சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 39வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி 20.02.2021 அன்று சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. 20க்கும் மேற்பட்ட கவிஞர்கள் சிறப்பாக கவிதை வாசித்தார்கள்.
கவிதையை எப்படி உச்சரிப்பது என்பது குறித்து கவிஞர் தமிழ்மணவாளன் வாசித்துக் காட்டினார்.
அதன் ஒளிப்பதிவை இங்கு வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்று மதியம்தான் வந்தோம். பெண்வீட்டிலிருந்து கிளம்பி. பெண் வீடு மடிப்பாக்கத்திலிருக்கிறது. மடிப்பாக்கத்தில் சில நண்பர்கள்/உறவினர்கள் இருக்கிறார்கள். உஷாதீபன் பக்கத்திலிருக்கிறார். இன்று அங்கிருந்து கிளம்பியபோது உஷாதீபன் வீட்டிற்குச் சென்று விடைபெற்றுக் கொண்டேன். மாம்பலம் வீட்டிற்கு வந்தபிறகு ஒரு பெரிய பெருமூச்சு என்னை விட்டு இன்னும் அகலவில்லை. என்றுடைய இரண்டு புதியப் புத்தகங்களை அவருக்குக் கொடுத்தேன். அவர் தன்னுடைய ‘உறங்காக் கடல்’ என்ற புத்தகத்தை என்னிடம் கொடுத்தார். எனக்குத் தெரிந்து முகநூலில் சிலர் புத்தகங்களைப் பற்றி எழுதிக்கொண்டேயிருக்கிறார்கள். அதில் உஷாதீபனும் ஒருவர். அவர் கொடுத்த ‘உறங்காக் கடல்’ புத்தகமும் அப்படித்தான். 15 எழுத்தாளர்களின் படைப்புகளைப் பற்றி கட்டுரைகள் எழுதி உள்ளார். ஒவ்வொரு கட்டுரையும் இரண்டரை அல்லது மூன்று பக்கங்களில் முடித்து விடுகிறது. இனிமேல்தான் படிக்க வேண்டும். புரட்டிப் பார்த்தேனே தவிர இன்னும் படிக்கவில்லை. நான் அவருக்குக் கொடுத்த ஒரு கதை ஒரு கருத்து என்ற என் புத்தகத்தில் நானும் கதைகளைக் குறிப்பிட்டு கருத்துக்கள் வழங்கியிருக்கிறேன். இன்னொரு புத்தகம் துளிகள் 2 நிறையா சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் என்று எழுதிக்கொண்டிருக்கும் உஷாதீபன் தன்னை எப்போதும் உயிர்ப்புடன் வைத்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு வாழ்த்துகள்.
பெருமையுடன் வழங்கும் 37வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி. 06.02.2021 – சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பெய்யெனப் பெய்யும் மழை என்ற ஈற்றடியை வைத்து கவிதை புனைய உள்ளார்கள். மரபுக் கவிதை எழுதுபவர்களும் புதுக்கவிதை எழுதுபவர்களும். நீங்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். Join Zoom Meetinghttps://us02web.zoom.us/j/85195193964…Meeting ID: 851 9519 3964Passcode: 880833
நான் இதை எழுதும்போது என் முன்னால் ஏகப்பட்ட கவிதைத் தொகுதிகள் படிக்கக் கிடைக்காமலில்லை. இதைப்பற்றியெல்லாம் பக்கம் பக்கமாக எழுத வேண்டுமென்று தோன்றுகிறது. ஒரு புத்தகத்தின் முழுப் பகுதியை எழுதவில்லை. ஒரு சில கவிதைகளைக் குறிப்பிட்டுத்தான் எழுதுகிறேன். என்னால் எதை ரசிக்க முடிகிறது என்று வரிசைப்படுத்த விரும்புகிறேன்
அதே சமயத்தில் விட்டுப்போன கவிதைகளை இன்னொரு சந்தர்ப்பத்தில் குறிப்பிடலாமென்று தோன்றுகிறது. மணல்வீடு பதிப்பகம் சிறப்பாகக் கொண்டு வந்த ஜபூஜ்ய விலாசம்ஹ என்ற நெகிழன் கவிதைத் தொகுதியை எடுத்துக்கொள்வோம். அதில் பல கவிதைகள் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன. உண்மையான உணர்வுடன் எழுதப் பட்டிருக்கின்றன. நற்பெயர் என்ற கவிதையை எடுத்துக்கொள்வோம். ஒரு நாயைப் பற்றி கவிதை எழுதியிருக்கிறார். மிட்டு என்ற நாயைப் பற்றி. இங்கே அந்தக் கவிதையைக் குறிப்பிடுகிறேன். நற்பெயர் வாசலில் புதிதாக ஒரு ஆளைப்பார்த்துவிட்டால் போதும் மிட்டுவுக்கு ஒரே குஷி குரைப்பான் குரைப்பான் வாய் வலிக்கக் குரைப்பான் பழகிய முகங்கள் அவனிருப்பை இன்மைக்குத் தள்ளுகின்றன மேலுமவை ஒருபோதும் நற்பெயர் வழங்குவதில்லை சலாம் வைப்பதும் வாலை விதான விசிறியாய் சுழற்றுவதும் சில இரவுகளில் யாருமற்ற வெளியை நா தள்ளக் குரைப்பதும் என எல்லாப் பாடுகளும் அந்த ஒன்றுக்குத்தான் இன்னும் சுருங்கச் சொல்வதெனில் மிட்டுவின் அகராதியில் நற்பெயர் என்பது ஞாயிற்றுக்கிழமையின் ஒரு நல்லி எலும்பு. மிட்டு என்ற ஒரு நாயைப் பற்றிக் குறிப்பிடுகிறார் கவிகுரலோன். அதாவது ஒரு புதிய ஆள் எதிர்ப்பட்டால் மிட்டு என்ற நாய் ஒரே குரைப்பாகக் குரைத்துவிடும். அதாவது மனிதர்களின் பழக்க வழக்கமெல்லாம் அதற்கு வந்துவிடுகிறது. மனிதர்களுடன் பழகி. புதிய ஆளைப் பார்த்தால் வாய் வலிக்கக் குரைப்பான். அதே பழைய முகங்களைப் பார்த்தால் ஒன்றும் குரைப்பதில்லை. பழைய முகங்கள் அவனிருப்பை இன்மைக்குத் தள்ளுகின்றன. சலாம் வைப்பதும் வாலை விதான விசிறியாய் சுழற்றுவதும் அவன் பெயருக்கு ஒரு போதும் நற்பெயர் வழங்குவதில்லை. சில இரவுகளில் யாருமற்ற வெளியை பார்த்து நா தள்ளக் குலைப்பதும் என எல்லாப்பாடுகளும் நற்பெயர் வாங்கும் அந்த ஒன்றுக்குத்தான். மிட்டு குரைக்கக் குரைக்கத்தான் அவனிருப்பை வெளிப்படுத்த முடியும். அவனிருக்கிறான் என்பதை ஊறுதி செய்து நற்பெயரையும் எடுக்க முடியும். நற்பெயர் என்பது ஞாயிற்றுக்கிழமையின் ஒரு நல்லி எலும்பு என்கிறார் கவிஞர். ‘ஊற்று’ என்ற அடுத்த கவிதையைப் பார்ப்போம். ஊற்று எங்கள் ஊரில் ஒரு புகழ்பெற்றக் கிணறிருக்கிறது நீர் கீழிறங்கும்போதெல்லாம் ஒருவர் கல்லைக் கட்டிக் குதிப்பார் நீர் சற்று மேலெழும் ஒவ்வொரு மாதமும் இப்படித்தான் போனமாதம் ரொம்பவும் கீழே போய்விட ஒரு குடும்பமே கல்லெடுத்துக்கொண்டு நீருக்குள் போனது ஒவ்வொருமுறையும் நீருக்குள் போகிறவர்கள் அதன் ஊற்றைக் கண்டுபிடிக்கிறார்கள் அதன் இனிக்கும் நீரைப் பருகுகிறார்கள் ஊற்றாய் மாறுகிறார்கள் பின் மெல்ல மேலெழும்பி நீராய் சூரிய ஒளியில் மின்னுகிறார்கள்.. எளிமையாக தன் அனுபவங்களை அடுக்கிக்கொண்டு போகிறார் கவிஞர். பொதுவாக இருக்கிற கிணறு பற்றி இந்தக் கவிதை பேசுகிறது. புகழ்பெற்றக் கிணறு என்கிறார். என்? ஊரில் பொதுவாக கிணறொன்றை புகழ்பெற்ற கிணறு என்றால் என்ன? எல்லோருடைய உபயோகித்துக்கும் அந்த கிணறு இருந்தவண்ணம் இருக்கிறது. எப்போதும் ஊரில் பாழடைந்த கிணறுகள்தான் தென்படும். அந்தக் கிணறுகளைச் சுற்றிப் பல கதைகள் உண்டு ஆனால் இது புகழ்பெற்ற கிணறு. எல்லோருக்கும் இனிக்கும் நீரை வழங்கிக்கொண்டிருக்கிற கிணறு. நீர் கிணற்றில் வற்றிப் போய்க்கொண்டிருக்கும்போது யாராவது ஒருவர் கல்லைக் கட்டிக் குதிப்பார். உடனே நீர் ஊற்று மேலெழும். கிணற்றின் பயன் ஊருக்கு அதிகம் இருப்பதால் ஒவ்வொரு மாதமும் இப்படித்தான் நடக்கும். போனமாதம் ரொம்பவும் கீழே போய்விட்டது. ஏன்? கோடைக்காலமாகப் போன மாதம் இருக்கலாம். கிணற்றின் பயன்பாடு மிக அதிகமாக இருந்திருக்கும். ஒரு குடும்பமே கல்லெடுத்துக் கொண்டு நீருக்குள் போனது. நீருக்குள் போகிறவர்கள் அதன் ஊற்றைக் கண்டுபிடிக்கிறார்கள். அதன் இனிக்கும் நீரைப் பருகுகிறார்கள்.. அதோடு அல்லாமல் ஊற்றாய் மாற்றுகிறார்கள். பின் கிணற்றிலிருந்து மேலே வந்து நீராய் சூரிய ஒளியில் மின்னுகிறார்கள். நான் குடியிருந்த அடுக்கத்தில் கூட ஒரு கிணறு இருந்தது. கடுமையான வெயில் காலத்தில்கூட அதன் ஊற்றிலிருந்து தண்ணீர் கொடுத்துக்கொண்டு இருக்கும். மற்ற வீடுகள் உள்ள கிணறுகளில் கிடைக்காது. அதைக் குறித்து ஜஅற்புதக் கிணறேஹ என்று கவிதை எழுதி மகிழ்ந்திருக்கிறேன். நெகிழன் கவிதையில் ஊரிலிருக்கும் கிணறு. எல்லோராலும் போற்றப் படுகிறது. இத்தொகுப்பில் நான் ரசித்த வரிகள் பல கவிதைகளில் வெளிப்படுகின்றன. ‘மழைக்கால ஈசல்கள்’ என்ற கவிதையில் இப்படி எழுதியிருக்கிறார். ‘பானை புற்றாகிவிட்டிருந்த மாயையை இறகுகள் முளைத்து ஈசல்களால் வெளியேறிவிட்ட அரிசிகளை’ சமீபத்தில் வெட்டுக்கிளியைப் பற்றி ஒரே பேச்சாக இருந்தது. ‘களவு’ என்ற தலைப்பில் எழுதியிருப்பதைப் பாருங்கள். ‘ஒரேயொரு வெட்டுக்கிளி ஒரு நெல் மூட்டையைத் தூக்கிக்கொண்டு தாவித் தாவிப் பறந்து சென்றதைப் பார்த்ததாக நாங்கள் சொன்னால் யாரும் நம்புவார்கள்’ இவர் கவிதைகள் சில புரியாதத்தன்மையுடன் எழுதப்பட்டிருக்கின்றன. ‘ பூஜ்ய விலாசம்’ என்ற கவிதையை எடுத்துக்கொள்ளலாம். அதைக் குறையாகச் சொல்லவில்லை. ஒரு கவிதை புரியவில்லையென்றால் வாசகனும் முயற்சி செய்ய வேண்டும். அப்படியும் புரியாவிட்டால் விட்டுவிட வேண்டியதுதான். புத்தகத்தின் பின் அட்டையில் இப்படி ஒரு கவிதை எழுதப்பட்டிருக்கிறது. நம்பிக்கையின் எலும்புகள் முறியும் அகாலத்தில் உச்சுக் கொட்டுகிறது பல்லி கனவுகளின் ஒளிநாடா பற்றியெரியும் இரவுகளில் தன் பூட்ஸ் கால்கள் அழுந்த புதிய வீடெங்கும் நடைபயில்கிறது சுவர்க்கடிகாரம். இதை உற்றுப் பார்த்தால் கவிதையைப் புரிந்து கொள்ள இயலும். ஒரு சாதாரண நிகழ்ச்சியை அசாதாரண தன்மையுடன் எழுதப்பட்டுள்ளது. இதில் பல கவிதைகள் ரசிக்கும்படி உள்ளன. பூஜ்ய விலாசம் என்ற கவிதைப் புத்தகத்தை ஒருவர் விலைக்கு வாங்கி வைத்துக்கொள்வது ஒரு நல்ல கவிதைத் தொகுப்பிற்குக் கொடுக்கும் மரியாதையாகும். மணல்வீடு வெளியீடாக இந்தப் புத்தகம் வந்திருக்கிறது. (இந்தக் கட்டுரை தமிழின் முதல் இணைய இதழ் வாரப்பத்திரிகை திண்ணையில் 31.01.2021ல் வெளிவந்துள்ளது)
நன்றி : பூஜ்ய விலாசம் – நெகிழன் – வெளியீடு : மணல்வீடு – ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல், மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம் – 636 453 தொலைப்பேசி : 9894605371 விலை :ரூ.80 – பக்கம் : 65
16.01.2021 – சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு சூம் மூலமாக 34வது கவிதை நேசிக்கும் கூட்டம் நடைபெறுகிறது. கவிதை வாசிப்பவர்கள் 2 நிமிடங்கள் எடுத்துக்கொண்டு கவிதைகள் வாசிக்கவும்.
கவிதை மீது ஆர்வமுள்ளவர்களும் கலந்து கொள்ளும் கூட்டம் இது. யார் வேண்டுமானாலும் எந்த வகையில் எழுதப்பட்ட கவிதையும் வாசிக்கலாம். உங்கள் கவிதை மட்டுமல்ல. மொழிபெயர்ப்பு கவிதைகளும் வாசிக்கலாம். ஆனால் ஏற்கனவே வாசித்த கவிதைகளை திரும்பவும் வாசிக்க வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன் கூட்டத்தில் கலந்து கொள்ளபவர்கள் கூட்டம் முடியும் வரை இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
மனம் திறந்து வரவேற்கிறேன். உற்சாகத்துடன் கவிதையை வாசிக்க வாருங்கள்.நீங்கள் இரண்டு விஷயங்களை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்.
1. வெள்ளிக்கிழமைக்குப் பதில் சனிக்கிழமை கூட்டம்.2. கூட்டம் துவங்கும் நேரம் 6.30 மணிக்கு Topic: சூம் மூலமாக 34வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி Time: Jan 16, 2021 06:30 PM India
புத்தகக் காட்சியில் வாங்கிய புத்தகம் ‘கதையியல்’ என்ற க.பூரணச்சந்திரன் புத்தகம்.பல உபயோகமான தகவல்கள் இந்தப் புத்தகத்தில் கண்டெடுத்தேன். பொதுவாக ஒரு புத்தகம் குறிப்பாகக் கட்டுரைப் புத்தகம் ஆரம்பத்தில் இருப்பதுபோல் புத்தகத்தைப் படித்து முடிக்கு முன் இருப்பதில்லை. க.பூரணச்சந்திரனின் புத்தகமும் விதிவிலக்கல்ல.இது என்ன காரணம் என்றால் ஆரம்பத்திலேயே பூரணச்சந்திரன் சொல்ல வேண்டிய தகவல்களை சொல்லி முடித்து விடுகிறார். பின்னால் ஏற்கனவே சொன்னதைச் சொல்கிறாரோ என்று என் மனதிற்குப் பட்டது. இதோ இப் புத்தகத்திலிருந்து உபயோகமான கருத்துக்களை தங்கள் முன் சொல்ல விரும்புகிறேன்.200 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தில் 15 பகுதிகளாகப் பிரித்து எழுதியிருக்கிறார்.’வாழ்க்கை விளக்கமும் தப்பித்தலும்’ என்ற தலைப்பில் முதல் அத்தியாயத்தை எழுதியிருக்கிறார்.அதில் கவனிக்கவேண்டிய சில பகுதிகளை இங்குத் தருகிறேன். கதைகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம் என்கிறார். 1. வெறும் இன்பத்திற்கான பொழுது போக்குவதற்கான இலக்கியம் ஒரு வகை. 2. வாழ்க்கையில் சற்றே வெளிச்சத்தையும் ஈடுபாட்டையும் ஆழ்நோக்குகளையும் நல்லுணர்வுகளையும் அளிக்கக்கூடிய இலக்கியம்., முதல் வகை இலக்கியத்தைத் தப்பிப்பு இலக்கியம் என்கிறார். இரண்டாவது வகையை வாழ்க்கை விளக்க இலக்கியம் என்கிறார். இப்படி இருவகை இலக்கியம் இருக்கிறது என்று சொல்லும்போதே இரண்டு வகை வாசகர்களும் இருக்கிறார்கள் என்பதும் பெறப்படும். முதிர்ச்சி குறைந்த வாசகர்கள் முதிர்ச்சி பெற்ற வாசகர்கள் என்று அவர்களுக்குப் பெயரிடலாம். முதிர்ச்சி குறைந்த வாசகர்கள் என்பதை ஒரு கீழான அல்லது வசைக் சொல்லாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. ஆனால் வயது முதிர்ந்த பிறகும் பல வாசகர்களுக்குத் தேவதை கதைகளுடைய மாற்றுகள்தான் தேவைப்படுகின்றன. அவை ருசிகரமாக இருக்கின்றன. இவர்களுக்கும் ஒரு கதாநாயகன் வந்து இருபத்தைந்து பேரோடு சண்டைபோட்டு இரண்டு மூன்று பெண்களுடன் காதல் செய்து களிப்போடு பூங்காக்களில் ஓடியாடி சில வில்லன்களை ஒழித்துக்கட்டி சபமாக வாழ்க்கை நடத்த வேண்டியிருக்கிறது. ஆகவே இந்த வகையான வாசகர்கள் வாழ்க்கையில் முன்னோக்கிச் செல்வதற்கு மாறாக, தங்கள் குழந்தைப் பருவத்திற்குப் பின்னோக்கிச் செல்கிறார்கள். முதிர்ச்சி இல்லாத வாசகர்களைப் பற்றி பட்டியிடுகிறார் ஆசிரியர். அவர்கள் ஒவ்வொரு கதையிலும் தங்கள் குறித்த சில தேவைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அப்படி இல்லாமல் போனால் ஏமாற்றமடைகிறார்கள்.பல சமயங்களில் ஒரே மாதிரியான விஷயங்களைக் கதையில் எதிர்பார்க்கிறார்கள். உதாரணமாகச் சாகசக் கதைகள், விளையாட்டுக் கதைகள், காதல் கதைகள், குற்றக் கதைகள் எனப் பெயர்கள் கொண்ட ஒரே விதமான கதைகளைப் படிக்கிறார்கள். ஒரே ஃபார்முலாவில் அமைந்த கதைகள் அவர்களுக்கு இன்பமளிக்கின்றன. தப்பிப்பு இலக்கியங்களின் பொதுப் பண்புகளை விவரித்துக் கொண்டு போகிறார் நூலாசிரியர்.நமது வாழ்க்கை அனுபவத்தை விரிவுபடுத்துவதற்கும், நமது ஞானத்தைப் பரவலாக்கிக் கொள்வதற்கும் இவை உதவுவதில்லை என்று கூறுகிறார். நுணுகிப் பார்க்கும் வாசகர்கள், தப்பிப்பை முன்னிறுத்தும் கதைகளை விட, வாழ்க்கையைக் காட்டும் இலக்கியங்களைத்தாம் விரும்புகிறார்கள். தப்பிப்பு இலக்கியத்தை அவர்கள் விரும்புவதில்லை, படிப்பதில்லை என்று கூற முடியாது. ஏனென்றால் தப்பிப்பு இலக்கியம் எல்லாமே மலிவானதாகவோ, மிகச் சாதாரணமானதாகவோ இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இந்தப் புத்தகம் சில அறிவுரைகளையும் கூறுகிறது. நாம் வாசிக்கும் எந்தப் புத்தகத்தையும் எப்படி மிகச் சிறப்பாகப் பயன் படுத்திக் கொள்வது என்று அறிந்துகொள்ள வேண்டும். இந்தக் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். இதற்குக் கதைகள் மட்டுமல்ல, கதையில்லா வாசிப்பும் முக்கியம். புனைகதை, புனைகதையல்லாதவை என்னும் இரு துறைகளிலும் நல்ல வாசிப்பு இருப்பது அனுபவங்களை அளித்தும், அறிவை விசாலப்படுத்தியும் மனதைச் செழுமைப்படுத்தும்.ஒன்றை இலக்கியமாகப் பார்க்கப்பட வேண்டுமென்றால் மற்றப் படைப்புகளுடன் தொடர்புப் படுத்திப் பார்க்க வேண்டுமென்கிறார். கதையியல் என்ற புத்தகத்தில் முக்கியமாக 15 அத்தியாயங்கள் எழுதியிருக்கிறார். முதல் அத்தியாயம்தான் எனக்கு முக்கியமாகப் படுகிறது. கதையியல் என்ற இப் புத்தகத்தின் விலை ரூ.180. அடையாளம் வெளியீடாக இப்புத்தகம் வந்துள்ளது.
நேற்று என் லைப்பரரி போனபோது தற்செயலாக என் கண்ணில் விவேகானந்தர் பற்றி புத்தகம் கிடைத்தது. அதைப் படிப்போம் என்று எடுத்து வந்தேன். 168 பக்கங்கள் கொண்ட அப் புத்தகத்தில் 42 பக்கங்கள் படித்து விட்டேன். கம்பளிட் ஒர்க்ஸ் சுவாமி விவேகானந்தர் என்ற புத்தகத்தில் ஒரு பாகமே என்னால் தாண்ட முடியவில்லை. பெரும்பாலும் ரேஷன் கடை முன்னால் க்யு நிற்கிற இடத்தில் விவேகானந்தர் புத்தகம் வைத்துக்கொண்டு படிப்பேன். அப்போதெல்லாம் சின்ன வயது. ஒரு வரி கூட மூளையில் ஏறவில்லை. அரவிந்தர் புத்தகம் இன்னும் மோசம். சுலபமாகப் படிப்பது ரமணர், ஜேகிருஷ்ணமூர்த்தி, யூஜி, ரஜினிஷ் இதெல்லாம்தான். விவேகானந்தர் கூறுகிற பொன் மொழிகளை என்னால் ஏற்க முடியவில்லை. பொதுவாக நான் பொன் மொழிகளையே படிப்பதில்லை. ஆனால் நேற்று எடுத்துக் கொண்டு வந்த புத்தகம் எனக்குப் படிக்க வேண்டும் போலிருந்தது . இதை எழுதியவர் நெமய் சதன் போஸ். இந்திய இலக்கியச் சிற்பிகள் என்ற புத்தகம். இந்தப் புத்தகத்தை ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்திருப்பவர்க் கா.செல்லப்பன். இவற்றைப் படிக்கப் படிக்க புதிய தகவல்களை அறிந்து ஆச்சரிய மடைந்தேன். ராமகிருஷ்ண பரமஹம்சர் கடவுளைக் காண முடியுமா என்ற விவேகானந்தர் கேள்விக்கு, காட்ட முடியும் என்று கூறி விவேகானந்தரை அவர் பக்கம் வீழ்த்தி விடுகிறார். “ பரமஹம்சரின் முக்கியமான சேவை மக்களுக்குச் சேவை செய்வது. இன்று வரை ராமகிருஷ்ண மடங்கள் சத்தமில்லாமல் பல உயர்ந்த சேவைகளைச் செய்து கொண்டு வருகின்றன. விவேகானந்தர் பல இடங்களில் சுற்றுப் பயணம் செய்கிறார். மக்கள் எந்த வசதியும் இல்லாமல் ஏழ்மையாகவும், வறுமையில் வாடுவதையும் கண்டு வருத்தமடைகிறார். இதோ அந்தப் புத்தகத்திலிருந்து இன்னும் சில பகுதிகளைத் தருகிறேன். முன்னாள் மிக்சிகனின் கவர்னரின் மனைவியர் ஜான் ஜே. பேக்ஙூ அம்மையார், தன் இல்லத்தில் முன்னொரு சமயம் சுவாமிகளை விருந்தினராகப் பெற்றிருந்ததை எண்ணி, அவரைப் பற்றி ஒரு கடிதத்தில், ஒவ்வொரு மனிதனும் அவரை நன்கு அறிவதன் மூலமும் சிறப்பு அடைவான். அமெரிக்காவிலுள்ள ஒவ்வொருவரும் விவேகானந்தரை அறிய வேண்டுமென நான் கேட்டுக் கொள்கிறேன். மேலும் அவர் போன்றவர் இன்னும் இந்தியாவில் இருப்பார்களேயானால் இந்தியா அவர்களையும் எங்களிடம் அனுப்பட்டும், என்று எழுதினார். ****** விவேகானந்தரின் ஆன்ம ஆற்றலையும் பெருமையையும் முதலில் கண்டறிந்து போற்றியவர்கள் தென்னிந்திய மக்கள்தான் என்று கூறினால் அது மிகையாகாது. அவர்களுள் துளசிங்கப் பெருமாளும் ஒருவராவார். 1894 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் நாள் சென்னையில் ஒரு பெரிய பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. புகழ்பெற்ற பல பெரியோர்கள் அக் கூட்டத்திற்கு வந்திருந்தனர். எஸ்.சுப்பிரமணிய அய்யர் அக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். சர். இராமசுவாமி முதலியார் அக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த முக்கியமானவர்களுள் ஒருவர். ****** தன்னை அறிதல் என்ற தலைப்பில் அவர் முதன்முதலாக இலண்டனில் நிகழ்த்திய சொற்பொழிவு ஒரு மகத்தான வெற்றியாக இருந்தது. அச்சொற்பொழிவினைக் கேட்டவர்கள் மந்திரத்தால் கட்டுண்டது போல் இருந்தனர் . அவற்றுள் மறக்கமுடியாத மிகவும் முக்கியமான கூட்டம் எதுவென்றால் 1995 ஆம் ஆண்டு, நவம்பர் 10ஆம் நாள் செசெமி குழாத்தில் நடந்த ஒன்றாம். அங்கு வருகை புரிந்திருந்தவர்களுள் மார்கரெட் நோபிள் ஒருவராவார். அவர் 1967 ஆம் ஆண்டு வட அயர்லாந்தில் பிறந்தவர். அவருடைய தாத்தாவும் தந்தையும் பிராட்டஸ்டண்ட் மதத் தொண்டர்களாக இருந்து ஐரிஷ் சுதந்திர இயக்கத்தில் தீவிரப் பங்காற்றினார். இந்தியத்தாயின் ஒரு உண்மையான மகளாகவும் அவர் விளங்கினார். அவரை மக்களின் அன்னை என்று இரவிந்திரநாத் தாகூர் வருணித்தார். இன்று சகோதரி நிவேதிதாவின் பெயர் இந்தியர் இல்லங்களிலெல்லாம் பேசப்படும் ஒன்று.
1894 ஆம் ஆண்டு அவருடைய தந்தையை இழந்ததால் அவர் படிப்புக்குத் தடை ஏற்பட்டது. வீட்டில் வறுமை தாண்டவமாட அவர் வேலை தேடிப் போகும்படி நேர்ந்தது. சிலகாலம் கழித்து, ஒருநாள் இராமகிருஷணர் நரேந்திரநாத்தைப் பார்த்து, அன்று மாலையில் அன்னை காளியின் கோயிலுக்குச் சென்று, வாட்டும் வறுமையிலிருந்து அவரது குடும்பத்தை விடுவிக்குமாறு வேண்டி வரச் சொன்னார். அந்த நாள் ஒரு மங்கலமான நாளாகவிருந்தது. அவருடைய விருப்பத்தை அன்னை நிச்சயம் நிறைவேற்றுவாள் என்று அவருக்கு இராமகிருஷ்ணனர் உறுதியளித்தார். நரேந்திரநாத்தும் கோயிலுக்குச் சென்று அன்னையின் முன்னே நின்று வேண்டினார். ஆனால் அவர் கேட்ட வரமோ அவருக்குப் பகுத்தறியும் ஆற்றல், பற்றொழித்தல், பக்தி ஆகியவை கிடைக்க வேண்டும் என்பதே. âââââââââââââ தான் இறப்பதற்குச் சற்று முன்பு, ஒருநாள், இராமகிருஷணர் நரேனை தனது படுக்கையருகில் அமர்ந்து ஆழ்ந்த தியானத்தில் மூழ்கி மறைந்தார். அப்போது, தன்னுடைய உடம்பில், மிக அதிக மின்னழுத்தமுள்ள மின்னோட்டத்திற்குச் சமமான ஒரு விவரிக்கவியலாத மாபெரும் சக்தி பாய்வதை விவேகானந்தர் உணர்ந்தார். சிறிது நேரம் சென்றபின் ராமகிருஷ்ணர் பௌதீக உலகப் பிரக்ஞையை மீண்டும் பெற்றபிறகு, “இன்று என்னிடம் உளதெல்லாம் உனக்குக் கொடுத்துவிட்டேன். இப்போது நான் ஒன்றுமில்லாத சாதாரண பிச்சைக்காரன். நான் உனக்களித்த சக்திகளைக் கொண்டு, நீ இவ்வுலகில் பெரிய செயல்களைச் சாதிப்பாய். அதுவரையில் நீ எவ்விடத்திலிருந்து வந்தாயோ அவ்விடத்திற்குத் திரும்பிச் செல்ல மாட்டாய்” என்று கூறினார். ஆம், ராமகிருஷ்ணரின் முடிவு 1886 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 16 ம் நாள் வந்தது.