22.09.2012ல் நடந்த அசோகமித்திரனின் ஒளிப்படம் – 3

 

 

இரண்டு நாட்கள் நான் சென்னையில் இல்லை என்பதால் தொடர்ச்சியாக இந்த ஒளிப்படத்தை வெளியிட முடியவில்லை. நாளையுடன் மொத்தப் படமும் முடிந்துவிடும். இந்த ஆவணம் எல்லோரும் பார்க்க வேண்டுமென்று வெளியிடுகிறேன்.

அபூர்வமாக பல எழுத்தாளர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியிருக்கிறார்கள். இப்படி அமையும் என்பதை நானே எதிர்பார்க்கவில்லை.

 

22.09.2012ல் நடந்த அசோகமித்திரனின் ஒளிப்படம் – 2

 

 

நான்கு பகுதிகாளகப் பிரிக்கப்பட்ட 22.09.2017 அன்று நடந்தக் கூட்டத்தின் இரண்டாம் பகுதியை இப்போது அளிக்கிறேன். மிகக் குறைவான மணித்துளிகளில் எல்லோரும் பேசுவதை ஒளிப்படம் மூலம் கேட்டு ரசிக்கலாம். எதாவது குறை தென்பட்டால் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

 

22.09.2012ல் நடந்த அசோகமித்திரனின் ஒளிப்படம்

அசோகமித்திரனின் படைப்புகளைப் பற்றி சிலர் பேசினார்கள்.  சிலர் அவருடன் கிடைத்த நட்பைப் பற்றி பேசினார்கள்.  இப்படி எல்லோரும் பேசினோம்.  அத்தனையும் ஒளிப் படமாய்ப் பதிவு செய்து வைத்திருக்கிறேன்.
இது மாதிரியான நிகழ்ச்சியை நான் ஏற்பாடு செய்ததற்குக் காரணம் பல நண்பர்கள் எனக்கு ஆதரவாக இருந்ததுதான்.  கூட்டம் ஆரம்பிக்கும் முன், பார்த்தசாரதி கோயிலிருந்து சுவாமி புறப்பாடு ஒரு நல்ல சகுனமாக எனக்குத் தோன்றியது.  ஆரம்பத்தில் அந்த வீடியோ அதிலிருந்து ஆரம்பித்து பின் எல்லோரும் பேசுவதைப் படம் பிடிப்பது வரை முடியும்.

https://youtu.be/7P7mdAc0VjM

Attachments area

ஓஷோ கூட்டத்தின் கடைசிப் பகுதி

 

 

 

செந்தூரம் ஜெகதீஷ் பேசிய பேச்சு 1 மணி நேரத்திற்கு மேல் போய் 8 மணிக்கு முடிந்தது. மூகாம்பிகை காம்பளெக்ûஸ விட்டு வெளியே வந்தபோது இருட்டு. நானோ காரை மெதுவாக எடுத்துக்கொண்டு ஓட்டிவரும்போது, எதிர்படும் வண்டிகளின் சப்தங்களும், வெளிச்சமும் என்னை நிதானமாக ஓட்டும்படி கட்டாயப்படுத்தியது. ஒவ்வொரு முறையும் இருட்டில் காரை ஓட்டிக்கொண்டு போகும் திறமையை வளர்த்துக் கொள்ள நினைத்தேன். வீடு வந்து சேரும்போது மழையும் பிடித்துக்கொண்டது. இக் கூட்டம் நல்ல அனுபவத்தைக் கொடுத்தது.
என் சோனி காமிராவில் இந் நிகழ்ச்சியைப் பதிவு செய்த ராஜேஸ் சுப்பிரமணியத்திற்கு என் நன்றி. இனி ஒவ்வொரு கூட்டத்தையும் இது மாதிரி பதிவு செய்ய விரும்புகிறேன்.

ஓஷோ கூட்டத்தின் இரண்டாம் பகுதி

நேற்று முதல் பகுதியை வெளியிட்டேன்.  இன்று இரண்டாம் பகுதியும், நாளை இறுதிப் பகுதியையும் அளிக்க உள்ளேன்.  கிட்டத்தட்ட 1 மணி நேரத்திற்கு மேல் செந்தூரம் ஜெகதீஷ் பேசி உள்ளார்.  அவர் பேசியதைக் கேட்டு ரசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.  உங்கள் கருத்துக்களையும் அறிய ஆவலாக உள்ளேன்.

 

ஓஷோ கூட்டத்தின் முதல் பகுதி ஓஷோ கூட்டத்தின் முதல் பகுதி 

16.09.2017 (சனகிழமை) நடந்த கூட்டத்தின் காணொலியின் முதல் பகுதியை அளிக்கிறேன்.  எதாவது தவறு தென்பட்டால் குறிப்பிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.  இதன் அடுத்த 2 பகுதிகள் தொடர்ந்துவர உள்ளது.

 

குவிகம் நடத்திய இலக்கியக் கூட்டம்…

24ஆம் தேதி குவிகம் ஒரு இலக்கியக் கூட்டம் நடத்தியது. இது மாதம் ஒரு முறை நடத்தும் கூட்டம். இந்தக் கூட்டத்தில் சந்தியா பதிப்பக அதிபர் நடராஜன் அவர்கள் அகராதிகள் என்ற தலைப்பில் பேசியதை முதல் பகுதியாக வெளியிட்டேன். 28.06.2017 அன்று வெளியிட்டேன்.

அதன் இரண்டாம் பகுதியை இப்போது வெளியிடுகிறேன்.

 

 

நண்பர்களே,

வணக்கம்.

 

சமீபத்தில் நான் தில்லி சென்றிருந்தேன். நண்பர் கணேஷ் வெங்கட்ராமன் என்னை பி ஏ கிருஷ்ணன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்ல். வழக்கம்போல் அவரைப் பேட்டி எடுத்தேன். பத்து கேள்விகள் பத்து பதில்கள் தலைப்பில் அவருடைய இந்தப் பேட்டி வெளி ஆகிறது. மிகக் குறைவான பேர்களே இதைப் பார்த்து ரசித்தாலும் இந்த முயற்சியை நான் தொடர்ந்து செய்து கொண்டு வருகிறேன். இப்பேட்டி நடுவில் வெங்கட்ராமனும் கிருஷ்ணனிடம் சில கேள்விகள் கேட்டிருப்பார்.

பி ஏ கிருஷ்ணன் இது வரை 5 புத்தகங்கள் காலச்சுவடு பதிப்பகம் மூலம் கொண்டு வந்துள்ளார். அவருடைய புகழ்பெற்ற நாவல் புலி நகக் கொன்றை. முதலில் ஆங்கிலத்திலும் பின் தமிழிலும் வெளிவந்த நாவல். ஆங்கிலத்திலும் தமிழிலும் சரளமாக எழுதக் கூடியவர். அவருடைய புத்தகப் பட்டியலை இங்கு அளிக்கிறேன் : 1. புலி நகக் கொன்றை 2. கலங்கிய நதி 3. திரும்பிச் சென்ற தருணம் 4. மேற்கத்திய ஓவியங்கள் 5. அக்கிரகாரத்தில் பெரியார். இது என்னுடைய பத்தாவது பேட்டி.

 

திருப்பூர் கிருஷ்ணன் தி ஜானகிராமனை அழைத்துக்கொண்டு வந்து விட்டாரா?   

விருட்சம் இலக்கியச் சந்திப்பின் 26வது கூட்டம் ஒரு நல்ல துவக்கமாக அமைந்தது போல் தோன்றுகிறது.  திருப்பூர் கிருஷ்ணனுக்கு நன்றி.   

நாம் பழகிய எழுத்தாளரை நினைவு கூர்ந்து அவரைப் பற்றி சொல்வதோடல்லாம் அவர் படைப்புகளையும் நல்ல முறையில் அறிமுகம் செய்வவது முக்கியம்.  அதைச் சரியாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிகழ்த்திக் காட்டியவர் திருப்பூர் கிருஷ்ணன்.  எதிர்பார்க்காமலேயே நல்ல கூட்டம் அன்று.  சனி ஞாயிறுகளில் சென்னை மாநகரத்தில் பல இலக்கிய நிகழ்ச்சிகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. வந்திருந்து சிறப்பு செய்தவர்களுக்கு நன்றி.   

அவர் பேசியதை ஆடியோவில் பதிவு செய்துள்ளேன்.  இதை இங்கு அளிக்க விரும்புகிறேன்.  எல்லோரும் கேட்டு மகிழும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.