பட்டத் தம் உள்ளங்கைகளைக் கவனிப்பார்கள்
விட்டதாய்த் தோன்றுகையில்
நடைபெறும் நாள் :: 24.05.2014 (சனிக்கிழமை)
நேரம் :: மாலை 5 மணிக்கு
இடம் :: ஸ்ரீ அலர்மேலுமங்கா கல்யாண மண்டபம்
நடேசன் பூங்கா அருகில்
19 ராதாகிருஷ்ணன் சாலை,
தி. நகர், சென்னை 600 017
பொருள் ‘தமிழில் புதிய இலக்கியப் போக்குகள்”
உரை நிகழ்த்துபவர் : எழுத்தாளர் அசோகமித்திரன்
அன்புடன்
(அழகியசிங்கர்)
எவருக்குள்ளும் எவரும் இருக்கலாம்
அடிமாட்டைப் போல் அலைக்கழிக்கும் பிரியங்களுக்கு
கசாப்புக் கடைகளின் ரத்தவாடை
பழகி விட்ட படியாலே
புன்னகையோடு
தலைவெட்டப்படும் கணத்திற்கு காத்திருக்கும்
எவருக்குள்ளும் எவரும் இருக்கலாம்
மொத்தமாய் அடைக்கப்படும் இடத்திலெல்லாம்
ரகசியமெனும் ஈனஸ்வரம்
கேட்கச் சகியாதவாரு அனற்றிக் கொண்டிருக்க
புத்தன் பிறக்கிறான் போதிமர வேரை அழித்தபடி
***
|
அவள் கனவுகளை எனக்காகச் சுமந்தவள்
வலிக்கும்போதேல்லாம் எனக்காகத் தாங்கிக் கொண்டவள்
வயிற்றைத் தொட்டுத் தொட்டு எனைப் பார்த்த
அவளுடைய கைகள் பூஜையரையைவிட மேலான
எனது பெரிய மனதுள் பத்திர நினைவாகவே வைக்கப்பட்டுள்ளது.
அம்மா; எனது மூச்சிக்கு சப்தம் இருக்குமெனில்
எனது உயிருக்கு நிறம் இருக்குமெனில்
எனது வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்குமெனில் அதத்தனையும்
அம்மா; அம்மா மட்டுமே..
இன்று எனக்கு வலித்தாலும்
இன்று நான் அழுதாலும்
என்னோடு சேர்ந்து அழுவது
அம்மாவாகவே இருக்கிறாள் எப்போதைக்கும்..
அவள் கொடுத்த சோற்றின்
அவள் கொடுத்தப் பாலின்
அவள் தந்த மூச்சின் அறையெங்கும் அவளையே தேடுகிறது மனசு..
அம்மா எங்கே அம்மா எங்கே
என்று ஏங்குகிறது மனசு..
அம்மா இல்லையே என்று கசங்கி
அழுகிறது மனசு..
அம்மா இல்லாத நானும்
இருந்தும் இல்லாதவன் தான்..
உண்மையில் எனக்கு
அம்மா காலத்திற்கும் வேண்டுமாய் இருந்தாள்,
அவளில்லாத இரவுபகல் அவளோடு தீரவேண்டுமாய் இருந்தது,
தீராத நாட்களோடு வதைபடுகிறேன்
அம்மாவைத் தேடும் கண்கள் சிவக்கச் சிவக்க அழுகிறேன்
அம்மா நேற்று கனவில் வந்தாள்
அழாதே என்றாள்
நானிருக்குமிடத்தில் அவளும் இருப்பாளாம்
தொட்டுப் பார் என்றாள்
அம்மாவைத் தொட்டுப் பார்க்கிறேன்
உடல் சிலிர்க்கிறது,
அவள் தனது வயிற்றுள் எனைத் தொட்டுப் பார்த்த
அதே தொடுதல்
அதே அம்மாவின் வாசம்
அதே ஈர்ப்பு உடலெங்கும் பரவி ‘நானிருக்கேண்டா தங்கம்’
என்றாள் அம்மா,
இரவின் கனத்தை கட்டிப் பிடித்துக் கொண்டு
அம்மா அம்மா என்று கதறுகிறேன்..
இரவுகள் இன்னும் நீண்டு நிற்கிறது
வாழ்க்கை இப்படித் தான் இருப்பதோடும்
இல்லாததோடும் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது..
நான் விடிந்ததும் கண்விழிக்கிறேன்
எப்போதும் போல புறப்படுகிறேன்
மதிய உணவையும் எடுத்துக்கொண்டு ஓடி
பேருந்திலேற அதே ஜன்னளோர இருக்கைக் கிடைக்கிறது
அமர்ந்துக் கொண்டு வழியெங்கும் தேடுகிறேன்
கண்ணீர் வழிந்து காற்றோடு அலைகிறது
அம்மா நினைவினுள் இருந்துக் கொண்டேயிருக்கிறாள்..
வட்டம் 1
வாழ மனமில்லை
சாக இடமில்லை
வானில் மேகமில்லை
ஆனால்
வெயிலும் மடிக்கவில்லை
கந்தைக் குடைத்துணி
யெனக்
கிடக்கும்
தன்னினமொன்றைச்
சுற்றிச்சுற்றி வருமிக்
கறுப்பின்ஓலம்போல்
செத்துக் கிடக்கும்
சுசீலாவை
வட்டமிட்டு
வட்டமிட்டு
வட்டமிட்டு…….
நகுலன்
இந்த ஆண்டு பிப்பரவரி மாதம் போல் ஒரு சோதனையான மாதத்தை நான் சந்தித்ததே இல்லை. வங்கியிலிருந்து 33 ஆண்டுகளுக்கு மேல் பணி ஆற்றி பதவி மூப்பு அடைகிறேன் என்பதை நினைத்துப் பார்க்கும்போது எனக்கு சந்தோஷமாக இருந்தது. அதாவது பிப்பரவரி மாதம் நான் பதவி மூப்பு அடையும் மாதம். அந்த மாதம்தான் எனக்குப் பிரச்சினையான மாதமாக மாறிவிட்டது. கண் பொறை காரணமாக எனக்கு இரண்டு கண்களிலும் சரியான பார்வை இல்லை. வண்டி ஓட்டிக்கொண்டு செல்லமுடியவில்லை. கணினிகளைப் பார்க்க முடியவில்லை. கண் பார்வையைச் சரி செய்யலாமென்றால் சர்க்கரை நோயையும், உயர் அழுத்த நோயையும் சரி செய்தால் முடியும். அதை உடனே செய்ய முடியவில்லை. இந்தத் தருணத்தில் அலுவலகம் போகலாமா வேண்டாமா என்ற நிலை. ஆனால் அலுவலகத்திற்கு வரும்படி தொந்தரவு. வேறு வழியில்லாமல் அலுவலகம் வந்துகொண்டிருந்தேன். நிம்மதியாக ஏன் பதவி மூப்பு அடைய முடியவில்லை என்று தோன்றி கொண்டிருந்தது.
நோடீசு ஒட்டக்கூடாதென்று
எழுதியிருந்த
காம்பௌண்டு சுவரில்
வேப்ப மரக்கிளை நிழல்
நோடீசாகப் படிந்திருந்தது
– நா ஜெயராமன்
எல்லாக் குப்பைகளையும் தூக்கி
தெருவிலுள்ள குப்பைத் தொட்டியில் போட்டாள்
என் புத்தகக் குவியலைப் பார்த்து
மலைத்து நின்றாள்
என்ன செய்வதென்று அறியாமல்
பின் ஆத்திரத்துடன்
தெருவில் வீசியெறிந்தாள்
போவோர் வருவோர் காலிடற
புத்தகங்கள் சிதறிக் கிடந்தன தெருவெல்லாம்
ஒரு புத்தகம் திறந்தபடியே இருந்தது
அதிலுள்ள வரிகள் எல்லார் கண்களிலும் பட
படித்தவர்கள் சிரித்தபடியே சென்றனர்
எல்லார் முகங்களிலும் புன்னகை
நானும் ஆவலுடன்
மாடிப்படிக்கட்டிலிலிருந்து
தடதடவென்று இறங்கி
புத்தகத்தின் வரியை
இடுப்பில் ஒழுங்காய் நிலைகொள்ளாத
வேஷ்டியைப் பிடித்தபடி படித்தேன்
‘இன்று உலகப் புத்தக தினம்
இன்றாவது புத்தகம் படிக்க
அவகாசம் தேடுங்கள்’
நானும் சிரித்தபடியே
புத்தகத்தில் விட்டுச் சென்ற
வரிகளை நினைத்துக்கொண்டேன்
இடுப்பை விட்டு நழுவத் தயாராய் இருக்கும்
வேஷ்டியைப் பிடித்தபடி….
(14.06.2008)
பாதைப் பசுக்கள்
பால் வற்றிய பசுக்களும்
மலட்டுப் பசுக்களும்
கவனிப்பாரற்ற கறவைகளும்
தசைகள் அசைத்து
மெல்ல சாலைகளின் ஊடே
நடப்பதனால்
வண்டிக் காளையின்
கவனம் கெட்டுக்
குழப்பமும் விபத்தும்
நிகழ்வது தவிர்க்க
உரிமையாளர்க் கொரு
பணிவான வேண்டுகோள்
அவரவர் பசுக்களை
ஒழுங்கில் வைக்கவும்
அநாதைப் பசுக்களை
அரசுக் காக்கும்
ஆர். வி சுப்பிரமணியன்
பூக்கள்
1. வெட்கமின்றி சிரித்தது
கொட்டும் மழையில்
குளிக்கும் ரோஜாப்பூ
2. சூரியன் மறைவில்
கூம்பிய மலர்கள்
மூடிப்பிடித்தவை அப்
பாவி வண்டுகள்
3. பனிபூக்க முகம் பூக்கும்
நான் வளர்க்கும்
ரோஜாப்பூ
4. மனிதரோடு மாடுகள்
போகும் ஊரோர
தார்சாலை மரங்கள்
இறைத்திருக்கும்
மலர்கள்
5. இரவில் ஊரார் கால்
கழுவ
போகுமிடம் பெருமாள்
குளம்
புண்ணாய் நீரெல்லாம்
ஊதாப்பூ.
6. வேலைக்குப் போகும்
மகளிராய்
பஸ் ஸ்டாண்டில்
கூடைப்பூ
7.அருகழைத்து பின்
விரதமென்று புறந்
தள்ளும் பவழ மல்லி
பதி