விருட்சம் – குவிகம் சேர்ந்து நடத்திய 5வது கூட்டம்


அழகியசிங்கர்


17.09.2021 அன்று மணிக்கொடி என்றொரு இயக்கம் என்ற தலைப்பின் கீழ் நடந்த கூட்டத்தில், மூத்த எழுத்தாளர் நரசய்யா தலைமை தாங்க, செந்தமிழ்ச் செல்வி, அழகியசிங்கர் உரை நிகழ்த்தினார்கள். கூட்டம் இனிமையாக நடந்தது.

25.12.2020 நடந்த கவிதையைக் குறித்து உரையாடல் – ஒளிப்பதிவு

25.12.2020 நடந்த கவிதையைக் குறித்து உரையாடல் – ஒளிப்பதிவு 

கலந்து கொண்டவர்கள் 


1.ப. சகதேவன் 2. வ.வே,சு  3. க.வை பழனிசாமி  4. முபீன் சாதிகா 
இவர்களுடன் கேள்வி கேட்பவர் : அழகியசிங்கர்

டிசம்பர் 2020 மாதம் கதை வாசிப்பில் கு அழகிரிசாமி

அழகியசிங்கர்

” ஒவ்வொரு மாதமும் 3வது சனிக்கிழமை ஒரு சிறுகதை ஆசிரியரின் கதைகளைக் கொண்டாடுவது வழக்கம்.  முதலில் அசோகமித்திரன் இரண்டாவது தி.,ஜானகிராமன் மூன்றாவது புதுமைப் பித்தன்.  இதோ இப்போது கு.அழகிரிசாமி.  11 கதை அபிமானிகள் கதைகளைக் குறித்துப் பேசுவதைக் கேளுங்கள்.  

விருட்சம் சூம் மூலமாக நடத்தும் 30வது கவிதை வாசிப்பு கூட்டம்

அழகியசிங்கர்

கவிஞர் அ.கார்த்திகேயன் அவர்கள் ஜென் கவிதைகள் குறித்து உரை நிகழ்த்திய தொகுப்பு.
https://studio.youtube.com/video/CsDbnQ-iZ8A/edit

29வது சூம் மூலம் கவிதை வாசிப்பு கூட்டம்


அழகியசிங்கர்


வெள்ளிக்கிழமை (11.12.2020) பாரதியார் பிறந்தநாள் முன்னிட்டு பாரதியின் கவிதைகளை மட்டும் வாசித்தோம். நான் ஒவ்வொரு முறையும் எதாவது புதுமை செய்ய வேண்டுமென்று நினைப்பேன். இக் கூட்டங்களில் கலந்து கொள்பவர்கள் அதைப் புரிந்து வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.


இந்த முறை பாரதியார் கவிதைகளை அவருடைய பாடல்களை வாசிப்பதும் இசைப்பதுமாய் கூட்டம் நடத்தி முடித்தேன். எல்லோரும் இதில் கலந்து கொண்டு பாரதியார் பாடல்களை/கவிதைகளை பாடினார்கள். ஏற்கனவே கவிதைகளை வாசித்தவர்களின்/பாடியவர்களின் ஒளிப்பதிவுகளை சூமில் பதிய வைத்தோம். சிறப்பாக வந்துள்ளது.

28ஆம் கவிதை வாசிக்கும் கூட்டத்தின் ஒளிப்பதிவு

அழகியசிங்கர்  

02.12.2020 அன்று வெள்ளிக்கிழமை நடந்த 28ஆம் சூம் கவிதை வாசிக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு கவிதை வாசித்தவர்களின் ஒளிப்பதிவை இங்கு அளிக்கிறேன்.  
இந்த கவிதை ஒளிப்பதிவில் காணப்படும் குறைகளை யாராவது சுட்டிக் காட்டினால் அடுத்த முறை வராமல் பார்த்துக்கொள்ளப்படும்.

மொழிபெயர்ப்புக் கவிதைகளை சூம் மூலம் (27.11.2020) வாசித்தோம்…



நாங்கள் ஆறுபேர்கள் சேர்ந்து மொழிபெயர்ப்புக் கவிதைகளை வாசித்தோம்.  அதன் ஒளிப்பதிவை இங்குப் பாருங்கள்.
1. வ.வே,சு 2. இரா முருகன் 3.  சகதேவன் 4.  முபீன் சாதிகா 5.  பானுமதி 6. அழகியசிங்கர்

2015 வெள்ளத்தை மறக்க முடியாதது..

அழகியசிங்கர்

2015 வெள்ளம் வந்தபோது எங்கள் தெருவெல்லாம் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது.  என்னால் நம்ப முடியாத வெள்ளம்.  எங்கள் தெருவிற்கு அப்படியொரு வெள்ளம் என்று கனவிலும் எதிர் பார்க்கவில்லை .  இப்போது அடிக்கப் போகும் புயல் அந்த அளவிற்குப் பாதிப்பை நிச்சயமாகக் கொடுக்காது என்றுதான் நினைக்கிறேன்.
அந்த வெள்ளத்தைக் கொஞ்சம் திரும்பவும் பார்க்கலாம் என்றுதான் இந்த ஒளிப்பதிவைப் பதிவிடுகிறேன். 

2015ல் எங்கள் தெருவில் வெள்ளம் வந்தபோது எங்கள் வீட்டிற்கு எதிரில் எல்லோரும் நீந்திச் செல்கிறார்கள்.  நான் என் வீட்டிலிருந்து காமெரா மூலமாகப்படம் பிடித்தேன்.

மாலை 6.30 மணிக்கு சூம் மூலமாக 26ஆவது கவிதை அரங்கத்தில வாசித்த கவிதைகள்

20.11.2020 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 6.30 மணிக்கு சூம் மூலமாக 26ஆவது கவிதை அரங்கத்தில வாசித்த கவிதைகளை ஒளிப்பதிவாக தருகிறேன். முக்கியமாக இதில் கலந்துகொண்டு கவிதை வாசிப்பவர்கள், அவர்களுடைய கவிதைகளை வாசிக்கப் போவதில்லை. அவர்கள் விருமபுகிற கவிஞர்களின் கவிதைகளை வாசிக்க உள்ளார்கள். யார் யாரு எந்தக் கவிஞர்களின் கவிதைகளை வாசிக்க உள்ளார்கள் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.

1. வ வே சு                      - சுந்தரராமசாமி கவிதைகள்
2. ஷாஅ          - ஆனந்த் கவிதைகள்
3. ரவீந்திரன்           - தேவதச்சன் கவிதைகள்
4. கணேஷ்ராம்            - கல்யாண்ஜி கவிதைகள்
5. ஸ்ரீதர்              - ஞானக்கூத்தன் கவிதைகள்
6. சிறகா            - அனார் கவிதைகள்
7. பானுமதி          -  குட்டி ரேவதி கவிதைகள்