மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2 – 152

அழகியசிங்கர்

பிரத்யேக பிராணி

நெகிழன்


யாரை

பிடிக்கும் பிடிக்காதென்றெல்லாம் தெரியாது

எதற்கு 

வருகிறது போகிறதென்றும் தெரியாது 

எதற்கதை 

கொல்ல வேண்டுமென்றும் தெரியாது 

எனக்குத் தெரிந்தது 

அதுவொரு எலி 

பார்க்கச் சின்னதாக இருக்கும் 

சிறு தேங்காய் பத்தைக்கோ வடைக்கோ 

அல்லது தக்காளிக்கோ

தன் உயிரையே விடுகிற அல்பம் 

யாரும் 

எளிதில் சித்திரவதைச் செய்ய முடிகிற 

கொல்ல முடிகிற ஜந்து 

எல்லாவற்றுக்கும் மேலாக 

நம்மை வீர புருஷர்களாக்கும் பிரத்யேக பிராணி.


நன்றி : பூஜ்ய விலாசம் – நெகிழன் – வெளியீடு : மணல்வீடு – ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல், மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம் – 636 453  தொலைப்பேசி : 9894605371 விலை :ரூ.80 – பக்கம் : 65 

“மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2 – 152” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன