குழந்தையின் நிலாப் பயணம்

பிறையின்
வளைவினில்
வசதியாய்
ஒரு குழந்தை
உட்கார்ந்து கொண்டது.
நிலாவும் குதூகலமாய்
குழந்தையை
உலகம் முழுவதும்
சுற்றிக் காட்டிக்
கொண்டிருந்தது.
அதற்குள்
அம்மா பள்ளிக்கு
நேரமாகிறதென
குழந்தையை அடித்து
எழுப்பி பலவந்தமாய்
இழுத்துப் போனாள். 

“குழந்தையின் நிலாப் பயணம்” இல் 6 கருத்துகள் உள்ளன

  1. குழந்தைகளின் தெய்வத் தன்மையையும் அது அறியாத
    பெரியவர்களின் மன நிலையையும்
    மிக அழகாக சித்தரித்துப்போகும்
    உங்கள் கவிதை மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்

  2. உங்களிடம் இருந்து மற்றுமொரு நிலவின் கவிதை .. மிக எதிர்பார்ப்போடு வாசித்தேன்.. நல்ல கவிதை.. ஆரம்பித்த கற்பனை அருமை .. முடிவு மாத்திரம் கொஞ்சம் பழகிப் போனது போலவே இருந்தது.. தொடருங்கள்.. வாழ்த்துகள்

  3. பழகிப் பான முடிவுகள் நிச்சயமாக கவிதையை பலஹீனமாக்கும்… அதைத் தவிர்க்க முயல்கிறேன்.. கருத்து சொன்ன மதிக்கும் மற்ற நண்பர்களுக்கும் நன்றிகள்..

  4. இப்படித்தான் பல அம்மாக்கள் இருக்கிறோம்:) என்ன செய்வது தங்களின் குழந்தைமையை நினைவில் வைத்திருந்தால் கனவுகளோடு வாழப்பழகி இருக்கலாம் தான்.இயல்பான ஒரு கவிதை.

  5. // பிறையின்
    வளைவினில்
    வசதியாய்
    ஒரு குழந்தை
    உட்கார்ந்து கொண்டது. //

    மிக லயித்தேன். பல படிமங்களுக்கு வழி அமைக்கிறது இந்தக் கற்பனை. நன்றி.. வாழ்த்துக்கள்..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன