருவதற்குள் இரண்டு புத்தகக் காட்சிகளை முடித்துவிடலாமென்று தோன்றியது.
வெளியே பைகளை வாங்கிக்கொண்டு வரும்போது கிலோ கணக்கில் பைகள் கிடைக்குமென்று பாதசாரதிகள் சொன்னார்கள். கிடைக்குமா என்பது தெரியவில்லை.