இரண்டு கவிதைகள்

1 சற்றைக்கு முன்
 ஜன்னல் சட்டமிட்ட வானில்
 பறந்து கொண்டிருந்த
 பறவை
 எங்கே?
 அது
 சற்றைக்கு முன்
 பறந்து கொண்
 டிருக்கிறது.

2 பறந்து செல்லும்
 பறவையை
 நிறுத்திக் கேட்டான்:
 பறப்பதெப்படி?
 அமர்ந்திருக்கையில்
 சொல்லத் தெரியாது கூடப்
 பறந்து வா
 சொல்கிறேன் என்றது.
 கூடப்  பறந்து கேட்டான்:
 எப்படி?
 சிரித்து உன்போலத்தான்
 என்றது.
 அட ஆமாம்
 ஆனால் எப்படி
 எனக் கீழே கிடந்தான்
 பறவை
 மேலே பறந்து
 சென்றது.

 

“இரண்டு கவிதைகள்” இல் ஒரு கருத்து உள்ளது

Sekar உடைய கருத்துக்கு மறுமொழியிடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன