அன்புள்ள நண்பர்களுக்கு,

வணக்கம்.

ஒவ்வொரு ஆண்டும் வழக்கம்போல் இல்லாமல் இந்த முறை தெரியாமல் நான்கு புதிய புத்தகங்களை விருட்சம் வெளியீடாகக் கொண்டு வந்துள்ளேன்.

அதேபோல் இந்த முறை சென்னைப் புத்தகக் கண்காட்சியில் விருட்சம் கடை எண் 570.  புத்தகங்களையும், நவீன விருட்சம் சந்தாவையும் கட்டி விருட்சத்திற்கு ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

விருட்சம் வெளியீடின் நான்கு புதிய புத்தகங்கள்

1. சம்பத் கதைகள் – தொகுதி 1 – அழகியசிங்கர் 
                                      விலை ரூ.120

தமிழில் குறிப்பிடப்பட வேண்டிய படைப்பாளியான சம்பத் எதிர்பாராதவிதமாய் அவர் கதைகளில் அடிக்கடி குறிப்பிட்டபடி மரணமும் அடைந்துவிட்டார்.  சாவைப் பற்றி தீவிரமான ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தவர்.  அவர் கதைகளில் பெரும்பாலும் பிரிவு, தீவிரமான உணர்வுநிலை, மரணம் குறித்த உரையாடல்கள் நடந்த வண்ணம் இருக்கும்.  அவருடைய கதைகளின் முதல் தொகுதி இது.

2. கெட்டவன் கேட்டது – ஐராவதம் – விலை ரூ.120

அசோகமித்திரன் ஐராவதம் பற்றி குறிப்பிடும்போது அவருக்குத் தெரியாத புத்தகங்கள் இல்லை என்பது.  உலகம் முழுவதும் உள்ள நல்ல தரமான புத்தகங்களைப் பற்றி அறிந்தவர்.  பல பத்திரிகைகளில் அவருடைய கதைகள், கட்டுரைகள், மொழி பெயர்ப்புகள் என்று ஏராளமாகப் பிரசுரம் ஆகியிருக்கின்றன. அவற்றை முறைமைப் படுத்தும் முயற்சியாக கெட்டவன் கேட்டது என்ற சிறுகதைத் தொகுப்பு வெளி வந்துள்ளது.

3. விருட்சம் கதைகள் – தொகுதி 1 விலை ரூ.100

ஏற்கனவே வெளியான கதைத் தொகுதி.  கதைத் தொகுதி வெளியான போது எல்லோராலும் பரபரப்பாகப் பேசப்பட்ட தொகுதி. மிக முக்கியமான படைப்பாளிகளான தமிழவன், பிரமிள், வண்ணநிலவன் போன்ற படைப்பாளிகளின் படைப்புகள் அடங்கிய தொகுதி இது.4. முடியாத யாத்திரை – கவிதைகள் – காசியபன்

அசடு என்ற தமிழில் குறிப்பிடப்பட வேண்டிய நாவல் எழுதிய காசியபனின் கவிதைத் தொகுதி இது.  ஏற்கனவே இவருடைய முதல் தொகுதி அன்னம் வெளியீடாக வந்துள்ளது.  இது வித்தியாசமாக அவர் எழுதிய கவிதைகளின் தொகுதி.

One Reply to “”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *