அழகியசிங்கர்
அநாசாரம்
நீலமணி
வண்டோடு சம்போகம்
செய்துவிட்டுக்
குளிக்காமல
கடவுள் தோளேறும்
மாலைப் பூ
எழுத்து காலத்திற்குப் பிறகு, கசடதபற ஒரு முக்கியமான இடத்தைப் பெறுகிறது. எழுத்தில் வெளிவந்த கவிதைகள் கசடதபற இதழ்களில் வெளிவர வாய்ப்பு உள்ளது. ஆனால் கசடதபற இதழ்களில் வெளிவந்த கவிதைகள் எழுத்துவில் பிரசுரம் ஆக வாய்ப்பில்லை.
உதாரணமாக நீலமணி என்ற கவிஞர் கசடதபற இதழ்களில் முக்கியமான கவிஞராகத் தென்படுகிறார். பாலுணர்வை வெளிப்படையாக கவிதைகள் மூலம் முதன் முதலாக கசடதபற இதழ்கள் வெளிக்கொண்டு வர இவர் ஒரு காரணம்.
ஏற்கனவே அழைப்பு என்ற கவிதை எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்த ஒன்று.
நிரோத் உபயோகியுங்கள்
நிரோத் உபயோகியுங்கள்
என்று விளம்பரங்கள்
வலியுறுத்துகின்றன
வாயேன்.
அதேபோல் கசடதபற இதழ்களில் பெண் கவிஞர்கள் யாருமில்லை. ஆனால் பெண்களைப் பற்றிய கவிதைகள் நிறையா உண்டு.
அழகியசிங்கர்
30 06.2014 அன்று நான் பார்த்த படம் சான்று ( PROOF). ஷேக்ஸ்பியர் இன் லவ் என்ற திறமையான படததை எடுத்து இயக்குநர்தான் இந்தப் படத்தையும் எடுத்துள்ளார். ஆஸ்கர் வெற்றிப் பெற்ற சிறந்த நடிக்கைக்கான விருதுபெற்ற கெயிநத் பால்ரோ Gwyneth Paltrow (Best Actress, Shakespeare in Love, 1998) , அந்தோனி ஹாப்கின்ஸ் (சிறந்த நடிகர் விருதுபெற்றவர்), ஹோப் டேவிஸ் போன்ற வர்கள் சிறப்பாக நடித்தப் படம் ‘சான்று’ என்ற இப் படம். 27 வயது நிரம்பிய காத்ரின் என்ற பெண் நடுசாமத்தில் டிவி பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவள் குடிப்பதற்கு மது கொடுக்கிறார் அவள் அப்பா. சிறிது நேரம் அவர்கள் இருவரும் புத்தி பிறழ்ச்சியைப் பற்றி பேசிக்கொணள்டிருக்கிறார்கள். அந்தப் பேச்சு முடியும்போது ஒரு விஷயம் தெரிகிறது. அவள் அப்பா ராபர்ட் போனவாரம் இறந்து விட்டார். அவரை நாளை அடக்கம் செய்யப் போகிறரர்கள். காத்ரின் அவளுடைய அப்பாவைப் பற்றி நினைவுகளுடனும், அவளுடைய எதிர்காலம் பற்றிய நிச்சயம் இன்மையுடனும் வாழ்கிறாள். அவள் இப்படிபட்ட கனவுடன் விழித்துக் கொள்ளும்போதுதான் அவளுக்குத் தெரிகிறது அப்பாவுடைய மாணவனான ஹால் அவருடைய அறையில் உள்ள புத்தகங்களைப் படித்துக் கொண்டிருக்கிறான். அவளுடைய போராட்டம்தான் இப்படம். ராபர்ட் என்கிற அவளுடைய அப்பாவை பல ஆண்டுகளாக பாதுகாத்து வருகிறாள் அவளுடைய அப்பா நிச்சயமில்லாமல் இருக்கிறார். அவர் கணக்கில் மிக சிறந்த நிபணர். வயதோகத்தால் அவரிடமிருந்து அவருடைய நிபுனத்துவம் குறைந்துகொண்டே போகிறது. அவர் போகும்போது ஒரு ரசகியத்தை விட்டுச் செல்கிறார். அந்த ரகசியம் அவளை துன்புறுத்துகிறது. அது அவளுடைய புனிதத்தன்மையைப் பாதிக்கிறது.
அடைந்த வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
பெரியசாமி தீர்க்கிறார்
வே மாலி
என்ன செய்வ திநதக் கையை
என்றேன். என்ன செய்வ தென்றால்
என்றான் சாமி. கைக்கு வேலை
என்றி ருந்தால் பிரச்னை இல்லை.
மற்ற நேரம் – நடக்கும் போதும்
நிற்கும் போதும், இந்தக் கைகள்
வெறும் தோள் முனைத்தொங் கல், தாங் காத
உறுத்தல் வடிவத் தொல்லை
என்றேன். கையைக் காலாக் கென்றான்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள கவிதை வே மாலி என்ற பெயரில் சி மணி எழுதிய கவிதை. ஒன்றும் பயன் இல்லாதபோது கையை காலாகத்தான் பயன் படுத்த வேண்டும். ஆனால் கை பயன்பாடு இல்லாதத் தருணத்தில் தோள் முனைத்தொங்கலாகத் தோன்றுகிறது. இப்படி வேடிக்கையாக பல கவிதைகள் கசடதபற காலத்தில் உருவாயின. இக் கவிதையைப் படிக்கும்போது, 1968 ஆம் ஆண்டு எழுதிய ஞானக்கூத்தனின் பிரச்னை கவிதை ஏனோ ஞாபகத்திற்கு வரும். அக் கவிதை இதோ:
பிரச்னை
திண்ணை இருட்டில் எவரோ கேட்டார்
தலையை எங்கே வைப்பதாம் என்று
எவனோ ஒருவன் சொன்னான்
களவு போகாமல் கையருகே வை.
ஞானக்கூத்தன் கையை தலைக்கு காவலாக வைக்கச் சொல்கிறார்.