அன்புள்ள நண்பர்களே,

வணக்கம்.
வருகிற 35வது புத்தகக் கண்காட்சி 5.1.2012 முதல் 17.1.2012வரை சென்னையில் நடைபெறுகிறது.  அதில் நவீன விருட்சமும் கலந்துகொள்கிறது.  நவீன விருட்சம் ஸ்டால் எண் 394.  இங்கு கலந்துகொள்ள விடுமுறை நாட்கள் தவிர மற்ற நாட்களில் நவீன விருட்சம் ஆசிரியரான நான் கலந்துகொள்ள முடியுமாவென்று தெரியவில்லை.  சீர்காழியிலிருந்து வரவேண்டும்.  எனக்கு ஸ்டாலைப் பார்த்துக்கொள்ள நண்பர்கள் உதவி செய்ய முடியுமா?
புதிய புத்தகம் எதுவும் விருட்சம் வெளியீடாக வரவில்லை.  ஏன் நவீன விருட்சமே வரவில்லை?  எல்லாம் பழைய புத்தகங்கள்தான்.  புத்தகக் காட்சி முடிவதற்குள் ரூ.5000க்குப் புத்தகங்கள் விற்றால் அதன் வெற்றியைப் பெரிதாகக் கொண்டாடலாம் என்று நினைக்கிறேன்.  உதவ விரும்புவர்கள் தகவல் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
அன்புள்ள

2 Replies to “அன்புள்ள நண்பர்களே,

  1. சென்னையில் இருந்தால் கண்டிப்பாகச் செய்வேன். உஷாதீபன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *