அழகியசிங்கர்
நேற்று ஞாயிற்றுக்கிழமை. இந்த முறை விட்டுவிடலாம் என்று தோன்றியது. அதற்குக் காரணம் அப்பா. வீட்டில் அறையில் இருந்த அவர் நொடிக்கொருதரம் என் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டுக்கொண்டிருந்தார். எங்கும் நகர முடியவில்லை. கிருபானந்தன் போன் செய்தார். அசோக்நகரில் உள்ள குழந்தைகள் பூங்காவிற்குச் சென்றோம். இந்த ஞாயிற்றுக்கிழமை ஜெயகாந்தன் கதைகளும் ஞானக்கூத்தன் கவிதைகளும். பிறகு எங்களுடைய கதைகள் கவிதைகள் வாசித்தோம்.
குழந்தைகள் பூங்காவில் நாங்கள் வாசித்ததுக் கொண்டிருந்தபோது, ஊஞ்சல் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. பக்கத்தில் ராஜாமணி வீடு இருந்தது. அங்கு போய்விட்டோம். ராத்திரி 8 மணிவரை படித்தோம். ஒவ்வொரு கூட்டமும் ஒவ்வொரு மாதிரி. இதுவும் அப்படித்தான். கதைகளையும், கவிதைகளையும் படிக்கும்போது அது ஒருவித அனுபவத்தைத் தராமல் இருக்க தவறுவதில்லை. பின் நாங்களே கதை சொல்லும் முயற்சியையும் செய்து பார்த்தோம். எல்லாவற்றையும் ஆடியில் கொடுத்துள்ளோம். கேட்டு மகிழவும். உங்கள் கருத்துகளை அறிய ஆவல். மேலும் இதை இன்னும் பிரமாதமாகக் கொண்டு போக என்ன வழி என்று சொல்லவும்.