இன்று மாலை நானும் என் மனைவியும் சில கோவில்களுக்குச் சென்றோம். இறுதியாக நாங்கள் சென்று வந்த கோயில் மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயில். கொஞ்சங்கூட கவனம் இல்ûலாமல் வண்டியை ஓட்டிக்கொண்டு வந்து கொண்டிருந்தேன். அடையார் கேட் ஓட்டலைத் தாண்டி வந்துகொண்டிருந்தேன். பின்னால் மனைவி கையில் பேக்கை வைத்துக்கொண்டு இருந்தார். அதை ஒரு பையில் போட்டு டூ வீலர் பாக்ஸில் வைத்திருக்கலாம். ஒன்றும் தோன்றவில்லை. எனக்கும். யாரோ இரண்டு இளைஞர்கள் டூ வீலரில் வேகமாக வந்து என் மனைவி கையிலிருந்து பேக்கைப் பிடுங்கிக்கொண்டு வேகமாக ஓடி விட்டார்கள். நான் கத்திக்கொண்டு அவரைகளைத் துரத்திக்கொண்டு போனேன். என்னால் முடியவல்லை. மேலும் என் மனைவி பின்னால் இருந்ததால் பேலன்ஸ் தவறி விடுமோ என்று தோன்றியது. ஒரு செல்போன், ஒரு சாவி, ரூ.2000 பணம போய்விட்டது. என் பர்ஸ்ûஸ யாராவது கொள்ளை அடித்தால் ஏடிஎம் கார்டு ரூ.500க்குள்ளே பணம்தான் போயிருக்கும். பின் சில விஸிட்டிங் கார்டு போயிருக்கும். இப்போது என்ன செய்வது என்று இதுமாதிரி செல் போனை தொலைத்தவர்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். புத்தகக் கண்காட்சியின் போது ஏகப்பட்ட செல் போன்கள் இப்படித்தான் போகும். செல் போன் கொள்ளையர்களே நீங்கள் நன்றாக இருக்க மாட்டீர்கள். என்று சொல்வதைத் தவிர வேற வழி இல்லை.
Author: virutcham
துளி : 2
ஒரு புத்தகம் உங்களுக்குத் தர விரும்புகிறேன். வாங்கிக்கொள்ள வருங்கள் என்றார் கவிஞர் வைதீஸ்வரன். அவர் வீட்டிற்குச் சென்றேன். ஒரு புத்தகம் மட்டுமல்ல இரண்டு மூன்று புத்தகங்கள் கொடுத்தார். அதில் ஒரு புத்தகம் மிக முக்கியமானபுத்தகம். அப் புத்தகத்தின் பெயர் Mounts Valley and Myself வைதீஸ்வரன் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு. மொழி பெயர்த்தவர் லதா ராமகிருஷ்ணன். 94 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தின் விலை ரூ.350. அதுதான் உறுத்தலாக இருக்கிறது. வைதீஸ்வரன் பிறந்தநாளின்போது இப் புத்தகம் வந்திருக்கிறது.
இன்று அசோகமித்திரன், வைதீஸ்வரன் பிறந்த நாள்
2012 செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி அசோகமித்திரன் பிறந்ததினத்தன்று நான் திருவல்லிக்கேணியில் உள்ள பாரதி இல்லத்தில் ஒரு கூட்டம் நடத்தினேன். அக் கூட்டம் சிறப்பான ஒன்று எல்லோரும் மனந்திறந்து பேசினார்கள். என்னுடைய யூ ட்யூப்பில் சென்று யாரும் போய்ப் பார்க்கலாம். முழுவதும் வெளியிட்டுள்ளேன்.
அசோகமித்திரன் பிறந்த தினத்தன்றுதான் கவிஞர் வைதீஸ்வரனின் பிறந்த தினமும். அசோகமித்திரனைவிட நாலைந்து வயது சிறியவர் வைதீஸ்வரன்.
சமீபத்தில் ராயப்பேட்டை புத்தகக் கண்காட்சியில் வைதீஸ்வரன் வந்திருந்தார். அவருடைய கவிதைகளை வாசிக்கச் சொல்லி அதை ஒளிப்பதிவு செய்துள்ளேன். பிறந்ததினத்தன்று அதை இங்கு அளிக்கிறேன்.
பத்து கேள்விகள் பத்து பதில்கள் – 19 – ஏ எஸ் நடராஜன் பேட்டி – இரண்டாம் பகுதி
நேற்று முதல் பகுதி வெளியிட்டிருந்தேன். இப்போது இரண்டாம் பகுதி வெளியிடுகிறேன்.
நான் தற்செயலாக எதிரி உங்கள் நண்பன் புத்தகத்தைக் கொடுக்கத்தான் கே கே நகரில் உள்ள நடராஜன் வீட்டிற்குச் சென்றேன். என்னமோ தோன்றியது ஒரு பேட்டி எடுக்க வேண்டும் என்று. நடராஜனும் அதற்கு சம்மதிக்கவே பேட்டி எடுத்து விட்டேன்.
ரொம்ப மோசமான ஒரு விபத்திலிருந்து தப்பித்து பின் எப்படி அதை எதிர்கொள்வது என்பதை நடராஜனிடமிருந்து பலரும் கற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த விபத்து நடந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு நடராஜன் தனியாக தானே வாழ பழகிக்கொண்டவர். கால்களைப் பயன்படுத்தாமல் கைகளைக்கொண்டு காரை எடுத்துக்கொண்டு எல்லா இடங்களுக்கும் செல்லக் கூடியவர். அவர் துணிச்சல் யாருக்கும் வராது. நீங்கள் இந்தப் பேட்டியின் இன்னொரு பகுதியையும் பார்க்க வேண்டும்.
பத்து கேள்விகள் பத்து பதில்கள் – 19 – ஏ எஸ் நடராஜன் பேட்டி
1978ஆம் ஆண்டிலிருந்து எனக்கு நண்பர் அவர். பெயர் ஏ எஸ் நடராஜன். சுறுசுறுப்பானவர். வாழ்க்கையை அவர் பார்க்கும் விதம் வித்தியாசமாக இருக்கும். மிகச் சாதாரண நிலையிலிருந்து தன் அறிவாற்றலால் முன்னுக்கு வந்தவர். அவரும் நானும் பரீக்ஷா ஞாநி இயற்றிய மூர் மார்க்கெட் என்ற நாடகத்தில் ஒன்றாக நடித்தோம். அவருக்குத் துணிச்சலான கதாப்பாத்திரம். எனக்கோ பயந்தாகொள்ளி கதாப்பாத்திரம்.
15ஆம் தேதி ஏப்ரல் மாதம் 1995ஆம் ஆண்டு காரில் சென்று கொண்டிருந்தபோது விபரீதமான விபத்தில் சிக்கிக்கொண்டு, அவருக்கு முதுகு தண்டுவடம் உடைந்து விட்டது. அந்தக் கோரமான விபத்திலிருந்து உயிர்பெற்று மீண்ட நடராஜன் த்ன வாழ்க்கையைப் பற்றிய தன் அனுபவங்களை என்னுடன் இன்று பகிர்ந்து உள்ளார். அவருடைய வாழ்க்கை அனுபவம் ஒவ்வொருவருக்கும் வாழ வேண்டுமென்ற தூண்டுதலை ஏற்படுத்தும்.
துளி : 1
என் லைப்ரரியில் சில நேரம் புத்தகம் படித்துவிட்டு ஆர்யாகவுடர் ரோடில் உள்ள மாம்பலம்ஸ் வெங்கடேஸ்வரா போளி நிலையத்திற்கு வருவேன். ஒரு நாள் போன்டா, ஒருநாள் மசால் வடை, ஒருநாள் உருளைக் கிழங்கு போன்டா, ஒரு நாள் மெதுவடை என்றெல்லாம் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வருவேன். அங்கு என் மனைவி தயாராக வைத்திருக்கும் கேழ்வரகுக் கஞ்சியுடன் சேர்த்து உண்பேன். போளி ஸ்டாலில் வாங்கிச் சாப்பிடுவது நல்லதா கெட்டதா தெரியாது. என் நண்பர் டாக்டர் பாஸ்கரன்தான் சொல்ல வேண்டும். அந்தப் போளி நிலையத்தின் வாசலில் ஒரு மரம். அதை கோயிலாக யாரோ மாற்றி உள்ளார்கள். விளக்கு வைக்கிறமாதிரி ஒரு* மரப்பொந்தை உருவாக்கி உள்ளார்கள். மரத்தைச் சுற்றி புடவைக் கட்டி மஞ்சள் குங்குமம் பூசி உருவாக்கி உள்ளார்கள். போளி நிலையத்தில் பணிபுரிபவர்களுக்கு இந்த மரத்தின் மகத்துவம் தெரியவில்லை. அப்படியா என்று கேட்கிறார்கள்.
விருட்சம் சந்திப்புக் கூட்டம்…
நாளைக்கு மாலை 6 மணிக்கு நடைபெறப்போகும் கூட்டம் 42வது கூட்டம். இக் கூட்டத்திற்கு வரும்படி கேட்டுக்கொள்கிறேன். இத்துடன் அழைப்பிதழை இணைத்துள்ளேன்.
பிள்ளையார் படம் போட்ட விருட்சம்
நவீன விருட்சம் 54வது இதழில் (அதாவது பிப்பரவரி 2002ல்) பிள்ளையார் படத்தை நவீன ஓவியமாக சிவபாலன் என்பவர் வரைந்து கொடுத்திருந்தார். இந்தப் படம் ஓவியர் விஸ்வம் மூலம் எனக்குக் கிடைத்தது. நவீன விருட்சத்தின் அட்டைப் படமாக அதை பயன்படுத்தினேன்.
60 பக்கங்கள். அந்த இதழ் விருட்சம் விலை ரூ.10. அதில் முக்கியமான கவிதையாக ரா ஸ்ரீனிவாஸன் கவிதையை நான் கருதுகிறேன். அந்த அட்டை ஓவியத்துடன் அவர் கவிதையையும் இங்கு அளிக்கிறேன்.
ரா ஸ்ரீனிவாஸன்
தற்பொழுது
1)
வேறெப்பொழுதுமில்லாத
தற்பொழுதின் வாசல்
திக்கெல்லாம் திறந்தே இருக்கிறது –
உட்புகுக,
இப்பொழுது திறந்தது
உள்ளேயிருந்தா வெளியேயிருந்தா –
காண்க,
எல்லாம் உருமாறிக் கொண்டிருக்கும் தற்பொழுது –
அறிக.
தற்பொழுதை விட்டு விலகிச் செல்கின்றன
எல்லாப் பயணங்களும் –
பிரிகின்ற பாதைகளெல்லாம் தற்பொழுதிலிருந்து
அப்பால் இட்டுச் செல்கின்றன –
உணர்க.
எப்பொழுதுமான தற்பொழுதிற்குத்
தலை வணங்குகிறேன்,
தாள் பணிகிறேன்,
விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 42
தலைப்பு : சினிமா தொலைக் காட்சி என்னும் காட்சி ஊடகம் தரும் அனுபவமும் வாசிப்பின் மேன்மையும்
சிறப்புரை : சத்யானந்தன்
இடம் : ஸ்ரீராம் குரூப் அலுவலகம்
மூகாம்பிகை வளாகம்
சி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே
ஆறாவது தளம்
மயிலாப்பூர்
சென்னை 600 004
தேதி 15.09.2018 (சனிக்கிழமை)
நேரம் மாலை 6.00 மணிக்கு
பேசுவோர் குறிப்பு : நவீன புனைகதைகள், நாவல்கள், கவிதைகள், கட்டுரைகளை வித்தியாசமாக எழுதிக்கொண்டிருக்கும் படைப்பாளி.
அனைவரும் வருக,
அன்புடன்
அழகியசிங்கர்
9444113205
ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 8
1. 106வது இதழ் விருட்சம் என்ன ஆயிற்று?
இந்த மாதத்திற்குள் வந்து விடும்.
2. நீங்கள் விருட்சம் ஆரம்பித்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன
ஆமாம். இதழ் வந்தவுடன் ஒரு கூட்டம் ஏற்பாடு பண்ண நினைக்கிறேன். ரைட்டர்ஸ் கேப்பில் எனக்குப்பிடித்த நண்பர்களுடன் உட்கார்ந்து பேச.
3. சிறுபத்திரிகை என்பதே தேவையில்லை என்ற கருத்திற்கு என்ன சொல்கிறீர்கள்?
தமிழ் இந்துவில் அப்படி ஒரு கருத்து ஏற்படுகிற மாதிரி ஒரு தலையங்கம் வந்தது. திரும்பவும் படிக்கலாமென்றால் அந்தப் பத்திரிகை கண்ணில் படவில்லை. அந்தக் கருத்து சரியில்லை. எக்ஸ்பிரஷன்தான் சிறுபத்திரிகை. அதை ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துகிறார்கள். வாசகர் கையில்தான் ஏற்றுக்கொள்வது அல்லது ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதெல்லாம் இருக்கிறது. சிற்றேடு மாதிரி ஒரு இதழை தமிழவன் மட்டும்தான் கொண்டு வர முடியும். அதைத்தான் இப்போது படித்துக்கொண்டிருக்கிறேன்.
4. ஒரு பெண் தன் இரண்டு குழந்தைகளை இரக்கமில்லாமல் கொன்றுவிட்டு கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க விரும்புவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.
அது மாதிரியான ஒரு சம்பவத்தை நினைத்து வருத்தமாக இருந்தது. திகில் கதை எழுதும் ராஜேஷ்குமார் கூட இதுமாதிரியான நிஜ சம்பவத்தைக் கற்பனை செய்து எழுத முடியாது என்று தோன்றுகிறது.
5. சமீபத்தில் தபாலில் வந்த ஒரு புத்தகத்தைப் பற்றி சொல்ல முடியுமா?
எனக்கு சமீபத்தில் தபாலில் வந்த புத்தகங்களைப் பற்றி கூற விரும்புகிறேன். முதல் புத்தகம். üநூலகத்தால் உயர்ந்தேன்ý என்று ஆலந்தூர் கோ மோகனரங்கன் எழுதிய புத்தகம். இது ஒரு புதையல் மாதரி எனக்குத் தோன்றுகிறது. 1096 பக்கங்கள் கொண்ட புத்தகம். பல சம்பவங்களைக் கொண்ட புத்தகம் இது. இன்னொன்று மணல் வீடு என்ற பத்திரிகை. 34-35 கொண்ட மணல்வீடு பத்திரிகையைப் பார்த்து அசந்துவிட்டேன். 232 பக்கங்கள் கொண்ட இதழ். நம்ப முடியவில்லை பெரு. விஷ்ணுகுமார் அவர்களின் ழ என்ற பாதையில் நடப்பவன் என்ற கவிதைத் தொகுதி. இந்தக் கவிதைப் புத்தகத்தை உடனே படிக்க வேண்டும். படித்துவிட்டு எழுத வேண்டும்.
6. சமீபத்தில் பார்த்தத் தமிழ்ப் படம்.
சமீபத்தில் நான் பார்த்த ஒரு தமிழ்ப் படம் ஏன்டா பார்க்கப் போனோம் என்று என்னைக் கலங்க வைத்து விட்டது. இனிமேல் நல்ல திரைப்படங்கள் தமிழில் வராதா என்ற ஏக்கம் கூட ஏற்பட்டு விட்டது.
7. எதுவும் நம் கையில் இல்லை என்பதை நம்புகிறீர்களா?
எதுவும் நம் கையில் இல்லை. கேரளாவில் வெள்ளம் வந்து அந்த மாநிலத்தையே புரட்டிப் போட்டுவிட்டது. நம் கையில் இல்லை.
8. உங்கள் புத்தக லைப்ரரிக்கு வந்து நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் சிறு பத்திரிகைகளை யாரோ கொள்ளை அடித்துக்கொண்டு போவது போல் கனவு கண்டேன்.
மோசமான கனவு
9. கோட்பாடு ரீதியாக விமர்சிப்பதை நீங்கள் விரும்புகிறீர்களா?
கோட்பாடு ரீதியாக எழுதப்படுகிறவற்றைப் பற்றி படித்துப் பார்க்கிறேன். ஒரே குழப்பமாக குழப்புவதுபோல் தோன்றுகிறது.
10. பிரமிள் புத்தகத் தொகுப்புப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
அத்தனையும் வாங்கி வைத்துவிடலாம். ஆனால் படிக்க வேண்டுமே?
11. உங்களின் மனதுக்குப் பிடித்த கவிதைத் தொகுதி எப்போது வரப்போகிறது?
கூடிய சீக்கிரம். முதலில் 100 கவிதைகள்.
12. சமீபத்தில் நீங்கள் கொண்டு வந்த புத்தகங்களைப் பற்றி கூறுங்கள்.
இரண்டு புத்தகங்கள் கொண்டு வந்துள்ளேன். ஒன்று நீங்களும் படிக்கலாம் தொகுதி 2. இன்னொரு புத்தகம். சத்யஜித்ரேயின் அபுர் சன்ஸôர் திரைக்கதையை மொழிப்பெயர்த்தப் புத்தகம். எளிதாகப் படித்துவிடும்படி எல்லாப் புத்தகங்களும் 100 பக்கங்களுக்குள் அடங்கி விடும்.
13. எதற்காக நீங்களும் படிக்கலாம் புத்தகம் கொண்டு வந்துள்ளீர்கள்.
நான் படிக்கிற புத்தகங்களை படித்து முடித்தவுடன் சில நாட்களில் மறந்து விடுகிறேன். அப்படி மறக்காமல் இருக்கத்தான் ஞாபகப்படுத்தும் விதமாக நீங்களும் படிக்கலாம் என்ற பெயரில் புத்தகங்களைப் பற்றி எழுதுகிறேன்.
14. வாழ்க்கை எளிதாக இருக்கிறதா?
இல்லை.
15. நீங்கள் ஆத்திகரா நாத்திகரா
ஆத்திகன். அசோக் நகரில் உள்ள ஹனுமார் கோயிலில் பொங்கல் சாப்பிடுவதை விரும்புவேன்.
16. உங்களுக்குக் கூட்டத்தில் பேசுவதற்கு எளிதாக வந்து விட்டதா?
எளிதாக வந்து விட்டது.
17. இந்த மாதம் யார் பேசுகிறார்கள்
சத்யானந்தன்.
18. எதைப் பற்றி பேசுகிறார்?
சினிமா தொலைக்காட்சி என்னும் காட்சி ஊடகம் தரும் அனுபவமும் வாசிப்பின் மேன்மையும்
19. இத்துடன் போதுமா?
போதும்.