மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 9

அழகியசிங்கர்

         சுடர் வெம்மை

வேல்கண்ணன்
அப்பொழுது நான் மலையுடன் பேசினேன்
இறுதியாக நீ மலையை கடந்ததால்.

அப்பொழுது நான் கடலுடன் பேசினேன்
இறுதியாக நீ கடலில் கலந்ததால்

அப்பொழுது நான் மரத்துடன் பேசினேன்
இறுதியாக நீ பழங்களில் பசியாறியதால்

எப்பொழுதோ நீ பகிர்ந்த      வெம்மையினால்
தனித்திருக்கிறேன்

இறுதியாக நான் ஒரே ஒரு சுடருடன்..

நன்றி :  இசைக்காத இசைக் குறிப்பு – கவிதைகள் – வேல்கண்ணன்
வம்சி புக்ஸ் – 19 டி எம் சாரோன், திருவண்ணாமலை 606 601 – பக்கம் : 64 – விலை ரூ.60 – செல் எண் : 9445870995

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *