ரஸவாதி கதைகள் விமர்சனக் கூட்டம்

 அழகியசிங்கர்


37 கதைகள் கொண்ட ரஸவாதியின் கதைகள் புத்தகமாக விருட்சம் வெளியீடாக வந்துள்ளது.
ரஸவாதியின் கதைகள் குறித்து 8 பேர்கள் அவருடைய ஒவ்வொரு கதையாக எடுத்துப் பேசுகிறார்கள்.
ஆதாரஸ்ரூதி என்ற புகழ்பெற்ற நாவல் எழுதியவர் ரஸவாதி. அவருடைய கதைகள் மென்மையான உணர்வுகளைக் கொண்ட கதைகள்.
புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தால் 38 கதைகளையும் சில மணி நேரங்களில் படித்து விடலாம்.
அக் கதைகளைக் குறித்துத்தான் கூட்டம்.

ஞாயிறு காலை 11 மணிக்குக் கூட்டம்.

Topic: ரஸவாதியின் சிறுகதைகள்Time: Sep 26, 2021 11:00 AM India

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/87108699304…

Meeting ID: 871 0869 9304
Passcode: 825201 See LessEdit

1Sathya GPLikeCommentShare

Comments

கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி – 20

அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 20வது கதை வாசிப்புக் கூட்டம். வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைஞர்கள் 1. கிருஷாங்கினி 2. ஹெச்.என்.ஹரிஹரன் வழக்கம்போல் 8 இலக்கிய நண்பர்கள் கதைகளைச் சுருக்கமாகக் கூறி கதைகளைப் பற்றி உரையாடுகிறார்கள். இக் கூட்டம் 25.09.2021 அன்று சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. எல்லோரும் அவசியம் கலந்துகொண்டு சிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 20வது கதை வாசிப்புக் கூட்டம்.Time: Sep 25, 2021 06:30 PM IndiaJoin Zoom Meetinghttps://us02web.zoom.us/j/89862838751…Meeting ID: 898 6283 8751Passcode: 386195

9You, Suresh Subramani, Venugopalan Sundararajan and 6 others5 Comments2 SharesLikeCommentShare

5 Comments

 

நான், அசோகமித்திரன், வைதீஸ்வரன்..

துளி – 218

அழகியசிங்கர்


வைதீஸ்வரனைப் போய்ப் பார்க்க என்னையும் அழைத்தார் கிருபானந்தன். மூன்று மணிக்குப் போவதாக இருந்தோம். ஆனால் இன்று ஸ்டேட் பாங்க்ஆப் இந்தியா போய் பிபிஎப் என்ற கணக்கை முடிக்கச் சென்றேன். ஆனால் மேற்கு மாம்பலம் கிளையில் முடிக்க முடியவில்லை.


வீட்டிற்கு வரும்போது இரண்டு மணி ஆகிவிட்டது. எனக்குத் தூக்கம் வந்தது. தூங்கி விட்டேன். 4 மணிக்குத்தான் முழிப்பு வந்தது.


கிருபானந்தன் 3 மணிக்குப் போன்செய்திருந்தார். என்னடா இது. அவசரம் அவசரமாகப் போன் செய்தேன். வைதீஸ்வரன் வீட்டிற்கு வரச் சொன்னார்.


கிட்டத்தட்ட 2 வருடம் ஆகப் போகிறது வைதீஸ்வரன் வீட்டிற்குப் போய் அவரைப் பார்த்து.


வைதீஸ்வரனை வாழ்த்தினேன். கூட டாக்டர், ஆர்க்கே ராஜேஷ் நண்பர்களையும் பார்த்தேன். சொல்ல நினைத்தேன் என்ற வைதீஸ்வரன் புத்தகத்தை அவர் பிறந்தநாள் முன்னிட்டு குவிகம் தயாரித்திருந்தது. கவிதைகள், கதைகள், கட்டுரைகள் புத்தகம். எனக்கு சில ஆண்டுகளுக்குமுன் தயாரித்த சில கதைகள், சில கவிதைகள், சில கட்டுரைகள் என்ற புத்தகம் ஞாபகம் வந்தது.இந்த மூன்று கலவை கொண்ட புத்தகம் படிக்க நன்றாகத்தான் இருக்கும். அதன் பிரதியைக் கையெழுத்துப் போட்டு வைதீஸ்வரன் கொடுத்தார். என்னுரையில் அவர் எழுதிய வாசகங்கள்.


‘இந்த நெகிழ்வான தருணத்தில் எனது முதல் சிறுகதைத் தொகுப்பைப் பிரசுரித்த நெடுநாளைய இளைய நண்பர் அழகியசிங்கரை நினைத்துக் கொள்கிறேன். அவர் மூலம் வாய்க்கும் நட்பு வட்டம் எல்லாமே மிக நேசமும் செயலூக்கமும் பரந்த மனப்பான்மையும் கொண்ட இலக்கிய ஆர்வலர்களின் சங்கமாக இருக்கிறது. இது அழகியசிங்கரின் பிறவிக் கொடை..’


‘என்னடா இது இப்படிப் புகழ்ந்து எழுதியிருக்கிறாரே’ என்று தோன்றியது.

இந்திரா பார்த்தசாரதி வீட்டிற்கும் போய்ப் பார்க்க வேண்டும். அவருக்குச் ‘சாகித்திய அகாதெமி ஃபெல்லா’ அந்தஸ்து வழங்கியிருக்கிறது. நேரிடையாகப் போய் வாழ்த்தினால் நன்றாக இருக்கும்.


மாலை 5.30 மணிக்கு சூமில் அசோகமித்திரன் கூட்டம். நிஜந்தன், அம்ஷன்குமார், விட்டல்ராவ் பேசினார்கள். அசோகமித்திரன் புதல்வர் ராமகிருஷ்ணன் ஏற்பாடு செய்திருந்தார். கலந்து கொண்டேன்.


அசோகமித்திரன் எழுதிய மதிப்புரைகள் பற்றி அம்ஷன் குமார் பேசினார். மதிப்புரை எழுதுவதுதான் கடினம் என்று சொல்லியிருக்கிறார்.


ஒரு முறை அவர் வீட்டிற்குப் போயிருந்தபோது, நாடகம் ஒன்றை எழுதிக் கொண்டிருந்தார்.
“எந்தப் பத்திரிகைக்கு?” என்று கேட்டேன்.
“விருட்சத்திற்குத்தான்” என்றார்.
அந்த நாடகத்தை நான் விருட்சத்தில் பிரசுரம் செய்தேன்.

அம்ஷன்குமார் பேசும்போது சொன்னார். அசோகமித்திரனுக்கு நாடகம் எழுதுவதுதான் பிடிக்கும் என்று. கேட்பதற்கு ஆச்சரியமாக இருந்தது.


விருட்சம் இதழில் எதாவது இரங்கல் குறிப்பு எழுதவேண்டுமென்றால் நான் அசோகமித்திரனைத்தான் நாடுவேன். எனக்கு இன்னும் கூட ஞாபகமிருக்கிறது. பிரஞ்ஞை ரவீந்திரனைப் பற்றி அரைப் பக்கம் விருட்சம் பத்திரிகைக்கு ஏற்ற மாதிரி எழுதிக் கொடுத்தார்.


ராமகிருஷ்ணன் ஏற்பாடு செய்து கொடுத்த கூட்டத்தில் எனக்கும் பேசச் சந்தர்ப்பம் கொடுத்தார். இதெல்லாம் நான் பேசியிருக்க வேண்டும். இதை எழுதும்போது இப்போதுதான் தோன்றுகிறது.

விருட்சம் – குவிகம் சேர்ந்து நடத்திய 5வது கூட்டம்


அழகியசிங்கர்


17.09.2021 அன்று மணிக்கொடி என்றொரு இயக்கம் என்ற தலைப்பின் கீழ் நடந்த கூட்டத்தில், மூத்த எழுத்தாளர் நரசய்யா தலைமை தாங்க, செந்தமிழ்ச் செல்வி, அழகியசிங்கர் உரை நிகழ்த்தினார்கள். கூட்டம் இனிமையாக நடந்தது.

கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி – 19

அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 19வது  கதை வாசிப்புக்  கூட்டம்.  வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைஞர்கள் 1. கு.ப.ராஜகோபாலன் 2.கே.பாரதி.


வழக்கம்போல் 8 இலக்கிய நண்பர்கள்   சுருக்கமாகக் கூறி கதையைப் பற்றி உரையாடுகிறார்கள்.


இக் கூட்டம் 18.09.2021 அன்று வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. 
எல்லோரும் அவசியம் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.  

ஒரு கதை ஒரு கருத்து – கே.பாரதி, ஏ.எஸ். ராகவன் – II

அழகியசிங்கர்

சமீபத்தில் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற 50 சிறந்த சிறுகதைகள் என்ற (1970-2019) என்ற சிறுகதைத் தொகுப்பைப் படித்தேன்.

அதில் 1970ல் சிறந்த கதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதை கலைமகள் பத்திரிகையில் ஆகஸ்ட் 1970ல் வந்திருக்கிறது.கதையின் பெயர் ‘பின்னணி.’ எழுதியவர் ஏ.எஸ்.ராகவன்.

அதெல்லாம் நடந்து ஆண்டுகள் பலவாகி, அதெல்லாம் நடந்ததா என்பதே மறந்து போய், நினைவில் புல்கூட முளைத்து விட்டது என்று கதை ஆரம்பமாகிறது.

கவுண்டர் பாதைத் தடுமாறி வந்து விடுகிறார். மங்கிய நிலவொளி அவரைப் பார்த்து நகைத்தாற் போலிருந்தது. ஒரு குப்பலாய் இட்டேரி வளைவில் வந்து மோதிய காற்று காதில் கிசு கிசுத்தாற் போலி ருந்தது.‘எஞ்சாமி, எனக்கு மூளை பிசகிப் போச்சா? இந்தப் பாளாப்போன காட்டு வளியிலே கால் வெப்பனா இல்லாட்டி? என்று நொந்து கொள்கிறார் கவுண்டர். நடந்து வருகையில் கவுண்டர் நின்றே விட்டார். ஏஞ்சாமி அதே இடத்துக்கே வந்துட்டேனே. என்று பீதியுடன் தனக்குள் முணுமுணுத்துக்கொள்கிறார்.

காட்டு முள்வேலிக்குக் கீழ்ப்புறம் ஓர் உருவம் அமர்ந்து அவரை உற்றுப் பார்ப்பது தெரிந்தது.ஏன் பயப்படுகிறார் கவுண்டர்? ராக்காயி புருசனை நினைத்துத் தான் பயப்படுகிறார்.

அது ராக்காயி புருஷனின் ஆவியா என்று அவருக்குப் பயம் ஏற்படுகிறது. காலம் எவ்வளவு ஆனால் என்ன? எல்லாம் நேற்று நடந்தாற்போலத் துல்லியமாய்ப் புரண்டு வருகின்றன கண்முன்.

அவர் இதே இட்டேரியில் ராக்காயி புருசனை கொன்று தீர்த்தது ஊராருக்கு இலை மறைவுக் காய் மறைவாகத் தெரிந்து இப்போது மறந்து போனதாக இருந்தாலும், அவரளவில அது மறக்கவொண்ணாப் பாவந்தானே?உள்ளம் உருக ராக்காயி புருஷனை நினைத்து வேண்டுகிறார்.

பணத்துக்கு ஆசைப்பட்டு அவனைக்கொன்ற குற்றத்தை அவர் நினைவுப் படுத்திக்கொள்கிறார்.பொம்மக் கவுண்டன் காட்டு நாய் இரைக்க இரைக்க ஓடிவந்து அவர் பயத்தை நீக்குகிறது.நாய் என்ன செய்தது தெரியுமா?

அந்த ராக்காயி புருசனை அலக்காகத் தூக்கிக்கொண்டு வேஙூக்கால் ஓரமாகவே நடந்து விட்டது.கவுண்டர் முதலில் ஏதும் புரியாமல் வாயைப் பிளந்தார். அப்புறம்தான் விளங்கிற்று. காட்டு முள்வேலிக்குக் கீழே இருந்தவன் ராக்காயி புருசனே அல்ல. ஒரு கிழிந்த பழைய கந்தல் வேட்டி. இந்த நிலவொளியில் அந்த இருட்டில் அப்படி ஒரு பிரமைத் தோற்றம் தந்து அவரைப் பாடாய்ப் படுத்திவிட்டது.

கவுண்டர் பல ஆண்டுகளுக்கு முன்னால் ராக்காயி புருஷனைக் கொலை செய்துவிட்டு, அதை இந்த நேரத்தில் நினைத்துப் பயப்படுகிறார். இன்னொரு இடத்தில் இப்படி நினைக்கிறார்.பணம் யாருக்குச் சொந்தம்? அதை ஆளத் தெரிஞ்சவனுக்கு. இல்லையா?

ராக்காயி புருசனுக்கு என்ன தெரியும்? என்ற எண்ணமும் அவருக்குள் ஏற்படுகிறது.

அவர் சொத்து சேர்த்தது இது மாதிரி தீய வழியில்.ஒரு இடத்தில் ஒரு வரியைக் குறிப்பிடுகிறார் கதாசிரியர்;. தெய்வத்தை ஏமாற்றுவதில் கூட அவர் சாமர்த்தியசாலிதான் என்று.அவருடைய பெண் ராசாத்திக்கு அடுத்த வாரம் கல்யாணம்.

வெள்ளியணையில் இருக்கிற அவருடைய மைத்துனன் மகனுக்குக் கொடுக்கிறதாக முடிவாகியிருக்கிறது.அவர் வீட்டைப் பற்றி விவரிக்கும்போது எல்லாம் அவருடைய பெருமையின் சின்னங்கள் என்கிறார் கதாசிரியர்.

இவற்றுக்குப் பின்னாலே எங்கோ ஒரு சிறுமை ஒளிந்து கொண்டிருந்தால் அவருக்கு என்ன? அதை யார் எண்ணி மறுகுவார்? என்கிறார் கதாசிரியர்.வீட்டுக் கதவைத் திறந்து வீட்டிற்குள் போகிறார். மைத்துனன் வந்தான் வேகமாக, வெள்ளியணை மைத்துனன். சம்பந்தியாகப் போகிறவன்.

பதட்டத்துடன் அவர் மைத்துனன் காளி,’ராஜாத்தியை ரெண்டு நாளாக் காணோம், மாமா’ என்கிறான் கவுண்டரிடம்.ராக்காயி மவன் பொன்னுவையும் காணோம். ரெண்டு பேருமா ஊரை விட்டு போயிட்டாங்கன்னு தெரியுது. திரும்பவும் ராக்காயி புருசன் அவர் முன்னே வந்து விட்டான்.‘ராக்காயி புருசா..

உன் சொத்தை நான் கொள்ளையடிச்சேன்னு இத்தினி நாள் காத்திருந்து இப்ப என் சொத்தைக் கொள்ளையடிச்சிடிட்டியா’ என்று பெருங்குரலில் கத்தியவர் அப்படியே நிலைகுலைந்து விழுந்தார்.அப்புறம் அவர் கண் விழிக்கவே இல்லை என்று முடிக்கிறார் கதாசிரியர்.

இக் கதை நேர்க்கோட்டுக் கதை இல்லை. . உண்மையில் இக் கதையில் அவர் மனசாட்சிதான் அவரைக் கொலை செய்து விட்டது.இது முறையற்ற கதை. உருவமே தெரியாத ராக்காயி புருசன் முக்கிய கதாபாத்திரமாக வருகிறான். செய்த கொடுஞ்செயல் கவுண்டரைத் துரத்திக்கொண்டு வருகிறது. கவுண்டரின் மனசாட்சியே அவரைக் கொன்று விடுகிறது. ‘பின்னணி’ என்ற இக் கதை தலைமகளில் 1970ல் வந்துள்ளது.

5You, ஸ்ரீரங்கம் சௌரிராஜன் and 3 others1 CommentLikeCommentShare

1 Comment

ஒரு கதை ஒரு கருத்து – கே.பாரதி, ஏ.எஸ். ராகவன் – I

அழகியசிங்கர்

இந்த முறை இரண்டு கதைகளைப் பற்றிக் கூற உள்ளேன். ஒன்று ‘கே.பாரதி‘யின் ‘பக்கத்து வீட்டில் ஒரு சந்திப்பு’ என்ற கதையை எடுத்துக்கொண்டுள்ளேன். இரண்டாவது கதை பின்னணி என்ற ஏ.எஸ். ராகவன் கதை.

நான் இப்போது லீனியர் நான் லீனியர் என்று இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்துகிறேன். இதை முறையான கதை முறையற்ற கதை என்று பிரிவுகளில் கொண்டு வரலாமென்று நினைக்கிறேன்.

பாரதி கதை லீனியர் கதை. கோமதியம்மாளிடமிருந்து கதை ஆரம்பமாகிறது. லீனியர் கதையில் ஒரு ஆரம்பம், ஒரு தொடுப்பு, ஒரு முடிவு என்று இருக்கும்.

முன்பின் தெரியாத ஒரு விருத்நாளிக்காக நிறையத் திட்டமிட வேண்டியிருக்கிறது. கோமதி அம்மாள் தன் பெண்ணையும் பேரனையும் பார்க்க வந்திருக்கிறாள்.பக்கத்துவீட்டில்தான் அவளுடைய பெண் புவனாவின் குடும்பம் இருக்கிறது. யாருக்கும் அவள் வந்ததைத் தெரியக்கூடாது ரொம்ப ஜாக்கிரதையான திட்டமிடுதல் இது.

ஏன்?‘

ஒற்றை மனிதரின் கண்பார்வைக்கு, எப்படியெல்லாம் பயப்பட வேண்டியிருக்கிறது. அதுவும் ஏதோ தப்பு காரியம் செய்வதுபோல்’. யார் அந்த ஒற்றை மனிதன். புவனாவின் கணவன்.

பக்கத்து வீடாக இருந்தாலும் கதைசொல்லிக்கு அதிகப் பழக்கமில்லை. வீடு, வங்கி வேலை, சிவா, ஸ்கைப்பில் வரும் கணவர் என்று அத்தனையும் சமாளித்துக் கொண்டிருப்பவள் கதைசொல்லி.

நான்கு நாட்களுக்கு முன்பு வீட்டு வாசலில் வந்து நின்ற இளைஞனை அடையாளம் தெரியாமல் விழித்தாள் கதைசொல்லி.அப்போதுதான் தெரிந்தது. கோமதியம்மாளûப் பற்றி. பெண் புவனாவையும், பேரனையும் அவள் கணவனுக்குத் தெரியாமல் வந்திருக்கிறாள் என்று.

அதற்கு அடைக்கலமாக கதைசொல்லியின் வீடு. கோமதியம்மாள் புவனாவைப் பார்த்து மூன்று வருடம் மேல் ஆகிறது. துணிப்பையைத் துழாவி ஒரு கட்டு அப்பளத்தையும், சிறிய சம்புடத்தையும் எடுத்தாள் கோமதியம்மாள். கோமதியம்மாள் கொடுத்ததை மேல் எடுத்து வைத்தாள் திரட்டுப்பால். இரட்டை அப்பளாம். இவற்றை பூவனாக்கு கொடுக்க முடியாது.

அவள் கணவன் கண்டுபிடித்து விடுவான் என்ற பயம் கோமதி அம்மாளுக்கு.கோமதி அம்மாள் சொல்கிறாள். ‘மூணு வருஷத்துக்கு முன்னாலே குரோம்பேட்டையில் ஒரு வீட்ல குடியிருந்தா. அங்கேயும் அக்கம்பக்கத்து ஒத்தாசையில் போய் பார்த்தேன். பொறுக்காதே அவனுக்கு. உடனே வீட்டை மாத்திட்டான்.

அந்தப் பிள்ளை ரமேஷ் இதுவரைக்கும் ஒன்பது ஸ்கூல் மாறியிருக்கான்னா பார்த்துக்கோயன்.’புவனாவையும் ரமேஷையும் பாட்டி கோமதியம்மாளைச் சந்திக்க ஏற்பாடு செய்து விட்டு, கதைசொல்லி மூன்று மணிக்கு வருவதாக சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டாள்.அவர்களைச் சந்திக்க வைத்ததில் கதைசொல்லிக்கு ஒரு திருப்தி.

மூன்று மணிக்குத் திரும்பி வரும்போது கோமதியம்மாள் மட்டும் சுருண்டு படுத்துக்கொண்டிருந்தாள். எல்லாத் திட்டமும் பாழாகி விட்டது. அவள் கணவன் ஆபிஸ் போகாமல் திரும்பி வந்ததால் இந்தப் பிரச்சினை.சரியாக பதினைந்து நாட்களில் பின் வீட்டு ஜன்னல் வெறிச்சிட்டது என்று முடிக்கிறார் கதாசரியை. இதுதான் கதை. ஒரு நிகழ்ச்சி நடக்குமென்று ஏற்பாடு செய்த பின்னே நடக்காமல் போய்விட்டது.

என்னதான் இருந்தாலும் இப்பாடியெல்லாமா ஒரு மனுஷன் இருப்பான் என்ற கேள்வி நமக்குள் எழுகிறது. அமுதசுரபியில் 2014ல் வெளிவந்த கதை.

இது ஒரு முறையான கதை. இதன் முடிவை எப்படி வேண்டுமானாலும் மாற்றி இருக்கலாம்.புவனாவும், பேரனையும் பார்த்துவிட்டு கோமதி அம்மாள் நிம்மதியாகப் போனதாகக் கூட முடித்திருக்கலாம். முறையான கதையில் முடிவை எப்படி வேண்டுமானாலும் கொண்டு போகலாம்.

(தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை திண்ணையில் 12 செப்டம்பர் 2021 வெளி வந்தது) (இன்னும் வரும்…)

3You, Bhaskaran Jayaraman and Paal Nilavan

ஆர்.சூடாமணியின் நினைவுதினம் இன்று

அழகியசிங்கர்

எழுத்தாளர் ஆர்.சூடாமணியின் நினைவுதினம் இன்று.

2010 செப்டம்பர் 13 அன்று மறைந்தார். அவருடைய நினைவுதினத்தை முன்னிட்டு அவரைக்குறித்து காணொளியை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.