மூன்று கவிதைகள்
1.
அவர்கள் சென்றபின்
இவர்கள் இடம் பெயராது
இருந்தனர்
2.
நாய் கொடுத்த
காசு குரைக்கும்;
பட்ட மரத்திலுண்டு
பல கெட்ட நாய்கள்;
நடுப்பகல்
இருட்டாகும்
3.
பிறந்த சூட்டில்
இரத்தச் சிவப்பில்
எலிக்குஞ்சு போல்
கிடக்கும்;
புழுப்போல் நெளியும்
நகுலன்
டிசம்பர் 1978 ஜனவரி 1979
1.
அவர்கள் சென்றபின்
இவர்கள் இடம் பெயராது
இருந்தனர்
2.
நாய் கொடுத்த
காசு குரைக்கும்;
பட்ட மரத்திலுண்டு
பல கெட்ட நாய்கள்;
நடுப்பகல்
இருட்டாகும்
3.
பிறந்த சூட்டில்
இரத்தச் சிவப்பில்
எலிக்குஞ்சு போல்
கிடக்கும்;
புழுப்போல் நெளியும்
நகுலன்
டிசம்பர் 1978 ஜனவரி 1979
அழகான கவிதைகள். அழியாதக் கவிதைகள்
நகுலனின் கவிதைகளில் எலிக்குஞ்சு போல்
கிடக்கிறோம்