Category: Uncategorized
புத்தக விமர்சனம் 6
இன்றைக்கு ஸ்டெல்லா புரூஸ் பிறந்தநாள்….
அழகியசிங்கர்
புத்தக விமர்சனம் 5
அழகியசிங்கர்
என் தாய்மொழி தமிழ்.
!
தமிழில்தான்.
மீடியம்)
கொள்ளத் தடை செய்யப்பட்டவன்.
மாநில,நாடுகளுடன் என்னைத் தொடர்பு கொள்ளவும் நான் கற்ற பிற மொழி, கிழக்கிந்தியக்
கம்பெனியின் ஆங்கிலம்.
எனக்கு, சிறு வயதிலிருந்தே அறிமுகம் செய்யப் பட்டவை – செய்தது, என் முன்னோர்கள் –
அவர்கள் தாய்மொழியும் தமிழ்தான் !
நாயன்மார்கள் தேவார, திருவாசகங்களையும் பாடியது என் தாய்மொழி தமிழிலேயேதான் –
அதனால் ஓரளவுக்கு எளிதில் அவை எனக்குப் புரிந்தன !
நாலடியாரும், கம்பராமாயணமும், திருக்குறளும், சிலப்பதிகாரமும், சீவகசிந்தாமணியும்,
இன்ன பிறவும் அவ்வாறே எனக்குப் பயிற்றுவிக்கப் பட்டன ! இலக்கியத்துக்கும்,
வரலாற்றுக்கும் அதிக வேற்றுமை தெரியாமல் அவை என்னுள் தாய்மொழியிலேயே செலுத்தப்
பட்டன !
!
ஆங்கில மொழிமாற்றுச் சொற்களைத் தேடிப்பிடித்து, சொல்லாட வேண்டியுள்ளது !
போலத்தான், மாற்றுக் கருத்துக்களும் எனக்குத் தமிழிலேயே புரிகின்றன – இருக்கிறது
என்பவரும், இல்லவே இல்லை என்பவரும், இரண்டுக்கும் இடையிலே ‘ எனக்குத் தெரியாது ‘
என்பவரும், தமிழிலேயே எனக்குப் புரிகின்றனர் !
ஓட்டுரிமை பெற்ற ஓர் இந்தியத் தமிழ் பிரஜை !
அல்ல – ஆங்கில வழி மருத்துவம்.
விவரிக்கும் என் சக மனிதர்களுக்கு, நோய்க்கான காரணிகளைச் சிந்தித்து, சிகிச்சை
அளிக்கும்போது, தமிழிலேயே அவர்களுடன் உரையாடுகிறேன்.
பெரும்பாலும் விரும்பிப் பார்க்கிறேன் – தமிழ் புரியுமென்பதால் !
பாடல்கள் என்னை ஆட்கொள்ளும் அளவுக்குப் பிற மொழிப் பாடல்கள் ஆட்கொள்வதில்லை –
கருத்துக்கள் மனதில் நிற்காததால் !
இலயிக்க, மொழி வழி விளக்கம் அவசியமாகிறது !
வணக்கங்களையே எதிர்கொள்கின்றது !
முறை நான் விரும்பிக் கூறும் தமிழ்ச் சொற்கள் !
தமிழிலேயேதான் நிகழ்கின்றது !
புத்தகங்கள் எழுதி வெளியிட்டபோது, பலர் என்னைக் கேட்ட கேள்வி எனக்கு
வியப்பளிக்கவில்லை – மாறாக, என் தாய் மொழி பற்றி நான் கொண்டுள்ள என் கருத்துக்களைக்
கூற ஒரு வாய்ப்பளித்தது !
பொதுவான நோய்களைப் பற்றிய தெளிவான கருத்துக்கள் வேண்டும் – மருத்துவர் சொல்வது
அவர்களுக்குப் புரிய வேண்டும் – நோய் பற்றிய தவறான தகவல்களை அவர்கள் புறம்
தள்ளவேண்டும். மேலும், ஆங்கிலத்தில் ஏராளமான் மருத்துவப் புத்தகங்கள் கிடைக்கின்றன
– மற்றுமொன்று அவசியமில்லை “ என்பதே என் பதிலாக இருந்தது !
இரத்தத்திலும் ஒன்றரக் கலந்திருக்கின்ற என் தமிழ் மொழி மீது எனக்குள்ள காதல்,
வெறும் வார்த்தைகளால் வடிக்க இயலாது.
தமிழகத்தின் கிராமங்களைக் கண்டிருக்கிறேன் – அவர்கள் குறும்பு என்னை வாய் விட்டு
சிரிக்க வைக்கிறது.
கேலியும் என்னைக் கிறங்க வைக்கின்றன.
‘வாடி’ ‘போடி’ என்று கேலியாகவும், ‘நொண்ணைகளா’ என்று உரிமையோடும் உறவாடுவது
எனக்குப் பிடிக்கும்.
பரிமாணங்களைக் கொண்ட தமிழ் – காவிரிக் கரையின் சிலம்புத் தமிழ், என்றும் என்னை
நெகிழவைக்கும் கன்னித் தமிழ் !
இருந்தா, எப்போ வாத்யார் படத்துக்கு போவர்து ? கலீஜ் பண்ணாமெ கெளம்பு, படம்
கண்டுக்கினு, அப்பால பிரியாணி துண்லாம் ‘ – புரிதலுக்கும், சொல்லாடலுக்கும் மிகவும்
கடினமான சென்னைத் தமிழ் – அதன் சரளத்தில் என்னை நான் பலமுறை
இழந்திருக்கிறேன்.
மொழியாகக் கொண்டு, வீட்டில் தன் தாய்மொழியையும், மேடையில் என் தமிழைத் தன்
தாய்மொழியெனவும் வீரமுழக்கம் செய்து உரிமை கொண்டாடுவோரின் தமிழ்ப் பற்று எனக்குப்
பிடிக்கும் – ஆனால் அது என் தாய்மொழிப் பற்றுக்குச் சமமாகாது!
தாங்குகிறேன் என்று சொல்லி, புதிய சொல்லாடல் என்கிற பெயரில், தமிழின் அழகை,
இனிமையைக் குறைக்கும் வகையில் என் தாயைச் சிதைப்பதில் எனக்கு உடன்பாடு
கிடையாது.
தமிழ்த் தாயை மானபங்கப் படுத்துவதை ஏற்றுக் கொள்ள
மாட்டேன்.
வரவேற்கிறேன் – ஆனால் ஆங்கிலத்தில் சிந்தித்து, அதை என் தமிழில் மொழிமாற்றம்
செய்யும் போது, புதிய புரியாத சொற்களை நவீனம் என்ற பெயரில் திணிப்பதை புறம் தள்ளவே
விரும்புகிறேன்.
நல்லவனாய், நன்மைகள் பல செய்பவனாய், விருந்தோம்பலில் சிறந்தவனாய், வாரிக்
கொடுப்பதில் பாரியாய், மனதுக்கும், மகிழ்வுக்கும் நேர்மையான தமிழனாய் இருக்கவே
விரும்புகிறேன்!
கசடதபற மே 1971 – 8வது இதழ்
அநாசாரம்
நீலமணி
வண்டோடு சம்போகம்
செய்துவிட்டுக்
குளிக்காமல
கடவுள் தோளேறும்
மாலைப் பூ
எழுத்து காலத்திற்குப் பிறகு, கசடதபற ஒரு முக்கியமான இடத்தைப் பெறுகிறது. எழுத்தில் வெளிவந்த கவிதைகள் கசடதபற இதழ்களில் வெளிவர வாய்ப்பு உள்ளது. ஆனால் கசடதபற இதழ்களில் வெளிவந்த கவிதைகள் எழுத்துவில் பிரசுரம் ஆக வாய்ப்பில்லை.
உதாரணமாக நீலமணி என்ற கவிஞர் கசடதபற இதழ்களில் முக்கியமான கவிஞராகத் தென்படுகிறார். பாலுணர்வை வெளிப்படையாக கவிதைகள் மூலம் முதன் முதலாக கசடதபற இதழ்கள் வெளிக்கொண்டு வர இவர் ஒரு காரணம்.
ஏற்கனவே அழைப்பு என்ற கவிதை எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்த ஒன்று.
நிரோத் உபயோகியுங்கள்
நிரோத் உபயோகியுங்கள்
என்று விளம்பரங்கள்
வலியுறுத்துகின்றன
வாயேன்.
அதேபோல் கசடதபற இதழ்களில் பெண் கவிஞர்கள் யாருமில்லை. ஆனால் பெண்களைப் பற்றிய கவிதைகள் நிறையா உண்டு.
அப்துல்கலாம் பற்றிய எளிய குறிப்புகள்….
எதையாவது சொல்லட்டுமா……….99
நானும் பார்க்கிறேன் சினிமாக்களை……
அழகியசிங்கர்
30 06.2014 அன்று நான் பார்த்த படம் சான்று ( PROOF). ஷேக்ஸ்பியர் இன் லவ் என்ற திறமையான படததை எடுத்து இயக்குநர்தான் இந்தப் படத்தையும் எடுத்துள்ளார். ஆஸ்கர் வெற்றிப் பெற்ற சிறந்த நடிக்கைக்கான விருதுபெற்ற கெயிநத் பால்ரோ Gwyneth Paltrow (Best Actress, Shakespeare in Love, 1998) , அந்தோனி ஹாப்கின்ஸ் (சிறந்த நடிகர் விருதுபெற்றவர்), ஹோப் டேவிஸ் போன்ற வர்கள் சிறப்பாக நடித்தப் படம் ‘சான்று’ என்ற இப் படம். 27 வயது நிரம்பிய காத்ரின் என்ற பெண் நடுசாமத்தில் டிவி பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவள் குடிப்பதற்கு மது கொடுக்கிறார் அவள் அப்பா. சிறிது நேரம் அவர்கள் இருவரும் புத்தி பிறழ்ச்சியைப் பற்றி பேசிக்கொணள்டிருக்கிறார்கள். அந்தப் பேச்சு முடியும்போது ஒரு விஷயம் தெரிகிறது. அவள் அப்பா ராபர்ட் போனவாரம் இறந்து விட்டார். அவரை நாளை அடக்கம் செய்யப் போகிறரர்கள். காத்ரின் அவளுடைய அப்பாவைப் பற்றி நினைவுகளுடனும், அவளுடைய எதிர்காலம் பற்றிய நிச்சயம் இன்மையுடனும் வாழ்கிறாள். அவள் இப்படிபட்ட கனவுடன் விழித்துக் கொள்ளும்போதுதான் அவளுக்குத் தெரிகிறது அப்பாவுடைய மாணவனான ஹால் அவருடைய அறையில் உள்ள புத்தகங்களைப் படித்துக் கொண்டிருக்கிறான். அவளுடைய போராட்டம்தான் இப்படம். ராபர்ட் என்கிற அவளுடைய அப்பாவை பல ஆண்டுகளாக பாதுகாத்து வருகிறாள் அவளுடைய அப்பா நிச்சயமில்லாமல் இருக்கிறார். அவர் கணக்கில் மிக சிறந்த நிபணர். வயதோகத்தால் அவரிடமிருந்து அவருடைய நிபுனத்துவம் குறைந்துகொண்டே போகிறது. அவர் போகும்போது ஒரு ரசகியத்தை விட்டுச் செல்கிறார். அந்த ரகசியம் அவளை துன்புறுத்துகிறது. அது அவளுடைய புனிதத்தன்மையைப் பாதிக்கிறது.
அப்பாவின் தூண்டுதலால் புதிய கணக்கு முறையை அவள் கண்டுபிடித்து ஒரு நோட்டில் எழுதுகிறாள். அதை அவளைச் சுற்றி இருக்கிற அவளுடைய சகோதரி, அவளுடைய காதலன் நம்ப மறுக்கிறார்கள். அந்த நோட்புக்கில் எழுதியிருப்பவை அவளுடைய கையெழுத்தில்லை என்று சொல்கிறார்கள். அதை நிரூபிக்க அவள் தடுமாறுகிறாள். அவளுடைய பிரச்சினை நிகழ் காலத்தை அவளால் நம்ப முடியாமல் இருப்பது. அவளுடைய தந்தையைப் பற்றிய நினைவு அவளைத் துரத்துகிறது. அவள் தடுமாறுகிறாள்.
அவள் அப்பா வைத்துவிட்டுப் போன வீடு, பொருட்கள் எல்லாவற்றையும் விற்றுவிட்டு அவள் சகோதரியுடன் நியூயார்க் பயணமாகத் தயாராகிறாள். உண்மையில் அவளுக்கு அவள் சகோதரியுடன் போவதற்கு விருப்பமில்லை.
அவள் காதலன் அந்த நோட்டில் எழுதிய கணக்கு சமன் அவர் அப்பா கண்டுபிடித்தது அல்ல என்பதை கண்டு பிடித்துவிடுகிறான். காத்ரினை நோக்கி அவன் அதைச் சொல்வதற்கு ஓடி வருகிறான். முதல் சந்திப்பின் போது தவறுதலாக சொன்னதால், காத்ரீன் மனம் உடைந்து போய் நிற்கிறாள். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு பலவீனமான காத்ரீனை நியூயார்க் அழைத்துக்கொண்டு போக அவளுடைய சகோதரி தயாராகிறாள். வேறு வழியில்ûலாமல் அவளுடன் பயணம் ஆகிறாள். அவள் தந்தையை பார்த்துக்கொண்டிருந்த அருமையான வீட்டை விட்டுப் போகிறாள். அவள் காதலன் ஓடிவந்து காத்ரீன்தான் அந்த கணக்குச் சமனை எழுதியிருப்பதாக வாதாடுகிறான். அவள் நம்ப மறுக்கிறாள். அந்த நோட்டில் உள்ள கையெழுத்து அவள் அப்பாவின் கையெழுத்து மாதிரி இருந்தாலும், பல ஆண்டுகளாக அப்பா அவளுடன் இருப்பதால், அதே மாதிரி கையெழுத்து வர வாய்ப்பு உள்ளது என்கிறான். அந்த இடத்தைவிட்டு போகக் கூடாது என்று அடம் பிடிக்கிறான்.
அவள் எதையும் கேட்க தயார் இல்லாத மனநிலையில் இருக்கிறாள். விமானத்தில் ஏறுவதற்கு முன் அவளும், அவள் சகோதரியும் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அவளுக்கு காப்பி வாங்கிக்கொண்டு வர அவள் சகோதரி போகிறாள். திரும்பவும் அவள் மனநிலை புரண்டு போகிறது. சகோதரியுடன் போகக் கூடாது என்று நினைக்கிறாள்.
சகோதரி காப்பியை நீட்ட, காப்பி சாப்பிடக் கூடாது, என் உடலுக்குக் கெடுதல் என்று கூறியபடி அந்த இடத்தைவிட்டு ஓடி விடுகிறாள். திரும்பவும் பழைய இடத்திற்கு வருகிறாள். அவள் காதலன் அவளைப் பார்க்க வருகிறான். அந்தக் கணக்கு சமனை திரும்பவும் உறுதிப் படுத்தலாம் என்று உற்சாகம் ஊட்டுகிறான்.
ஒரு திறமையாக எடுக்கப்பட்ட படம். கணக்கை அடிப்படையாகக் கொண்டு பல படங்கள் வெளிவநதிருக்கின்றன. அதில் இந்தப் படம் எல்லாப் படங்களை விட சிறந்த படம்.
இரவல் புத்தகங்கள்
பிரியரா ? ஆம் என்றால் மேலே படியுங்கள் – இல்லை என்றால் மேலே சென்று விடுங்கள் ( அடுத்த
போஸ்டுக்கு என்று அர்த்தம்) ! அல்லது பிரியமான டிவி சானலின் முன் அமர்ந்துகொள்ளுங்கள்
!
உலகு ‘ – இப்புத்தகம் பேராசிரியர் இரா.மோகன் தொகுத்துள்ள, ’புத்தகம்’ பற்றிய கட்டுரைகள்.
புத்தக விரும்பிகள் அவசியம் வாங்கிப் படிக்கவேண்டிய புத்தகம் (வானதி பதிப்பகம்)!
படிப்பது ‘ என்பதில் ‘ விலை கொடுத்து ‘ அல்லது
’இரவல்’ என, இரு நிலைகள் மறைந்திருப்பதை அறிக ! சொந்தப் புத்தகத்தைச் சிறிது சோம்பலாய்,
அலமாரியில் வைத்துப் பிறகு மெத்தனமாய் வாசிக்கலாம். இரவல் புத்தகம் சிறிது அவசரமாய்ப்
படிக்க வேண்டியிருக்கும் – இது திருப்பிக் கொடுக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு மட்டும்
! – கொஞ்சம் டென்ஷன் !
பல ரகம் ! விரும்பிய புத்தகங்களைப் புதியதாய் வாங்கிப் படிப்பவர்கள், வாங்கியவர்களிடம் இரவல் வாங்கி விரும்பிப் படிப்பவர்கள், லைப்ரரியில்
அமர்ந்து படிப்பவர்கள் ( நேரம் அவர்கள் வசத்தில் இருப்பவர்கள் மட்டும்!), சர்குலேஷன்
லைப்ரரியில் புத்தகம் வாங்கிப் படிப்பவர்கள் (லெண்டிங் லைப்ரரிகள் இன்னும் உள்ளனவா
?), பழைய புத்தகக் கடையில் தேடிப் புத்தகங்கள் படிப்பவர்கள் ( மூர் மார்கெட் முடங்கிய
போது மூச்சு முட்ட வருந்தியவர்கள் இவர்கள்), புத்தகக் கடையில் புத்தகம் வாங்குவதுபோல்,
பல புத்தகங்களை மேய்பவர்கள் என புத்தக விரும்பிகள் எங்கும் உள்ளனர் !
கோயில் கும்பாபிஷேக மலர்கள், பக்தி மஞ்சரி / திரட்டு, விளம்பரங்களால் நிரப்பப் பட்டு,
ஓரிரு வியாசங்களுடன் வெளிவரும் சாவனீர்கள் – இவை பரிசாகக் கிடைத்தாலும், யாராவது படிக்கிறார்களா
என்று தெரியவில்லை !
புத்தகங்களுக்கும் பல முகங்கள் உண்டு !
ஒரு முறை படிக்கத்தக்கவை – சில பாதியிலேயே மூடி வைக்கத் தூண்டுபவை!
திரும்ப படிக்க வைப்பவை – புதிய சிந்தனைகளைக் கிளறுபவை.
முழுவதும் அவ்வப்போது படித்து ரசிக்கத்தக்கவை !
வாங்குவது எல்லோருக்கும் பிடிக்கும் – திருப்பிக் கொடுக்கும்போது மனம் சிறிது சிரமப்படும்
!
திரும்பி வராத நிலையில், யாரிடம் கொடுத்தோம் என்பதும் மறந்து தொலைக்க, ‘ கடன்பட்டார்
நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன் ‘ மன நிலைதான் புத்தக தானப் பிரபுவுக்கு
!
ஃபெல்டன் (14 வருடங்கள் இந்தியாவில் தங்கி, புத்தகங்கள் எழுதியவர்), இராஜாஜி அவர்களைப் பேட்டி கண்டபோது, புத்தகம் ஒன்றை
இரவலாய்க் கேட்க, அவர் மறுத்திருக்கிறார் ! இரவல் சென்ற புத்தகங்கள் திரும்புவதில்லை
என்பது அவரது எண்ணம் ! அதற்கு அவர் கூறிய ஒரு நிகழ்ச்சி:
ஒருவர் தன் அழகிய நூலகத்தைக் காண்பித்து, ‘ நான் யாருக்கும் நூல்களை இரவல் தருவதில்லை;
ஏனெனில், அவை திரும்பக் கிடைப்பதில்லை ‘ என்றாராம். உடனிருந்தவர்கள் உடனே, ‘ இரவலே
கொடுக்காதபோது, எப்படி அவை திரும்பாது என்று நீங்கள் நிச்சயமாகக் கூறுகிறீர்கள் ?
‘என்று கேட்டார்களாம். அதற்கு சிரித்துக்கொண்டே பேராசிரியர், தன் நூலகத்தில் அழகாக
அடுக்கி வைக்கப் பட்டிருந்த புத்தகங்களைக் காண்பித்து, ‘ இங்கு சேர்ந்துள்ள இந்தப்
புத்தகங்களே அதற்குச் சாட்சி ‘ என்றாராம் !
இராஜாஜியிடம் வாங்கிய இரண்டு புத்தகங்கள், திருப்பிக் கொடுக்கப் படாமல், தன்னுடனேயே
தங்கி விட்டதை, கட்டுரையின் கடைசீச் செய்தியாகக் குறிப்பிடுகிறார் !
படிப்போர் கவனத்திற்கு் சில குறிப்புகள்:
இரவல்
என்பதும் பரிசு என்பதும் ஒன்றல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள் – குறித்த நேரத்தில்
திருப்பிக் கொடுங்கள் !
பிறர்
புத்தகத்தில் காபி, வடை,பஜ்ஜி எண்ணை, தண்ணீர் கரைகள் படுவதைத் தவிருங்கள் – உங்கள்
புத்தகத்துக்கும் இதே விதிதான் !
பாதியில்
படித்த பக்கத்துக்கு ‘புக் மார்க்’ வையுங்கள் – பக்கத்தின் மூலையை நாய்க் காது போல்
மடிக்காதீர்கள் – அது உங்கள் புத்தகமாகவே இருந்தாலும் !
படுத்துக்கொண்டு
படிக்க வசதியாக, புத்தகத்தை முழுதுமாகப் பிரித்து, அதன் முதுகை உடைத்து விடாதீர்கள்
– மீண்டும் பைண்டு செய்ய வைத்து விடாதீர்கள்.
பிறர்
புத்தகத்தில் அடிக்கோடிடுதல், மார்ஜினில் குறிப்புகள் எழுதுதல் போன்றவைகளைச் செய்யாதீர்கள்.
இரவல்
வாங்கிய புத்தகத்தைப் பிறருக்கு இரவல் கொடுத்து, புதியதாக ஒரு சர்குலேஷன் லைப்ரரி தொடங்கி
விடாதீர்கள் !
“ புஸ்தகம் வனிதா விந்தம் பரஹஸ்தகதம் கதம் 1
அதவா புனராகச்சே ஜ்ஜீர்ணம் ப்ரஷ்டாச கண்டச: 11
கையில் அகப்பட்டால், போனதேயாம். ஒருவேளை திரும்பி வந்தாலும், முழுமையாக வருவது சந்தேகமே
என்கிறது நீதி சாஸ்திரம் !
ஜான் அவர்கள் தன் லைப்ரரி வாசலில் எழுதி வைத்திருந்த வாசகம் எல்லோர் கவனத்துக்கும்
உரியது. “ இங்கு உள்ளவை அனைத்தும் என் குழந்தைகள் – கவனமாகக் கையாளவும் ! “