அடைந்த வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
Category: Uncategorized
கசடதபற மே 1971 – 8வது இதழ்
பெரியசாமி தீர்க்கிறார்
வே மாலி
என்ன செய்வ திநதக் கையை
என்றேன். என்ன செய்வ தென்றால்
என்றான் சாமி. கைக்கு வேலை
என்றி ருந்தால் பிரச்னை இல்லை.
மற்ற நேரம் – நடக்கும் போதும்
நிற்கும் போதும், இந்தக் கைகள்
வெறும் தோள் முனைத்தொங் கல், தாங் காத
உறுத்தல் வடிவத் தொல்லை
என்றேன். கையைக் காலாக் கென்றான்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள கவிதை வே மாலி என்ற பெயரில் சி மணி எழுதிய கவிதை. ஒன்றும் பயன் இல்லாதபோது கையை காலாகத்தான் பயன் படுத்த வேண்டும். ஆனால் கை பயன்பாடு இல்லாதத் தருணத்தில் தோள் முனைத்தொங்கலாகத் தோன்றுகிறது. இப்படி வேடிக்கையாக பல கவிதைகள் கசடதபற காலத்தில் உருவாயின. இக் கவிதையைப் படிக்கும்போது, 1968 ஆம் ஆண்டு எழுதிய ஞானக்கூத்தனின் பிரச்னை கவிதை ஏனோ ஞாபகத்திற்கு வரும். அக் கவிதை இதோ:
பிரச்னை
திண்ணை இருட்டில் எவரோ கேட்டார்
தலையை எங்கே வைப்பதாம் என்று
எவனோ ஒருவன் சொன்னான்
களவு போகாமல் கையருகே வை.
ஞானக்கூத்தன் கையை தலைக்கு காவலாக வைக்கச் சொல்கிறார்.
நான் இறக்கவிருந்த இரவில்.. – சார்லஸ் புக்கோவ்ஸ்கி
எதையாவது சொல்லட்டுமா……..98
மாம்பலத்தில் ஆர்யாகவுடர் ரோடு என்றுழ உள்ளது. அந்த ரோடு ஒருவர் நடந்து போனல் போதும், பொழுது நன்றாகப் போய்விடும். மாலை நேரத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். எளிதில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போக முடியாது. நான் கிட்டத்தட்ட அநத ரோடு வாசி. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக போஸ்டல் காலனி முதல் தெருவில்தான் இருந்தேன். நல்ல சென்டரான இடம். ரோடு அகலமாக இருக்கும். ரொம்ப குறைவான அடுக்ககத்தில் நாங்கள் இருந்தாலும், எந்த இடத்திற்கும் அங்கிருந்து போய்விட முடியும். அந்தத் தெருவை ஒட்டித்தான் ஆர்யாகவுடர் ரோடு உள்ளது. அயோத்தியா மண்டபத்தில் ஒவ்வொரு வருடமும் கூட்டம் நடக்கும். பாட்டுக் கச்சேரி நடக்கும். கதை உபன்யாசம் நடக்கும். எனக்குக் கடவுள் நம்பிக்கை கொஞ்சம் குறைவு. ஆனால் நாத்திகன் கிடையாது. என் வீட்டில் உள்ளவர்கள் அயோத்தியா மண்டபம் போக வேண்டுமென்று சொன்னால், அயோக்கியா மண்டபமா என்று கேட்பேன். உடனே வீட்டில் உள்ளவர்கள் திட்டுவார்கள். நான் சிரித்துக்கொள்வேன்.
ஒரு வருத்தமான சந்திப்பு…
அப்பாவும் நானும்
கசடதபற APRIL 1971 – 7வது இதழ்
தோட்டி
ந மகாகணபதி
ஈக்களை, நேற்று விரட்டி
நீ படுத்திருக்கையில் மற்ற
குப்பைகளை வாரிப்போனேன்.
கடித்து மகிழ்ந்த கரும்புச் சக்கைகள்
கால் பரப்பிக் கிடக்கும் பழத்தோல்கள்.
வாடிய இலைகள் இவற்றை விட்டு ஈக்கள்
உன்னை, இன்று மொய்க்க, நீ அவற்றை
விரட்டவில்லை
மூலையில்
வழக்கமாய் மாடுகள் நிற்க
நானும் நிற்க, வேலையும்
நிற்கிறது நடக்காமல.
இந்தத் கவிதையை எப்படி அர்த்தப்படுத்துவது. படுத்திருப்பவள் தோட்டியா? அவளுக்கு உதவியாய் அவளுக்கு நெருக்கமானவள் வருகிறாள். அடுத்த நாள் ஈக்கள் படுத்துக்கிடந்தவளை மொய்கிறது. அப்படியென்றால் அவள் சவமாக மாறிவிட்டாள். அவளுக்கு உதவி செய்ய வந்தவள் ஒன்றும் தோன்றாமல் நிற்கிறாள். அற்புதமான கவிதை.
கலந்துகொண்ட மே மாத இலக்கியக் கூட்டங்கள்
புத்தக விமர்சனம்:
வெளியீடு.
ஒரு மையக் கருவை அல்லது அனுபவத்தை ( அதிக நீளம் இல்லாத ) கதையாக உரைநடையில் எழுதும்
ஓர் இலக்கிய வகை என்கிறது க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி. அழகியசிங்கரின் ‘ரோஜா
நிறச்சட்டை’ அவரது நான்காவது கதைத் தொகுதி. எல்லாக் கதைகளுமே, வங்கிகளில் நடக்கும்
தினசரி அலுவல்களின் சவால்களும், முரண்களும்தான் ! வங்கி மேலாளர், அதிகாரிகள், கடைநிலை
ஊழியர்கள், தற்காலிக வேலையில் இருப்பவர்கள் மற்றும் வங்கியின் வாடிக்கையாளர்கள் என,
கதை மாந்தர்கள் சுற்றி வருகின்றனர். மிக இயல்பாக, வங்கியிலும், வெளியிலும் அங்கு பணிபுரிபுரிபவர்களின்
மனோ பாவங்களை, எந்த ஏற்ற இறக்கங்களும் இல்லாமல், ஒரே நேர்க் கோட்டில் கதை சொல்லிக்கொண்டே
போகிறார் அழகியசிங்கர். ஒவ்வொரு கதையிலும் யதார்த்தம் முழுமையாக விரவியுள்ளது !
கதைகள், கட்டுரை வடிவை அடைந்து விடுகின்றன
– கதையின் மையப்புள்ளியிலிருந்து சற்று விலகி, வாசகனின் கற்பனைக்கு வழிவிட்டுத் திரும்பவும்
கதைக்குள் திரும்பி, சட்டென முடிந்துவிடுகிறது,! கதைசொல்லியின் கவனம் கதைக் களத்தைச்
சுற்றிச் சுழலுவதே இதன் காரணம் – அதுவே கதையின் நம்பகத்தன்மையையும் கூட்டுகிறது.
‘சில்’லென்ற காற்றில் நண்பனின் தோள்மீது கை போட்டுக்கொண்டு வங்கியில் நடந்தவைகளைப்
பற்றிக் கதை கதையாகக் கேட்டுக்கொண்டே நடைப்பதைப் போன்றதொரு அனுபவம்!
அர்த்தம் என்ன ? எதற்கு ’ஹலோ’? சொல்பவரின்
பின்னணி என்ன ? ஏன் ஒருவருக்கு ‘ஹலோ’ சொல்லப்
பிடிப்பதில்லை ? இப்படிப் பல கேள்விகளுடன் சுழல்கிறது ‘ ஹலோ ‘ என்ற சிறுகதை ! எல்லாம்
ஹலோ என்கிற ஒரு வார்த்தையைச் சுற்றி !
பாம்பு கதைகளில் நகரத்திலிருந்து டிரான்ஸ்பர்
ஆகிக் கிராமங்களிலும், சிறிய டவுன்களிலும் வங்கி அதிகாரிகள் சந்திக்கும் சவால்களையும்,
பிரச்சனைகளையும் ஒரு வித வருத்தத்துடன் கையறு நிலையில் சொல்கிறார் – வீட்டையும், குடும்பத்தையும்
விட்டு, உண்மையிலேயே வசதிகளற்ற தொலை தூரக் கிராமங்களில் அவர்கள் படும் துயரங்கள் அவை
! அவர்கள் சந்திக்கும், மெஸ் நடத்தும் பெண்மணி, பஸ் மற்றும் ஆட்டோ ஓட்டுனர், துப்புரவுப்
பணியாளர், வாடிக்கையாளர்கள் அனைவரும் இரத்தமும் சதையுமாக உலா வருகின்றனர்.
அமெரிக்காவின் தாக்கத்தில் பெண்
வாடிக்கையாளர் ஒருவரிடம் முறை தவறி நடந்துவிட, அதன் விளைவுகளை சந்திக்கிறார் வங்கி
அதிகாரி ஒருவர். தவறினை உணர்ந்து, மன்னிப்புக் கேட்டுவிட்டாலும், இறுதியில் அவளுக்குப்
பணம் கொடுத்துத் தன் வேலையைத் (கூட மானத்தையும் !) தக்க வைத்துக் கொள்ளும் நிலைக்குத்
தள்ளப்படுகிறார் – இன்னும் வசதிகளே இல்லாத வேறொரு கிராமத்துக்கு மாற்றப்படுகிறார்
!
உண்மையிலேயே ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் வாசிக்கும் அனுபவத்தினைத் தருகிறது ; ஸ்டீபென்
லீகாக் சிறுகதை போல ! – உள்ளே வைத்துப் பூட்டப்பட்ட
மாமியின் நிலை நம்மையும் கவலைப்பட வைக்கிறது. சம்பந்தப் பட்ட அதிகாரி வேறொரு கிராமத்துக்கு
மாற்றல் ஆகிறார் – ’கிராமத்துக்கு மாற்றல்’ என்பது ஒரு தண்டனையாகவே சித்தரிக்கப் படுகிறது!
‘ உண்மையிலேயே புரியாத ஒரு பிரச்சனைதான் – இந்தக் காலத்து பள்ளி / கல்லூரிக் குழந்தைகளை
கவனமாகக் கண்ணும் கருத்துமாக வளர்ப்பது மிகவும் கடினம்தான் !
பார்க்கும் பாபுவிடமிருந்து, அவன் டிபனுக்காகத் தான் செலவு செய்த இருபது ரூபாயை வாங்குவாரா,
மாட்டாரா – இறுதி வரையில் நம்மையும் அலைய விடுகிறார் – ’இருபது ரூபாய்’ கதையில் !
‘மனித மனம் எப்படி சம்பந்தம் இல்லாமல், நடக்கின்ற நல்லவை / கெட்டவை களுக்கெல்லாம் எதனுடனாவது
முடிச்சுப் போடுகிறது என்று சொல்லுகிறது. நம் நம்பிக்கைகளின் போலித்தன்மையையும், அதன்
விளைவுகளையும் படம் பிடித்துக் காட்டுகிறது இந்தச் சிறுகதை.
குறிப்பிடும் சில இடங்கள் ( மேற்கு மாம்பலம் ), டாக்டர் (சீனிவாச கண்ணன்) மற்றும் அவரது
உறவுகள் – மனைவி, அப்பா – நிஜத்தில் உள்ளவை. நிகழ்வுகளின் நம்பகத்தன்மையும், வேகமும்
இதனால் உறுதிப் படுகிறது.
முடித்தபோது, வங்கியில் பணி புரியும் பலருடன் பழகி, ட்ரான்ஸ்பரில் சென்று திரும்பி
வந்த உணர்வு ! கதாசிரியரின் தனிப்பட்ட கருத்துக்கள், எண்ணங்கள், மற்றவரைப் பற்றிய கணிப்புகள்
ஆங்காங்கே தெளிவாய்த் தெரிகின்றன ! வாசிக்கும்போது ஆசிரியரும் நம்முடன் கூடவே வருவது
போல் ஒரு பிரமை – இது தவிர்க்கப் படவேண்டியதா என்பது விவாததுக்குரியது !