கசடதபற மே 1971 – 8வது இதழ்விதி

     கலாப்ரியா
அந்திக் கருக்கலில்
இந்தத் திசை தவறிய
பெண் பறவை,
தன் குஞ்சுக் காய்,
தன் கூட்டுக்காய்,
அலைமோதிக் கரைகிறது.
எனக்கதன்
கூடும் தெரியும்,
குஞ்சும் தெரியும்,
இருந்தும் எனக்கதன்
பாஷை புரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *