தருணம்

சில சம்பவங்கள்
நாம் விரும்பியோ விரும்பாமலோ நடக்காமலில்லை

யார் தீர்மானிக்கிறார்கள்
என்பது ஏனோ தெரிவதில்லை

அல்லது
நாமே அந்தச் சூழ்ச்சியில்
அறியாமல் மாட்டிக்கொண்டு விடுகிறோமா
என்றெல்லாம் தெரிவதில்லை

எல்லாம்
நடப்பது நடக்கட்டுமென்றுதான்
விடவேண்டியுள்ளது

நமக்கு விருப்பமான பொருள்
நம்மை அடைவதில்லை

நாம் தேர்ந்தெடுக்கும் பொருள்
நம் கைவசமாவதில்லை

நம் காலத்தை நாம் திருப்தியுடன்
கழிக்க வேண்டியதுதான்.

இதுதான் வாழ்க்கை என்று
பெரிதாக யோசனை செய்யாமலிருக்க வேண்டியதுதான்.

“தருணம்” இல் 2 கருத்துகள் உள்ளன

  1. எளிமையான சொற்களில் செறிவான கருத்தை சொல்கிறீர்கள். கிட்டத்தட்ட இதே அர்த்தம் தொனிக்கக்கூடிய ஒரு கவிதை சில வாரங்கள் முன்னை எழுதினேன் (உங்களின் இந்த கவிதையை படிக்கும் முன்னர்). சுட்டியை தருகிறேன். நேரம் கிடைத்தால் படியுங்கள். நன்றி.
    http://wp.me/pP1C7-5G

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன