பெண் கவிஞர்களின் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள்

ஏவாளின் உரையாடல்

கேரில்டா ஆலிவர் லேப்ரா (க்யூபா)

இன்று, உன்னை முரட்டுத்தனமாக வரவேற்கிறேன்.
ஒரு உறுமலுடன்
அல்லது ஒரு உதையுடன்.
எங்கே ஔதந்துகொண்டிருக்கிறாய்,
இதயங்கள் நிரம்பி வழியும்
உனது காட்டுத்தனமான பெட்டியுடன்஢,
நீண்டோ டும் உனது வெடி மருந்துடன்
எங்கே ஓடிப்போனாய்?
இப்போது எங்கே இருக்கிறாய்;
எல்லாக் கனவுகளும்
கடைசியாக சுண்டி எறியப்படும் சாக்கடைக்குள்ளா,
அல்லது தகப்பனற்ற குழந்தைகள்
ஊசலாடிக் கொண்டிருக்கும்
வனத்தின் சிலந்தி போன்ற வலையிலா?

உன் நினைவாகவே இருக்கிறேன்,
உன்னையே நினைத்துக் கொண்டிருக்கிறேனென்று உனக்கும் தெரியும் –
என்னையே போல்
ஒருபோதும் நிகழாத அற்புதத்தைப் போல் –
ஏங்குகிறேனென்று உனக்கும் தெரியுமில்லையா?
ஒருபோதும் அறிந்திராத மகிழ்ச்சியால்
உன்னைக் கவர்ந்திழுக்க விரும்புகிறேன்,
ஒரு விவேகமற்ற காதல் விவகாரம்.

எப்போது என்னிடம் வருவாய்?
விளையாட்டேதும் விளையாட வேண்டுமென்ற
ஆதங்கத்஢தோடில்லை நான்,
உன்னிடம் ஒப்படைக்க வேண்டும்; ”எனது வாழ்வை” —
நம்மை இடி பணிவுபடுத்த,
ஆரஞ்சுகள் உனது கைகளில் வௌதறிப்போக,
நான் உனது ஆழங்களில் தேடி
இறுதியாகத் தீப்பிழம்பில் மறையும்
திரைகளையும் புகையையும் காண வேண்டும்.

நான் உன்னை உண்மையிலேயே விரும்புகிறேன்
ஆனால் வெகுளித்தனமாக
எனது எண்ணங்களின்
களங்கமற்ற மோகினியைப்போல்,
ஆனால், உண்மையில் நான் உன்னை விரும்பவில்லை.
வெகுளித்தனமான
குழம்பிய தேவதையாக நான் இருந்தாலும்
நான் உன்னை விரும்புகிறேன்,
ஆனால் நான் உன்னை விரும்பவில்லை.
இந்த சொற்களைக் கொண்டு நான் சூதாடுகிறேன்
ஜெயிப்பவள் புளுகி ஆவாள்.
காதல்!…
(என்ன சொல்கிறேன் நான்?
என்னைத் தவறாகப் புரிந்து கொள்கிறீர்கள்,
ஏனென்றால் இங்கே, நான் உன்னை வெறுக்கிறேன்,
என்று எழுத விரும்பினேன்)
நீயேன் என்னிடம் வரமாட்டேன் என்கிறாய்?
நமது நெருப்புக்கு கைம்மாறு செய்யாமல்
என்னைக் கடந்து போக அனுமதித்தாயே
அது எப்படிச் சாத்தியம்?
மிகவும் திகிலடைந்து போய்
மிகவும் தொலைவுபட்டுப் போய் என்னை மறுக்கிறாயே
அது எப்படி சாத்தியம்?
மரணத்தின் வழியாக
வாழ்வின் வழியைக் கடந்து சென்று
செய்தித் தாள்களைப் படித்துக் கொண்டிருக்கிறாய்
உனது முனகல்களோடும்
உனது அடிவயிற்றோடும்
உனது பிரச்னைகளோடு நீ இருக்கிறாய்,
அக்கறையற்று,
மானங்கெட்டு,
துக்கங்கொண்டாடும் விழைவுடன்
உன்னை நீ மகிழ்வித்துக்கொண்டிருக்கிறாய்.
உன்னை நான் உருக வைத்஢தாலும்,
உன்னை நான் அவமானப்படுத்தினாலும்,
உன் மனச்சோர்வை அங்கீகரிப்பதுபோல்
ஒரு வதங்கிய செந்நீல மலரைக் கொண்டுவந்தாலும்;
சொர்க்கத்தின் உப்பை வௌதவரச் செய்து
உன்னை இருப்போடு தைத்தாலும்:
என்ன?
உனது எச்சிலால் எப்போதென்னைக் கொல்லப் போகிறாய்,
நாயகனே?
எப்போது திணறடிக்கப்போகிறாய்
மறுபடியும் மழையின் கீழ்?
எப்போது?
எப்போதென்னை சிறுபறவையே,
சிறுக்கியே என்றழைக்கப் போகிறாய்?
எப்போது என்னைத் தீட்டுப்படுத்தப்போகிறாய்?
எப்போது?
கடந்துபோகும் காலத்திடம் ஜாக்கிரதை,
காலம்
காலம்!
உனது பூதங்களும்கூட இப்போதென்முன் தோன்றுவதில்லை,
மேலும் இப்போதெல்லாம் குடைகளை எனக்குப் புரிவதில்லை?
ஒவ்வொரு நாளும், என்னிடம்
கூடுதலாகக் கண்ணியமடைகிறேன்,
சிறப்பாக மேன்மையடைகிறேன்…
நீ காலந்தாழ்த்தினால்
தயக்கம் காட்டினால், என்னைத் தேடாவிட்டால்,
உன் கண் அவிந்து போகும் –
இப்போது நீ திரும்பிவராவிட்டால்
நாத்திகா, மடப்பயலே, கேனப்பயலே, முட்டாளே,
கவலையே படமாட்டேன்.

நேற்று கனவு கண்டேன்
நாம் முத்தமிடும்போது
ஒரு எரிநட்சத்திரம் வெடித்தது
நாம் இருவருமே நம்பிக்கை இழக்கவில்லை.
நமது இந்தக் காதல் யாருக்கும் சொந்தமானதில்லை;
அது கதியற்று தெருவில் கிடந்தபோது கண்டெடுத்தோம்,
நமக்குள் அதைக் காப்பாற்றினோம், அடைக்கலம் தந்தோம்.
அதனால், இரவில் நாம்
ஒருவரை மற்றவர் விழுங்கும்போது,
தனித்து விடப்பட்ட
நிராதரவான தாயைப்போல் உணர்ந்தேன்.
அதனால் பரவாயில்லை,
முத்தமிடு மீண்டும் மீண்டும்
என்னிடம் வருவதற்காக.
எனது இடுப்பின் மீது அழுந்து,
மீண்டும் என்னிடம் வா;
மீண்டும் எனது இதமான விலங்காயிரு,
என்னை நகர்த்து மீண்டும்.
மீதமுள்ள என் வாழ்வை,
பழிக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்வை,
நான் புனிதப்படுத்திக் கொள்வேன்.

ஒப்பற்ற மலர்ச்சியில்
அன்பால் ஒன்றிணைந்து
தங்களைக் காப்பாற்றிக் கொண்டுவிட்ட
கொலைகாரர்களைப் போல் உறங்கலாம் நாம்.
காலையில் சேவல் கூவும் போது,
நாம் இயற்கையாகவே
அவளாகவே ஆகிவிடலாம்.
அவளது தொட்டிலில் தூங்கும்
உனது குழந்தையைப் போல்
காணப்படுவேன் அப்போது.
என்னிடம் திரும்பி வா, திரும்பி வா,
மின்னலால்஢ என்னை ஊடுருவு,
உன் இஷ்டம்போல் என்னை வளை.
ரெகார்ட் பிளேயரை முடிவற்று ஒலிக்கச் செய்வோம்,
அந்த விசுவாசமற்ற கழுத்துப் பிடரியை,
உனது கல்லின் வீச்சைக் கொண்டு வா,
நான் சாகவில்லை என்பதைக் காட்டு,
என் அன்பே,
உனக்கு ஆப்பிளைத் தருவேனென்று
உறுதி அளிக்கிறேன்.

தமிழாக்கம்: குவளைக் கண்ணன்

கீரை விற்கும் சிறுவன்

கேரில்டா ஆலிவர் லேப்ரா

(க்யூபா)

உனக்குப் பெற்றவரில்லை, அது தௌதவாகத் தெரிகிறது…
உனது தயங்கிய பார்வையில் அது எனக்குத் தெரிகிறது,
உனது சட்டையை வைத்தே என்னால் சொல்ல முடியும்.

நீ சிறியவனாக இருக்கறாய், ஆனால்
கூடைக்குப் பின்னால் வளர்ந்திருக்கிறாய்.
நீ குருவிகளை மதிக்கிறாய்.
ஒற்றைக் காசு போதும் உனக்கு.

உள்ளே எஃகை உடுத்தியவர்கள் கடந்து போகிறார்கள்.
அவர்கள் உன்னைக் கவனிப்பதில்லை… நீ இரண்டு,
மூன்று முறை ”கீரை கீரை…” என்று கத்தினாய்

அவர்கள் பெட்டிகளையும் கூடைகளையும் சுமந்தபடி
புதிய கால்சராய்களிலும் மஞ்சள் ரவிக்கைகளிலும்
அக்கறையற்றுக் கடந்து போகிறார்கள்;

அவர்கள் வங்கிகளை நோக்கி சலிப்பை நோக்கி
அல்லது அஸ்தமனத்தை நோக்கி முக்கியத் தெருவில்
அவசரமாக நடக்கிறார்கள்…

மேலும் நீ விற்கவில்லை: விற்கும் விளையாட்டைச்
செய்து கொண்டிருக்கிறாய்;
மேலும் நீ ஒருபோதும் விளையாடியிருக்காவிட்டாலும்,
முயற்சிக்காமலே உனக்கது வருகிறது…

ஆனால் என்னருகே வராதே; வேண்டாம், குழந்தை,
என்னிடம் பேசாதே.
சிறகுகள் முளைக்கக்கூடிய இடத்தை
நான் பார்க்க விரும்பவில்லை.

இன்று காலை நீதிமன்றத்துக்கு அருகில் உன்னைப் பார்த்தேன்.
உனது மகிழ்ச்சியற்ற மாசின்மை
என்னை எப்படித் தாக்கியது தெரியுமா!

மாயையின் தாழியாய் இருந்த என் இதயம்,
இப்போது வதங்கிய கீரையாக, இதயமாக இல்லை…

தமிழாக்கம்: குவளைக் கண்ணன்

அம்மா மியாமியிலிருந்து வந்த ஒரு கடிதத்தில் நீ இருக்கிறாய்

கேரில்டா ஆலிவர் லேப்ரா (க்யூபா)

அம்மா, நீ ஒரு கடிதத்தில் மட்டுமே இருக்கிறாய்,
என்னால் தேடிப் பிடிக்க முடியாத
ஒரு பழைய வசவிலும் நீ இருக்கிறாய்;
ஒருபோதும் உதிராத
மலரும் ரோஜாவின் மையத்தில்
வந்து தங்கு எவ்வப்போதைக்குமாக.

அம்மா,
மூடுபனியிலும் பனித் திரளிலும் களைத்துப் போய,஢
அவ்வளவு தொலைவில்,
இரு, நான் வருகிறேன்,
உனக்குள்ளே இருக்கும் சூரியனோடு வாழ்வதற்காக
உன்னை வீட்டுக்குக் கொண்டு வருகிறேன்,
அம்மா கடிதத்தில் வாழ்பவளே.

சேர்ந்திருக்க மர்மத்திற்கு நீ ஒரு தேதி தரலாம்,
அது மருட்டும் நிழல்களோடு கலந்துபோகும்;
நீ உருட்டித் தள்ளிய கல்லாகிவிடலாம்.

உன் கண்களுக்குக் கீழேயுள்ள வளையங்஢களை
மறைத்துக் கொள்ளலாம்,
ஆனால் உன் குட்டி மகளை
நினைவில் வைத்துக் கொள்,
உன்னால் செய்ய முடிந்ததையெல்லாம்
செய்யத் துணிந்துவிடாதே,
செத்துவிடாதே, அம்மா.

தமிழாக்கம்: குவளைக் கண்ணன்

புள்ளி என்ற பெயரில் சின்ன கவிதைத் தொகுதி..

அக்ரகாரத்துக் கதவுகள்
எங்களூர் அக்ரகாரத்தில்அதிசியங்கள் ஆயிரம் உண்டுசெம்மண் பட்டையிட்டுசெங்காவிச் செறிவீச்சில்கொலுவிருக்கும் வீடுகளின் ஜன்னல்களுக்கோகதவுகளே இல்லை ஆனாலும்டெர்ரிக்காட் பளபளப்பில்குதிகால் நடையுயர்த்திநட்ட நடுத்தெருவில்நீள நடந்தால்கறுப்பு சிவப்புபழுப்பு மாநிறப்பரபரப்பு முகங்கள்கதவுகளாய் முளைக்கும்
– நா. விச்வநாதன்

பூனைகள் பூனைகள் பூனைகள் 21

பூனைக் காவல்
குமரி எஸ்.நீலகண்டன்
என்னை அறியாமலேயே
என்னுள்
ஏழெட்டுப் பூனைகள்
உலாவிக் கொண்டிருக்கின்றன.

எலியைக் கண்டதும்
எட்டிப் பாய்ந்தது
அந்தக் கருப்புப் பூனை.
பாலைக் கண்டு
பதுங்கி வந்தது
அந்த பரம
சாதுப் பூனை.
உருட்டுக் கண்களுடன்
உற்றுப் பார்த்தது
அந்த உளவுப் பூனை
என்னுள் எங்கோ
உறு உறுவென்று
உறுமிக் கொண்டே
ஒளிந்திருக்கிறது
இன்னொரு பூனை

என் மீசையை
தன் மீசையாக்கிக்
கொள்கிறது அந்த
தளர்ந்த பூனை
குதித்து குதித்து
குதூகலித்து
கும்மாளமிடுகின்றன
இன்னும் சில
குட்டிப் பூனைகள்
நான் கோபத்தில்
பதுங்கி பதுங்கிப்
பாய்கையில் யாரும்
என்னைக் கண்டு
பயப்படாமல்
காவல் காக்கின்றன
இந்த பூனைகள்
திருட்டு விழிகளுடன்

ஆட்டுவித்தால் யாரொருவர்

அன்புள்ள அம்மா, ஊரிலிருந்து வந்தவுடன் எழுதுவதாகக் கூறிவிட்டு மூன்று நாட்கள் கழித்துதான் எழுத முடிந்தது. கோபிக்காதே. டெலிபோனில் கூப்பிட்டால் அவசரமாகப் பேச வேண்டும். எவ்வளவோ சொல்ல வேண்டியுள்ளது. அவ்வப்போது எழுதுகிறேன். அப்பா இறந்தவுடன் கிட்டு மாமா வந்து போனதாக நீ சொன்னபோது, அவர் முகம் நினைவுக்கு வரவில்லை. நேரில் பார்த்ததும், நினைவு வந்தது. அவர் உன் மீது உயிரையே வைத்திருக்கிறார். “இனிமே இது உன்னோட வீடு … தெரிஞ்சுதா? நான் வேலை வங்கித் தர்றேன்.” என சந்தோஷப் பட்டார். சீக்கிரமே வேலை கிடைத்து அப்பாவுடைய கடனை எல்லாம் தீர்க்கத்தான் போகிறேன். உடம்பை கவனித்துக்கொள். கவலைப்படாதே. அன்புடன்,சிவா.
***************************
சிவாவின் டயரியில்:
அம்மா, உன்னிடம் பொய் சொல்ல மனம் வராததால் இதை டயரியில் எழுதுகிறேன். என்னை மன்னித்து விடு அம்மா. இதுதான் உண்மை. மாமா வீட்டில் நுழைந்த மறுகணமே, மாமி “என்னப்பா திடீர்னு?” என்றாள். மாமாவிடம் போனில் பேசிய விஷயம் ஆபீசோடு நின்று விட்டது. கண் ஜாடை காட்டிய மாமாவைப் பார்த்தபடி, “சும்மாதான் வந்திருக்கேன்” என சமாளித்தேன். “சரி … அம்மா சௌக்கியமா? வேலை … கீலை … கெடைக்குமான்னு பாக்கிறதுதானே? சர்டிபிகேட் எல்லாம் கொண்டு வந்திருக்கியா?” எடுத்துக் கொடுத்தேன். “நான் எப்ப சொன்னது இப்ப வந்திருக்கே…” பெட்டியையும் என்னையும் மாறி மாறிப் பார்த்து “நீ வேற எதுக்குப்பா எங்களுக்குத் தலைவலி?” மாமி வெடுக்கென்று உள்ளே செல்ல, பின் தொடர்ந்த மாமா பேசுவது கேட்டது: ” ஏய் … சத்தம் போடாதே பாவம், புருஷன் போய்ட்டான். புள்ளையோட தனியா நிக்கிறவளுக்கு … ஒரு உதவி…” “கஷ்டப்படறவங்களுக்கெல்லாம் செய்ய இங்கே என்ன கொட்டியா கிடக்குது?” “இப்ப என்ன செய்யச் சொல்றே . ..?” “நாங்க இன்னிக்கு ராத்திரி ‘டூர்’ போறோம். எட்டு நாளில வந்துருவோம்னு சொல்லுங்க …””இப்பத்தான் வந்தான் … ஒரு வேளை சாப்பாடு கூடப் போடல … “சாப்பாடுதானே? நீங்களே போயி வாங்கிட்டு வாங்க … என்னால முடியாது …” மாமா வெளியே வரும்போது ஜன்னல் வழியே ரோட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். “வாடா போகலாம்… இந்த இடம் ஊருக்கு வெளியே ரொம்பத் தள்ளி இருக்குது. மெயினான இடத்துல உன்னைத் தங்க வைக்கிறேன் …” என்றார். “போன வருஷம் புக் பண்ணினது டூர். மூகாம்பிகை, தர்மசாலா எல்லாம். எட்டு நாளாகும் … வந்தவுடனே நீ திரும்பி வந்துடலாம்.” நாங்கள் போன இடம் ஒரு பெரிய கட்டிடத்தின் மொட்டை மாடி. ஆறாவது தளம். ஒரு சிறிய அறையில் ஐந்து பேர். நான் ஆறாவது ஆள். “வாங்க சார்!” என்றவன் மாமாவோட ஆபீஸ் பியூனின் மைத்துனன். தரையில்தான் உட்காருவது, படுப்பது எல்லாம். ஒரு பழைய மோடாவும் ஒரு மடக்கு நாற்காலியும் ரெண்டு பிளாஸ்டிக் பாய்களும் உள்ளன. அவற்றில் ஒருவர் மாற்றி ஒருவர் உட்கார்ந்து கொள்ளலாம். கக்கூஸ் ரொம்ப கண்ராவி. பழைய டால்டா டின்னில் தண்ணீர் எடுத்து ஊற்றிக் கழுவ வேண்டும். ஜன்னல் வழியே காற்று வராது. வந்தாலும் அடுத்திருக்கும் கட்டடம் மிக நெருங்கி இருப்பதோடு அதன் ஏ சீ பெட்டி நேராக இருப்பதால் உஷ்ணமாக இருக்கும். அதனால் அதைத் திறப்பதில்லை. சாப்பாடு ஒரு நாளைக்கு ஒரு முறை – மெஸ்ஸில். *******************நான்கு நாட்கள் கழிந்தவுடன்: அன்புள்ள அம்மா, இங்கு நான் வசதியாக இருக்கிறேன். இவ்வளவு உயரத்தில் இருப்பேன் என்று நினைத்துகூடப் பார்த்ததில்லை. ஆறாவது மாடியில் இருந்து பார்த்தால், எல்லோரும் சின்னஞ்சிறு உருவங்களாகத் தெரிகிறார்கள். என்னைச்சுற்றி எல்லா பக்கமும் ஏ சீ தான். முதல் சம்பளம் வாங்கியதும் உனக்கு அனுப்புகிறேன். நீ பென்ஷன் பணத்தில் நன்றாகச் சாப்பிடு. எனக்காகக் கவலைப்படாதே. விரைவில் வருகிறேன். நேற்று ஒரு பெரிய மனிதரைப் பார்க்க காரில் அழைத்துப் போனார்கள். “நேர் வழி என்றும் கை கொடுக்கும்” னு நீ அடிக்கடி சொல்றது நினைவுக்கு வருது. போன வருஷம் தீபாவளிக்கு ‘டவுன்ஹால்’ பக்கத்து ஜவுளிக் கடையில மஞ்சள் நிறச் சட்டை ஒன்று எடுத்துத் தந்தியே … அந்தச் சட்டைதான் இந்த மரியாதைக்கெல்லாம் காரணம். நேற்று இரவு முதல் வெறும் இனிப்பாகவே சாப்பிடுகிறேன். என் முகத்தில் பூரிப்பை நீ பார்க்கவில்லையே என்ற குறைதான் … விரைவில் உன்னைக் காண வருவேன். அன்பு மகன்,சிவா. சிவாவின் டயரியில் :இங்கு என்னுடன் உள்ள ஐந்து பேரில் தாமஸ் என்பவன் கேக் மாஸ்டர். சரியான பொறுக்கி. மதியம் இரண்டு மணிக்கு வேலை முடிந்தால், தண்ணி அடித்துவிட்டுத்தான் ரூமுக்கு வருவான்.மற்ற நால்வரும் கீழே ஓட்டலில் வேலை செய்கிறார்கள். அதில் ராஜு நன்றாகப் பாடுகிறான். கல்யாணம் ஆனவுடன் மனைவியைப் பிரிந்து விட்டானாம். ஏதோ தகராறு பெரியவர்களுக்குள் … மானப் பிரச்னை என்று அவளை அழைத்துப் போய் விட்டார்களாம். மூணு வருஷமாக அவள் நினைவாகவே பாடுகிறான். “ராஜாத்தி ஒன்னக் காணாத நெஞ்சு” பாடும்போது ரொம்ப உருக்கமா இருந்தது. நான் கூட அழுது விட்டேன். இங்கிருந்து பார்த்தால் சற்றுத் தள்ளி நாலு மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. அதில் பாத்ரூமில் இளம் வயதுப் பெண் ஒருத்தி காலையும் மாலையும் குளிப்பது சரிவாக கண்ணாடிகள் அடுக்கிய ஜன்னல் வழியாகத் தெரியுமாம். தாமஸ் இதைப் பார்ப்பது தெரிந்து அவள் வீட்டிலிருந்து காரில் நாலு பேரை அனுப்பி வைத்தார்கள். தாமஸ் புண்ணியவான். என்னுடைய மஞ்சள் சட்டையப் போட்டுக் கொண்டு நின்றிருக்கிறான். உள்ளே வந்த தடியன்கள் அப்போதுதான் அவன் கழற்றிக் கொடியில் போட்டிருந்த மஞ்சள் சட்டையைக் காட்டி, “இது யாருது?” என்றனர். நான் என்னுதுதான் என்ற உண்மையைச் சொன்னவுடன், தரதர என்று என்னை இழுத்துப் போய் காரில் ஏற்றினர். அப்போதுகூட தாமஸ் மட்டும்தான் அறையிலிருந்தான். ஆனால் அவன் ஒன்றும் செய்யவில்லை. “என்ன சார் மேட்டெர்?” என்றான். “வந்து சொல்வாரு தொரை” என்றவர்கள், காரில் என் இரு பக்கமும் தோளில் கை போட்டுக் கொண்டு, மிக நெருக்கமாகக் உட்கார்ந்தனர். நாங்கள் போய்ச் சேர்ந்த வீடு மாதிரி, ஹிந்தி சினிமாக்களில்தான் பார்த்திருக்கிறேன். கீழேயே நின்றிருந்தோம். ஒருவன் மட்டும் மேலே போய்விட்டு, பிறகு கை தட்டி அழைத்தான். உள்ளே சென்றோம். படிக்கட்டில் கூட கம்பளம், காலுக்கு மெத்தை போல இருந்தது. படுத்துத் தூங்கலாம். பெரிய ஹாலில் நேஷனல் ஜிக்ரபிக் சேனல்ல கழுதைப் புலி ஒன்று சிங்கக் குட்டிகளை தூக்கிப் போய் குதறுவதை வெகு சுவாரசியமாகப் பார்த்துக் கொண்டிருந்தவர் கழுத்தில் ஒற்றை ருத்ராட்சம் தங்கச் சங்கிலியில் தொங்கியது. சந்தனக் கீற்றுக்கு மேலே நெற்றியில் குங்குமம். வயது ஐம்பது இருக்கும். பெரிய தொப்பை. “என்னடா?” என்றார். முக்கியமான நியூஸ் பார்ப்பது போல மீண்டும் டி வியில் லயித்தார். இரண்டு மூன்று நிமிடங்கள் கழித்து, அந்த தடியன் ஒருவன் “இவன்தான் ஐயா அந்த மஞ்ச சர்ட்டு …” என்றான். “உக்காலி, சரசாம்மா குளிக்கிறது இவருக்கு இங்கிலீஸ் படமாட்டம் இருக்குதாக்கும்.” குறிப்பறிந்து அந்தத் தடியன் மூக்கில் விட்ட குத்தில் மேல் உதடு கிழிந்து ரத்தம் வழிந்தது … சட்டைஎல்லாம் ஒரே ரத்தம்… “எந்த ஊருடா உனுக்கு …?” “திருத்துறைப்பூண்டி … நான் என்ன செஞ்சேன்னு …?” கேட்பதற்குள் ஒருவன் காதைப் பிடித்து இழுத்துத் தள்ளிய வேகத்தில் தொப்பைக்காரர் காலடியில் போய் விழுந்தேன். டி வியில் இருந்து கண்ணை எடுக்காமலேயே, “என்ன வேலைடா செய்யுறே?” என்றார். “வேலை இல்லை சார்.” “ஊர்ல அப்பன் ஆயி படிக்க வச்சு பொழப்புக்கு அனுப்புனா, இங்க மேயப் பாக்குரானுவோ … சொல்லி வைடா … போ போ” வெளியே போகச் சொல்லி ஜாடை காட்ட, ரத்தம் வழிய வெளியே வரும்போது, இரண்டு டோபர்மன் நாய்கள் சோபாவின் அருகே படுத்தபடி என்னை அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தன. ரூமுக்கு வந்தவுடன் மற்ற நாலு பேரும் “ஐயோ பாவமே! என்னையா பண்ணினே?” என்று பதற, வாயக் கொப்பளித்து, ஐஸ் கட்டி வைத்தழுத்தியதில் ரத்தம் வருவது நின்று போனது. “உங்க மாமா கிட்ட வேணா போவலாமா?” “அவுரு ஊர்ல இல்ல … வரதுக்கு இன்னும் அஞ்சு நாளாகும்.” “மெஸ்ஸுக்கு வேணா போய் சாப்பிடறதுக்கு எதுனா வாங்கீனு வரவா?” என்றான் ராஜு. “சூடா சாப்பிடாதே … ரத்தம் வரும் … வலியும் எடுக்கும்” என்றான் பக்கிரி. அவன் பாலக்காட்டில ஒரு டாக்டர்கிட்ட இருந்தவன். “டேய், இனிப்பு சாப்பிட்டால் எரியாது. குலோப்ஜாமுன் அல்லது ஜாங்கிரி எடுத்தா” என்றான் தாமஸ். இப்படி முகம் வீங்கிப் போய் (பூரித்து) இருப்பதால் பார்த்தால் உனக்கே என்னை அடையாளம் தெரியாது. இனிப்பாகவே இரண்டு நாளாக சாப்பிடுகிறேன். தாமஸ் ஆறுதலாய், “அந்தத் தொப்பைக்காரன் பெரிய தாதா … குளிக்கிறது அவனோட பொண்ணு இல்லே … செட்டப்பு … நாம பாக்கறது அவளுக்குத் தெரியும். ஆனா ஜன்னல் மேல ஒரு டவலப் போடறதுதானே. சிறு வயசுக் குட்டி … வேணுமின்னேதான் இப்படிக் குளிக்கிது. நீ வேற … போப்பா” என்றான். இன்னும் என்னவெல்லாம் வரப் போகுதோ?
***********************
அன்புள்ள அம்மா, நான் நலமாக இருக்கிறேன். ஆஸ்துமா அதிகமாகும் காலமாச்சே … வெளியே போகாதே. நாமும் காஸ் அடுப்பு வாங்கணும்னு ஆசைப் பட்டியே … இங்கு காஸ் அடுப்புகள் நிறைய. வாய்க்கு ருசியா எல்லாமே சாப்பிடக் கூடிய வசதியும் வந்துடுச்சு. இந்த நிறுவனத்துல எல்லாருமே யூனிபார்ம் போடணும்னு ஒரு சட்டம். என்னை இந்தக் கோலத்துல நீ பார்த்தா … அப்படியே பிரமிச்சுப் போய்டுவே. கம்ப்யூட்டர் படிச்சுட்டு ஏ சீ ரூம்ல வேலைக்குப் போகணுமேன்னு கவலைப் பட்டேன். ஆனா எனக்கும் ஏ சீ ரூம்ல ‘வீசிங்’ வருது. அதுனால சூடா இருந்தாலும் பரவாயில்லன்னு பின் பக்கம் உள்ள ஒரு இடத்துக்கு மாத்திக்கிட்டேன். நல்லா வசதி நிறைந்த இடம். எல்லாருமே “சிவா, சிவா” ன்னு என்னைத்தான் கூப்பிடறாங்க. மேனேஜெர்க்கு என் மேல ஒரு தனிப் பிரியம். நம் ஊர் பீ . டீ. ஓ. குடும்பத்தோட எங்க ஆபீசுக்கு வந்திருந்தார். என்ன விஷயம்னு தெரியலை … நான் போய் பார்க்கறதுக்குள்ள அவர் கிளம்பிப் போய்ட்டாரு. அவர் என்னைப் பார்த்தாரான்னு தெரியலை … அவரை உனக்கு நினைவிருக்காம்மா? உசரமா, ஒடிசலா இருப்பாரே கன்னடக்காரர், அவர்தான். நீ பென்ஷன் வாங்கப் போகைல எதாவது சொல்லுவாருன்னு நினைக்கிறேன். நாம ஒருமுறை மாரியம்மன் கோவில்ல குறி கேட்டப்ப சொன்னாரே நினைவிருக்கா உனக்கு? இவன் படிக்கிறது ஒண்ணு செய்யிறது ஒண்ணுன்னு இருப்பான்னார் இல்லே … அது பலிச்சுடுச்சு. நான் வேற துறைலதான் இருக்கேன். நேர்ல பாக்கும்போது சொல்றேன். பீ . டீ. ஓ. ஒண்ணும் சொல்லலியே? அன்புடன், சிவா. டயரிக் குறிப்பு : மெஸ்ஸில் சாப்பிட்டதில் பணம் தீர்ந்து போனது. பதினெட்டு ரூபாய் சாப்பாடு. இரவில் பதினைந்து ரூபாய். ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டுப் பார்த்தேன். முக வீக்கம் போய் விட்டது. அடிபட்டதில் முன்பல் ஒன்று மட்டும் கருப்பாகி உள்ளது. வேறு வேலை கிடைக்கிறவரைக்கும் பரவாயில்லை என்று ஓட்டலில் இருக்கிறேன். இந்த ஓட்டலில் வேலையில் சேரும்போது சுத்தம் செய்பவனாகத்தான் சேர வேண்டும். நண்பர்கள் நால்வரும் டிப்ஸ் தந்ததால், முதலாளி விசாரித்தபோது நான் கம்ப்யூட்டர் படித்த விஷயம் சொல்லவில்லை. ஒன்பதாம் வகுப்பு வரை படித்ததாகவே சொன்னேன். என்றாவது ஒரு நாள் இது அவருக்குத் தெரிந்தால் பெயர் கெட்டுப்போய்விடும் என்று கவலைப் பட்டேன். ஆனால் இது ஒன்றும் நிரந்தரமில்லை. கம்ப்யூட்டர் தெரிந்தவனுக்கு சர்வர் வேலை எதற்கு? வாரம் 350 ரூபாய் சம்பளம். காக்கி டிராயெர் சட்டை மூணு செட்டு உண்டு. வாஷ் பேசின் நாலு, ரெண்டு கக்கூஸ், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கழுவ வேண்டும். வேனில் காய்கறி மூட்டை, காஸ் சிலிண்டர் ஏதும் வந்தால் இறக்குவது … குப்பைகளை லாரியில் காலை ஏழு மணிக்குள் ஏற்றி அனுப்புவது எல்லாம் என்னோட வேலை. மதியம் ஒன்றரை மணிக்கு ரூமுக்கு வந்து விடுகிறேன். வெயில் அதிகமாக இருப்பதால் மாடிப் படி அடியில் உக்கர்ந்துதான் எழுதுவதும் படிப்பதும். ஊரில் பீ . டீ. ஓ. மகள் என் கூடத்தான் படித்தாள். நான் முதல் ரேங்க் வாங்கியபோது அவள் ட்வெல்த் ரேங்க் வாங்கினாள் . அவள் என்னை ஓட்டலில் பார்த்திருந்தால், நிச்சயம் ஊர் பூரா சொல்லிவிடுவாள். அதுதான் மிகப் பெரிய கவலையாக உள்ளது. ******************** அடுத்த மாத இறுதியில்: அன்புள்ள அம்மா, நான் நலமாக இருக்கிறேன். மூன்று வேளையும் நன்றாகச் சாப்பிட முடிகிறது. உனக்கும் அடுத்த மாதம் முதல் பணம் அனுப்புகிறேன். இங்கு என் நண்பர்கள் உயிருக்கு உயிராகப் பழகுகிறார்கள். ராஜு பாவம்! அவனுக்கு வைத்தீஸ்வரன் கோவில் போய் ஏடு எடுத்துப் படிக்கணுமாம். ஏன் மனைவியப் பிரிந்தான்னு தெரியணுமாம். தாமஸ் அவனைக் கிண்டல் பண்ணினான். என்னிக்கு அடிச்சுக்கப் போறாங்களோ தெரியலை. மாமா வீட்டுக்கு அடிக்கடி போய் வரேன். அவர் ரொம்ப நல்லவர். ஆஸ்துமாவுக்கு ஊசி வேண்டாமாம். ஸ்ப்ரே நல்லதாம். பக்கிரி சொன்னான். MKS டாக்டர்கிட்ட போய்க் காட்டு. புது ஆளுகிட்ட எல்லாம் போக வேணாம். அடிக்கடி ஊசி போட்டால் எலும்பு மக்கிடுமாம் – பக்கிரி சொன்னான். சீக்கிரமே பணம் அனுப்புகிறேன். அன்பு மகன், சிவா. டயரிக் குறிப்பு: அம்மா, வழக்கம்போல பொய்தான். நண்பர்கள் உயிர் நண்பர்கள்தான். பாக்கெட்ல கை விட்டுக் காசை எடுக்கிறார்கள். அந்த அளவு நெருக்கம். சாப்பாடு மூன்று வேளை ஓட்டலிலேயே போட்டுதான் அனுப்புகிறார்கள். என் சோப்பு, டவல், லுங்கி எல்லாம் இவர்கள் இஷ்டத்துக்கு எடுத்து கொள்வது பிடிக்கவில்லை. அதுவும் ராஜுவுக்குப் படை – மருந்து போடுகிறான். நாள் பூரா சொரிந்து கொள்வது கொஞ்சம் அருவருப்புதான். டவல் சோப்பு தனியாக வைத்துக்கொள்ள முடிவதில்லை ஓட்டல் முதலாளி மகனுக்குத் திருமணம். சீனியர் ஆட்களை எல்லாம் பஸ் பேசி மைசூருக்கு அழைத்துப் போனதால், எங்கள் எல்லாருக்கும் இரண்டு நாள் லீவு. மாமா வீட்டுக்குப் போனேன். வீடு பூட்டி இருந்தது. பக்கத்து வீட்டிலும் யாரும் இல்லை. எனவே அருகிலிருந்த இஸ்திரி வண்டிக்காரரைக் கேட்டபோது “மாமி ஒரு காலைக் காட்சியைக்கூடத் தவறவிடுவதில்லை” என்று கூறி சிரித்தார். சில சமயம் வீட்டில் இருந்தபடியேகூட ஜன்னல் வழியே கையை வெளியே விட்டுப் பூட்டுவது உண்டாம். நான் போனபோது கூட பூட்டு தொங்கியது. எப்படித் தெரியும் நான் வருவது? இஸ்திரி வண்டிக்காரர் சிரித்தார். “இங்கேந்து பாத்தால் தெரு முனை வரைக்கி தெரியுதுல்ல, அப்புறம் என்ன?” வழியில் சாப்பிட நினைத்து மெஸ் உள்ளே நுழைந்தோம். டோக்கன் வாங்கிக் கொண்டு திரும்பினால், கிட்டு மாமா … முதல் வரிசையில் உக்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். “மாமா, என்ன இங்கே? வீட்ல சாப்பிட வேண்டியதுதானே?” என்ற என்னை அருகே அழைத்தார். “கொஞ்சம் பொறு. வெவரமாச் சொல்றேன்.” அவர் பக்கத்தில் உட்கார்ந்தேன். சாப்பிட்டு முடித்துவிட்டு கையை அலம்பிக் கொண்டு வேட்டி முனையைத் தூக்கி வாயையும் கையையும் துடைத்துக் கொண்டார். “வா, கொஞ்சம் வெளியே நின்னு பேசுவோம் …” நண்பர்களை அனுப்பி விட்டு, அவருடன் நடந்தேன். வெளியில் வந்து பீடா ஒன்றை வாங்கி மென்று கொண்டே, “தம்பி, என்னைப் பத்தி நீ ஒன்றும் தப்பா நெனைக்க மாட்டியே … ஒன்று சொல்லட்டுமா?” என்ற பீடிகையுடன் ஆரம்பித்தார். “என்ன மாமா, நீங்க என்ன சொன்னாலும் கேட்பேன். எனக்குப் போய் நீங்க …” “உனக்கு என்னடா வயசு?” “இருவது முடிஞ்சு போச்சு மாமா…” “வயசு வந்த பையன். பெத்த பிள்ளையாட்டமா நெனச்சு சொல்றேன். எங்களுக்குக் கல்யாணம் ஆகி இருவது வருஷம் ஆவுது. முதல் அஞ்சு வருஷம் முடியறதுக்குள்ளே டெஸ்ட் எல்லாம் பண்ணிப் பாத்துட்டோம். எனக்குதான் பிரச்னை. என்ன செய்தாலும் இந்த ஜென்மத்துல புள்ள குட்டி கெடயாதுன்னு தெரிஞ்சுகிட்டேன். …” “இப்போ என்னென்னவோ செயற்கை முறை எல்லாம் இருக்குங்கிராங்களே மாமா?” “இருக்கு … எல்லாத்துக்குமே அடிப்படையா மனசுல ஈரம் இருக்கணும். பாறையில போய் பயிர் பண்ண முடியுமா? அவளுக்கு மனசுல கொஞ்சம் கூட இரக்கம் கெடயாது. யாருடைய கஷ்டமும் அவளைப் பாதிக்காது. தன் சுகம்தான் முக்கியம்.” “சுவீகாரம் பண்ணி இருக்கலாமே”அட, நீ ஒண்ணுப்பா … இது தாய்மைங்கிற இரக்க குணமே இல்லாத ஜென்மம். ஒரு ராட்சசப் பிறவி. முதல் ரெண்டு வருசத்தில என்னென்னவோ பண்ணிப் பார்த்தேன். திருந்தவே இல்ல. அதுக்கப்புறம் யோசிச்சேன். இதுகூட நாம்ப படற கஷ்டம் … இத்தோட போகட்டும். ஒரு வாரிசு இவ மாதிரியே பிறந்தா …? அதான் இது நம்ப தலை எழுத்துன்னு விட்டுட்டேன். மரியாதை இல்லாமப் பேசுவா … எல்லாரையும் எடுத்தெறிஞ்சு துச்சமாப் பேசுவா … நான் வாயையே தொரக்கிரதில்லே. ஏன் தெரியுமா? நான் பூர்வ ஜென்ம புண்ணியத்தை நம்பறேன். என்னுடைய பாவத்தை நானே தீர்த்துட்டுப் போய்டுறேன். உன்னை நான் கவனிக்கலைன்னு நினைக்கதேப்பா …” “சேச்சே … எனக்குத் தான் இடம் பார்த்துக் குடுத்தீங்களே மாமா!” “என்னை மன்னிச்சுடுப்பா. உங்க அம்மா ரொம்ப நல்லவ. எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இந்தப் பேய் வந்துட்டுது …” “அட, வுடுங்க மாமா! எனக்கு உங்ககிட்ட வருத்தமே இல்ல.” “அம்மாகிட்ட சொல்லிடாதேப்பா! பாவம்.” “சத்தியமாச் சொல்ல மாட்டேன்…” “என்னோட அட்ரஸ் கூட வச்சுக்காதே. உங்க யாருக்கும் எதுவும் பண்ணக்கூடாது. இல்லேன்னா செத்துப் போறேன்னாப்பா. சத்தியம் பண்ணச் சொன்னாள்.” “நான் அப்டியே செய்றேன் மாமா.” என்று உறுதி அளித்துவிட்டு வரும்போது பஸ் ஸ்டாப்பிற்கு ஒரு மைல் நடக்க வேண்டி இருந்தது. வழியில் வந்த லாரியில் கை காட்டினேன். வெளியூர் லாரி. காபின் உள்ளே நிறைய இடம். முகத்தைப் பாதி மறைத்தபடி மூணு இளைஞர்கள். “ஏங்க, டீசல் பங்க் எதுன்னா இருக்கா?” என்று கேட்ட டிரைவரிடம் “வாங்க, காட்டுறேன்” எனக்கூறி ஏறிக் கொண்டேன். “நேரா போய் ஹைவேல திரும்புனா பங்க் இருக்குது ..”
“அட, அது வேணாம். உள்ளுக்கா எங்கயாச்சும் இருக்கான்னு சொல்லு தம்பி.” “வாங்க போவோம்” ************************ சந்து பொந்தாகத் திரிந்து, இறுதியில் ஒரு பங்க்கை அடைந்தார்கள். டிரைவர் இறங்கி “முப்பது லிட்டர் டீசல் போடுப்பா” என்றபோது, சர்ரென்று வந்த இரண்டு போலீஸ் ஜீப்கள் இருபுறமும் நிற்க, திபு திபுவென்று வெளியே இறங்கியவர்கள், லாரியில் இருந்த மூன்று இளைஞர்களையும் டிரைவரையும் சேர்த்து சிவாவையும் கைது செய்து வேலூருக்கு அழைத்துச் சென்றனர். *********************** தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப் பட்ட அமீது, குலாம் அலி, ஆடலரசன் என்கிற நடராஜனோடு சிவாவும் சிறையில் இருக்கிறான். முதலில் ஐந்து ஆறு முறை அதிகாரிகளிடம் சென்று விளக்க முற்பட்டபோது, காது கொடுத்துக் கேட்ட ஒருவர் மட்டும் “இப்போ சொல்லி என்ன செய்யுறது ? இவனுங்களோட சேர்றதுக்கு முன்ன யோசனை பண்ணியிருக்கணும். போ …” என்றார். அதன் பிறகு முழங்கால் சில்லை உடைக்கின்ற வேகத்தில் விழுந்த அடி சிவாவைப் பேச விடாமல் தடுத்துவிட்டது. ****************** சிவாவிடமிருந்து ஐந்து ஆண்டுகளாகக் கடிதமே வரவில்லையே என அவன் தாய் காத்திருக்கிறாள். ****************** “தீவிரவாதத்தை இரும்புக் கரம் கொண்டு நசுக்குவோம் … ஆனால் திருந்தி வாழ அவர்கள் விரும்பினால், அதற்கு நேசக் கரமும் நீட்டுவோம்” – சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் பிரதமர் முழக்கம்

முன் முடிவுகளற்று இருப்பது




எப்போதாவது என்றால் சரி. எங்காவது ஒருமுறை என்றால் சரி. யாராவது ஒருமுறை எனில் சரி நடைபெற்ற யாவற்றிலும் நாம் இருவருமே பங்கு பெற்றிருக்க பிரச்சினை என்றவுடன் பின்வாங்கி நிற்கும் உங்களிடம் பெரிதாய் வருத்தமேதுமில்லை எனக்கு. எதையுமே அறியாத தோற்றம் தரும் உங்களின் முகம் குறித்தும் எனக்கு முழு சம்மதமே. எல்லாப் பிரச்சனைக்கும் என்னை நோக்கி நீளும் உங்கள் கைகளைப் பற்றிக் குலுக்க இப்பொழுதும் எனக்கு சம்மதம். ஆயினும் ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும் நான் இப்போது. முடிவொன்று தேவையா என்றாவது முடிவு செய்ய வேண்டும். முன் செய்த முடிவுகளெல்லாம் முடிவில் இப்படி எப்படியோ ஆகிக்கொண்டிருக்க முன் முடிவுகளற்று இருப்பதைப் பற்றி முழு மூச்சாய் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

வண்ணத்துப்பூச்சிகளைச் சூடிக்கொண்டவள்

அவன் தன் வேட்டைப்பற்களை மறைக்க தேவதூதனையொத்தவொரு அழகிய முகமூடியைத் தன் அரக்க முகத்தில் மாட்டிக்கொண்ட பின்னரான பொழுதொன்றில்தான் அவள் அவனைப் பார்த்தாளெனினும் ஒரு செங்கழுகின் சூட்சுமத்தோடலையும் அவனது விஷப்பார்வையை அறிந்திட்டாளில்லை
அக்கழுகு அழகிய பெண்களின் மாமிசப்பட்சி அவர்தம் வாழ்வினைக் கொழுவி உயிர் எஞ்சத் துண்டுகளாய் வெட்டியெடுத்துச் சப்பிச் சிரிக்கும் கோரங்களைக் கொண்டவை அதனது நாட்கள்
அவள் செந்தாமரை மலரொத்தவொரு தேவதைக்குப் பிறந்தவள் ஏழ்மையெனும் சேற்றுக்குள் வனப்பு நிறைக்க மலர்ந்தவள் அன்பைத்தவிர்த்து ஏதொன்றும் அறியா அப்பாவிப்பெண்ணக் கழுகின் கூர்விழிகளுக்குள் விழுந்தவள்
சுவனக் கன்னியையொத்த தூய்மையைக் கொண்டவளின் கவனம் பிசகிய கணமொன்றிலவன் கவரும் இரையுடனெறிந்த காதல் தூண்டிலின் முள் மென்தொண்டையில் இலகுவாக இறங்கிற்று என்றுமே உணர்ந்திராதவொரு விபரீதக் குருதிச்சுவையை நா உணர்ந்திற்று
நேசத்தினைச் சொல்லிச் சொல்லி அவளது சதைகளை அவ்விஷப்பட்சி தின்றரித்து முடிந்தவேளையில் வாழ்வில் காணாவொரு துயரத்தை அவள் கண்கள் விடாதுசொரிந்திட எந்நாள்பொழுதும் தீராப்பசியோடவன் வேறொரு அழகியை ஈர்க்கச் சென்றான் இயல்பை மறந்த நாட்கள் தொடர்ந்து வர அவளது தேவதைப்பாடல்கள் சோரலாயின
ஆழி நடுவிலொரு ஒற்றைப்படகிலமர்ந்து சூழ்ந்த தனிமைக்கும் துயருக்கும் மீளப்பெறமுடியா இழப்புக்குமாக வசந்தகாலத்து வனங்களின் வண்ணத்துப்பூச்சிகளைத் தன் அரணாக அவள் சூடிக் கொண்டாள் இன்று மீட்டமுடியாக் காலத்தின் வினைகளைத் தம் இச்சையால் உணர்ந்த பல திமிங்கிலங்கள் இடையறாது படகை வட்டமிட்டுக் கொண்டேயிருக்கின்றன

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்……20

மீனுவும் பூனையும்குமரி எஸ்.நீலகண்டன்மீனு அவளது அம்மாவிடம் அநியாயத்திற்கு கோபப்படுவாள். அம்மாவைப் பற்றியே அம்மாவைப் பிடிக்காதவர்களிடம் ஆயிரம் குசும்பு சொல்லி இருக்கிறாள்
கணவன் ஏதாவது சொன்னால் பாம்பாய் படமெடுப்பாள் மாமியாரிடம் மணிக் கணக்கில் சண்டை போடுவாள்
அவளை யாரும் குத்தம் சொன்னால் கொத்துகிற பாம்பாய் விஷத்தை பீய்ச்சுவாள்
ஆனால் மீனு அவளது பூனையுடன் மட்டும் மிகுந்த அன்பு காட்டுவாள். அதற்கு நேரம் தவறாமல் பால் கொடுப்பாள் அதன் பஞ்சு போன்ற முதுகைத் தடவிக் கொடுப்பாள். அதனை ஷாம்பு போட்டு நாள் தவறாமல் குளிப்பாட்டுவாள்.
பூனையோடு கொஞ்சியும் விளையாடுவாள் பூனையின் காலில் ஏற்பட்ட சிறிய காயத்திற்காக அண்டை அயலாரிடம் ஐயோ பாவம் ஐயோ பாவமென துக்கித்து துவண்டு போனாள்.
எல்லோரும் அந்த பூனையை பதுங்கி பதுங்கி ஒரு திருட்டுப் பார்வையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

பூனைக் கனவு

பிரசவ அறையின் வெளியே
களைப்புடன் திகைப்புடன்
அரை தூக்கத்தில்
காத்திருந்த என்னுள்
என்னை மீறி
ஒரு கனவு
உளவு பார்த்தது.
அதில் ஒரு பூனை
பதுங்கி பதுங்கி வந்தது.
விழிகளில் ஒளி மிளிர
வீலென்று கத்திற்று
அந்த பூனை.
அதற்குள் சார் உங்களுக்கு
ஆண் குழந்தை
பிறந்திருக்குது என்று
என்னைத் தட்டி
எழுப்பி செய்தி
சொன்னாள் அந்த
மருத்துவமனை தாதி.

கியான் (சிறுகதை)

கியான் செத்துப் போனாளாம். விழாக் காலங்களில் மைக் செட் போடும் மதியழகன், பார்க்கும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தான். யாருமே அதை அவ்வளவு பொருட்படுத்தியதாய் தெரியவில்லை. அழகப்பர் தன் பெட்டிக்கடையில் உட்கார்ந்தபடி வருவோர் போவோரிடமெல்லாம் தன் பிள்ளைபற்றிய இழிபுராணதைப்பாடிக்கொண்டிருந்தார். டீக்கடை கோவிந்தன் சூடான பாலை டிகாக்சனில் கலப்பதிலேயே மும்முரமாய் இருந்தான். பார்பர்ஷாப் முருகன் வாடிக்கையாளர் முகத்தில் சோப்பை போட்டுக்கொண்டிருந்தான்.தெருவோர நாய் ஒன்று யாரையோ பார்த்து ஆக்ரோசமாய் குலைத்துக் கொண்டிருந்தது. மனிதர்கள் முதல் மிருகங்கள் வரை யாரையும் அந்த செய்தி பாதித்ததாய் தெரியவில்லை. கியான் அப்படி ஒன்றும் அத்தனை பிரபலமான ஆளில்லை. சிறுபிள்ளைகளுக்கு அவள் ஒரு விளையாட்டுப் பொருள். கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகளுக்கு அவள் ஒரு பரிகாசப் பொருள். பெரியவர்களுக்கு அவளொரு பரிதாப ஜீவன். சுருங்கச் சொன்னால் கியான் ஒரு மனநிலை சரியில்லாதவள். ஊராரின் வார்த்தையில் ‘பைத்தியம்’. கியான் மற்றவர்களைப் போலில்லை. திடீர் திடீரென்று சிரிக்கின்ற ரகமோ, கையில் கிடைத்ததை எடுத்து வீசுகின்ற ரகமோ இல்லை. எப்போதும் எங்கேயாவது நடந்து கொண்டே இருப்பாள். அவள் எங்கிருந்து வருகிறாளென்று எவருக்கும் தெரியாது. நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவளென்றும், வரதட்சணைக் கொடுமையால் நடக்க இருந்த திருமணம் நின்று போனதால் இப்படி ஆனதாகவும், திருமணமானவளென்றும், யாரோ வைத்த சூனியத்தால் இப்படி ஆனதென்றும் பலவாறு கதைகள் உண்டு கியானைப் பற்றி. இவற்றில் எது உண்மையென்று யாருக்கும் தெரியாது. கியான் என்ற பெயர் எப்படி வந்ததென்று தெரியாது. ஆனால், கியான் என்று அழைக்கையில் அவள் திரும்பிப் பார்ப்பாள்.கியான் எங்களூரில் பிரபலமானதே ஒரு சுவாரசியமான கதை. அது ஒரு நல்ல மழைக்காலம். தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாய் பெரிதாய்ப் பெய்த மழை, அன்று மெலிதாய் தூறிக்கொண்டிருந்தது. சிறுவர்கள் மழைத்தண்ணீரில் கப்பல் விட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். கியான் வழக்கமான பேருந்து நிறுத்த சிமென்ட் பெஞ்சில் அமர்ந்திருந்தாள். பஸ் நிறுத்தத்திற்கு எதிரே டீக்கடை ஒன்று உண்டு. டீக்கடை நாயரின் இரண்டு வயதுக் குழந்தையும் தெருவோரம் மழையில் விளையாடிக் கொண்டிருந்தது. வேகமாக வந்து கொண்டிருந்த லாரியொன்று அந்த இடத்தை நெருங்குகையில், சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, சாலையின் குறுக்காக ஓடி வர ஆரம்பித்தது. எந்தவித விபரீதமும் நிகழாமல், கியான் வேகமாய் ஓடிப் போய் குழந்தையை அணைத்தபடி காப்பாற்றி, மறுபுறம் கொண்டு வந்த அந்த தினத்திலிருந்துதான் கியான் எங்களூரில் நல்ல பிரபலம்.…எடுப்பாய் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் முன் பற்கள் இரண்டும் அந்த முகத்திற்கு சற்று விகாரமான தோற்றத்தைத் தந்தாலும் இதுவரை எந்த குழந்தையும் அவளைப் பார்த்து பயந்ததாய் எந்த கதையும் இல்லை. ஆனால், கியானின் அட்டகாசமென்று சொல்லவேண்டுமென்றால், அதை பேருந்துகள் வந்து நிற்கும் நேரத்தில் காணலாம். அதுவரை அமைதியாய் தன் (!) இருப்பிடத்தில் அமர்ந்து கொண்டிருப்பவள், ஏதாவது பேருந்து வரும் சமயம், வேகமாய் ஓடி வந்து பேருந்தின் பக்கவாட்டில் தடதடவென்று தட்டுவாள். ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருப்பவர்களைப் பார்த்து, அது பெண்களாய் இருந்தாலும், “மாமா மாமா” என்று சத்தமிடுவாள். ஆனால் இதுவரை அவள் பேருந்துக்குள் ஏறவோ, கல்லால் அடிப்பது போன்ற செயல்களிலோ ஈடுபட்டதில்லை. ஒரு சில வேளைகளில், யாரையாவது சுட்டிக் காட்டி, “இந்த மாமாவைக் கட்டிக்கிறியா” என்றால், அதற்கு “இக்கும் போ மாமா” என்றே பதில் சொல்வாள். அப்படி சொல்கையில் அவள் லேசாக வெட்கப்படுவதைப் போல் கூடத் தோன்றும். கியானுக்கு கோபம் வரவழைக்கும் விஷயம் ஒன்று உண்டு. “டமுக்கு டப்பான்” என்ற வார்த்தையில் அப்படி என்ன இருக்கிறதோ தெரியாது. சிறுவர்கள் யாராவது விளையாட்டுக்காக அந்த வார்த்தையை சொன்னாலும், கண்களில் அக்னி ஜ்வாலை தெறிக்க, தெருவில் கிடைக்கும் கற்களை எடுத்து வீசத் தொடங்கி விடுவாள். கூடவே “அய்ய.. இக்கும்.. போ” என்று கத்திக் கொண்டே சிறுவர்களை துரத்திக்கொண்டு ஓடுவாள். ஆனால், சிறிது நேரத்திற்கெல்லாம், பழைய கியானாய், பேருந்து நிறுத்த பெஞ்சில் அவளைக் காணலாம். வந்து அமர்ந்த சிறிது நேரம் வரை, அவள் முகத்தில் சிறிய கோபம் ஒன்று இருக்கும். அது போன்ற நேரங்களில், வழக்கமான “மாமா மாமா” போன்ற கூச்சலோ, பேருந்துகளைத் தட்டுவது போன்ற செயல்களிலோ அவள் ஈடுபடுவதில்லை. ஆனால் எல்லாம் சிறிது நேரம்தான். பிறகு தன் வழக்கமான வேளைகளில் ஈடுபடத் தொடங்கி விடுவாள். அந்தக் கியான் செத்துப் போனாளாம்.அது அங்கு யாரையும் பாதித்ததாய் தெரியவில்லை. மனிதர்கள் முதல் மிருகங்கள் வரை யாவரும் தன் வேலையைப் பார்த்தபடிப் போய்க்கொண்டிருந்தன(ர்). இரண்டு நாட்கள் போனது. பேருந்து நிறுத்தமே தன களையை இழந்தது போல் இருந்தது எங்களுக்கு. திடீரென்று “இக்கும்.. போ” என்ற குரல் கேட்க ஆரம்பித்தது. தலையில் ஒரு கட்டுடன் தன் இருப்பிடம் நோக்கி வந்து கொண்டிருந்தாள் கியான். தலை காயம் பற்றி கேட்டவருக்கெல்லாம் “இக்கும்.. போ” என்றே பதில் சொன்னாள். ஒருவேளை அவள் யாராவது குழந்தையை காப்பாற்றப் போய் அடி பட்டிருக்கும் என்று யாவரும் நினைத்துக்கொண்டோம். அந்த “இக்கும் போ” என்ற சத்தமும், “மாமா மாமா” என்ற அழைப்பும் மறுபடி ஒலிக்க ஆரம்பித்ததில், இழந்த தன் களையை மறுபடி பெற்றிருந்தது எங்களூர் பேருந்து நிலையம். o

” விண்ணைதண்டி வருவாயா “

இந்த படத்தை பார்த்து கிட்ட திட்டஒரு மாதம் ஆகி விட்டது , இதை பற்றி, கேட்ட வரையிலும் சரி, நெட்டில் படித்த வரையிலும் , ஆஹா ஓஹோஎன்றுதான் கேள்வி! (எதாவது மிஸ் ஆகிருக்கும் !) படம் ஆரம்பிக்கும் பொழுதே சிம்பு பின்னணியில் பேச ( அனேகமாக கௌதம் படங்களில் இது பொதுவகிவிட்டது ) வாரனம் ஆயிரம் பாகம் இரண்டோ என்று தோன்ற ஆரம்பித்தது, இதை எதோ Latest Trend என்று, ஒரு விமர்சகர் சிலகிதிருந்தார் . கிட்ட திட்ட 75 ஆண்டுகள் கழிந்தும் நமக்கு , சினிமா என்ற கலைவடிவம் பிடிபடவில்லையோ என்று தோன்றுகிறது. காட்டி உணர்த்த வேண்டியதை பின்னணியில் நீண்ட விளக்க உரை கொடுக்க நேர்ந்தால் அதை சினிமாவின் தோல்வி என்றே எண்ண தோன்றுகிறது.மீண்டும் சளைக்காத காதல். (என் நண்பன் ஒருவன் இந்த படத்தை லவ் பன்ன ஒருவரால்தான் ரசிக்க முடியும் என்ற விளக்கம் கொடுத்தான்) . எனக்கு இதில் ஒரு வியாபார சூட்சமம் முக்கியமாகபடுகிறது, இன்று திரைக்கு சென்று சினிமா பார்பவர்கள் 15-35 வயதினர், இவர்களுக்கு காதலை வித்தியாசமாக சொன்னால் படம் ஹிட் !எனக்கு இது போன்ற படங்களில் முதலில் இருந்தே இதன் யதார்த்த தன்மை பற்றிய கேள்விகள் தோன்ற ஆரம்பித்து விடுவதால் படத்தின் உள்ளே புகமுடியவில்லை (அல்லது படத்துடன் பயணிக்க முடியவில்லை)உதாரணங்கள் ௧) பட்டம் பெற்ற ஒரு இளைஞனது எதிர்காலம் பற்றிய கவலையை கவனமாக தவிர்த்திருக்கிறார் (அவனும் சரி அவனது குடும்பமும் சரி ), ஒரு உயர் மத்திய தர குடும்பத்தில் எவ்வளவு துரம் சாத்தியம் என்று தெரியவில்லை . அதே போல அவனது குடும்பத்தில் அவனது காதலை எதிர் கொள்ளும் விதமும் சாத்தியமா? ௨)ஒரு பெண் ,ஒரு வாலிபனை, தொடர்ந்து பார்த்தாலோ அல்லது பேசினாலோ அந்த பெண் காதலித்தே ஆக வேண்டும்,(அல்லது காதலித்து இருக்க வேண்டும்) .கிட்ட திட்ட அந்த கதாநாயகி , காதலிக்க கட்டயபடுத்த பட்டிருக்கிறார் . இது தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளாக தொடர்கிறது, (இதற்கு எதிர் விதமாக ஆண் பெண் நட்பை பற்றிய குப்பைகள் ,தாங்க முடியாதவை என்பதை ஒத்து கொள்கிறேன் ) ௩) ” ****ing” என்று கத்துதல் தமிழ் சினிமாவை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும் என்று கெளதம் முடிவு செய்துவிட்டார். இந்த வார்த்தை corporate உலகத்தில் சகஜமாக இருக்கலாம் , தயவு செய்து நமது குடும்பத்திற்குள் சகஜமாக்கிவிடாதிர்கள் கெளதம் !( இந்த குறிப்பை குறியீடாக கொள்ளவும் ) படத்தில் நான் ரசித்த காட்சி : சிம்பு ஆலப்புழ காவல் நிலையத்தில் ” சார் Jessi கல்யாணத்தை நிறுத்திட்டா சார் ! ” unexpected and great expressionஆனாலும் படம் வணிகரீதியாக வெற்றி கௌதமின் வெற்றியே, சினிமாவின் வெற்றியா?பிகு : தமிழ்நாடு அனேகமாக ஒரு கும்பத்தின்கீழ் அடிமையகிவிட்டதோ என்று தோன்றுகிறது மீடியா என்றால் அவர்கள் (டிவி,ரேடியோ பேப்பர்…)அரசியலை பற்றி கேட்கவே வேண்டாம் , தமிழ்நாடு ஏற்கனவே இரண்டாக பிரிக்கப்பட்டுவிட்டது தற்போது சினிமாவும் ,ஒன்று அவர்கள் தயாரிக்கிறார்கள் , இல்லை விநியோகம் செய்கிறார்கள் , அதுவும் இல்லை என்றல் டிவி உரிமையை பெற்றுவிடுகிறார்கள், ரஜினியே நடுங்கும் பொழுது …… ஒருகால் பரமேஸ்வரன் திருவாருரை தன்னுடைய ஊராக சொன்னது { சுந்தரமூர்த்தி நாயனாரின் புராணத்தில் } -” உலகம் யாவையும் ” என்று பொருள் கொண்டார்களோ ! { கம்ப ராமாயண முதல் செய்யுளின் மூலம்}