நிலவும் தவளையும்

 

அலையற்ற நீர்

படுக்கையில் அயர்ந்த

தூக்கத்தில் நிலா.
நிலவிற்கு இரங்கி
நீரைத் தொடாமல்
விலகிச் செல்கிறது
காற்று.
இரவின் அமைதியில்
எங்கிருந்தோ வந்து
விழுந்த தவளையின்

துள்ளலில் வளைந்து

நெளிந்தது நிலா. 

“நிலவும் தவளையும்” இல் 4 கருத்துகள் உள்ளன

  1. ஒரு நல்ல ஹைக்கூவைக் கொஞ்சம் நீளமான நல்ல கவிதையாக வாசித்தது போலிருந்தது.. உங்களின் நிலா சார்ந்த கவிதைகள் அனைத்தையும் ரசித்திருக்கிறேன் நண்பரே.. வாழ்த்துக்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன