கசடதபற இதழ்களில் வெளிவந்த கவிதைகளை ஒவ்வொன்றாக தர உத்தேசம்.
அக்டோபர் 1970 இதழ்
பயம்
கூரையில் தொங்கும் விளக்கு
கூட்டும் நிழல் பெரிதென்று
படுக்கை விளக்கைப்போட்டுப்
படிக்கப் புத்தகம் எடுக்க,
விளக்குக் கூண்டின் நிழல்
விரிந்து சுவரை மறைத்தது.